7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பொருத்துக
1. ஈன்று - அ) பாம்பு
2. கொம்பு - ஆ) தந்து
3. மதுரம் - இ) கிளை
4. அரவம் - ஈ) சுவை
அ) 1-ஆ 2-இ 3-ஈ 4-அ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
2. வழிச்செல்வோர்க்கு
தடையாய் இருப்பது
அ) பறவைகள் ஆ) விலங்குகள் இ)
அடர்ந்த காடு ஈ) காற்று
3. காடு முழுவதும் பூத்துள்ள
மலர்களுக்கு கூறப்பட்ட உவமை
அ) நெருப்பு ஆ) சூரியன் இ)
கார்த்திகை விளக்குகள் ஈ) நிலா
4. "பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும் "
இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் முறையே
அ) எதுகை ,
மோனை ஆ) மோனை, எதுகை இ) மோனை ,இயைபு ஈ) இயைபு , மோனை
5. குடியிருக்கும்- கனிபறிக்கும்
இதில் இடம் பெற்றுள்ள நயம்
அ) இயைபு ஆ) எதுகை இ) மோனை ஈ)
முரண்
6. சுரதா என்ற புனைபெயரில்
விரிவாக்கம்
அ) சுப்பிரமணிய தாசன் ஆ) சுப்புரத்தின தாசன் இ) சுப்பிர ரவிதாசன் ஈ)
சுப்ர தாண்டவ தாசன்
7. கவிஞர் சுரதாவின் இயற்பெயர்
அ) சுப்பிரமணியன் ஆ)
சுப்புரத்தினம் இ) இராசகோபாலன் ஈ)
இராமலிங்கம் பிள்ளை
8. சுரதா யார் மீது மிகுந்த
பற்று கொண்டவர்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ):கவிமணி ஈ) வாணிதாசன்
9. உவமைகளை பயன்படுத்தி கவிதைகள்
எழுதுவதில் வல்லவர்
அ) வாணிதாசன் ஆ) சிவதாசன் இ)
சுப்புரத்தின தாசன் ஈ) இராமதாசன்
10. உவமை கவிஞர் என்று
போற்றப்பட்டவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ)
சுரதா ஈ) கவிமணி
11. தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ)
சுரதா ஈ) கவிமணி
12. கிளிக்கண்ணி என்பது-----
அ) பெண் ஆ) இசை இ) பாவகை ஈ) ஊர்
13. இனிய சொற்களைப் பேசும்
பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசை பாடல் வகை
அ) கண்ணி ஆ) எக்களம் இ) தெம்மாங்கு
ஈ) கிளிக்கண்ணி
14. துஷ்டி கேட்டல் என்பது
அ) யாசகம் கேட்டல் ஆ) பாடல் கேட்டல்
இ) உணவு உபசரிப்பு ஈ) துக்கம் விசாரித்தல்
15. கொல்லிப்பாவை
என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
அ) பாவலரேறு ஆ) ராஜ மார்த்தாண்டன்
இ) பாவாணர் ஈ) சுரதா
16. ராஜ மார்த்தாண்டன் எழுதிய
கவிதை நூல் தொகுப்பு
அ) தமிழர் வாழ்க்கை ஆ) பண்டைத்
தமிழர் பண்பாடு
இ) கொங்குதேர் வாழ்க்கை ஈ)
சங்கத்தமிழர்
17. நாவற்பழத்திற்கு உவமையாக
கூறப்படுவது
அ) பச்சை இலை ஆ பச்சைக்காய் இ)
கோலிக்குண்டு ஈ) செங்காய்
18. சுட்ட பழங்கள் என்று
குறிப்பிடப்படுபவை
அ) மண் ஒட்டிய பழங்கள் ஆ) சூடான
பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள் ஈ) சுடப்பட்ட
பழங்கள்
19. நமக்குக் கிடைத்துள்ள
நூல்களிலேயே மிகவும் பழமையானது
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ)
தண்டியலங்காரம் ஈ) நம்பியகப் பொருள்
20. தொல்காப்பியம் முந்நீர்
வழக்கம் என்று குறிப்பிடுவது
அ) நீராடுதல் ஆ) ஆற்றுவழிப் பயணம்
இ) கடல் பயணம் ஈ) தரைப் பயணம்
21. பூம்புகார் துறைமுகத்திலிருந்து
கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை
விரிவாக விளக்கும் நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ)
பட்டினப்பாலை ஈ) சீவக சிந்தாமணி
22. " உலகு கிளரந்தன்ன உரு
கெழு வங்கம்" என்று பெரிய கப்பலை பற்றி குறிப்பிடும் நூல்
அ) அகநானூறு ஆ) மணிமேகலை இ)
பட்டினப்பாலை ஈ) சீவக சிந்தாமணி
23. " நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம்" என்று கப்பலை பற்றி குறிப்பிடும் நூல்
அ) பதிற்றுப்பத்து ஆ) மணிமேகலை இ)
பட்டினப்பாலை ஈ) சீவக சிந்தாமணி
24. சேந்தன் திவாகரம் என்பது
அ) சங்க இலக்கியம் ஆ) நிகண்டு நூல்
இ) இலக்கண நூல் ஈ) காப்பியம்
25. கப்பலின் பலவகையான பெயர்கள்
குறிப்பிடப்பட்டுள்ள நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) சேந்தன்
திவாகரம் ஈ) தொல்காப்பியம்
26. எடை குறைந்த பெரிய மரங்களின்
உட்பகுதியை தோண்டி எடுத்து விட்டு உருவாக்பப்பட்டவை
அ) பரிசல்கள் ஆ) துறைகள் இ)
தோணிகள் ஈ) கட்டுமரங்கள்
27. தோணி ,ஓடம்,
படகு ,புணை
மிதவை, தெப்பம் போன்றவை எதற்காகப் பயன்பட்டன?
அ) பெருங்கடல்களைக் கடக்க
ஆ):கண்மாய்களைக் கடக்க
இ) சிறிய நீர் நிலைகளை கடக்க ஈ)
ஆறுகளை கடக்க
28. பொருந்தாததை தேர்ந்தெடுக்க
அ) களம் ஆ) வங்கம் இ) நாவாய் ஈ)
மிதவை
29. கப்பல் கட்டும் கலைஞர்கள்
எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அ) பொறியாளர் ஆ) பொற்கொல்லர் இ)
கம்மியர் ஈ) வணிகர்
30. " கலஞ்செய் கம்மியர்
வருகெனக் கூஉய்" என்று கப்பல்
கட்டும் கலையை பற்றி குறிப்பிடும் நூல்
அ) மணிமேகலை ஆ) சிலப்பதிகாரம் இ)
பரிபாடல் ஈ) கலித்தொகை
31. கப்பல் கட்டுதலில் நீளம்,
அகலம் , உயரம் ஆகியவற்றை சரியான முறையில்
கணக்கிட உதவும் நீட்டல் அளவை
அ) தச்சு முழம் ஆ) தச்சு முறம் இ)
மரக்கால் ஈ) காணி
32. கப்பலில் முன்பக்கம் உள்ள
"கரிமுக அம்பி" என்பது எந்த விலங்கை குறித்தது?
அ) யானை ஆ) குதிரை இ) அன்னம் ஈ) சிங்கம்
33. கப்பலில் முன்பக்கம் உள்ள
"பரிமுக அம்பி" என்பது எந்த விலங்கை குறித்தது?
அ) யானை ஆ) குதிரை இ) அன்னம் ஈ) சிங்கம்
34. தமிழர்கள் அயல்நாடுகளுக்கு
கப்பல்களில் சென்றனர் என்பதற்கு ஆதாரமான தமிழர்கள் பயன்படுத்திய மணி எந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது?
அ) இலங்கை ,
வவுனியா ஆ) நியூசிலாந்து, வெலிங்டன்
இ) அமெரிக்கா,
நியூயார்க் ஈ) இத்தாலி, ரோம்
35. மார்க்கோ போலோ ---- நாட்டு
கடற்பயணி
அ) சீன ஆ) பிரான்சு இ) இத்தாலி ஈ)
அமெரிக்கா
36. காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள்
அ) திசைகாட்டி கப்பல்கள் ஆ) பாய்மரக்கப்பல்கள் இ) துடுப்பு கப்பல்கள் ஈ)
தோணிகள்
37. கப்பலில் முதன்மையான
உறுப்பாகிய அடிமரம்
அ) எரா ஆ) சிரா இ) சுரா ஈ) கரா
38. கப்பலில் குறுக்கு மரம்
அ) பருமல் ஆ) துருமல் இ) கருமல் ஈ)
பொம்மல்
39. கப்பலை உரிய திசையில்
திருப்புவதற்கு பயன்படும் முதன்மையான கருவி
அ) மக்கான் ஆ) மச்சான் இ) விச்சான்
ஈ) சுக்கான்
40. கப்பலை நிலையாக ஓரிடத்தில்
நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு
அ) எரா ஆ) பருமல் இ) நங்கூரம் ஈ)
சமுக்கு
41. மாலுமி ,மீகாமன் , நீகான் முதல் பெயர்கள் யாரைக் குறிக்கும்?
அ) வணிகர் ஆ) மன்னர் இ) அமைச்சர்
ஈ) கப்பலை செலுத்துபவர்
42. " நளியிரு முந்நீர்
நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக"
என்று கூறியவர் யார்?
அ) ஔவையார் ஆ) காவற்பெண்டு இ)
வெண்ணி குயத்தியார் ஈ) வெள்ளிவீதியார்
43. கடலில் செல்லும்
கப்பல்களுக்கு துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது
அ) கலங்கரை விளக்கம் ஆ) திசைகாட்டி இ) மின் விளக்குகள் ஈ)
அங்காடிகள்
44. கூற்று: கப்பலில் வரும்
பொருள்களை தோழிகள் மூலம் கரைத்துக் கொண்டு வந்தனர்
காரணம் : துறைமுகத்தில் கரைக்கு
அருகில் உள்ள பெரிய கப்பல்கள் வர இயலும்
அ) கூற்று சரி,
காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று,
காரணம் இரண்டும் சரி ஈ) கூற்று, காரணம்
இரண்டும் தவறு
45. " களம் தந்த பொற்பரிசம்
கழித்தோணியால்
கரைசேர்க்குந்து" என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ)
கலித்தொகை ஈ) பரிபாடல்
46. தமிழர்கள் தங்கள் கடல்
பயணத்திற்கு வழிகாட்டிகளாக பயன்படுத்திய உயிரினம்
அ) மீன்கள் ஆ) ஆமைகள் இ) நண்டுகள்
ஈ) சுறாமீன்கள்
47. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி
அமைந்துள்ள இடம்
அ) நீலகிரி ஆ) மேட்டுப்பாளையம் இ) குன்னூர் ஈ) கோத்தகிரி
48. தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
அ) கோவை ஆ) ஈரோடு இ) சேலம் ஈ)
நீலகிரி
49. இந்திய வனமகன் என்று
அழைக்கப்படுபவர்
அ) கேதார் ஜாதவ் ஆ):உமேஷ் யாதவ் இ)
ஜாதவ் பயேங் ஈ) ஜாதவ் சிம்சோன்
50. ஐகாரம் சொல்லின் முதலில்
வரும் போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) ஒன்றரை ஆ) ஒன்று இ) இரண்டு இ)
அரை
51. ஐகாரம் சொல்லின் இடையிலும்
இறுதியிலும் வரும்பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) ஒன்றரை ஆ) ஒன்று இ) இரண்டு இ)
அரை
52. வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் ஐகாரம் பெறும் மாத்திரை
அளவுகள் முறையே
அ) ஒன்றரை,ஒன்றரை,ஒன்று ஆ) ஒன்று,ஒன்றரை,ஒன்றரை
இ) ஒன்றரை,ஒன்று, ஒன்றரை ஈ) ஒன்றரை,ஒன்று,
ஒன்று
53. ஔகார எழுத்து தனித்து வரும்
இடங்களில் எவ்வளவு மாத்திரை அளவு ஒலிக்கும்?
அ) 2 ஆ) 1 இ) 3 ஈ) 1 1/2
54. மகரக் குறுக்கத்தின்
மாத்திரை அளவு
அ) கால் ஆ) அரை இ) முக்கால் ஈ)
ஒன்று
55. பொருந்தாததை தேர்ந்தெடு
அ) பாடம் படித்தாள் ஆ) வரும் வண்டி
இ) மருண்ம் ஈ) போன்ம்
56. ஆய்தக் குறுக்கத்தின்
மாத்திரை
அ) கால் ஆ) அரை இ) முக்கால் ஈ)
ஒன்று
57. Parable என்பதன் தமிழாக்கம்
அ) உவமேயம் ஆ) உருவகம் இ) உவமை ஈ)
இறைச்சி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி