முதல்
இடைப்பருவத்தேர்வு
2026, இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்
7.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக 6×1=6
1.
அ. வழி
2.
ஆ. முகில்
3.
ஆ. உலக
4.
அ. ஈன்றது
5.
அ. மண் ஒட்டிய பழங்கள்
6.
ஈ) ஓடம்
II. பொருத்துக. 4×1=4
7. ஏரா
- அடிமரம்
9. மீகாமன் - கப்பலைச் செலுத்துபவர்
10. காந்த
ஊசி - திசைகாட்டும் கருவி
III.
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 5×2=10
11.
ü
தமிழ்
நிறைந்த அறிவைத் தரும்
ü
கொல்லாமையைக்
குறிக்கோளாகக் கொண்ட்து
ü
பொய்யாமையைக் கொள்கையாகக் கொண்டது
ü
அச்சத்தைப்
போக்கி இன்பம் தரும்.
12.
ü
தமிழ்நாட்டில்
தென்றல் வீசும்
ü
சுவைமிகுந்த
பழங்களும் ,தானியங்களும் விளையும்.
ü
நிறைய
நன்செய் நிலங்கள் உடையது.
13. அ. பேச்சுமொழி ஆ. எழுத்துமொழி
14.
கார்த்திகை விளக்கு
15. காக்கை
,குருவி,மைனா,பெயரறியாப்
பவைகள்,அணில், காற்று
16. எரா, பருமல்,
வங்கு, கூம்பு,நங்கூரம்
IV.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க 2×3=6
17.
·
பரணி
இலக்கியம்
·
பரிபாடல்
·
கலம்பக
நூல்கள்
·
சங்கஇலக்கியங்கள்
18.
|
பேச்சு மொழி |
எழுத்து மொழி |
|
1.
பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும். |
1.
எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும். |
|
2.
உணர்ச்சிக் கூறுகள் அதிகம். |
2.
உணர்ச்சிக் கூறுகள் குறைவு. |
|
3. உடல்மொழி, குரல் ஏற்றத் தாழ்வுக்கு இடம் உண்டு. |
3
உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை |
|
4. திருத்தமான மொழிநடையில் அமைகிறது. |
4.
திருத்தமான மொழிநடையில் அமைவதில்லை. |
19.
·
கடலில்
செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது
கலங்கரை விளக்கம் எனப்பட்டது.
·
உயரமான
கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் அமைக்கப்படும். விளக்கினைக் கொண்டதாக இஃது அமைக்கப்படும்
·
கலம்
என்றால் கப்பல் என்றும் கரைதல் என்றால் அழைத்தல் என்றும் பொருள்.
·
கப்பலை
அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் இது கலங்கரை விளக்கம் எனப்பட்டது.
V. அடி பிறழாமல் எழுதுக 1×4=4
20.
அருள்நெறி
அறிவைத் தரலாகும்
அதுவே
தமிழன் குரலாகும்
பொருள்பெற
யாரையும் புகழாது
போற்றா
தாரையும் இகழாது
கொல்லா
விரதம் குறியாகக்
கொள்கை
பொய்யா நெறியாக
எல்லா
மனிதரும் இன்புறவே
என்றும்
இசைந்திடும் அன்பறமே
21.
பச்சை
மயில்நடிக்கும்
பன்றி
கிழங்கெடுக்கும்
நச்சர
வங்கலங்கும் - கிளியே
நரியெலாம் ஊளையிடும்.
அதிமது
ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை
போடுமடீ - கிளியே
பூங்குயில் கூவுமடி!
சிங்கம்
புலிகரடி
சிறுத்தை
விலங்கினங்கள்
எங்கும்
திரியுமடீ - கிளியே
இயற்கை விடுதியிலே!
VI. அனைத்து வினாக்களுக்கும் விடையளி
5×2=10
22. அ.
ஆறு ஆ. அது
23. அ.ஊடகம் ஆ. வனவியல்
24 அ. மா,பலா,வாழை ஆ. இயல்,இசை,நாடகம்
25. அ. சொல் ஆ. மொழி
26. அ. காடு + எல்லாம்
ஆ. வானொலி
VII. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்க
1×5=5
27.
முன்னுரை:
ஆளுக்கு ஒரு வேலை என்னும்
பொம்மலாட்டக் கதையைக் காண்போம்.
ஆளுக்கு ஒரு வேலை:
v
சிறுகுடும்பம்
ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ள பையன் பள்ளி செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே
இருப்பான். யார் கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன்.
v
ஒரு
நாள் அப்பாவும் அம்மாவும்.படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.
v
அவன்
வேண்டா வெறுப்பாகப் பள்ளி சென்றான்.பள்ளியை விட்டு ஓடினான். விளையாட யாராவது
வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
v
அப்பொழுது
அந்த வழியாக எறும்பு,
தேனீ பொதிமாடு,ஆமை,முயல்
ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான்.
v
அவை
அனைத்தும் தனக்கு வேலை உள்ளதாகச் சொல்லி,அவை விளையாட மறுத்து விட்டன.
v
பிறகு
குட்டிச் சுவரில் அமர்ந்தான். அது இடிந்து பூச்சி,எறும்பு, வண்டு
ஆகியன உனக்குத்தான் வேலைஇல்லை.நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!'
என்றுச் சொல்லி அவனைக் கடித்தன.மனம் மாறினான்.
v
தன்
அம்மாவிடம்,உலகத்தில் உள்ள அனைத்துக்கும் வேலை உள்ளது. எனக்குப் படிப்பது தான் வேலை
என்பதைப் புரிந்து கொண்டேன். இனி பள்ளிக்குச் செல்கின்றேன் என்றான்.
முடிவுரை:
மாணவர்களுக்குப்
படிப்பது மட்டும் தான் வேலை என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
28. யானை
ü
உலகில்
ஆசிய மற்றும் ஆப்பிரிக்க என இரண்டு வகையான யானைகள் உள்ளன.
ü
ஆசிய
யானைகளில் ஆண்களுக்கு மட்டுமே தந்தம் உண்டு;
ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் உண்டு.
ü
யானைகள்
கூட்டமாக வாழும், பெண்தான் தலைவி. அவை உணவு, தண்ணீர் தேடி இடம்
மாறும்.
ü
ஒரு
நாள் 250 கிலோ புல், 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். நினைவாற்றல்
அதிகம்,
கரடி
ü
கரடி
அனைத்துண்ணி. பழங்கள்,
தேன், மலர்கள், காய்கள்,
புற்றீசல், கறையான் போன்றவை சாப்பிடும்.
ü
தேன்
சாப்பிடும்போது அதன் முடிகள் தேனீக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
ü
வளர்ந்த
கரடி 160 கிலோ வரை எடையுடையது
புலி
ü புலிகள் தனியாக வாழும். ஒவ்வொரு
புலிக்கும் தனி எல்லை உண்டு.
ü கருவற்ற புலி 90 நாளில் 2–3
குட்டிகளைப் பெற்று 2 ஆண்டுகள் வளர்க்கும்.
ü பின் அவற்றை தனியே
அனுப்பும். புலி வேட்டையாடிய பின் மற்ற விலங்குகளை வேட்டையாடாது.
ü புலி காட்டின் வளத்தின்
குறியீடு.
VIII. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்க
1×5=5
29. தாய்மொழிப்பற்று
முன்னுரை:
மனித வாழ்வில் மொழி முக்கியமான
கூறாகும். அது எண்ணங்களை பகிரவும்,
அனுபவங்களை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது.
மொழி பற்றிய விளக்கம்:
மொழி என்பது பேச, எழுத, வாசிக்க பயன்படும் தொடர்பு சாதனமாகும். இது சமூக வளர்ச்சிக்கும், அறிவுத் துறைக்கும் அடித்தளம்.
தாய்மொழி:
ஒருவர் பிறந்து முதல் முறையாகக்
கேட்கும், பேசும் மொழியே தாய்மொழி. அது குழந்தையின் மனதில் ஆழமாக பதியும்.
தாய்மொழிப் பற்று:
தாய்மொழிக்கு பற்று வைக்கும்
மனப்பாங்கு நம் பண்பாட்டை உறுதிப்படுத்துகிறது. தாய்மொழி வளர வளர, நம் சமூகமும்
அறிவும் வளம் பெறுகிறது.
தாய்மொழிப் பற்றுக் கொண்ட
சான்றோர்:
வாழ்நாளையே தமிழுக்கு பரிதிமாற்
கலஞ்ஞர், பாரதி, உவேசா போன்றோர் தங்கள்
அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தாய்மொழி மீது கொண்ட பற்று நமக்கு முன்மாதிரியாக
இருக்கிறது.
நமது கடமை:
தாய்மொழியை பேணி பாதுகாப்பதும், அடுத்த
தலைமுறைக்கு உரிய முறையில் கற்றுத்தருவதும் நம்மில் ஒவ்வொருவரின் கடமையாகும்.
முடிவுரை:
தாய்மொழி நம் அடையாளமும், மரபும் ஆகும்.
அதைப் பேணுவது நம் பெருமையும் பாக்கியமும் ஆகும். தாய்மொழியைக் காப்போம், வளர்ப்போம்!
30. நண்பனுக்குக் கடிதம்
12, தமிழ்முகில் நகர்,
மதுரை-1,
20-06-2022.
அன்புள்ள நண்பா,
நலம்
நலமறிய ஆவல்.உனக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகி விட்டது. சென்ற வாரம் நான்
சென்று வந்த உதகமண்டலம் சுற்றுலாவில் நான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்களை உன்னுடன்
பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.
முதலில் நீலகிரி விரைவு வண்டி மூலம் மேட்டுப்பளையம் சென்றடைந்தோம் .பிறகு
மலை இரயில் மூலம் உதகமண்டலம் சென்றோம்,இயற்கையை இரசித்தபடி
பயணித்தது மறக்கமுடியாத அனுபவம். உதகமண்டலத்தில் இருந்த காலநிலை எங்களை
மெய்ம்மறக்கச்செய்தது. நீயும் முடிந்தால் உதகமண்டலம் சென்று வரவும்.
இப்படிக்கு,
உனது அன்பு நண்பன்
த.கனியமுதன்
உறைமேல் முகவரி:
சு.இளமுருகு,
4, பாரதி தெரு,
வளர்புரம்-4.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி