9 TH STD TAMIL HALF YEARLY QUESTION PAPER & ANSWER KEY CHENNAI

 

(சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

சென்னை மாவட்டம்அரையாண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள், 2025

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வி.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள்

1

 

2.

ஆ. பட்டம் செய்திருக்கிறேன்

1

 

3.

இ. அகல்

1

 

4.

ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

 

5.

ஈ. புலரி

1

 

6.

. நாணமும் இணக்கமும் 

1

 

7.

ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

1

 

8.

தைத்திங்கள்

1

 

9.

ஈ. ஆ மட்டும் சரி

1

 

10.

ஈ. இல்லத்தின் அருகே கூரை வேய்ந்தனர்

1

 

11.

ஆ) கடல் நீர் 

1

 

12.

. வருந்துதல்

1

 

13.

. பண்புத்தொகை

1

 

14.

அ. தன்னிழல், நன்னரில்

1

 

15.

அ. இராவண காவியம்

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16

. சிந்துவெளி நாகரிக வரலாற்றில் எதும்முக்கியப்பங்கு வகிக்கிறது?

. நாம் வாழும் தமிழ்நாடு எப்பகுதியில் உள்ளது?

1

1

 

17

பிற தொழில்கள் செய்வாரையும் பாதுகாத்தலால், உழவர் உலகத்திற்கு அச்சாணி போன்றவர் ஆவார்

2

 

18

இசைத்தூண்கள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

2

 

19

இடம்: திருப்பாவையில் ஆண்டாள் கூறியது.

பொருள் : கீசு கீசு என்று குருவிகள் ஒலிக்கும் பேரொலி கேட்க வில்லையா?

விளக்கம் :

·        மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து தோழிகளை எழுப்புவார்கள்.

·        அப்போது ஒரு தோழி இன்னொரு தோழியை எழுப்பும்போது கரிக்குருவிகள் எழுந்து ஒலி எழுப்புகின்றன.

·        நீ இன்னும் எழாமல் தூங்குகிறாயே என்று துயிலெழுப்புகின்றாள்.

2

 

20

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

 

21

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ   படத்தை + பார்த்தான் =படத்தைப்பார்த்தான் (மாதிரி)

2

 

23

அ. நல்ல தமிழில் எழுதுவோம்  ஆ. குழலிக்கும் பாடத்தெரியும்

2

 

24

·        பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

·        பேச்சு மொழியிலேயே துணை வினைகளின் ஆக்கம் அதிகமாக உள்ளது.

2

 

25.

வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது

2

 

26.

அ. சிற்பம்    ஆ. பெருங்கடல் (அ) மாக்கடல்

2

 

27.

விளைதல்= விளை + தல்    விளை-பகுதி, தல்- தொழிற்பெயர் விகுதி

வனைதல் = வனை+தல்      வனை- பகுதி, தல்- தொழிற்பெயர் விகுதி

2

 

28.

அ. மொழித்தேன், வாய்ப்பவளம்  ஆ. நகைமுத்து , புருவவில்

2

 

பகுதி – 3    பிரிவு - 1

29

1.     மூன்று -  தமிழ்

2.    மூணுமலையாளம்

3.    மூடு தெலுங்கு

4.    மூருகன்னடம்

5.    மூஜிதுளு

3

 

30

அ. மாமல்லபுரம்  ஆ. சிற்பக்கலை   இ. கும்பகோணம், மதுரை

3

 

31.

  • ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டது.
  • நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • நீர் வெளியேறவும், சேற்றைத் தூர்வாரவும் பயன்படுத்தினர்.

3

 

பகுதி – 3   பிரிவு - 2

32

·        முத்தமிழாய் பிறந்தது

·        மூன்று பாவினங்களால் வளர்ந்தது

·        சிற்றிலக்கியங்களைத் தந்தது

·        தெளிந்த அறிவினால் முத்திக் கனியைத் தந்தது

·        நாளும் நலமுடன் வளர்ந்தது

3

 

33.

அ) இன்பம் சமைப்பவர் யார்?  - பெண்

ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா? – சமைப்பது தாழ்வல்ல

3

 

34.

.

கல்லிடைப் பிறந்த ஆறும்

           கரைபொரு குளனும் தோயும்

     முல்லைஅம் புறவில் தோன்று

           முருகுகான் யாறு பாயும்

     நெல்லினைக் கரும்பு காக்கும்

             நீரினைக் கால்வாய் தேக்கும்

      மல்லல்அம் செறுவில் காஞ்சி

              வஞ்சியும் மருதம் பூக்கும்*

                          (அல்லது)

.


தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் 

3

 

பகுதி – 3   பிரிவு - 3

35

ஏகதேச உருவக அணி

      இரு பொருள்களில் ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

அணிப்பொருத்தம்:

      இக்குறட்பாவில் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்து பண்புகளைச் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாக உருவகம் செய்துள்ளார். சான்றாண்மை என்பது இங்குக் கூரையாக உருவகப்படுத்தவில்லை. எனவே, இஃது ஏகதேச உருவக அணி ஆகும்.

3

 

36.

    I.      எண்ணலளவை ஆகுபெயர்:

                                                       "ஒன்று பெற்றார் ஒளிமயம்"

            ஒன்று என்னும் எண்ணுப்பெயர் அவ்வெண்ணுக்கு தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

   II.      எடுத்தலளவை ஆகுபெயர்:

                                                       "இரண்டு கிலோ கொடு"

       நிறுத்து அளக்கும் எடுத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது

 

  III.      முகத்தலளவை ஆகுபெயர்:

                                                       "அரை லிட்டர் வாங்கு"

        முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

  IV.      நீட்டலளவை ஆகுபெயர்:

                                                       "ஐந்து மீட்டர் வெட்டினார்"

         நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது.

3

 

37

 1. பெயர் + வினை = வினை 2. வினை+வினை=வினை  3. இடை+வினை+வினை

3

 

பகுதி – 4

38

.

·        திருநாட்டில் காவிரி வளத்தைத் தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

·         வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள் சங்குகளால் இடருகின்றன.

·         குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன

·        நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால் அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன

·        திருநாட்டில் நெற்கட்டுகளும் மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன

·         பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து வளர்ந்துள்ளன

5

 

38

.

·        கல்வி இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள்.

·        கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள்     

·        இன்றைய சூழலில் கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால், நிறைய நன்மைகள் உண்டு

·        அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள்,

·        குடும்ப விளக்கு தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு  வளர்ந்திருக்கிறது..

5

 

39

.

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

தணிகைப்போளூர்,

                                                                                                                    27.09.21.

அனுப்புநர்

         . இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        12. ஆம் வகுப்புபிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

     வணக்கம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ளஅருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                    தங்கள் உண்மையுள்ள,

                            .இளவேந்தன்,

                                                                                                                             (மாணவச் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001.

5

 

39

.                                                                                                                                          

திருத்தணி,                                                                                                                                       09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,

      முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளைஅறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                                                                                                                                                               முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

 

5

 

40

)

     ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி     (மாதிரி)

5

 

41

உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

 

42

. உரிய விடையைச் சரியாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

.

1.  நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

2. மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

3.   அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

4.   உங்கள் களவு நளவாகும் வரை, களவு காணுங்கள்.

5.   வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.

5

 

 

பகுதி – 5

 

 

43 .

ü  தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.

ü  தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ü  திராவிட மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.

ü  பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.

ü  ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ü  இந்திய நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.

ü  இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது

8

 

முன்னுரை:

தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை இக்கட்டுரையில் காண்போம்

பல்லவர் காலச் சிற்பங்கள்:

·        சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களின் கட்டடங்கள், பல்லவர்கள் குடைவரைக் கோவில்களை அமைத்தனர்.

·        அதற்கு மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி கோவில்களே சான்று

பாண்டியர் காலச் சிற்பங்கள்:

·        பாண்டியர் கால குகைக் கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.

·        அவற்றைத் திருமயம், பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம், கழுகுமலை முதலிய இடங்களில் காணலாம்

சோழர்காலச் சிற்பங்கள்:

·        சோழர் காலம் சிற்பக்கலையின் கருவூலமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரியகோவிலின் வேலைப்பாடுகள் சோழர்காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

·        சிற்பங்களில் காணப்படும் நடன முத்திரையும், முக பாவனைகளும், சோழர்களின் கலை நுட்பத்தை விளக்குகின்றன.

விஜயநகர மன்னர்காலச் சிற்பங்கள்:

·        கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன

·        தெலுங்கு, கன்னட நாட்டுச் சிற்பங்களின் தாக்கம் இங்கு ஏற்பட்டது.

·        ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.

நாயக்கர் காலச்சிற்பங்கள்:

·        பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.

·        சிற்பங்களை ஆடை ஆபரணங்களுடன் கூடிய கலை நயத்துடன் அமைத்துள்ளனர்

·        பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள் விழியோட்டம், புருவ நெளிவு, தக அமைப்பு என மிக மிக நுட்பமாகப் படைக்கப்பட்டுள்ளன.

முடிவுரை:

இதன்மூலம் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை அறியலாம்

8

 

44.

.

v  சு. சமுத்திரம் எழுதிய இக்கதையில், வறுமையிலும் தன் அன்பும் தன்னலமற்ற தன்மையும் குறையாத ஒரு ஏழைத்தாயின் உயர்ந்த மனிதநேயம் கதையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

v  மரண அபாயம் வந்தபோதும் கணவனை காப்பாற்றும் அவள், பசிக்குட்டிகளுக்குள் உணவை பகிரும் போது அன்பும் கண்டிப்பும் கலந்த தாயாக இருக்கிறார்.

v  அவளது தாய்மை உணவுப் பகிர்விலும், நாய்க்குட்டிகளையும் பராமரிப்பதிலும் வெளிப்படுகிறது.

v  தன்னால் பெற்றவரல்லாதவர்களையும் தாயன்புடன் பராமரிக்கும் அவளின் செய்கைகள் மனிதநேயத்தின் உச்சக்கட்டமாகக் கூறப்படுகிறது.

v  தாய்மை என்பது வறுமையைக் கடந்து மகத்துவமடைகிறது என்பதை இந்தக் கதை வலியுறுத்துகிறது.

8

 

முன்னுரை:

இக்கதையில் இசையின் அற்புத சக்தி, அதன் மூலம் எவ்வாறு அமைதி, உணர்வு மற்றும் உலகத்தோடு இணைப்பு ஏற்படுகிறது என்பதை விளக்குகிறது.

தொடக்கம்:

கதையின் ஆரம்பத்தில், இசை மொழியின் எல்லைகளை தாண்டி அமைதியின் நாக்காக அனைவரையும் செருமைப்படுத்தும் பாணியை எடுத்துரைக்கின்றது. இதில், சொற்களின் ஊடுருவலின்றி இசை தன்னுடைய செய்தியைச் சொல்லுகின்றது.

இசை உணர்வு:

வித்துவான் ஒரு ஆலாபனத்துடன் கீர்த்தனத்தைத் தொடங்குகிறார். அப்போது வெளிப்படையான இசை உணர்வு தோன்றி, போல்ஸ்கா தனது தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தும் விதமாக இசையின் ஒலியை அனுபவிப்பதைக் காணலாம்.

போல்ஸ்காவின் முகத்தில் நாதத்தின் அற்புத அனுபவம் வெளிப்படுகிறது. அவர் இசையின் ஒலியில் தன் உள்ளத்தின் தகவலை உணர்ந்து, அந்த இசையின் மூலம் உலகிற்கு ஒரு தனி செய்தியைப் பெறுகின்றார்.

செய்தி:

இங்கு, போல்ஸ்கா ஒருவித செய்திபாரம்பரிய கலையின் மூலம் அனுபவிக்கிறார். அது எந்த உலகத்திலிருந்தோ வந்த சின்னம் அல்லது அறிவிப்பு என்று உணர்ந்து, தனது உள்ளம் அதன்போல திரும்பி, இசையின் மூலம் ஒரு புதிய அறிவை பெறுகிறது.

முடிவுரை:

கதையின் இறுதியில், போல்ஸ்கா இசையின் மூலம் தன்னுள் அமைதியைக் கண்டுபிடிக்கிறார். அவர் எந்த எதிர்ப்பு சத்தமும் இல்லாமல், முழு அமைதியையும் அனுபவித்து, அந்த அமைதியினை முழுக்க ஏறி, இறைவனிடம் வணங்கி, அன்பும் பக்தியும் வெளிப்படுத்துகிறார்.

8

 

45 .

தலைப்பு:  இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு)

முன்னுரை:

              நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்:

                                                  ”விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

                                                    பசும்புல் தலைகாண் பரிது"

     என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு:

    மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.

பசுமையைக் காப்போம்:

      சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.

மரமும் மழையும் வரமும் உயிரும்:

      ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.

முடிவுரை:

      இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்

8

 

45. .

உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

  விடைக்குறிப்பைப் பதிவிறக்க


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை