9 TH STD QUARTERLY EXAM MODEL QUESTION PAPER-3


காலாண்டுப் பொதுத்தேர்வு-மாதிரி வினாத்தாள்-3

9.ஆம் வகுப்பு          தமிழ்     மதிப்பெண்கள்:100    கால அளவு: 3.00 மணி நேரம்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                   5X1=15

1) பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

அ) குக்கூஉ எனக் குயில் கூவியது  ஆ) கொக்கரக்கோ எனச் சேவல் கூவியது

இ) அண்ணாஅ என அழைத்தாள்   ஈ) ஓடி வா ஓடி வா

2) 'உணவு' எனப்படுவது நிலத்தொடு நீரே' என்று கூறும் நூல் எது?

அ) புறநானூறு  ஆ) தமிழ்விடுதூது  இ) பெரியபுராணம்  ஈ) மணிமேகலை

3) தீரா இடும்பை தருவது எது?

அ) ஆராயாமை, ஐயப்படுதல் ஆ) குணம், குற்றம்  

இ) பெருமை, சிறுமை  ஈ) நாடாமை, பேணாளம்

4) பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக

அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர்  இ) கருவியாகுபெயர் ஈ) கருத்தவாகுபெயர்

5). 'மாடு' - என்பதன் பொருள் என்ன?

அ) கீழே  ஆ) மேலே  இ) பக்கம்  ஈ) தொலைவு

6) தண்டமிழ் ஆசான் சாத்தன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?

அ) கம்பர்  ஆ) குட்புலவியனார்  இ) சேக்கிழார்  ஈ) இளங்கோவடிகள்

7) திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது?

அ) தமிழ்  ஆ) தெலுங்கு இ) மலையாளம் ஈ) கன்னடம்

8) பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக

அ) நல்லநண்பன் ஆ) இனிய வணக்கம்  இ) எந்த ஓவியம்ஈ) கொடிய விலங்கு

9) ஏறுதழுவுதல் நிகழ்வினைக் 'காளைகளின் பாய்ச்சல்' என குறிப்பிடும் நூல் எது?

அ) பள்ளு  ஆ) புறப்பொருள் வெண்பாமாலை  இ) புறநானூறு ஈ) கலித்தொகை

10) பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?

அ) வென்றார்  ஆ) நடந்த  இ) வளர்க  ஈ) பொருந்திய

11) தமிழ் விடு தூது என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது

அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம்  ஈ) தனிப்பாடல்

பாடலைப்படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே!

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

12) இப்பாடல் இடம்பெறும் நூல் ...

அ) புறநானூறு ஆ) பெரியபுராணம் இ) இராவணகாவியம் ஈ) மணிமேகலை

13) இப்பாடலின் ஆசிரியர்

அ) இளங்கோவடிகள் ஆ) புலவர் குழந்தை இ) சேக்கிழார் ஈ) குடபுலவியனார்

14) உடம்பும் உயிரும் என்பதன் இலக்கணக் குறிப்பு

அ) பண்புத்தொகை ஆ) எண்ணும்மை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை

15) புணரியோர் என்பதன் பொருள்

அ) விலகியவர் ஆ) இணைந்தவர் இ) நினைத்தவர்  ஈ) தந்தவர்

பகுதி-2 (மதிப்பெண்கள்:18)

                                           பிரிவு-1                                       4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க

அ) இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

ஆ) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்

17) கண்னி என்பதன் விளக்கம் யாது?

18) நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

19) தீயவை தீய பயத்தலால் தீயவை

   தீயினும் அஞ்சப் படும் . - இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

20) தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக

21) எனைத்தானும் - எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக

                                        பிரிவு-2                                       5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) காலவாகுபெயர் குறிப்பு தருக

23) தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க

அ) கல்லாடம் படித்தவரோடு-----------

அ) சித்திரமும் கைப்பழக்கம்--------

24) பிழைநீக்கி எழுதுக

அ) மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தன் கொண்டு குளிர வைத்தாள்

ஆ) சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரை தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்

25) படிப்போம் பயன்படுத்துவோம் அ) Excavation ஆ) Lexicon

27) மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைந்து எழுதுக

அ) முதலும் முடிவும் ஆ) நகமும் சதையும்

26) அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

28) பேசுதல் - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக

பகுதி-3 (மதிப்பெண்:18)

                                        பிரிவு-1                                      2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) மூன்று என்னும் எண்ணும் பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றள்ளது?

30) சோழர்காலக் குமிழித்தூம்பு தற்காகப் பயன்படுத்தப்பட்டது?

31) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

தேசிய விளையாட்டாக காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில் காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. சில நாடுகளில் காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை கொல்லப்படுவதும் உண்டு. இது மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துகிறது.

அ) சில நாடுகளில் காளைச் சண்டை எவற்றை வெளிப்படுத்துகிறது?

ஆ) தேசிய விளையாட்டாக காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் நாடு எது?

இ) உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக.

                                             பிரிவு-2                                    2X3=6                                                 

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக

33) வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி எழுதுக

34) அடிபிறழாமல் எழுதுக

அ) தித்திக்கும் எனத்தொடங்கும் தமிழ்விடு தூது மனப்பாடப் பாடல்

(அல்லது)

ஆ) காடெல்லாம் எனத் தொடங்கும் பெரிய புராணம் மனப்பாடப் பாடல்

                                         பிரிவு-3                                    2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35) அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக

36) பகுபத உறுப்புகளை எழுதுக

37) ஏகதேச உருவக அணியை விளக்குக

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                5X5=25

38) அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக

(அல்லது)

ஆ) திருக்குறள் குறித்த 5 குறிப்புகளை எழுதுக

33) அ) உங்களின் நண்பர், பிறந்த நாள்பரிசாக அனுப்பிய 'கால்முளைத்த கதைகள்' (ஆசிரியர் எஸ்.இராமகிருஷ்ணன்) என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக

(அல்லது)

ஆ) பள்ளிநேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டிய விண்ணப்பம் எழுதுக

40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக 

41) அ) நயம் பாராட்டுக

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தே

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல

ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்

42) அ) மொழிபெயர்க்க

அ. A nation's culture resides in the hearts and in the soul of its people - Mahatma Gandhi

ஆ. The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru

இ. The biggest problem is the lack of love and charity - Mother Teresa

ஈ. You have to dream before your dreams can come true A.P.J. Abdul Kalam

உ. Winners don't do different things; they do things differently - Shiv Khera

(அல்லது)

ஆ) நீ பாராட்டுப் பெற்ற சூழல்கள் 5 எழுதுக

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                 3X8=24

43) அ) காலந்தோறும் தன்மைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக

(அல்லது)

ஆ) வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக

44 ) அ)தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக

(அல்லது)

ஆ) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக

45) அ) உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க

(அல்லது)

ஆ) பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிச் செய்திகளைத்' திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

 பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை