10 TH STD TAMIL 3 MARK QUESTION & ANSWER

 

10.ஆம் வகுப்பு தமிழ்

மூன்று மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 29 முதல் 37 வரை)

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

விடை

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளதுஇதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

விடை                                     

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

                இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

விடை: அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

விடை:

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

5. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன் னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை  எழுதுக.

விடை:

1.      உயிராய் நான் ; மழையாய் நான்

2.     நானின்றி பூமியே சுழலாது  

3.    பூமித்தாயின் குருதி நான்.

6. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க .

விடை:

சோலைக்காற்று :         இயற்கையில் பிறக்கிறேன்

மின்விசிறிக்காற்று :     செயற்கையில் பிறக்கிறேன்

சோலைக்காற்று :         காடும்,மலையும்,இயற்கையும் எனது இருப்பிடங்கள்

மின்விசிறிக்காற்று :     இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள்

7. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில்  குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள் . இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

விடை:

ü  மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ü  பூங்கொடி- அன்மொழித்தொகை

ü  ஆடுமாடுஉம்மைத்தொகை

ü  குடிநீர்வினைத்தொகை

ü  மணி பார்த்தாள்இரண்டாம் வேற்றுமைத்தொகை

8. மழைநின்ற வுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைகளில்  சொட்டும் நீர் - உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் 'சளப் தளப் ' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

விடை

ü  நீரின்றி வறண்ட பகுதியில் திடீரென்று கோடை மழை கொட்டியது.  உள்ளத்தில்  புத்துணர்ச்சியுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன்.

ü  சாலையோர மரங்களில் மகிழ்ச்சி வெள்ளம்:ஆனந்தக்கண்ணீராக இலைகளில் இருந்து சொட்டிய நீர்.

ü  குளிர் காற்றின் வருடல்: உடலில் ஓடும் மெல்லிய குளிர்.

9. காற்று பேசியதைப்போல் நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக

ü  உங்களுக்கு உணவையும் நீரையும் தருகிறேன்

ü  நீங்கள் செய்யும் சில தவறுகளால் நான் மசடைகிறேன்

ü  செயற்கை உரம், வேதிக்கழிவு ஆகியவற்றால் நான் பாதிக்கப்படுகிறேன்

ü  என்னை மாசடையாமல் காப்பது உங்கள் பொறுப்பு.

10. 'கண்ணே கண்ணுறங்கு!

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பெய்கையிலே

     மாம்பூவே கண்ணுறங்கு!

     பாடினேன் தாலாட்டு!

     ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' -இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

1.      'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

2.    மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

3.    பாடினேன் தாலாட்டு வினைமுற்றுத்தொடர்

4.    ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

11. “ பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – வினவுவது ஏன்?

விடை:

    வீட்டின் முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப்படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை , குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது.

12. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதை சில இடங்களில் காணமுடிகிறது.காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

விடை:

ü  தமிழரின் பண்டைய விருந்தோம்பல் பண்பில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ü  புதிதாக வருபவர் விருந்தினர் என்றநிலை மாறி நன்கறிந்தவர்களே விருந்தினராகக் கருதப்படுகின்றனர்.

ü  வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு மாறிவிட்டன.

13.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

விடை:

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்  என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

14. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.

விடை:

v  உறவினரை முகமலர்ச்சியுடன் நோக்கினேன்.

v   வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன்.

v  உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறினேன்  

v  தலைவாழை இலையில் உணவிட்டேன்.

v  அவர் செல்லும் போது வாயில் வரை சென்று வழியனுப்பினேன்.

15. வாழை இலை விருந்து தமிழர் பண்பாட்டுடன் எங்ஙனம் பிணைந்திருந்தது?

விடை:

v  தமிழர் பண்பாட்டில் முக்கியமானது வாழையிலை விருந்து

v  அது தமிழர் மரபாகக் கருதப்படும்

v  வழை இலையில் உண்பது மருத்துவப் பயன் உடையது

v  அதில் வைக்கப்படும் உணவுகளுக்கேற்ப இடம் வலமாகப் பயன்படுத்துவர்.

16. வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

     கோலொடு நின்றான் இரவு   -   குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

விடை:

-     இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      மக்களிடம் வரி வாங்குவது அரசன் வழிப்பறி செவதற்குச் சமம்.

அணிப்பொருத்தம்:                                                                                               

      உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம்அரசன் வரி வாங்குவது, உவம உருபு போலும்

17. "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமைசுட்டும்செய்தியைவிளக்குக.

விடை:

    # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

    # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

    # அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

18. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த

சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

விடை:

     # மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.

     # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.           

19. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின்மென் பொருள். மனிதனைப் போலவே பேச , எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் எழுதுக.

விடை:

     # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

     # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

     # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன்

        தனது சேவையை அளிக்கும்.

20. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்த து. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலச்சுமி கூப்பிடுகிறாள்,  போய்ப் பார்" என்றார் . "இதோ சென்றுவிட்டேன்" என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளை யாடவேண்டுமா?" என்று கேட்டேன்.என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

     - இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.      

விடை: 

ü  குட்டி- மரபு வழுவமைதி

ü  இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி

ü  இதோ சென்றுவிட்டேன்கால வழுவமைதி

ü  அவனைபால் வழுவமைதி                           

21. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

விடை:

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

22. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் ? விடை:

ü  கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ü  கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.

ü  கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

23. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.

24. வைத்தியநாதபுரி முருகன் குழந்தை யாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங் கீரை ஆடியநயத்தை விளக்குக.

விடை:

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக.

25. நவீன கவிதையில் வெளிப்படும்  நுண்மை உள்ளம் பூத்தொடுக்கும் நாட்டுப்புறப்பாடலில் வெளிப்படுமாறு ஒப்பிட்டு எழுதுக

விடை:

நவீன கவிதை

நாட்டுப்புறப்பாடல்

1.காம்புகளை இறுக்கி முடித்தால் துண்டிக்கப்படும்; தளரப்பிணைத்தால் நழுவும்.

அம்மனுக்கு மலர்களை விரலால் எடுத்தால் காம்பழுகிப்போய்விடும் என்று எண்ணுகின்றனர்.

2.வாழ்நாள் முடிவை அறிந்தும் சிரிக்கும் மலர்களைப்போலபெண்களும் குடும்பத்தைக் காக்கிறார்கள்

கையால் எடுக்காமல் தங்கத்துரட்டியால் எடுக்கின்றனர்.

26. ‘கடற்கரை யில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன.’ - காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும்,பண்டைத் தமிழரின் திணைநிலைத்தொழில்கள் இன்றளவும்  தொடர்வதையும் அவற்றின் இன்றை ய வளர்ச்சியை யும் எழுதுக.

விடை:

ü  சங்ககாலத் தமிழர் திணையின் அடிப்படையில் நிலத்தைப்பிரித்தனர்

ü  ஐவகை நிலங்களுக்கேற்ப தனித்தனியே தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்தனர்.

ü  இன்றைய சூழலில் திணைநிலைத் தொழில்கள் நவீனமாக்கப்பட்டுள்ளதே தவிர மாறவில்லை.

27. தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள்  நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

விடை:

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

28. சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி விளக்குக.

விடை:

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார்.

29. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

விடை:

v  கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், தன் சுற்றத்தாரிடம் அன்பு இல்லாமலும், அறிவுடையோர் துணை இல்லாமலும் இருந்தால், பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது."

v  பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

v  பிறருக்குக் கொடுத்து உதவாதவர் பெற்ற செல்வம், பயனற்றுப் போகும்.

v  வாழ்வில் வெற்றி பெறச் சுற்றத்தையும் துணையையும் போற்றி வாழவேண்டும் என, வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

30. முதல்மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

விடை:

ü  மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.

ü  பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.

ü  மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்

ü  உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.

31. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

விடை:

ü  வஞ்சித்திணை: மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது.

ü  காஞ்சித்திணை:எதிர்த்துப் போரிடுவது.

32. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

விடை:

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம்

          பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

33. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

விடை:

ü  சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான  நலன்களை  உருவாக்குகின்றன.

ü  இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என  எண்ணாமல்  ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

ü  நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று  சங்க  இலக்கியங்கள்  கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

ü  மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்   தேவையே.

34. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

விடை:

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

35. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்புசுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

விடை:

ü  வீட்டைத்தூய்மையாக வைத்திருத்தல்

ü  மழைநீரைச் சேமித்தல்

ü  பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல்

ü  வீதிகளைத் தூய்மைப்படுத்தல்

ü  மரங்களை வளர்த்தல்

ü  இயற்கை உரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

36.வாளித்தண்ணீர்,சாயக்குவளை,கந்தைத்துணி,கட்டைத்தூரிகை-இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி ஒரு பத்தி அமைக்க

விடை:  வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும் சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்

37. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

   தமிழர். போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார். முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர்.பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

. ஆவூர் மூலங்கிழாரின் போர் அறம் யாது?

விடை: தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

விடை: போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார். முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

. யாருக்கெல்லாம் தீங்கு வராதவண்ணம் போர் புரிய வேண்டும்?

விடை: போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர்.பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்.

38. அலகிட்டு வாய்பாடு (மாதிரி)

சீர்

அசை

வாய்பாடு

தாளாண்மை

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

என்னும்

நேர்+நேர்

தேமா

தகைமைக்கண்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தங்கிற்றே

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

வேளாண்மை

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

என்னும்

நேர்+நேர்

தேமா

செருக்கு

நிரைபு

பிறப்பு

39. "சித்தாளின் மனச்சுமைகள்

    செங்கற்கள் அறியாது" – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

விடை:

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்டசித்தாளுகவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

40. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

விடை:

ü  கதாசிரியர் ஊர் திரும்புவதற்கு பன்னிரண்டணா போக மீதியைச் செலவு செய்தார். இரண்டணாவை பிச்சைக்காரனுக்குத் தருமம் செய்தார்.

ü  பயணச்சீட்டு விலை ஏறி இருந்ததை அறியாத கதாசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.

ü  பிச்சைக்காரன் தட்டில் இருந்து தான் போட்ட இரண்டனாவை எடுத்துக்கொண்டு ஓரணாவைத் திருப்பி போட்டார்.

ü  பிச்சைக்காரன் பேசிய வார்த்தைகள் அவரது மனதை மாற்றியது. திரும்பவும் தான் எடுத்த சில்லறையை அந்த தட்டிலேயே போட்டுவிட்டார்.         

ü  அடுத்த தொடர்வண்டி நிலையத்திற்கு நடந்தே சென்று ரயில் ஏறினார்.

41. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

விடை:

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

42. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

விடை:

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “  போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

      மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை ,”மதுரை நகருக்குள் வரவேண்டாம் எனக் கூறிகையசைப்பதாகக் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

43. தன்மையணியை விளக்குக.

விடை:

தன்மையணி

   எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின்மனம் மகிழுமாறு உரியசொற்களை அமைத்துப்பாடுவது தன்மையணியாகும்.

சான்று:

    மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

      -----”

அணிப்பொருத்தம்:

       கண்ணகியின் தோற்றமும் , கண்ணீரும் கண்ட அளவிலேயே பாண்டிய மன்னன் தோற்றான். அவளது சொல் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

       கண்ணகியின்துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

44. தீவக அணியை விளக்குக.

விடை:

அணி இலக்கணம்:

  தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது தீவக அணி

சான்று:

   சேந்தன வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர்

     -------------------------------------”

பொருள்:

   அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகியவை சிவந்தன

அணிப்பொருத்தம்:

  சேந்தனஎன்ற சொல் செய்யுளின் பல இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது.

45.”தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

     மேவன செய்தொழுக லான்    -  குறளில் வந்த அணியை விளக்குக

விடை:

அணி இலக்கணம்:

     புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சி அணி

பொருள்:

   விரும்புவனவற்றைச் செய்வதால் தேவரும் கயவரும் ஒரு தன்மையர்

அணிப்பொருத்தம்:

    கயவரைப்  புகழ்வது போலப் பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை