10 TH STD TAMIL 2 MARK QUESTION & ANSWER

 

10.ஆம் வகுப்பு - தமிழ்

 இரண்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28)                                                             

1. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

விடை:

ü  வேம் + கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி

ü  சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும் குறித்தது ( பொதுமொழி)

2) மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை

விடை: சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி

3) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

விடை: சரியான தொடர்கள்:

             * ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன

             * ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

          பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.

4) உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

விடை: இன்னிசையளபெடைஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது.

5) தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக

விடை:  காலையிலேயே மாலையும் வந்து விட்டது.( மாலை பொழுதையும், பூவையும் குறித்தது)

5) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

       தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

            தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

             ஓதி யுனர்ந்தின் புருவோமே

விடை:

   தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

       தேரும் சிலப்பதி காரமதை

  ஊனிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

       ஓதி யுணர்ந்தின் புறுவோமே

6) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

        (குவியல், குலை, மந்தை, கட்டு)   கல், புல், பழம், ஆடு

விடை: கற்குவியல்,பழக்குலை,ஆட்டுமந்தை,புற்கட்டு

7) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

விடை: தேன்மழை,மணிமேகலை,வான்மழை,பொன்மணி ,பூவிலங்கு

8. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.      சொற்கள் -ஆடு, கல், புல், பழம்

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

கற்குவியல்

புல்

புற்கட்டு

பழம்

பழக்குலை

ஆடு

ஆட்டுமந்தை

9. செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டு, தமிழ் எண்ணில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,இரண்டு

’ ,

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

ஆயிரம்

000

10. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைக்க.

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

விடை: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடை: ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

விடை: நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

விடை: பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

11. குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத் தொடர்கள் அமைக்க.

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

குறளின்பம்

குறளின்பத்தை அறியாதவர் உண்டோ?

சுவைக்காத இளநீர்

உழவன் சுவைக்காத இளநீர் உண்டா?

காப்பியச் சுவை

சிலப்பதிகார காப்பியச் சுவைக்கு ஈடு  உண்டா?

மனிதகுல மேன்மை

விருந்தோம்பல் மனித குல மேன்மையை உயர்த்தக் கூடிய பண்பு அல்லவா?

விடுமுறைநாள்

சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா?

12. கலைச்சொல் அறிதல்

1.     Vowel - உயிரெழுத்து

2.    Consonant – மெய்யெழுத்து

3.    Homograph – ஒப்பெழுத்து

4.    Monolingual – ஒரு மொழி

5.    Conversation - உரையாடல்

6.    Discussion – கலந்துரையாடல்

13. தேன், நூல், பை, மலர், வா இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழியாக்குக.

விடை:  

ü  தேன் குடி

ü  நூல் படி

ü  பை எடு

ü  மலர் கொய்

ü  வா போகலாம்

14. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை  உருவாக்குக.

     காண், சிரி, படி, தடு

விடை:

ü  காண்+சி=காட்சி

ü  சிரி+பு = சிரிப்பு

ü  படி+தல்=படித்தல்

ü  தடு+தல்=தடுத்தல்

15. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் சிலவற்றை எழுதுக.

விடை: வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலியசிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.

முழுவதையும் பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை