QUARTERLY EXAM QUESTION PAPER & ANSWER KEY RANIPET DISTRICT 8 TH STD TAMIL


காலாண்டுப் பொதுத்தேர்வு- செப்டம்பர் 2026, இராணிப்பேட்டை மாவட்டம்

8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

பகுதி-I

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                            15X1=15

வி எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. ஞாயிறு

1

2.     

. வைப்பு

1

3.     

. வட்டெழுத்து

1

4.     

. மார்பு

1

5.     

. வானமறிந்த

1

6.     

. காவாதான், வைத்தூறு

1

7.     

. நட  

1

8.     

. இளமை

1

9.     

. படித்தான்

1

10.   

. இரத்தக்கொதிப்பு

1

11.    

. வானம் - வளர்மொழி

1

12.   

. அச்சுக்கலை

1

13.   

. வரும் = என்று

1

14.   

. கடல்

1

15.   

. கல்லாதவர்

1

கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                   4X1=4

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16.

கண்ணெழுத்துகள்

1

17.

வீரமாமுனிவர்

1

18.

அறிவியல்

1

19.

அறிவியல்

1

 

பகுதி- II    பிரிவு-1

எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                              6X2=12

20

சான்றோர்க்கு அழகாவது  நடுவுநிலைமை

2

21

§  நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

§  அளவான உணவு

§  சத்தான உணவு

2

22

தொடக்ககாலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவேஇருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்

2

23

பட்ட மரம் தான் வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது.

2

24

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

2

25

உலகமெங்கும்

2

26

வேர்,பட்டை,இலை,பூ,கனி

2

27

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

2

பிரிவு-2

எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                                               6X2=12

28

         உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில்  பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

2

29

v  , ,

v  , ,

v  ,           ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2

30

. திறமை ஆ. நுண்ணுயிர் முறி  

2

31

கற்கள், பூக்கள், மரங்கள், புற்கள்

2

32

. திங்களன்று திங்கள் பார்த்த்தேன்  . ஆற்றில் ஆறு முறை குதித்தேன் ( மாதிரி விடைகள்)

2

33

. நட  . போ

2

34

. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

. திருக்குறள் அறம்,பொருள்,இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

2

35

தக்கார்  தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால்  காணப்  படும்.

2

 

பகுதி- III  

பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                                  2X3=6

36

v  பட்ட மரம், தான் வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது.

v  நிழலையும் மணம் மிகுந்த மலர்களையும் தருவதற்காக மரத்தின் இலைகள் கூரைபோல் விரிந்திருந்தன.

v  அவை வெந்து கரிய நிறம் பெற்றதை எண்ணி வருந்தியது.

v  மரம் என்னும் பெயர் மாறி, கட்டை என்னும் பெயரைப் பெற்றது.

v  அதன் உடையாகிய பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தது.

v  சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது என்பன எல்லாம் ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்து விட்டன

3

37

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

38

ü  இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.

ü  பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

ü  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

ü  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

ü  அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.

ü  செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

ü   நிறைஎனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.

ü   நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனைவழங்குதல்.

ü  பொறுமைஎனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.

3

பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                                  2X3=6

39

. தேசிக விநாயகனார் 

. குமரி மாவட்டம் தேரூர் 

. ஆசிய ஜோதி, மருமக்கள்வழி மான்மியம், கதர் பிறந்த கதை

3

40

ü  இயற்கையை விட்டு விலகியமை

ü  மாறிப்போன உணவு முறை

ü  மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

ü  மன அழுத்தம்

3

41

ü  நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுகின்றது.

ü  ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு ()  பயன்படுகின்றது.

ü  ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.

3

பிரிவு-3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                                  2X3=6

42

ü  ர், ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயைநாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.

ü  ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியைநாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.

ü  ள் – இது மேல்வாயைநாக்கின் ஓரங்கள் தடித்துத்தடவுதலால் பிறக்கிறது.

3

43

3

44

பிறிது மொழிதல் அணி:

உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல்

அணி எனப்படும்.

எ.கா.

கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

விளக்கம்:

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய மூவலை ஏந்துவது பெருமை தரும் என்னும் உவமையின் மூலம் பெரிய முயற்சியே பெருமைதரும் என்னும் கருத்தை விளக்குவதால் இக்குறளில் பிறிதுமொழிதல் அணி வந்துள்ளது.

3

 

 

 

பகுதி- IV  

அடிபிறழாமல் எழுதுக                                                                                                             2+3=5

45

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்

2

46

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!

3

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

3

பகுதி- V  

பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக                                                                                3×6=18

47

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2022.

ஆருயிர் நண்பா,

        நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்பநாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது ஆருயிர் நண்பன்

.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

6

அனுப்புநர் , பெறுநர், ஐயா, பொருள், கடிதத்தின் உடல், இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் ந்ழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

6

48

v  தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.

v  தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கியங்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.

v  படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.

6

ü  சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

ü   விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ü  கணினித்திரை யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

6

49

§  வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று, அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.

§  நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.

§  இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு

§  இயற்கை இன்பக்கலம் கலித்தொகை

§  இயற்கை வாழ்வில்லம் திருக்குறள்

§  இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

§  இயற்கைத் தவம் சிந்தாமணி

§  இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம்

§  இயற்கை அன்பு பெரியபுராணம்

§  இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்

§  இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

      தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.

6

v  மனிதன் தனக்கு எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.

v  இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

v  தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

v  ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை" என்பர்.

v  இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

6

பகுதி- VI  

பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக                                                                                2×8=16

50

v  ஒரு குறிஞ்சிப் புதரில் வாழ்ந்த பச்சை வெட்டுக்கிளி, வாயாடித்தனமாக ஒரு மாலை நேரம் தன்னைக் காண வந்த கூரன் சருகுமானை பேச அழைக்கிறது.

v  ஆனால் கூரன் பித்தக்கண்ணு என்ற உயிர்வாழ்க்கைக்கு ஆபத்தான மிருகத்திடமிருந்து தப்பி ஓடி, மரத்தடியில் ஒளிகிறது.

v  பித்தக்கண்ணு வந்து வெட்டுக்கிளியிடம் கூரனைப் பற்றி கேட்க, வெட்டுக்கிளி பரவசத்தில் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே தவறவசமாக குதிக்கிறது.

v  இதைக் கவனித்த பித்தக்கண்ணு அந்த இடத்துக்கு சென்று, புனுகுப் பூனையின் வாசனையை மட்டுமே உணர்ந்து கிளம்புகிறது.

v  உயிர் தப்பிய கூரன் வெட்டுக்கிளியின்மீது கோபம் கொண்டு எச்சரிக்கையாக 'இனிமேல் இப்படி நடந்தால் மிதித்து நசுக்கி விடுவேன்' எனக் கூறி ஒளியின்றிப் போகிறது.

v  அதன் பிறகு, வெட்டுக்கிளி எப்போதும் பயத்தில் வாழத் தொடங்கியது. அதனால் தான் இன்றும் வெட்டுக்கிளிகள் ஓரிடத்தில் நிலைத்திருக்க முடியாமல் குதிக்கின்றன.  

6

ஓரெழுத்து ஒருமொழி

     உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், , , ந என்னும் வரிசைகளில் ஐந்து எழுத்துகளும், , ச. வ என்னும் வரிசைகளில் நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார் நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

கலைச்சொல் வடிவம்

    பூ, கா என்ற ஒரு இரு ஓரெழுத்து ஒருமொழியை இணைத்து பூங்கா என வழங்கினர். ஆ,மா இரண்டையும் ஆமா என்னும் சொல் உருவாக்கப்பட்டு காட்டுப் பசுவைக் குறித்தது. மாநிலம்,மாநாடு, மாஞாலம் இச்சொற்களில், மா என்பது பெரிய என்ற பொருளை தந்தது.

இக்கால வழக்கு

    ஈ என்ற சொல் ஒலிக்குறிப்பைக் காட்டும்; பூச்சி வகையைச் சுட்டும், வழங்குதல் என்னும் பொருளை உணர்த்தும். வெளிப்படை ஆகும். "ஈ என்று பல்லைக் காட்டாதே” என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ. சூ. சே. சை. சோ என்பவை இக்காலத்தில் வழங்கும் சொற்களாகும்.

8

51

நூலகம்

முன்னுரை–  நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை

முன்னுரை:

        “நூலகம் அறிவின் ஊற்று

        ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும் 

         சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

    ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

      மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

     மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

     நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

             “என்னை தலைகுனிந்து படித்தால்,

              உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

     என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

6

எனது தாய்மொழி தமிழ்

முன்னுரை:                

எனது தாய்மொழி தமிழ். இந்த வார்த்தைகளை கூறும் போதே என் மனதிற்கு ஒரு பெருமிதம், ஒரு உணர்ச்சி மேலோங்கி வருகிறது. தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டின் துடிப்பும், ஒரு இனம் பேசும் உயிரும் ஆகும்.

தமிழ் மொழியின் பாரம்பரியம்:

தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது சங்க காலத்திலிருந்தே வளர்ந்து வந்தது. தமிழ் இலக்கியங்கள், பாடல்கள், பழமொழிகள், பழைய வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் இந்த மொழியின் மகத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் உலகளாவிய புகழ் பெற்றவை.

என் தாய்மொழியின் தனிச்சிறப்புகள்:

தமிழ் ஒரு இனிமையான மொழி. இதில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இசை போல ஒரு அழகு உள்ளது. தமிழ் வார்த்தைகள் இயற்கையைப்போல இனிமையாகும். எளிமையாகவும், ஆழமான கருத்துக்களை சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உண்டு.

தாய்மொழியின் முக்கியத்துவம்:

ஒரு மனிதன் பிறக்கும் போது முதல் கேட்கும் மொழி தான் தாய்மொழி. அதனால் அது அவனுடைய உணர்வுகளோடும், எண்ணங்களோடும் பிணைந்திருக்கும். தாய்மொழி மனிதனை அடையாளம் காணும் முக்கிய அடையாளமாகும். எனவே தாய்மொழியை பேணிக் காக்க வேண்டும்.

முடிவுரை:                                                        

நாம் மற்ற மொழிகளை கற்கலாம், பேசலாம். ஆனால் நமது தாய்மொழி தமிழ் மீது நம்பிக்கையும், அன்பும் இருக்க வேண்டும். தமிழை நாமே முதலில் மதிக்க வேண்டும், பிறர் மதிப்பார்கள். என் தாய்மொழி தமிழ் எனும் சொல்லில் என்னுள் ஒரு பசுமை உணர்வு பிறக்கிறது. நான் தமிழைப் பெருமையாகக் கொண்டாடுகிறேன்!

 

  பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை