QUARTERLY EXAM QUESTION PAPER & ANSWER KEY CHENNAI DISTRICT 10 TH STD TAMIL

 

காலாண்டுப்பொதுத் தேர்வு-2026 சென்னை & செங்கல்பட்டு மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வான்வெளியில், பேரொலியில்

1

2.     

. மணிப்பெயர் வகை ஆ. 3 , 1 ,4 ,2

1

3.     

ஈ. உவமைத்தொகை

1

4.     

ஆ. வங்காள, ஆங்கில

1

5.     

. திணை வழுவமைதி

1

6.     

அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

1

7.     

. சுடுதல், சுட்டல்

1

8.     

அ. வேற்றுமை உருபு

1

9.     

. வேற்றுமை உருபு

1

10.   

. கூட்டுநிலைப் பெயரெச்சம்

1

11.    

ஆ. குலை

1

12.   

இ. பரிபாடல்

1

13.   

. கீரந்தையார்

1

14.   

. கரு வளர்- உரு அறிவாரா

1

15.   

. வானம்

1

                        பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

நடுவு நிலைமையோடு இரக்கம் காட்ட வேண்டும்

 

2

17

அ. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று என்னென்ன உணவு கொடுத்தனர்?

ஆ. உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?           (மாதிரி விடை)

(வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

2

18

ü  முதுகினால் சூரியனை மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை.

ü  தாகம் தீர்க்கும்போது மேகங்கள் கருணை மிக்கவை

2

19

ü  கிழக்கிலிருந்து வீசும் காற்றுகொண்டல்

ü  மேற்கிலிருந்து வீசும் காற்றுகோடை

ü  வடக்கிலிருந்து வீசும் காற்றுவாடை

ü  தெற்கிலிருந்து வீசும் காற்று - தென்றல்

2

20

இல்லை, ”விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும்என்ற எண்ணமே தேவை.

2

21

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

2

                                                                   பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. விருந்து  ஆ. பல்துறை ஊடகம்                 அ. புதுமை  ஆ. காற்று

2

23

. மருந்தும் மூன்று நாளுக்கு     . சோற்றுக்கு ஒரு சோறு பதம்

2

24

அ. நடத்தல் (அ) நடை   ஆ. வாழ்தல்(அ) வாழ்க்கை

2

25

அமர்+த்(ந்)+த்+ஆன்

     அமர்-பகுதி, த்-சந்தி,  ந்-விகாரம், த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி

2

26

கல்வி செல்வம், விருந்து ஈகை

2

27

வந்து சென்றது , தந்து சென்றது (மாதிரி விடைகள்)

2

28

"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ. விளக்குவது  ஆ. அவரது மொழியில் புரிந்துகொள்வார்

3

30

) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

 ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

31

1.     உயிராய் நான் ;  மழையாய் நான்

2.     நானின்றி பூமியே சுழலாது 

3.       பூமித்தாயின் குருதி நான்.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும்.

ü  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர்.

ü  உலகத்தோடு இணைந்து வாழாதவர், கற்றவராயினும் அறிவு இல்லாதவரே

3

33

ü  வானமும், உருவமில்லாக் காற்றும், பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும்.

ü  பூமி உருவாகி, ஊழிக்காலம் தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.

ü  மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி, அவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது

3

34

 

.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!                

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

3

36

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

37

 

சீர்

அசை

வாய்பாடு

1

அரி/யவற்/றுள்

நிரை+நிரை +நேர்

கருவிளங்காய்

2

எல்/லாம்

நேர்+நேர்

தேமா

3

அரி/தே

நிரை +நேர்

புளிமா

4

பெரி/யா/ரைப்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

5

பே/ணித்

நேர்+நேர்

தேமா

6

தம/ராக்

நிரை +நேர்

புளிமா

7

கொளல்

நிரை

மலர்

இத்திருக்குறள் மலர் என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

 (அல்லது)

)

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

5

39

.

(மாதிரிக் கடிதங்கள்)

பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்       

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

) அனுப்புநர் , பெறுநர், ஐயா, பொருள், கடிதத்தின் உடல், இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் ழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

40

வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

41


5

42

) (மாதிரி விடை)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம்பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து, சுகந்தம் வீசியதால். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

நாட்டுவளமும் சொல்வளமும்

முன்னுரை:

'நாடும் மொழியும் நமதிரு கண்கள்'

            என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம்.

தேவநேயப்பாவாணர்:

          தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.

            ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.

சொல்வளத்திற்கான சில சான்றுகள்:

ü  ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.

ü  விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.

ü  பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ü  செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது.

ü  தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

       சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்

(அல்லது)

முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

             மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

  மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

             'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

8

44

முன்னுரை:

 

            கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி. அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோ? பரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யா அருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது

ன்னமய்யாவின் மனநிறைவு:

 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:                                             

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதைக் கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

(அல்லது)

)  பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்?  என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

8

45

) (மாதிரி கட்டுரை)

நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும்.

நூலின் மையப் பொருள்:

        அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.

வெளிப்படும் கருத்து:

·        மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும்.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில், ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார்.

சிறப்புக் கூறு:

      தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்: 

தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன்

 (அல்லது)

) பொருந்திய விடையை உரிய கட்டுரை அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

 

8

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை