7 TH STD ANNUAL EXAM TAMIL ANSWER KEY RANIPET DIST

 

(இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர்,நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் என்பதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2026 , இராணிப்பேட்டை மாவட்டம்

                                               7. ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்

I.  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                         10X1=10

வி.எண்

விடைகள்

மதிப்பெண்

1

. மாரி

1

2

. பாண்டிய  

1

3

. வாய்மையை

1

4

அ. முதுமை

1

5

அ. இரட்டைக் கிளவி

1

6

ஆ. வயல்

1

7

ஆ. மலை + அளவு

1

8

. குயில் 

1

9

ஆ. எளிமை

1

10

ஆ. எட்டு

1

I I.  பொருத்து                                                                                                                          4X1=4

11

அன்பு - விளக்கு

1

12

ஆர்வம் - நெய்

1

13

சிந்தை - இடுதிரி

1

14

ஞானம் - தகளி

1

I I I.  எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                      6X2=12

15

அங்கவை , சங்கவை

2

16

·        பச்சையாறு

·        சிற்றாறு

·        சேர்வலாறு

·        மணிமுத்தாறு

·        காரையாறு

·        கடனாநதி

2

17

பொய்கை ஆழ்வார் பெருந்துன்பம் நீங்குவதற்காகப் பாமாலை சூட்டுகிறார்

2

18

உண்மை

2

19

தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும்

2

20

பல்வேறுபட்ட சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும்

2

21

ü  நாடுமுழுவதும் விடுதலைப்போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ü  காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.

ü  கல்வியைவிட நாட்டு விடுதலை மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

2

22

3 – ஆண்பால் , பெண்பால், பலர்பால்

2

23

வினா ஆறு வகைப்படும். அவை,

1.     அறிவினா

2.    அறியாவினா

3.    ஐய வினா

4.    கொளல் வினா

5.    கொடை வினா

6.    ஏவல் வினா

2

I V.  எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                 2X3=6

24

·        திருநெல்வேலியில் உழவுத்தொழில் பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றின் மூலம் நடைபெற்று வருகிறது.

·        சிறுதானியங்கள், காய்கனிகள், எண்ணெய்வித்துகள், பருத்தி, பயிர் வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன.

·        வாழை பயிரிடப்பட்டு, வாழைத்தார்கள் கேரளா மற்றும் கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

3

25

Ø  இன்சொல்லை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்.

Ø  அதில் ஈகை என்னும் பண்பை விதையாகக் கொண்டு விதைக்க வேண்டும்.

Ø  வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.

Ø  உண்மைபேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.

Ø  அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.

Ø  அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.

Ø  இளம்வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்.

3

26

v  "பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி தான்

v  மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி

v  அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்

3

V.  அடிபிறழாமல் எழுதுக                                                                                                            4+2=6

27

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

4

28

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

2

V I.  எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி                                                                      1X6=6

29

என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரம்

முன்னுரை:

       அன்னைத் தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரமே ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் கார்போம்.

சிலப்பதிகாரம் அமைப்பு:

    சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது காதைகளாகிய சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.

சிலப்பதிகாரக் கதை!

         புகார் நகரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து வாழ்கின்றனர். கண்ணகியைப் பிரிந்து கோவலன் அதவியுடன் வாழ்கின்றார். அவளைப்பிரிந்து மீனர்டும் கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான்.கண்ணகி நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து, வானுலகம் செல்கின்றாள்.

சிறப்புகள்:

     ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.  முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் நூல், ன் குடிமக்களைக் கதை மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது.

சுவர்ந்த காரணம்:

      மூவேந்தர்களைப் பற்றியும், முத்தமிழ் பற்றியும், முச்சுவை பற்றியும், முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில் விளக்குவதால் சிலப்பதிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக் கவர்ந்தது இந்நூல்,

முடிவுரை:

     சிலப்பதிகாரம் மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன், என்னைக் கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்!

6

30

உறவினருக்குக் கடிதம்

 

12, தென்றல் நகர்,

திருத்தணி-1

26-12-2023

அன்புள்ள அத்தைக்கு,      

           உங்கள் அன்பு அண்ணன் மகள் எழுதும் கடிதம், நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய) ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது.ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும், ஊரே அலங்காரமாக இருக்கும். பூச்சாட்டல், காப்புக்கட்டல், பூமிதித்தல், அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம் கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும் அழைப்பார்கள் அன்புடன் முடிக்கின்றேன்.உடன் பதில் எழுதுங்கள்.

 

                                                                                                                                                      இப்படிக்கு,

அன்பு அண்ணன் மகள்

                                                                                                                                       வா.நிறைமதி

உறைமேல் முகவரி:

      ச.தமிழாசி.

      12,திரு.வி.க நகர்,

      மதுரை-2.

6

V I I.  எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி                                                                     1X6=6

30

·        சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள் அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள் அக்கதைகளும் ஒன்று உண்மை ஒளி.

·        ஜென் குருவிடம் சிலர் பாடகற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளியது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார் சீடர்களிடம் "இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது" என்று எப்படி அறிவீர்கள்? என்றார்.

·        சீடர்கள் வ்வ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர்

·        இவை எல்லாம் தவறு என்றார் குரு ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு.

·        ஒரு நாள் மயங்கிகிடந்த ஒருவனுக்கு உதவி செய்தார் குரு.

·        அவன் குருவின் குதிரையைத் திருடிச்சென்றுவிட்டான்

·        அவன் திருடன் என்பதையும் தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.

·        குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தான்.

·        குரு திருடனிடம்யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றார்

·        நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள் என்றார்.குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.

 

31

ü  அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது மாதச் சம்பளத்தில் மிதி வண்டி ஒன்றை வாங்குகின்றார்.

ü   தெரிந்த இடம் தெரியாத இடம் என எல்லாவற்றுக்கும் மிதிவண்டியில்தான் செல்கிறார்.

ü  ஹாசன் வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை.

ü  இரண்டு நாட்கள் மிதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார்.

ü  பெரிய இறக்கத்தில் இறங்கும் போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது.

ü  .நீண்ட தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை.

ü  காலைப்பொழுதுவிடிந்ததும் பக்கத்து ஊரில் உள்ளசந்திரேகௌடா என்பவர் மிதிவண்டியைச் சரி செய்து தருகின்றார். சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார்.

ü  அவரிடம் இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினான். மாமா வீடு நெருங்கும் சிறிது தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான்.

ü  சிறுவனின் மிதிவண்டி ஆர்வத்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஒட்டிக்கொண்டு இருக்கும் போது, அவனிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி செல்கின்றார்

 

V I I I.  அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                        5X2=10

31

. உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆ. குன்றின் மேலிட்ட விளக்கு போல

2

32

அ. எங்கு   ஆ. எத்தனை பேர்?

2

33

அ. பெண்  ஆ. தோழன்

2

34

அ. திரு, நெல், வேலி, திருவேல், நெல்லி  ஆ. நாகம், பட்டினம், பட்டி, கனம்,கடினம்

2

36

அ. வறுமை   ஆ. நேர்மை

2

 



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை