சென்னை முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள் 2025-2026
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
|
பகுதி – 1 / மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||
|
வி.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
|
||||||||||||||||||||||||||
|
1. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
2. |
அ. ஆராயாமை, ஐயப்படுதல் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
3. |
4.
ஆ மட்டும் சரி |
1 |
|
||||||||||||||||||||||||||
|
4. |
ஆ.
தீர்த்தங்கரர் உருவங்கள் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
5. |
ஈ.
உவமைத்தொகை |
1 |
|
||||||||||||||||||||||||||
|
6. |
ஈ. அ,
ஆ, இ அனைத்தும் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
7. |
ஈ.
புலரி |
1 |
|
||||||||||||||||||||||||||
|
8. |
இ.
வினைத்தொகையில் வல்லினம் மிகாது |
1 |
|
||||||||||||||||||||||||||
|
9. |
ஆ. அகல் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
10. |
ஆ.
செந்தமிழும் நாப்பழக்கம் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
11. |
அ.
மேலும் கீழும் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
12. |
அ. தானியக்குவியல் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
13. |
ஆ.
வினைத்தொகை |
1 |
|
||||||||||||||||||||||||||
|
14. |
இ.
முதிரையும், குதிரைவாலியும் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
15. |
ஈ.
இராவண காவியம் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி – 2 / பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||||
|
16. |
அ, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
2 |
|
||||||||||||||||||||||||||
|
17. |
நெற்பயிர் |
1 |
|
||||||||||||||||||||||||||
|
18. |
பிற தொழில்கள் செய்வாரையும் பாதுகாத்தலால், உழவர்
உலகத்திற்கு அச்சாணி போன்றவர் ஆவார் |
2 |
|
||||||||||||||||||||||||||
|
19 |
விஜயநகர மன்னர்கள் |
2 |
|
||||||||||||||||||||||||||
|
20. |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
2 |
|
||||||||||||||||||||||||||
|
21 |
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் |
2 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி – 2 / பிரிவு
- 2 |
|||||||||||||||||||||||||||||
|
22 |
அ. நல்ல தமிழில் எழுதுவோம் ஆ. குழலிக்கும் பாடத்தெரியும். |
2 |
|
||||||||||||||||||||||||||
|
23 |
·
'கார் அறுத்தான்' ·
கார்
என்னும் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளைந்த பயிருக்கு ஆகி வருவதால் இது
காலவாகு பெயர் ஆகும். |
2 |
|
||||||||||||||||||||||||||
|
24 |
அ. வெப்ப மண்டலம் ஆ. பெருங்கடல் (அ) மாக்கடல் |
2 |
|
||||||||||||||||||||||||||
|
25. |
பரப்புமின்=பரப்பு+மின் பரப்பு- பகுதி , மின் – முன்னிலை ஏவல் பன்மை விகுதி |
2 |
|
||||||||||||||||||||||||||
|
26. |
உரிய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
||||||||||||||||||||||||||
|
27. |
முதன்மை வினை: நான்
அவனுக்குப் பணம் கொடுத்தேன். அவன் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறான். துணை வினை வேலை
செய்து கொடுத்தான். பாடம் சொல்லிக் கொடுப்பேன். |
2 |
|
||||||||||||||||||||||||||
|
28. |
உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி – 3 பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||
|
29 |
|
3 |
|
||||||||||||||||||||||||||
|
30 |
|
3 |
|
||||||||||||||||||||||||||
|
31. |
அ.
ஜானகி, இராஜாமணி ஆ. பெண்கள் படை இ. டாக்டர் இலட்சுமி |
3 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி – 3 பிரிவு
- 2 |
|||||||||||||||||||||||||||||
|
32 |
·
பயன்தரத்தக்க
நற்செயலைச் செய்ய வேண்டும். ·
முதலில்
சினத்தை நீக்க வேண்டும். ·
மெய்யறிவு
நூல்களை ஆராய வேண்டும். ·
நன்னெறியைப்
போற்றிக் காக்க வேண்டும். |
3 |
|
||||||||||||||||||||||||||
|
33. |
அ) எங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்: 1. கோவிலையும், தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள் 2. தென்னையோலையால்
தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள் 3. வாழை மரங்களைக்
கட்டிவைப்பார்கள் 4. நாடகம், இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்துவர். ஆ) இந்திர விழா நிகழ்வுகள்: 1. தெருக்களிலும், மன்றங்களிலும் மங்கலப் பொருட்களை முறையாக அழகுபடுத்தி வைப்பார்கள். 2. பலவகை மரங்களை
நட்டுவைத்தனர். 3. தெருத்திண்ணையில்
இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்கவிட்டனர். 4. சொற்பொழிவு, பட்டிமண்டபம் நடத்தினார்கள். |
3 |
|
||||||||||||||||||||||||||
|
34. |
அ. காடெல்லாம்
கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்-அன்ன நாடெல்லாம் நீர்நாடு
தனை ஒவ்வா நலமெல்லாம் ஆ) ஆக்குவது
ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது
ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது
ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது
ஏதெனில் விரதம் காக்கவே. |
3 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி – 3 பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||
|
35 |
உவமை அணி – உவமை, உவமேயம்,
உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது |
3 |
|
||||||||||||||||||||||||||
|
36. |
|
3 |
|
||||||||||||||||||||||||||
|
37 |
அ. எட்டு,
பத்து என்னும் எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகும். எ-டு : எட்டுத்தொகை 'பத்துப்பாட்டு' ஆ. திசைப்பெயர்களில்
வல்லினம் மிகும். எ-டு
: கிழக்குப் பகுதி 'வடக்குப் பக்கம் |
3 |
|
||||||||||||||||||||||||||
|
பகுதி – 4 |
|||||||||||||||||||||||||||||
|
38 அ |
·
கல்வி
இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள். ·
கல்வியறிவு
பெற்ற பெண்கள்,
பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள் ·
இன்றைய சூழலில்
கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால், நிறைய நன்மைகள் உண்டு ·
அனைத்துத்
துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், ·
குடும்ப
விளக்கு தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.. |
5 |
|
||||||||||||||||||||||||||
|
ஆ |
குறிஞ்சி : சந்தனம், அகில்,
மலை நெல்லரிசி சோற்றின் மணம், காந்தள் மணம்
ஆகியவை குறிஞ்சி நிலம் முழுதும்
பரவியிருந்தது. முல்லை
: முதிரை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவற்றை கதிரடிக்கும்
அதிர் குரல் கேட்டு மான்கள் அஞ்சி ஓடின பாலை ·
வெப்பத்தை
தாங்க முடியாமல் செண்ணாய் குட்டியின் நா உலர்ந்தது ·
தாய்
தந்த நிழலில் இளைப்பாறச் செய்தது மருதம்
·
மலையில்
தோன்றிய ஆற்று நீரும் கரையை மோதியது ·
நீர்வளம்
மருத நில வயல்களையும் கரும்பையும் வளப்படுத்தியது நெய்தல்
·
பசியால்
வாடுவோரைக் கண்டு வருந்தும் சான்றோர் தான் வாழும் இடம் கடலில் மூழ்கினாலும்
பவளங்களை முத்துக்களையும் கடற்கரையில் கொண்டு வந்து குவிப்பர் |
5 |
|
||||||||||||||||||||||||||
|
39 |
அ.
அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல்
முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2
மதிப்பெண். |
5 |
|
||||||||||||||||||||||||||
|
39 |
ஆ. உங்கள் நண்பர், பிறந்த
நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின்,
‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக. அன்புள்ள நண்பன் எழிலனுக்கு, அன்புடன்,
முகிலன். உறைமேல் முகவரி: த/பெ மதியரசன், மதுரை. |
5 |
|
||||||||||||||||||||||||||
|
40 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்த காட்சி இது அர்த்தமுள்ள காட்சி விழிப்புணர்வுக்கான காட்சி ( மாதிரி) |
5 |
|
||||||||||||||||||||||||||
|
41 |
உரிய படிவத்தைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக |
5 |
|
||||||||||||||||||||||||||
|
42 |
அ. உரிய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ. 1. எண்ணுவது உயர்வு 2. ஒற்றுமை வலிமையாம் 3. ஏறுபோல் நட 4. கற்றது ஒழுகு 5. உடலினை உறுதி செய் |
5 |
|
||||||||||||||||||||||||||
|
|
பகுதி – 5 |
|
|
||||||||||||||||||||||||||
|
43 அ. |
ü இந்திய
தேசிய இராணுவம், இந்திய
விடுதலைக்காக உருவான அமைப்பாகும். ü இந்த
இராணுவத்தில் தமிழர்கள் முக்கிய தூண்களாகத் திகழ்ந்தனர். ü 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்' தலைமையில் பலர்
சேர்ந்தனர். ü தில்லான்
என்பவர் “இந்திய தேசிய இராணுவத்தின்
இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்” என புகழ்ந்தார். ü இராணுவத்தில்
‘ஜான்சி ராணி படை’ எனப்படும் பெண்கள் படையிலும்
டாக்டர் லட்சுமி உள்ளிட்ட தமிழ் பெண்கள் முன்னிலை வகித்தனர். ü இரண்டாம்
உலகப்போரின்போது தமிழர்கள் போராடியதை ஆங்கிலேய பிரதமர் சர்ச்சிலும் கண்டித்தார்.
ü 18
தமிழ் இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டபோதும், தியாகம்
செய்ய இன்முகத்துடன் முனைந்தனர். ü நேதாஜி,
“நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப்
பிறக்கவேண்டும்” எனப் புகழ்ந்தார். நாட்டுக்காக உயிர்
நீத்த தமிழ் வீரர்களின் தியாகம் நினைவுகூரப்பட வேண்டியதாகும். |
8 |
|
||||||||||||||||||||||||||
|
ஆ |
முன்னுரை: பண்டித ரமாபாய்: ·
இவர் சமூகத் தன்னார்வலர். ·
பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். ·
பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், ஐடாஸ் சோபியா: ·
தடைகளைத் தாண்டி மருத்துவம் கற்றார், ·
தமிழகத்தில் வேலூர் கிறிஸ்தவ மிஷன்
மருத்துவமனையை நிறுவியவர். மூவலூர் இராமாமிர்தம் : ·
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி
·
தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். ·
தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை
இவரின் பெயரில் வழங்கி வருகிறது. சாவித்திரிபாய் பூலே : இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்
ஆவார். மலாலா : முடிவுரை : இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப்
பெண்மணிகளே. |
8 |
|
||||||||||||||||||||||||||
|
44. அ. |
முன்னுரை : தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம்
மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம். குழந்தைப் பருவமும் – உலக வாழ்வும் : என் செல்லப் பூங்குட்டியே!
நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து,
சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம்
உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்;
நடந்தாய்; ஓடினாய். இந்த உலக வாழ்வும்
இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க
வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும்
சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும்
எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக
வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும். அனுபவமே கல்வி : கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம்
கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட
தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன்
வாழ பயன்படும் சூத்திரம் ஆகும். அன்பாக இரு: எங்கும்,
எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட
உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால்
இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட
மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச்
சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும். புத்தகங்களை நேசி : புத்தகங்களை நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர்
அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும்
புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே
இருக்கட்டும். முடிவுரை: |
8 |
|
||||||||||||||||||||||||||
|
ஆ |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே? : சற்று நேரத்தில் தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த” என்று
தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும்
குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள். முடிவுரை : |
8 |
|
||||||||||||||||||||||||||
|
45 அ. |
தலைப்பு : சாலை
பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் சாலைவிபத்துகளைப் பற்றிய
செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை
விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம்
காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான
நெறிகள்: v
சிவப்பு
வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு,
தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண
விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப்
பின்பற்ற வேண்டும். v
போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v
சாலையில்
அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v
வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை,
முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில்
ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |
|
||||||||||||||||||||||||||
|
45. ஆ. |
தலைப்பு
: உழவெனும் உன்னதம் முன்னுரை: ”ஏர் முனைக்கு
நேரிங்கே எதுவுமே இல்லே” என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம். உழவுத்
தொழிலும் உழவர்களும்: ”நித்தமும்
உழவே அவன் நினைப்பு நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு” உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை
செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர்,
உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது. தமிழர்
வாழ்வில் உழவு ”தமிழனின் உதிரத்தில்
கலந்தது உழவு உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?” பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில்
மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை
மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில்
அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை
முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை
பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர். இலக்கியங்களில்
உழவுத் தொழில்: உழவர்கள் உழுத உழவினை, ”நல்லேர்
நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன உழவின்
சிறப்பு: உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும்
காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை
தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்
பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும்
அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும். முடிவுரை:
'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார்
வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை
வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம். |
8 |
|
||||||||||||||||||||||||||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி