QUARTERLY EXAM QUESTION PAPER & ANSWER KEY DHARMAPURI DISTRICT 10 TH STD TAMIL

 

காலாண்டுப்பொதுத் தேர்வு-2026 தருமபுரி & திண்டுக்கல் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

1

2.     

ஈ. மன்னன் , இறைவன்

1

3.     

. சருகும், சண்டும்

1

4.     

அ. வேற்றுமை உருபு

1

5.     

ஈ. கூட்டுநிலைப் பெயரெச்சத்தொடர்

1

6.     

ஆ. கம்பராமாயணம்

1

7.     

இ. பத்து

1

8.     

ஆ. சிறுபாணாற்றுப்படை

1

9.     

. உயிர்ப்பின் ஏக்கம்

1

10.   

. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் 

1

11.    

அ. பண்புத்தொகை

1

12.   

ஆ. முத்துக் குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

1

13.   

இ. குமரகுருபரர்

1

14.   

ஈ. கம்பி, வம்பவ

1

15.   

அ. வியங்கோள் வினைமுற்று

1

                        பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

குலேசபாண்டியன், இடைக்காடனார்

2

17

. தாகூருக்கு எந்த நூலுக்காக நோபல் பரிசு கிடைத்தது?

. தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை யாது?           (மாதிரி விடை)

(வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

2

18

ü  பல கைஎன்று வந்தபோது கையைக் குறித்தது.

ü  பலகைஎன்று வந்தபோது மரப்பலகையைக் குறித்தது.

ü  தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது.

2

19

சிலம்பு , கிண்கிணி, அரைஞாண், அரைவடம், சுட்டி, குண்டலம்.

2

20

ü  முதுகினால் சூரியனை மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை.

ü  தாகம் தீர்க்கும்போது மேகங்கள் கருணை மிக்கவை

2

21

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

2

                                                                   பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

காலவழுவமைதி

2

23

. உள்ளளவும் நினை     . மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

2

24

பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;

பதி - பகுதி

த் - சந்தி (ந் -ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

உ-வினையெச்ச விகுதி

2

25

அ. மனித வளம்  ஆ. விருந்தோம்பல்

2

26

அ. நான்கு,இரண்டு - ’ , உ  ஆ. எட்டு - அ

2

27

அ. கொடு கோடுபோட்டு தருகிறேன்  ஆ. சிலைக்கு சீலை கட்டினான் (மாதிரி விடைகள்)

2

28

கல்வி செல்வம்  , விருந்து ஈகை

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

3

30

. முத்தையா  ஆ. சேரமான் காதலி  இ. கண்ணதாசன்

3

31

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  வானமும், உருவமில்லாக் காற்றும், பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும்.

ü  பூமி உருவாகி, ஊழிக்காலம் தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.

ü  மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி, அவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது

3

33

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

3

34

 

.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

     எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

     போமெனில் பின் செல்வதாதல்              

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

       ஒழுக்கமும் வழிபடும் பண்பே

.

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு  வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைவேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்.

v  உவமேயம்செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபுபோலும்

         இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.

3

36

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

37

அ. அன்புச்செல்வன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; தொடுதிரை – வினைத்தொகை

ஆ. வெண்டைக்காய், மோர்க்குழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்.

இ. தங்கமீன்கள் -உவமைத்தொகை.

    தண்ணீர்த்தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ) திரண்ட கருத்து : காற்றைப் பாராட்டல்

மோனை நயம்:    மலர்ந்தும் - மலராத

எதுகை நயம்:  நதியில் - பொதிகை

இயைபு நயம்:   வண்ணமே - அன்னமே - மன்றமே

அணி நயம்:   உவமையணி

(அல்லது)

)

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 

5

39

.


உன் அன்புள்ள நண்பன்மா.குறளரசன்

5

40

வினாவுக்குப் பொருந்தய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

41

படிவங்களைச்சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

) (மாதிரி விடை)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம்பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

) மரியாதைக்குரியவர்களே, என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று தொல்காப்பியர் கூறியதைத் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம்.

தனித்து உண்ணாமை:

தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.

விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:

            விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக் கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை

அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” 

என்று நற்றிணை குறிப்பிடுகிறது.

வறுமையிலும் விருந்தோம்பல்:

ü  தமிழர் வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.

ü  விதை நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.

ü  வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

ü  கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.

நிலத்திற்கேற்ற விருந்து:

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும், உணவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:

வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?”

 என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது.

முடிவுரை:

பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலைப் போற்றி பெருமிதம் கொள்வோம்.

 (அல்லது)

ஆ. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை:

நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டைத் தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

பசுமை பரப்புகளை அதிகரித்தல்:

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல்:

ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களைப் பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.

எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது

தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:

ü  தொழிற்சாலைகள் வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையைச் சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளைக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

ü  மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.

குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:

குப்பைகளைத் திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது  செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாகச் செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!

8

44

) புயலிலே ஒரு தோணி

முன்னுரை:

            பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று. நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்

விடாது பெய்த மழை:

கடுமையான வெயில் மறைந்து, இமைக்கும் நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கின. மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள  கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தள்ளாடிய கப்பல் (தொங்கான்):

           மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான்ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான். இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல் தள்ளாடியது. மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..

பயணிகளின் தவிப்பு:  

பாண்டியன் கடலைப் பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம்  தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும், கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். அதற்குக் கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையைப் பார்க்கலாம்: இனி பயமில்லை என்றார்.

கரையைக் காணுதல்:

            ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக   மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூரக்  கப்பல்கள்  கரை முழுவதும் நின்றிருந்தன.

முடிவுரை: 

இயற்கையைப் போன்று யாராலும் கொடுக்க முடியாது

 இயற்கை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது

தமிரோ?” என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.யா மஸ்தாஇன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளைச் சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே ஒரு தோணி கதையில்  இடம்பெற்றுள்ள வருணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின.

 (அல்லது)

)  முன்னுரை:

            கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி. அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோ? பரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யா அருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:

 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:                                             

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதைக் கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

8

45

) முன்னுரை:

           என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

தமிழைத் தாய் எனக் கொண்ட புலவர்கள்:

 

தமிழ்மொழியைத் தாயாகக் கருதி, அதனைப் போற்றிப் பாடியவர்கள் சான்றோர். அவர்கள் தமிழின் இனிமையையும் செழுமையையும் உணர்ந்து, தங்கள் படைப்புகளால் தமிழை அலங்கரித்தனர். தாய்க்கு பிள்ளை பேசுவது போல், அவர்கள் பிள்ளைத்தமிழ் பாடல்கள் பாடி தமிழுக்கு அன்பு செலுத்தினர். தமிழின் மேன்மையைப் புகழ்ந்து பல்வேறு இலக்கிய வடிவங்களில் படைப்புகளை வழங்கினர்.

பல்வேறு இலக்கிய வடிவங்களின் தோற்றம்:

 

தமிழை வளர்க்கும் நோக்கில் சான்றோர் பல இலக்கிய வடிவங்களை உருவாக்கினர். சதகம், பரணி, கலம்பகம், உலா, அந்தாதி, கோவை போன்ற பல வகையான இலக்கியங்கள் தமிழில் தோன்றின. இவ்வாறான படைப்புகள் தமிழின் செழுமையையும் கலைநயத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டின. இவை தமிழின் இலக்கியச் செல்வத்தை அதிகரித்ததோடு, தமிழை உலகமெங்கும் புகழ்பெறச் செய்தன.

தமிழின் அழகை உயர்த்திய  சான்றோர்:

      சான்றோர் தமிழை அணியாகப் பூட்டி அழகூட்டினர். அவர்களின் கவிதைகளும் இலக்கியங்களும் தமிழின் இனிமையையும் ஆழத்தையும் வெளிப்படுத்தின. தமிழை உயர்த்திப் போற்றும் இந்தப் புலவர்கள், தங்கள் உள்ளம் மகிழ்ந்து தமிழுக்கு சேவை செய்தனர். அவர்கள் படைத்த இலக்கியங்கள் இன்றளவும் தமிழரின் பெருமையாக விளங்குகின்றன.

முடிவுரை:

என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

ஆ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக குறிப்பு:நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும்.

நூலின் மையப் பொருள்:

        அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.

வெளிப்படும் கருத்து:

·        மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும்.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில், ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார்.

சிறப்புக் கூறு:

      தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்: 

தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன்

 (அல்லது)

) பொருந்திய விடையை உரிய கட்டுரை அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

8

  பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை