முதல்
இடைப்பருவத்தேர்வு 2026,
இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்,நாகை, திருவாரூர்,
மயிலாடுதுறை,கடலூர்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 6X1=6
|
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
இ) அணிகலன்களாக |
1 |
|
2. |
இ) வானம் + அளந்தது |
1 |
|
3. |
இ)
அச்சுக்கலை |
1 |
|
4. |
ஆ) உ, ஊ |
1 |
|
5. |
அ) தார் |
1 |
|
6. |
இ)
கொங்கலர் |
1 |
|
கோடிட்ட
இடங்களை நிரப்புக 6X1=6 |
||
|
7 |
வீரமாமுனிவர் |
2 |
|
8 |
சிட்டுக்குருவி, மலர்த்தேன், தேன்சிட்டு |
2 |
|
9 |
அ. கடல் ஆ. புகழ் , ஒலி |
2 |
|
10 |
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் |
2 |
|
11 |
அ.
கல்வெட்டு ஆ. உயிரெழுத்து |
2 |
|
12 |
அ) பேசு ஆ)
செல் |
2 |
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க
5X2=10 |
||
|
13 |
தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு
வாழ்கிறது
|
2 |
|
14 |
ஒரு சொல்
அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி ஆகும். |
2 |
|
15 |
ü ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை
வீரமாமுனிவர் போக்கினார். ü 'எ'
என்னும் எழுத்திற்குக்
கீழ்க்கோடிட்டு 'எ' என்னும் எழுத்தை நெடிலாகவும் 'ஓ'
என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு 'ஓ'
என்னும் எழுத்தாக உருவாக்கினார். |
2 |
|
16 |
சான்றோர்க்கு அழகாவது நடுவுநிலைமை |
2 |
|
17 |
திங்கள், ஞாயிறு,
மாமழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது. |
2 |
|
18 |
கலங்கும்
மனிதன் கைநீட்டி ஓலமிடும் காட்சி |
2 |
|
19 |
மனிதனுக்கு
நோய் வந்தபோது மருத்துவம் தொடங்கியது |
2 |
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க
2X3=6 |
|||
|
20 |
ü இயற்கையை விட்டு விலகியமை ü மாறிப்போன உணவு முறை ü மாசு நிறைந்த சுற்றுச்சூழல் ü மன அழுத்தம் |
3 |
|
|
21 |
v மழைநீர் மரத்தடியில் தேங்க
வழிசெய்ய வேண்டும். v மரங்களைக் காக்கும்
செயல்களில் ஈடுபட வேண்டும். v நெகிழிப் பொருள்கள்
மரத்தைச் சுற்றி தேங்காதவாறு காக்க வேண்டும். |
3 |
|
|
22 |
அழகுணர்ச்சி , ஆரம்நீ,
இரண்டல்ல , ஈசன், உரைநடை
, ஊழி, எழுத்து , ஏழ்கடல்,
ஐயம், ஒலிவடிவம் , ஓலைச்சுவடிகள்,
ஒளகாரம் |
3 |
|
|
23 |
ü வல்லின மெய்எழுத்துகள்
ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü மெல்லின மெய்எழுத்துகள்
ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü இடையின மெய்எழுத்துகள்
ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
3 |
|
|
அடிமாறாமல் எழுதுக 3+2=5 |
|||
|
24 அ |
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய
வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி
வாழியவே! ஏழ்கடல்
வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு
வாழியவே! எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும்
வாழியவே!* |
3 |
|
|
ஆ |
தக்கார்
தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். |
2 |
|
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க
2X5=10 |
|||||||||||||||||
|
25 |
|
5 |
|||||||||||||||
|
26 |
ü சரியான
உணவு,
உடற்பயிற்சி, தூக்கம்
ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். ü எளிமையாகக்
கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை
உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். |
5 |
|||||||||||||||
|
27 |
v மனிதன் தனக்கு
எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான், அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க
நிலை ஆகும். v தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது
ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி
வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். v ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல்
ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை" என்பர். v இன்று உள்ள எழுத்துகள் ஒரு
காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன. |
5 |
|||||||||||||||
|
28 |
v எல்லா காலத்திலும் நிலைபெற்ற தமிழே! வாழ்க. v எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க. v ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே!
வாழ்க. v உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க. v எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும். v தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக! v
பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க. |
5 |
|||||||||||||||
|
ஏதேனும்ம் ஒரு வினாவிற்கு விடையளி |
|||||||||||||||||
|
29 |
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 7,
தெற்கு
வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர்
நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு
எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு
பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர்
முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4 |
7 |
|||||||||||||||
|
30 |
v தமிழர் தத்துவங்களான
சாங்கியம்,
ஆசீவகம்
போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால்
ஏற்படும் மாற்றங்களை விளக்கின. v நோயை இயற்கையில்
கிடைக்கும் பொருள்கள்,
அப்பொருள்களின்
தன்மை,
சுவை
இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர். v தமிழர் மருத்துவம் நாட்டு
வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு
சார்ந்த மருத்துவமாகவும்,
பண்பாடு
சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது. |
7 |
|||||||||||||||
|
31 |
எனது
தாய்மொழி தமிழ் முன்னுரை:
எனது
தாய்மொழி தமிழ். இந்த வார்த்தைகளை கூறும் போதே என் மனதிற்கு ஒரு பெருமிதம்,
ஒரு உணர்ச்சி மேலோங்கி வருகிறது. தமிழ் என்பது வெறும் மொழி
மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டின் துடிப்பும், ஒரு இனம் பேசும் உயிரும் ஆகும். தமிழ் மொழியின் பாரம்பரியம்: தமிழ்
மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது சங்க காலத்திலிருந்தே
வளர்ந்து வந்தது. தமிழ் இலக்கியங்கள், பாடல்கள், பழமொழிகள், பழைய வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் இந்த
மொழியின் மகத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் உலகளாவிய
புகழ் பெற்றவை. என் தாய்மொழியின் தனிச்சிறப்புகள்: தமிழ் ஒரு இனிமையான மொழி. இதில்
பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இசை போல ஒரு அழகு உள்ளது. தமிழ் வார்த்தைகள்
இயற்கையைப்போல இனிமையாகும். எளிமையாகவும், ஆழமான கருத்துக்களை
சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உண்டு. தாய்மொழியின் முக்கியத்துவம்: ஒரு மனிதன் பிறக்கும் போது முதல்
கேட்கும் மொழி தான் தாய்மொழி. அதனால் அது அவனுடைய உணர்வுகளோடும்,
எண்ணங்களோடும் பிணைந்திருக்கும். தாய்மொழி மனிதனை அடையாளம் காணும்
முக்கிய அடையாளமாகும். எனவே தாய்மொழியை பேணிக் காக்க வேண்டும். முடிவுரை: நாம்
மற்ற மொழிகளை கற்கலாம், பேசலாம். ஆனால்
நமது தாய்மொழி தமிழ் மீது நம்பிக்கையும், அன்பும் இருக்க
வேண்டும். தமிழை நாமே முதலில் மதிக்க வேண்டும், பிறர்
மதிப்பார்கள். என் தாய்மொழி தமிழ் எனும் சொல்லில் என்னுள் ஒரு பசுமை உணர்வு
பிறக்கிறது. நான் தமிழைப் பெருமையாகக் கொண்டாடுகிறேன்! |
7 |
|||||||||||||||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி