TNTET 9 TH STD TAMIL QUESTION BANK UNIT-1

   9. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்


இயல்-1

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?

அ) தமிழ்  ஆ) தெலுங்கு   இ) மலையாளம்   ஈ) கன்னடம்

2. தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்  ஆ) புதுக்கவிதை  இ) சிற்றிலக்கியம்  ஈ) தனிப்பாடல்

3. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

அ) குக்கூஉ எனக் குயில் கூவியது  ஆ) கொக்கரக்கோ எனச் சேவல் கூவியது.

இ) அண்ணா.அ என அழைத்தான்   (ஈ) ஓடி வா ஓடி வா

4. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்

     காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!'இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் -

அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை  ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

இ) மோனை, எதுகை, இயைபு     ஈ) மோனை, முரண், அந்தாதி

5. சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு.

அ) வேற்றுமைத்தொகை  ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) பண்புத்தொகை  ஈ) வினைத்தொகை

6. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்

அ) தூதுஆ) பள்ளு  இ) கண்ணி   ஈ) அந்தாதி

7. பொருத்துக

    1. வண்ணங்கள் - அ) ஒன்பது

    2. குணங்கள்  - ஆ ) எட்டு

    3. வனப்பு - இ) நூறு

    4. நவரசம் - ஈ) பத்து

அ) 1-, 2-, 3-, 4-  ஆ) 1-,2-,3-, 4-

இ) 1-,2-, 3-, 4-    ஈ) 1-, 2-,3-, 4-

8. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

அ) இராசசம் - சோம்பல்

ஆ) வனப்பு - அழகு

இ) தாமசம் - தாழ்மை

ஈ) சத்துவம் -அமைதி

9. தமிழ்விடு தூது நூலை முதலில் பதிப்பித்தவர்

அ) தெ.பொ.மீ ஆ) உ.வே.சா  இ) பரிமேலழகர்  ஈ) மணக்குடவர்

10. சிந்தாமணி - என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) உருவகம் ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  ஈ) வேற்றுமைத்தொகை

11. தமிழ்விடு தூது-----இலக்கிய வகையைச் சார்ந்தது

அ) காப்பியம் ஆ) புதுக்கவிதை இ) தனிப்பாடல்   ஈ) சிற்றிலக்கியம்

12. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை

) 96  ஆ) 113  இ) 105  ஈ) 64

13. தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை

)862  )682  )268  ) 286

14. தமிழ்விடுதூது ----பாவினால் பாடப்பட்டது.

அ) குறள் வெண்பா ஆ) கலி வெண்பா  இ) இன்னிசை வெண்பா  ஈ) பஃறொடை வெண்பா

15. வனப்பு என்பதன் பொருள்

அ) அழகு  ஆ) வரப்பு  இ) வார்ப்பு  ஈ) காட்டுப்பூ

16. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

அ) பள்ளு  ஆ) பிள்ளைத்தமிழ்  இ) தூது  ஈ) அந்தாதி

17. சிந்து என்பது

அ) ஒருவகை இசைப்பாடல்  ஆ) சிதறடிக்காதே

இ) ஒருவகை சித்து விளையாட்டு  ஈ) காவடியாட்டம்

18. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?

அ) மதுரை சொக்கநாதர்  ஆ) உ.வே.சா  இ) யாரெனத் தெரியாது  ஈ) ஈரோடு தமிழன்பன்

19. முத்திக்கனி - இலக்கணக் குறிப்பு

அ) உவமைத்தொகை  ஆ) உம்மைத்தொகை  இ) உருவகம்  ஈ) பண்புத்தொகை

20. தமிழ்விடுதூது இலக்கியத்தைப் பதிப்பித்த ஆண்டு

) 1930  ஆ) 1931  ) 1929  ) 1946

20. இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்.

அ) குமரிலபட்டர் இ) அகத்தியலிங்கம் ஆ) ஹீராஸ் பாதிரியார் ஈ) கால்டு வெல்

21. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் வெளியான ஆண்டு.

) 1856  ) 1855   )1854  ) 1578

22. ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது 5 வடமொழி என்று முதலில் கூறியவர்.

அ) பிரான்சிஸ் எல்லிஸ் ஆ) வில்லியம் ஜோன்ஸ் இ) ஹோக்கன் ஈ) எமினோ

23. 'தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக்குடும்பத்திற்குரிய மொழி' - இது யார் கூற்று?

அ) கால்டுவெல்  ஆ) ஜி.யு.போப்  இ) எமினோ  ஈ) எல்லீஸ்

24. கீழ்வருவனவற்றுள் நடுத்திராவிட மொழி எது?

அ) தமிழ் ஆ) தெலுங்கு  இ) கன்னடம்  ஈ) துளு

25. மூன்று எனும் எண்ணுப்பெயர் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) மூஜி  ஆ) மூடு  இ) மூரு  ஈ) மூணு

26. கூற்று 1: திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்றவர்  

                    கால்டுவெல்

கூற்று 2: திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்

அ) கூற்று 1 தவறு 2 சரி ஆ) கூற்று 1 சரி 2 தவறு

இ) கூற்று 1, 2 சரி  ஈ) கூற்று 1, 2 தவறு

27. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை ஒரே இனமாகக் கருதித் 'தென்னிந்திய மொழிகள்' என்று பெயரிட்டவர்

அ) பிரான்சிஸ் எல்லிஸ் ஆ) ஹோக்கன் இ) மாக்ஸ்முல்லர்  ஈ) எமினோ

28. திராவிட மொழிகளைத் தென்திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என எதன் அடிப்படையில் பகுத்தனர்.

அ) இட அமைப்பு ஆ) இயற்கை அமைப்பு

இ) ஒலி அடிப்படையில்   ஈ) பரவிய நில அடிப்படையில்

29. தமிழ் மொழியின் மிகப்பழமையான இலக்கியம் எது?

அ) இதிகாசங்கள் ஆ) சங்க இலக்கியம் இ) காப்பியங்கள்  ஈ) புதினங்கள்

30. மலையாள மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

அ) தொல்காப்பியம் இ) லீலா திலகம் ஆ) கவிராஜ மார்க்கம்ஈ) அகத்தியம்

31. ஆந்திர பாஷா பூஷணம் என்னும் இலக்கண நூல் தோன்றிய காலம்

அ) 9. ஆம் நூற்றாண்டுஆ) 11. ஆம் நூற்றாண்டு

இ) 5. ஆம் நூற்றாண்டு  ஈ) 12. ஆம் நூற்றாண்டு

32. ஈரோடு தமிழன்பனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்.

அ) தமிழோவியம் ஆ) வணக்கம் வள்ளுவ

இ) தமிழன்பன் கவிதைகள்  ஈ) இனிமைத்தமிழ்

33. 'இனிமையும் நீர்மையும் தமிழெனல்' ஆகும். இத்தொடர் இடம் பெற்ற நூல்

அ) தமிழோவியம் ஆ) பிங்கல நிகண்டு இ) தமிழ் விடு தூது  ஈ) புறநானூறு

34. காலம் பிறக்கும் முன் பிறந்தது.

அ) இலக்கியங்கள் ஆ) இலக்கணங்கள் இ) தமிழ்  ஈ) தொல்காப்பியம்

35. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளுள் ஒன்று

அ) பர்மா ஆ) சிங்கப்பூர்  இ) மொரிசியஸ் ஈ) கனடா

36. தமிழோவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர் யார்?

அ) தமிழ்த்தாத்தா உ.வே.சா.  ஆ) ஈரோடு வெங்கடப்பர் மகன் இராமசாமி

இ) ஈரோடு தமிழன்பன்  ஈ) பாரதிதாசன்

37.வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கிய ஆண்டு

) 2001  ) 2002  ) 2003  ) 2004

38. உலகத் தாய்மொழி நாள்

அ) ஜனவரி 21  இ) மார்ச் 21  ஆ) பிப்ரவரி 21  ஈ) ஏப்ரல் 21

39. 'காலமும்' என்பதன் இலக்கணக் குறிப்பு

அ) வினைமுற்று  ஆ) உம்மைத்தொகை

இ) முற்றும்மை    ஈ) பெயரெச்சம்

40. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

      இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்

அ) பாரதியார்  ஆ) பாரதிதாசன்  இ) கண்ணதாசன்  ஈ) தாராபாரதி

41. ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்

அ) இலக்கிய வரலாறு ஆ) சிறுகதை இ) தமிழன்பன் கவிதைகள் ஈ) வணக்கம் வள்ளுவ

42. மானிட மேன்மையைச் சாதித்திடத்------ மட்டுமே போதுமே.

அ) சிலப்பதிகாரம்  ஆ) கம்பராமாயணம்  இ) தொல்காப்பியம்  ஈ) திருக்குறள்

43. அ.முத்துலிங்கம் இலங்கையில் எங்கு பிறந்தார்?

அ ) யாழ்ப்பாணத்தில் ஆ) புங்குடுத்தீவில் இ) கொக்குவில் ஈ) லவுண்யா

44. ராபின்சன் குரூசோ - என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) டேனியல் டிஃபோ  ஆ) இந்திரன்  இ) சாண்டில்யன்  ஈ) டேனியல் டிகூசா

45. கடல்புறா என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) அகிலன் ஆ) இந்திரன்  இ) சாண்டில்யன்  ஈ) புதுமைப்பித்தன்

46. ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூலை எரித்தால் போதும் - என்று குறிப்பிடும் நூல் எது?

அ) ஃபாரன்ஹீட் 451  ஆ) ஃபாரன்ஹீட் 461  இ) ஃபாரன்ஹீட் 541  ஈ) ஃபாரன்ஹீட் 100°

47. தமிழர் பாரம்பரிய நாள் எது?

அ) ஜனவரி 14  ஆ) பிப்ரவரி – 14  இ) நவம்பர் -14  ஈ) டிசம்பர் 14

48. ஜி.யு. போப் பிறந்த நாடு எது?

அ) அமெரிக்கா  ஆ) இந்தியா  இ) கனடா  ஈ) இத்தாலி

49. சூரியன் மறையாத அரசு என அழைக்கப்பட்ட அரசு எது?

அ) கனடா  ஆ) பிரிட்டன் இ) இத்தாலி ஈ) நார்வே

50. அ.முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பில் இலங்கை அரசின் சாகித்யப் பரிசினைப் பெற்ற நூல் எது?

அ) வடக்கு வீதி ஆ) வம்சவிருத்தி  இ) மகாராஜாவின் ரயில் வண்டி ஈ) அக்கா

51. ஆறாம் திணை எது?

அ) பனியும் - பனிசார்ந்த இடமும் ஆ) மணலும் மணல் சார்ந்த இடமும்

இ) காடும் காடு சார்ந்த இடமும்  ஈ) மழையும் மழை சார்ந்த இடமும்

52. அகதிகள் கூடத்தில் மதிய உணவிற்காக யாரைப்போல் நின்றதாக முத்துலிங்கம் கூறுகிறார்?

அ) மறியல் கைதிகள் ஆ)சிறை கைதிகள் இ)ஆயுள் கைதிகள் ஈ)தூக்கு தண்டனை கைதிகள்

53. காகத்திற்குப் பறக்கும் எல்லை தூரம்.

அ) 10 மைல்  ஆ) 4 மைல்  இ) 2 மைல்  ஈ) 3 மைல்

54. கொக்குவில் கிராமத்தில் காணப்பட்ட பறவைகள்

அ) ஆறுமணிக்குருவி – கழுகு  ஆ) ஆறுமணிக்குருவி - வானம்பாடி

இ) ஆறுமணிக்குருவி – காகம்  ஈ) ஆறுமணிக்குருவி - புறா

55. பின்வருவனவற்றில் அ.முத்துலிங்கம் எழுதாத சிறுகதைத் தொகுப்பு

அ) சித்தன் போக்கு ஆ) திகடசக்கரம்

இ) அக்கா   ஈ) மகாராஜாவின் ரயில்வண்டி

55. 1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் தமிழரால் மறக்க இயலாத நிகழ்வு

அ) யாழ்ப்பாணம் போர்  ஆ) அகதிகள் படுகொலை இ) தமிழர் படுகொலை ஈ) நூல்கள் எரிப்பு

56. 'அளபெடை'என்னும் சொல்லுக்குப் பொருள்

அ) குறுகி ஒலித்தல் ஆ) நீண்டு ஒலித்தல்  இ) இனிய ஓசை  ஈ) அளவாக ஒலித்தல்

57. உயிரளபெடை------- வகைப்படும்.

அ) இரண்டு ஆ) மூன்று  இ) நான்கு  ஈ) ஐந்து

58. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர்

அ) இசைநிறை  ஆ) இன்னிசை  இ) சொல்லிசை  ஈ) ஒற்றளபெடை

59. பெயர்ச்சொல். எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது

அ) செய்யுளிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை  ஈ) ஒற்றளபெடை

60. 'ஓஒதல்' 'உறாஅர்க்கு' அளபெடை இதில் அமைந்த

அ) இன்னிசை ஆ) இசைநிறை  இ) சொல்லிசை  ஈ) ஒற்றளபெடை   (ஆ ) இசைநிறை      

பதிவிறக்கம் செய்ய    

விடைகளை அறிய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை