மூன்றாம் திருப்புதல் தேர்வு-2026
திருப்பத்தூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஈ. பாடல் :
கேட்டவர் |
1 |
|
2. |
ஆ. உவமைத்தொகை |
1 |
|
3. |
ஆ. வான்வெளியில்,
பேரொலியில் |
1 |
|
4. |
ஆ. தாளாண்மை
- வேளாண்மை |
1 |
|
5. |
இ. பழுப்பு |
1 |
|
6. |
இ. குழந்தையே
வா |
1 |
|
7. |
இ. குறிஞ்சி,
மருதம், நெய்தல் நிலங்கள் |
1 |
|
8. |
அ. கைமாறு கருதாமல்
அறம்செய்வது |
1 |
|
9. |
இ. காசி நகரத்தின்
பெருமையைப் பாடும் நூல் |
1 |
|
10. |
அ. ஒரு சிறு
இசை |
1 |
|
11. |
ஆ. மலேசியா |
1 |
|
12. |
ஆ. பரிபாடல் |
1 |
|
13. |
அ. உரு அறி
- உந்துவளி |
1 |
|
14. |
ஈ. அடுக்குத்தொடர் |
1 |
|
15. |
இ. கீரந்தையார் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
வாருங்கள், நலமா?,
நீர் அருந்துங்கள் |
2 |
|
17 |
அ. நாடும் மொழியும்
நமதிரு கண்கள் என்றவர் யார்? ஆ. உலகமே வருமையுற்றாலும்
கொடுப்பவன் யார்? |
2 |
|
18 |
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும்
நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி. |
2 |
|
19 |
மறைத்துவைத்தல் எனும்
துன்பத்தைத் தராதவர் |
2 |
|
20 |
# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள் # # உமணர் – உப்பு விற்பவர் |
2 |
|
21 |
முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
சரியான தொடர்கள்: ü ஒரு தாற்றில் பல சீப்பு
வாழைப்பழங்கள் உள்ளன ü ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்
உள்ளன. பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது. |
2 |
|
23 |
அ. கொடுப்பதற்கு
கோடு இடக் கூடாது ஆ. செயற்கையை
விட இயற்கை சிறந்தது |
2 |
|
24 |
மயங்கிய
- மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு
- பகுதி இ(ன்)
- இறந்தகால இடைநிலை;
'ன்' புணர்ந்து கெட்டது. ய்
-உடம்படுமெய் அ
- பெயரெச்ச விகுதி |
2 |
|
25 |
அ. உயிரெழுத்து ஆ. பல்துறை
ஊடகம் |
2 |
|
26 |
அ. கனிமொழி தேர்வுக்கு
கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள் ஆ. பணத்தை அள்ளி
இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான் |
2 |
|
27 |
"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக்
கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று
இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். |
2 |
|
28 |
ü பல கை என்று வந்தபோது
கையைக் குறித்தது. ü பலகை என்று வந்தபோது
மரப்பலகையைக் குறித்தது. ü தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு
பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
வாருங்கள், நலமா?,
நீர் அருந்துங்கள் |
3 |
|
30 |
அ.வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது ஆ. பசு, பார்ப்பனர், பெண்கள்,
நோயாளர், புதல்வரைப் பெறாதவர் இ. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது |
3 |
|
31 |
ü பகிர்ந்துண்ணும் வழக்கமே
குறைந்து விட்டது. ü நெருங்கிய உறவினர்களை
மட்டுமே விருந்தினர்களாகக் கருதுகின்றனர். ü வாயிலை அடைக்கும்
முன் உணவு வேண்டி யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்த தமிழர் இன்று
வாயிலை அடைத்த பிறகே உண்னுகின்றனர். |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
32 |
ü உயிர்பிழைக்கும் வழி
அறியேன் ü உறுப்புகள் அறிவிற்குப்
பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத் தேடும் வழி
அறியேன் ü காட்டில் செல்லும்
வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
33 |
·
குளிர்ந்த
சோலையில் மயில்கள் ஆடுகின்றன.
·
தாமரை
மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன. ·
குவளை
மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன. ·
நீர்நிலைகளின்
அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன. ·
மகர
யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை ,
தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை. இக்கூற்றில்
அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக. |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் சொல் பின்வரு நிலை அணி பயின்று வந்துள்ளது சொல் பின்வரு நிலை அணி: ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்
வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல் பின்வருநிலை அணி ஆகும். அணிப்பொருத்தம்: ‘பொருள்‘
என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை வந்ததால் சொல் பின்வருநிலை அணி
ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||
|
38
அ |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன்
இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின்
தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
(அல்லது) ஆ) ü கிடைத்தற்கரிய
பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல்
ஆகும். ü குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத்
துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான். ü தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல
மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.இதன்மூலம்
கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை
அறியலாம் |
5 |
||
|
39 அ. |
15,எழில் வீதி,
காஞ்சி-1,
24-09-2020. அன்புள்ள தங்கைக்கு, உன் அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நான் இங்கு நலமாக உள்ளேன். உன் நலத்தையும், அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி அனைவருடைய நலத்தையும்
அறிய அவா.நீ எவ்வாறு படிக்கிறாய்? உன்னுடைய கூடைப்பந்து பயிற்சி
எல்லாம் எப்படி இருக்கிறது?அன்றாடம்
பயிற்சிக்குச் செல்கிறாயா?
படிப்பையும் விளையாட்டையும் இருகண்களென நினைத்து, இரண்டிலும்
கவனம் செலுத்துக.திறன்பேசி
அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார். திறன்பேசியினால்
நன்மையும் உண்டு;தீமையும்
உண்டு. படிப்பிற்காக
இணையத்தைப் பயன்படுத்தும்போது,இலவசஇணைப்பு
போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும் உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம்செலுத்தி,கல்வியில் உயர்நிலையை அடைய
முயலவும். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு
நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த
மாதம் விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம்.
இப்படிக்கு
உன்
அன்பு அண்ணன்
த.தமிழ்நிலவன். உறைமேல் முகவரி:
ஆ) நாளிதழ்
ஆசிரியருக்குக் கடிதம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி
தெரு, சக்தி நகர், திருத்தணி
. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1 ஐயா, பொருள்:
கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : திருத்தணி
அ அ அ அ அ. நாள் : 04-03-2024 உறை மேல் முகவரி:
|
5 |
||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||
|
41 |
படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
||
|
42 |
அ. 1.
நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2.
என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4.
பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5.
பிறருக்கு நன்மை செய்வேன் ஆ. தமிழ் இலக்கியத்திற்கு தான் செய்த
படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில், கவிதைகள்,
கடிதங்கள், திரைக்கதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம்.
திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா,
பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு
அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை
வாயிலாகவும் கருணாநிதி அவர்கள் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு,
"குறளோவியம்" எழுதியதைப் போல, சென்னையில்,
வள்ளுவர் கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின்
வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார்.
அந்த அறிஞருக்குப் பெருமை சேர்க்க, கன்னியாகுமரியில்,
133 அடி திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார். |
5 |
||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
|||
|
43 |
அ. முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
"முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்"
என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய
பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும்
பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித்
திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள்
இருந்த கலைத்தன்மையை வளர்த்தது. பேச்சுக்
கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
"நட்பு"
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க
"சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ்
மாணவர் மன்றம்" ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன்
மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட
பல நாடகங்களை எழுதினார். திரைக்
கலைஞர் v கலைஞரின் திறமையை
நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான
முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி
முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க்
கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை: உடல் மண்ணுக்கு உயிர்
தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். ஆ) நாட்டுவளமும்
சொல்வளமும் முன்னுரை: 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி
பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன
வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு
இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது,
தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ் மொழியின் பழமையும்
செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச்
சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை
மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான
சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே
வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ
இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில்
கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப்
பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை பொருட்களின்
மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்
முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ü செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என
எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின்
வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை: சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் |
8 |
|
|
44 அ |
அ) இவ்வினாவிற்குரிய பாடப்பகுதி இந்த ஆண்டு
10.ஆம் வகுப்பு தமிழ் பாடநூலில் நீக்கப்பட்டுள்ளது. ஆ) பாய்ச்சல் முன்னுரை:
“ ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது
அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு
காண்போம். அனுமார்: நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன.
சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள்
மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில்
இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான். அனுமாரின் நெருப்பாட்டம்: திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத்
தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து
பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது. அழகுவின் உதவி: சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது அழகுவின் ஆட்டம் அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்
போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு
என்றார்”. அவனும் நன்றாக ஆடினான். அனுமார் அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார்.. முடிவுரை: “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன்
ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக
ஆட்டிக்கொண்டிருந்தான். |
8 |
|
|
45 |
அ) நூல்
தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே
இந்நூலின் தலைப்புமாகும். நூலின்
மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள்,
கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய
நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும்
கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு
நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை. நூல்
கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1.
காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள்,
3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித்
தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக்
கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய
செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர்.
இரா.மோகன்
ஆ) தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர்
இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக்
கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |
|
.png)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி