7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. நாமக்கல் கவிஞர் என்று
அழைக்கப்படுபவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) ராமலிங்கனார்
2. விரதம் என்ற சொல்லின் பொருள்
அ) பசி ஆ) வறுமை இ) வளமை ஈ) நோன்பு
3. தமிழர்களின் குறிக்கோள்
மற்றும் கொள்கை என்று நாமக்கல் கவிஞர் குறிப்பான முறையே
அ) கொல்லாமை ,
பொய்யாமை ஆ) பொய்யாமை,
கொள்ளாமை
இ) அன்பு,
அறம் ஈ) அறம் அன்பு
4. கூற்று 1 : இரண்டாம் இடத்தில் ஒன்றி வருவதை மோனை தொடை என்பர்
கூற்று 2 : எதுகைத்
தொடையில் இரண்டாம் எழுத்து அளவத்து இருக்க வேண்டும்
அ) கூற்று 1 சரி, 2 தவறு ஆ) கூற்று 1 , தவறு 2 சரி
இ) கூற்று 1 மற்றும் 2 சரி ஈ) கூற்று 1
மற்றும் 2 தவறு
5. மோனை தொடை அமைந்த சொற்களைத்
தேர்ந்தெடுக்க
அ) அருள்நெறி - பொருள்பெற ஆ)
அருள்நெறி - அதுவே
இ) அன்பு - இன்பம் ஈ) குறியாக - நெறியாக
6. ஒத்த ஓசையிலோ ஒரே எழுத்தில்
முடிவதை எவ்வாறு அழைப்பர்?
அ) இயைபு ஆ) எதுகை இ) மோனை ஈ)
முரண்
7. காந்தியக் கவிஞர் என்று
அழைக்கப்படுபவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) இராமலிங்கனார்
8. என் கதை என்பது யாருடைய
சுயசரிதம்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) இராமலிங்கனார்
9. தமிழன் இதயம் சங்கொலி
உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) இராமலிங்கனார்
10. தமிழ் மொழியின் இனிமைக்கு
நாமக்கல் கவிஞர் கூறும் உவமை யாது?
அ) அன்னை ஆ) அன்பு இ) கரும்பு ஈ) தேன்
11. பகுத்தறிவு கவிராயர் என்று
அழைக்கப்படுபவர் யார்?
அ) பாரதியார் ஆ) உடுமலை நாராயணகவி இ) கவிமணி ஈ) இராமலிங்கனார்
12. பகைவரை வென்றதை பாடுவது
எவ்வகை இலக்கியம்?
அ) வாகை ஆ) உலா இ) பள்ளு ஈ) பரணி
13. இசை பாடல் இலக்கியம் என்று
பகுத்தறிவு கவிராயர் குறிப்பிடுவது
அ) அகநானூறு ஆ) புறநானூறு இ) பரிபாடல் ஈ) கலித்தொகை
14. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க
அ) கலம்பகம் ஆ) பரணி இ) உலா ஈ) எட்டுத்தொகை
15. வான் புகழ் கொண்ட நூல் என்று
போற்றப்படுவது
அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள்
இ) கம்பராமாயணம் ஈ) சங்க இலக்கியம்
16. பொருத்துக
1. ஒப்புமை - அ) வள்ளல்
2. அற்புதம் - ஆ) இணை
3. முகில் - இ) வியப்பு
4. உபகாரி - ஈ) மேகம்
அ) 1-ஆ 2-இ 3-ஈ 4-அ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
17. மெய்ப்பொருளைக் கொண்டு
பாடப்பட்டவை
அ) காப்பியங்கள் ஆ)
சிற்றிலக்கியங்கள் இ) சங்க இலக்கியங்கள் ஈ) வடமொழி இலக்கியங்கள்
18. முல்லைக்குத் தேற்றது மழை
மேகத்தை விட புகழ்பெற்றவர்
அ) பாண்டியன் நெடுஞ்செழியன் ஆ)
வள்ளல் வேள்பாரி
இ) குமண வள்ளல் ஈ) கணைக்கால் இரும்பொறை
19. புலவரின் சொல்லுக்காக தன்
தலையையே தரத் துணிந்தவன்
அ) பாண்டியன் நெடுஞ்செழியன் ஆ)
வள்ளல் வேள்பாரி
இ) குமண வள்ளல் ஈ) கணைக்கால் இரும்பொறை
20. தமது எண்ணங்களை
உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது
அ) அன்பு ஆ) மொழி இ) ஓவியம் ஈ) கலை
21. பழங்கால மனிதர்கள் தங்கள்
குழுக்களுக்குள் உரையாடிக் கொள்ள எவற்றை உருவாக்கிக் கொண்டனர்?
அ) ஒலி ஓவியங்கள் ஆ) ஒலி
தொகுப்புகள் இ) ஒலி குறியீடுகள் ஈ) ஒலி சித்திரங்கள்
22. வாயினால் பேசப்பட்டு பிறரால்
கேட்டு உணரப்படுவது
அ) ஓவிய மொழி ஆ) எழுத்து மொழி இ)
பேச்சு மொழி ஈ) தொடர்பு மொழி
23. கேட்பதும் பேசுவதும்
மொழியின்-----
அ) முதல் நிலை ஆ) இரண்டாம் நிலை இ)
நடுநிலை ஈ) இறுதிநிலை
24. கண்ணால் கண்டு உணருமாறு வரி
வடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது
அ) ஓவிய மொழி ஆ) எழுத்து மொழி இ)
பேச்சு மொழி ஈ) தொடர்பு மொழி
25. படிக்கப்படுவதும்
எழுதப்படுவதும் மொழியின்----
அ) முதல் நிலை ஆ) இரண்டாம் நிலை இ)
நடுநிலை ஈ) இறுதிநிலை
26. உடனடிப் பயன்பாட்டிற்கு
உரியது எது?
அ) ஓவிய மொழி ஆ) எழுத்து மொழி இ)
பேச்சு மொழி ஈ) தொடர்பு மொழி
27. நீண்டகால பயன்பாட்டிற்கு
உரியது எது?
அ) ஓவிய மொழி ஆ) எழுத்து மொழி இ)
பேச்சு மொழி ஈ) தொடர்பு மொழி
28. மனிதர்களின் சிந்தனைகள்
காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாவது
அ) ஓவிய மொழி ஆ) எழுத்து மொழி இ)
பேச்சு மொழி ஈ) தொடர்பு மொழி
29. மொழியின் உயிர்நாடியாக
விளங்குவது
அ) ஓவிய மொழி ஆ) எழுத்து மொழி இ)
பேச்சு மொழி ஈ) தொடர்பு மொழி
30. எதைப் பொறுத்து பேச்சு
மொழியின் பொருள் வேறுபடும்?
அ) ஒலி ஆ) பேசப்படும் சூழல் இ)
வேகம் ஈ) பயன்பாடு
31. "என்னால் போக
முடியாது" என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது எதை உணர்த்துகிறது?
அ) உடன்பாடு ஆ) மறுப்பு இ) அன்பு
ஈ) வேகம்
32. "பேசப்படுவதும்
கேட்கப்படுவதுமே உண்மையான மொழி எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில்
வைத்து கருதப்படும் மொழியாகும்" என்று கூறியவர்
அ) அறிஞர் அண்ணா ஆ) ராபி
சேதுப்பிள்ளை இ) மு வரதராசனார் ஈ) ஐராவதம் மகாதேவன்
33. இடம் மற்றும் மனிதர்கள்
வாழ்வில் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை எவ்வாறு
அழைப்பர்?
அ) பன்மொழி ஆ) கிளைமொழி இ) தென்மொழி ஈ) வட்டார மொழி
34. கன்னடம் தெலுங்கு மலையாளம்
ஆகியன எதிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகளாகும்?
அ) தமிழ் ஆ) சமற்கிருதம் இ)
பிராகிருதம் ஈ) வடமொழி
35. -----ல் சொற்கள் பெரும்பாலும்
குறுகி ஒலிக்கும்
அ) எழுத்து மொழி ஆ) பேச்சு மொழி இ)
ஓவிய மொழி ஈ) இணைமொழி
36. ----ல் உணர்ச்சி கூறுகள்
குறைவு
அ) எழுத்து மொழி ஆ) பேச்சு மொழி இ)
ஓவிய மொழி ஈ) இணைமொழி
37. பேச்சுமொழியை--- என்றும்,
எழுத்து மொழியை--- என்றும் கூறுவர்
அ) இலக்கிய வழக்கு ,
உலக வழக்கு ஆ) உலக வழக்கு ,இலக்கிய வழக்கு
இ) செய்யுள் வழக்கு,
மரபு வழக்கு ஈ) மரபு வழக்கு, செய்யுள் வழக்கு
38. கூற்று: தமிழை இரட்டை வழக்கு
மொழி என்பர்
காரணம் : தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு
உண்டு
அ) கூற்று சரி,
காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று ,
காரணம் இரண்டும் சரி ஈ) கூற்று, காரணம்
இரண்டும் தவறு
39. முதல் எழுத்துக்கள் மொத்தம்
எத்தனை?
அ) 12 ஆ) 18 இ) 30 ஈ) 216
40. சார்பு எழுத்துக்கள் எத்தனை
வகைப்படும்?
அ) 10 ஆ) 18 இ) 30 ஈ) 216
41. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க
அ) உயிர்மெய் ஆ) ஆய்தம் இ) உயிர்
ஈ) உயிரளபெடை
42. உயிர்மெய் குறில்கள்
மொத்தம்-----
அ) 90 ஆ) 216 இ) 5 ஈ) 7
43. உயிர்மெய் நெடில்கள்
மொத்தம்---
அ) 90 ஆ) 126 இ) 5 ஈ) 7
44. குற்றியலுகரத்துக்கான
மாத்திரை அளவு
அ) ஒன்று ஆ) அரை இ) இரண்டு ஈ)
மூன்று
45. குழந்தை என்ற சொல்லில் 'கு ' என்ற எழுத்தில் மாத்திரை
அ) ஒன்று ஆ) அரை இ) இரண்டு ஈ)
மூன்று
46. தனக்கு உரிய ஓசையில்
குறைந்து ஒலிக்கும் உகரம்
அ) முற்றியலுகரம் ஆ) குற்றியலுகரம்
இ) குற்றியலிகரம் ஈ) முற்றுகரம்
47. குற்றியலுகரத்தில்
-----மெய்களுடன் உகரம் சேர்ந்து வரும்
அ) வல்லின ஆ) மெல்லின இ) இடையின ஈ)
மூக்கின
48. குற்றியலுகரம் என்ற சொல்லை
சரியாகப் பிரிக்கும் முறை
அ) குற்று+இயல்+ உகரம் ஆ)
குறு+இயல்+உகரம்
இ) குறுமை+இயல்+லுகரம் ஈ)
குறுமை+இயல்+உகரம்
49. ஓசை குறையாமல் ஒரு
மாத்திரையளவில் முழுமையாக ஒலிக்கும் உகரம்
அ) முற்றியலுகரம் ஆ) குற்றியலுகரம்
இ) குற்றியலிகரம் ஈ) முற்றுகரம்
50. நெடில் எழுத்துகளை குறிக்க
பயன்படும் சாரியை
அ) கரம் ஆ) காரம் இ) கான் ஈ) கேனம்
51. ஆய்த எழுத்தை குறிக்க
பயன்படும் சாரியை
அ) கரம் ஆ) காரம் இ) கான் ஈ) கேனம்
52. குற்றியலுகரம் எத்தனை
வகைப்படும்?
அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து ஈ)
ஆறு
53. தனி நெடில் அல்லாத உயிர்மெய்
எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
அ) நெடில் தொடர் ஆ) ஆய்தத் தொடர் இ)
உயிர்த்தொடர் ஈ) இடைத்தொடர்
54. நெடில் தொடர்
குற்றியலுகரத்தை தேர்ந்தெடு
அ) பாகு ஆ) எஃகு இ) அரசு ஈ) மூக்கு
55. ஆய்தத் தொடர்
குற்றியலுகரத்தை தேர்ந்தெடு
அ) பாகு ஆ) எஃகு இ) அரசு ஈ) மூக்கு
56. உயிர்த்தொடர்க்
குற்றியலுகரத்தை தேர்ந்தெடு
அ) பாகு ஆ) எஃகு இ) அரசு ஈ) மூக்கு
57. வன்தொடர்க் குற்றியலுகரத்தை
தேர்ந்தெடு
அ) பாகு ஆ) எஃகு இ) அரசு ஈ) மூக்கு
58. மென்தொடர்க் குற்றியலுகரத்தை
தேர்ந்தெடு
அ) வண்டு ஆ) எஃகு இ) அரசு ஈ)
மூக்கு
59. இடைத்தொடர்க்
குற்றியலுகரத்தை தேர்ந்தெடு
அ) பாகு ஆ) சால்பு இ) அரசு ஈ)
மூக்கு
60. வரகு+யாது= ?
அ) வரகுயாது ஆ) வரக்யாது இ)
வரகியாது ஈ) வராகியாது
60. பொருந்தாததை தேர்ந்தெடு
அ) நாடியாது ஆ) கேண்மியா இ)
வீடுயாது ஈ) காடியாது
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி