அரையாண்டுப் பொதுத்தேர்வு- டிசம்பர் 2025, இராணிப்பேட்டை மாவட்டம்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
15X1=15
|
வி எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1.
|
அ. வானம்றிந்த |
1 |
|
2.
|
இ. அணிகலன்களாக |
1 |
|
3.
|
ஆ. தந்தை பெரியார் |
1 |
|
4.
|
இ. தலை |
1 |
|
5.
|
ஆ. ஞாயிறு |
1 |
|
6.
|
இ. உணவின் |
1 |
|
7.
|
ஈ. பிறிதுமொழிதலணி |
1 |
|
8.
|
ஆ. வேழங்கள் |
1 |
|
9.
|
ஆ. எச்சம் |
1 |
|
10.
|
அ. அ+களத்து |
1 |
|
11.
|
இ. கோயம்புத்தூர் |
1 |
|
12.
|
அ. முகில் |
1 |
|
13.
|
ஈ. கசடு + அற |
1 |
|
14.
|
ஆ. பட்டை |
1 |
|
15.
|
இ. பனையோலைகள் |
1 |
ஆ) பொருத்துக 5X1=5
|
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
|
16. நடந்து - வினையெச்சம் 17. தெற்கு - பழனிமலை 18. காற்றுக்கருவி - கொம்பு 19. இயற்கை அன்பு - பெரிய புராணம் 20. வழஒஇயடி வாழையாக – பரம்பரை
பரம்பரையாக |
|
|
எவையேனும் ஆறு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க
6X2=12 |
||
|
21 |
திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது. |
2 |
|
22 |
கடைச்சங்க
காலத்தில் எழுதப்பட்டவை . சான்று சிலப்பதிகாரத்தில் உள்ளது. |
2 |
|
23 |
உலகம் முழுவதும் |
2 |
|
24 |
இன்றைய கல்வி குறிப்பிட்ட
பாடங்களை நெட்டுரு (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி,
பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு
கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில்
அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க.
கூறுகிறார் |
2 |
|
25 |
பட்டமரம் வெந்து கரிய நிறம் பெற்றதால் தனது
அழகை இழந்தது. |
2 |
|
26 |
கொல்லிமலையில்
சித்தர்கள் வாழ்ந்ததாகப் பாடல் கூறுகிறது. |
2 |
|
27 |
·
வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள்
இடம்பெற்றுள்ளன. ·
இதனால் இவர்கள் பல
நெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம். |
2 |
|
28 |
மன்னிக்கத்தெரிந்தவர் உள்ளம் |
2 |
|
29 |
§ நடைபயிற்சி மற்றும்
உடற்பயிற்சி § அளவான உணவு § சத்தான உணவு |
2 |
|
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 4X2=8 |
||
|
30 |
பிறிது மொழிதல் அணி: உவமையை
மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும். எ.கா. கான முயல்எய்த
அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல்
இனிது. விளக்கம்: காட்டு முயலை
வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட,
யானைக்குக் குறிவைத்துத் தவறிய மூவலை ஏந்துவது பெருமை தரும்
என்னும் உவமையின் மூலம் பெரிய முயற்சியே பெருமைதரும் என்னும் கருத்தை
விளக்குவதால் இக்குறளில் பிறிதுமொழிதல் அணி வந்துள்ளது. |
2 |
|
31 |
v வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. v மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. v
இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.ண, ன, ந |
2 |
|
32 |
v
ண, ன, ந v
ல, ழ, ள v
ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி
எழுத்துகள் ஆகும். |
2 |
|
33 |
பொருள் முற்றுப்
பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம்
என்று இருவகைப்படும். |
2 |
|
34 |
|
2 |
|
35 |
அணி இலக்கணம்: ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும்
வந்து ஒரே பொருளை தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும் சான்று: சொல்லுக
சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல்
இன்மை அறிந்து விளக்கம்: சொல்
எனும் ஒரே சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளதால் இக்குறளில் உள்ளது
சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும். |
2 |
|
அடிமாறாமல்
எழுதுக
4+2=6 |
||
|
36 |
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய
வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி
வாழியவே! ஏழ்கடல்
வைப்பினுந்தன்மணம் வீசி இசை கொண்டு
வாழியவே! எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே! |
4 |
|
37 |
இதனை இதனால்
இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்
விடல் |
2 |
|
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க
5X4=20 |
||
|
38 |
v கரூர் நகரத்திற்கு, 'வஞ்சிமா நகரம்' என்ற பெயரும் உண்டு. v கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின்
முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார். v நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற
மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது. |
4 |
|
39 |
·
மேகங்களால் உருவான காற்று
வேகமாக அடித்தது ·
பெரிய வீடுகளின்கூரைகள்
எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. ·
அழகிய சுவர்களை உடைய
மாடி வீடுகள் அடியோடு விழுந்தன |
4 |
|
40 |
ü சேரனின் நாட்டில் வருவாய் சிறந்து
விளங்குகிறது. ü அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி
முளை விடுகின்றன. ü தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள்
வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது. ü செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப்
பெற்றிருக்கின்றன. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும்
செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது. ü நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும்
(எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித்
தம பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய, சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புது வருவாயுடன் சிறந்து
விளங்குகின்றது. |
4 |
|
41 |
ü
மூங்கிலைக் கொண்டு பலவகையான
கைவினைப் பொருள்களைச் செய்யலாம். ü
மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும்
பொருள்கள் ஆகும். ü
பிறந்த குழந்தைக்குத் தொட்டில்
முதல், இறந்தவரை சுமந்து செல்லும் பாடை பயன்படுத்தப்படுகிறது. |
4 |
|
42 |
v பண்ணோடு சேர்ந்த இனிய
தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும்
முழவும் இணைந்து ஒலிக்கும். v கண்களுக்கு இனிய
குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ணநீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளைவாரி
இறைக்கும். v நிலத்தின் மீது
நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது
எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம்
திருக்கேதாரம் ஆகும். |
4 |
|
43 |
v
தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை
என்னும் பழைய நிலையை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம்
தேடுவோம் v
கலைகள் யாவும் தாய்மொழி வழி
மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும்
காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார். |
4 |
|
44 |
v
கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில்
தன்னுடைய திறமையைக் காட்டவேண்டும். v
ஆத்திரம் கண்ணை மறைத்து விடும்
என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்துஅமைதி காக்க வேண்டும். v
பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க
வேண்டும். v
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கல் போன்றது. இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
|
4 |
|
45 |
v
இயற்கையை
விட்டு விலகியமை v
மாறிப்போன
உணவு முறை v
மாசு
நிறைந்த சுற்றுச்சூழல் v
மன
அழுத்தம் |
|
|
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
3X8=24 |
||
|
46 அ |
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள்
எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற
சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக
அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய
அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க
கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது
ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
ஆ.
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
எழுதுக. அனுப்புநர் சே.வெண்மதி, த/பெ சேரன், 562 திருவள்ளுவர் தெரு, வளர்புரம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. பெறுநர் உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. ஐயா, பொருள்: இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு. வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச்
சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில்
வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை
நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க
விரைந்து நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு, தங்கள்
பணிவுடைய, சே.வெண்மதி. இடம்: அரக்கோணம், நாள்: 12-03-2022. உறைமேல்
முகவரி: உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. |
8 |
|
47 |
அ) v ஒரு குறிஞ்சிப் புதரில்
வாழ்ந்த பச்சை வெட்டுக்கிளி,
வாயாடித்தனமாக
ஒரு மாலை நேரம் தன்னைக் காண வந்த கூரன் சருகுமானை பேச அழைக்கிறது. v ஆனால் கூரன்
பித்தக்கண்ணு என்ற உயிர்வாழ்க்கைக்கு ஆபத்தான மிருகத்திடமிருந்து தப்பி ஓடி, மரத்தடியில்
ஒளிகிறது. v பித்தக்கண்ணு
வந்து வெட்டுக்கிளியிடம் கூரனைப் பற்றி கேட்க, வெட்டுக்கிளி பரவசத்தில்
கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே தவறவசமாக குதிக்கிறது. v இதைக் கவனித்த
பித்தக்கண்ணு அந்த இடத்துக்கு சென்று, புனுகுப் பூனையின் வாசனையை மட்டுமே உணர்ந்து
கிளம்புகிறது. v உயிர் தப்பிய
கூரன் வெட்டுக்கிளியின்மீது கோபம் கொண்டு எச்சரிக்கையாக 'இனிமேல் இப்படி
நடந்தால் மிதித்து நசுக்கி விடுவேன்' எனக் கூறி ஒளியின்றிப் போகிறது. v அதன் பிறகு, வெட்டுக்கிளி
எப்போதும் பயத்தில் வாழத் தொடங்கியது. அதனால் தான் இன்றும் வெட்டுக்கிளிகள்
ஓரிடத்தில் நிலைத்திருக்க முடியாமல் குதிக்கின்றன. ஆ) காற்றுக் கருவிகள் குறித்த
செய்திகளைத் தொகுத்து எழுதுக முன்னுரை:
மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள்,
கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன.
அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம். காற்றுக் கருவிகள்:
காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும். சூழல் :
குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில்
மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும்
பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர். கொம்பு:
கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி
எழுப்பினர், அதுவே, பின்னாளில்
'கொம்பு' என்னும் இசைக்கருவி தோன்றக்
காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன.
வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் கொம்பினை
ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம்,
துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில்
இசைக்கப்படுகின்றது. சங்கு:
சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும்
வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, "வலம்புரிச் சங்கு
என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் 'பளரிலம்' என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கிளை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது. முடிவுரை:
அழித்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற,
நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக்கற்று,
அதனைப்பயன்படுத்த வேண்டும். |
8 |
|
48 அ |
உள்நாட்டு வணிகம் : ·
சேர நாட்டில் உள்நாட்டு
வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. ·
மக்கள் தத்தம்
பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். ·
நெல்லின் விலையைக் கணக்கிட
அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன வெளிதாட்டு வணிகம்: ·
முசிறி சேர்களின் சிறந்த
துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. ·
இங்கிருந்து நான்
மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. ·
சித்திர
வேலைப்பாடுகள் அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. ஆ.
v
அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய
பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர். v
தமிழகத்தில் பழங்காலந் தொட்டே
இக்கலை வளர்ந்திருக்கிறது. கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது, மண்பாண்டங்கள் ஆகும். v
களிமண்ணால் உருவாக்கப்படும்
மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை முதன்முதலில் செய்யப்பட்ட
கைவினைப் பொருள்கள் ஆகும். v
மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால் செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள், பனையோலையால் செய்யப்படும் பொருட்கள்
இவையனைத்தும் கைவினைப் பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும்
நிகழாது. v
மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால்
செய்யப்படும் காகிதப்பொம்மைகள், பொருட்கள் அத்தனையும் கைவினைப் பொருட்கள் ஆகும், |
|
|
தகுந்த விடைகளை எழுதுக 10X1=10 |
||
|
49 |
பால்
பருகு |
1 |
|
50 |
அ.
பால் பண்ணை ஆ. புல்லாங்குழல் |
1 |
|
51 |
அ.
செல் ஆ. தா |
1 |
|
52 |
தேர்த்திருவிழாவிற்குச்
சென்றனர் |
1 |
|
53 |
உரிய
விடையைப் பிழைய்ன்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
1 |
|
54 |
அ.
ஆறு பேர் ஆற்றில் குளித்த்னர் ஆ.
திங்கள் திங்களன்று முழுமையாகத் தெரிந்தது (மாதிரி விடைகள்) |
1 |
|
55 |
காவலரைக்
கண்ட திருடன் முதலைக் கண்ணீர் வடித்தான் |
1 |
|
56 |
மேடுபள்ளம் |
1 |
|
57 |
மேய்ந்தது |
1 |
|
58 |
அ.
திருப்பூர் ஆ. சேலம் |
1 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி