10 TH STD TAMIL PUBLIC EXAM ORIGINAL QUESTION PAPER & ANSWER KEY MARCH 2026

 10.ஆம் வகுப்பு - தமிழ்

அரசுப்பொதுத்தேர்வு வினாத்தாள் மார்ச் 2026


அரசுப்பொதுத்தேர்வு- மார்ச் 2026

10.ஆம் வகுப்பு தமிழ்-உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. செப்பலோசை

1

2.     

. வங்காள, ஆங்கில  

1

3.     

. அதியன் , பெருஞ்சாத்தன்

1

4.     

. வேற்றுமை உருபு

1

5.     

. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

1

6.     

. செய்தி (1) , (3) ஆகியன சரி

1

7.     

. காற்றின் பாடல்

1

8.     

. குழந்தையே வா!

1

9.     

. சேர நாடு, சோழ நாடு

1

10.   

. பாடல், கேட்டவர்

1

11.    

.

1

12.   

. காசிக்காண்டம்

1

13.   

. அதிவீரராம பாண்டியர்

1

14.   

. கூறுதல்

1

15.   

. திருந்துற - வருக

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத்தராதவர்

2

17

. யாருக்கு விருந்தினர் என்று பெயர்?

. ஒரு நாட்டின் வளம் எதை உருவாக்குகிறது?

2

18

ü  முதுகினால் சூரியனை மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை.

ü  தாகம் தீர்க்கும்போது மேகங்கள் கருணை மிக்கவை

2


19

சிலம்பு , கிண்கிணி, அரைஞாண், அரைவடம், சுட்டி, குண்டலம்.

2


20

நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.

2

21

குற்றம் இலனாய்க்  குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

                                                                  பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

      சேரர்களின் பட்டப் பெயர்களில்கொல்லி வெற்பன்’, ‘மலையமான்போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்மலையமான்எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

2

23

. சுடுதல்    . சுட்டல்

2

24

அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர்-பகுதி

 த்-சந்தி

ந்-விகாரம்

த்-இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் விகுதி

2

25

கட்டுரையைப் படித்த ()

2

26

      வெட்சித்திணைமுதல் பாடாண் திணை வரைஉள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

2

27

. மகிழ்ச்சி. . கதை சொல்பவர்              . குருதி ஆ. க்கா

2

28

. மலைமீது மாலையில் ஏறினான்  . பள்ளி விட்ட்தும் வீட்டுக்குச் சென்றான்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)                        பிரிவு-1                                           2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  தொலைக்காட்சி வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

ü  வணிக விளம்பரங்களை பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது.

ü  புதுவகையான சிந்தனைகள் மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது.

3

30

இடம்:        இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:  எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

31

. உலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆனது.

. காற்றால் இயக்கப்பட்ட பாய்மரக்கப்பல்களால் நிகழ்ந்தன

. கடுங்காற்று மணலைக் கொண்டுவந்து சேர்க்கிறது

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3


33

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3


34

 

.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

3

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

3

36

ü  இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

சொற்பொருள் பின்வருநிலை அணி:

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

அணிப்பொருத்தம்:

    ‘இன்மைஎன்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

3

37

சீர்

அசை

வாய்பாடு

அரியவற்றுள்

நிரை+நிரை +நேர்

கருவிளங்காய்

எல்லாம்

நேர்+நேர்

தேமா

அரிதே

நிரை +நேர்

புளிமா

பெரியாரைப்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

பேணித்

நேர்+நேர்

தேமா

தமராக்

நிரை +நேர்

புளிமா

கொளல்

நிரை

மலர்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர்.

ü  சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில் பயன்படுத்தியுள்ளார்.

ü  பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.

ü  இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்

(அல்லது)

)

v  ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும்.

v  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர்.

v  உலகத்தோடு இணைந்து வாழாதவர், கற்றவராயினும் அறிவு இல்லாதவரே

5

39

.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற பெண்கள் நாட்டின் கண்கள்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க. இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

) மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     .கயல்விழி,

     3 பெரிய தெரு,

     திருநெல்வேலி-2

பெறுநர்:               

     மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

     மாநகராட்சி அலுவலகம்,

     திருநெல்வேலி-2

மதிப்பிற்குரிய அய்யா,

  பொருள்: புயலால் விழுந்த மரங்களை அகற்றக் கோருதல் சார்பாக.

       வணக்கம் எங்கள் பகுதியில் கடந்த 10ஆம்தேதி புதன்கிழமை வீசிய புயலால்,ஏராளமான மரங்கள் வேரோடு விழுந்துள்ளன.அதனால்,சாலைகளில் ஏற்பட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நிலை முடங்கியுள்ளது. எங்கள் பகுதியில் மூன்று பள்ளிகளும்,ஒரு கல்லூரியும்,ஒரு குழந்தைகள் மருத்துவமனையும் உள்ளது. அதனால்,தாங்கள் அருள்கூர்ந்து எங்கள் பகுதியில் உள்ள மரங்களை விரைந்து அகற்றித்தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                               இங்கனம்,

                                                          தங்கள் உண்மையுள்ள

                                                              .கயல்விழி.

இடம்: திருநெல்வேலி,

நாள்: 29-09-2025.

உறைமேல் முகவரி:

மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

மாநகராட்சி அலுவலகம்,

திருநெல்வேலி-2


5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

நூலக உறுப்பினர்  படிவம்

நீலகிரி மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் பாரதிதாசன் நகர் 

உறுப்பினர் சேர்க்கை அட்டை  

அட்டை எண்: 12345                                        உறுப்பினர் எண்:  678910                                  

1.    பெயர்                                                        :           . புகழேந்தி

2.   தந்தை பெயர்                                            :           மதிவேந்தன்

3.   பிறந்த நாள்                                               :           அ அஅ அஅ அ அ அ

4.   வயது                                                         :           15

5.   படிப்பு                                                        :           பத்தாம் வகுப்பு

6.   தொலைபேசி / அலைபேசி எண்           :           9876543210

7.   முகவரி                                        :7, பூம்பொழில் தெரு, பாரதிதாசன் நகர், நீலகிரி மாவட்டம்

      (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)                        

                 நான் மைய நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. 100 சந்தா தொகை ரூ. 20 ஆக மொத்தம் ரூ. 120 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

 

இடம்:   பாரதிதாசன் நாகர்

நாள்:    11-03-2026                                                                                                                                                    

                                                                                                    தங்கள் உண்மையுள்ள

     

திரு / திருமதி / செல்வி / செல்வன் . புகழேந்தி  அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

         அ அ அ

                                                                                              பிணைப்பாளர் கையொப்பம்    

அலுவலக முத்திரை                                                                             (பதவி மற்றும் அலுவலகம்)

5

42

.

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

. வரவேற்பு:

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள் அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க நீர் தந்தோம்.

கலந்துரையாடல்:

நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின், வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது.

விருந்து உபசரிப்பு :

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.

நகர்வலம்:

விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்

இரவு விருந்து :

நகர்வலம் முடிந்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர்.

பிரியா விடை :

இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.

) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை:

நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

பசுமை பரப்புகளை அதிகரித்தல்:

மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல்:

ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.

எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது

தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:

ü  தொழிற்சாலைகள் வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.

ü  மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.

குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:

குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது  செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

முடிவுரை:

காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!

8

44

) பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

) புயலிலே ஒரு தோணி

முன்னுரை:

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்

   தண்ணீரில் பிழைக்க வைத்தான்

            பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்

விடாது பெய்த மழை:

கடுமையான வெயில் மறைந்து,இமை நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள  கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தள்ளாடிய கப்பல் (தொங்கான்):

           மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான்ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான்.இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல் தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின..

பயணிகளின் தவிப்பு:  

பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம்  தொடர்ந்தது.கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான். அதற்கு கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.

கரையைக் காணுதல்:

            ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக   மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர  கப்பல்கள்  கரை முழுவதும் நின்றிருந்தன.

முடிவுரை:

இயற்கையைப் போன்று யாராலும் கொடுக்க முடியாது

       இயற்கை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது

 

தமிரோ?” என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.யா மஸ்தாஇன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார்புயலிலே ஒரு தோணி கதையில்  இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை தெளிவுற விளக்கின.

8

45

) தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

) முன்னுரை:

கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம்

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8

 பதிவிறக்கம் செய்ய



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை