இரண்டாம் திருப்புதல் தேர்வு-2026
தருமபுரி மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
இ. காசி
நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
|
1 |
|
2. |
இ. எம் +
தமிழ் +நா
|
1 |
|
3. |
இ. பயன்கலை |
1 |
|
4. |
ஆ. வான்வெளியில்,
பேரொலியில் |
1 |
|
5. |
அ. பார்த்த கண்ணகி |
1 |
|
6. |
அ. கூற்று
1 மட்டும் சரி |
1 |
|
7. |
ஆ. வங்காள ,
ஆங்கில |
1 |
|
8. |
அ. திருப்பதியும்,
திருத்தணியும் |
1 |
|
9. |
ஆ. மினசோட்டா |
1 |
|
10. |
அ. கைம்மாறு
கருதாமல் அறம்செய்வது |
1 |
|
11. |
இ. கேடு |
1 |
|
12. |
அ. வீரமாமுனிவர் |
1 |
|
13. |
ஈ. தேம்பாவணி |
1 |
|
14. |
ஆ. வினைத்தொகை |
1 |
|
15. |
ஆ. கருணையன் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
அ. கப்பலுக்கு
போன மச்சான் என்னும் நாவலை இயற்றியவர் யார்? ஆ. பரஞ்சோதின்முனிவர்
எங்கு பிறந்தவர்? (மாதிரி விடைகள்) |
2 |
|
17 |
பசு, பார்ப்பனர்,
பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர் |
2 |
|
18 |
v மொழிபெயர்ப்பால் புதிய
சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும். v பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம். |
2 |
|
19 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
|
20 |
சிலப்பதிகாரம், மனிமேகலை |
2 |
|
21 |
முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. செயற்கையை
விட இயற்கை சிறந்தது ஆ. கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது |
2 |
|
23 |
தம்பி எங்கே நிற்கிறாய்? தேனீர் விடுதி எதிரில்தான் அண்ணா. சரி, நான் கிளம்பிவிட்டேன் |
2 |
|
24 |
அ. தங்கும்,
தயங்கும் ஆ. விருது, விருந்து |
2 |
|
25 |
அ. வாய்மை
(அ) உண்மை ஆ. மகிழ்ச்சி |
2 |
|
26 |
அ. ஒடிக்கொண்டிருந்த
மின்விசிறி சட்டென நின்றது அறையில் உள்ளவர்கள் பேச்சுத் தடைப்பட்டது. ஆ. அழைப்புமணி
ஒலித்ததும், கயல்விழி கதவைத் திறந்தாள் |
2 |
|
27 |
அ)ஊண் – உணவு , ஊன் – உடல், இறைச்சி ஆ) திணை
– ஒழுக்கம் , தினை – சிறுதானியம்
|
2 |
|
28 |
"சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது "
என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
ü தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித்
துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம் சுந்தரனாரின்
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார் ü 2010 ல் கோவையில் உலகத்
தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
|
30 |
·
சங்க இலக்கியங்கள் காட்டும்
அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ·
இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. ·
நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து
இன்றைக்கும் பொருந்தக்கூடியது. ·
மேற்கூறிய காரணங்களால் சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
|
31 |
அ. மோசிகீரனார் ஆ. தகடூர்
எரிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இ. கவரி வீசினார் |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
32 |
ü ருக்குறள் உலகின்
பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். ü இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும்
முப்பால் பகுப்புக் கொண்டது. ü திருக்குறளில்
அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும் பொருட்பாலில் 70 அதிகாரங்களும்
இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களுமாக 133 அதிகாரங்கள் உள்ளன. ü அதிகாரத்திற்கு
10 குறள்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. ü அறத்துப்பால்
பாயிரவியல்,
இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும்
நான்கு இயல்களைக் கொண்டது. ü பொருட்பால்
அரசியல்,
அமைச்சியல், ஒழிபியல் என்னும்
மூன்று இயல்களைக் கொண்டது. ü இன்பத்துப்பால்
களவியல்,கற்பியல் என்னும்
இரண்டு இயல்களைக் கொண்டது. |
3 |
|
33 |
·
குளிர்ந்த
சோலையில் மயில்கள் ஆடுகின்றன.
·
தாமரை
மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன. ·
குவளை
மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன. ·
நீர்நிலைகளின்
அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன. ·
மகர
யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
1.
இறங்கினார்
முகமது
- வினைமுற்றுத்
தொடர் 2.
அவர்
பாடகர்
- எழுவாய்த்
தொடர் 3.
பாடுவது கேட்பது - கூட்டு வினையெச்சத் தொடர் 4.
கேட்ட
பாடல்கள்
- பெயரெச்சத்
தொடர் 5.
கேட்காத
பாடல்கள்
- எதிர்மறைப்
பெயரெச்சத் தொடர் 6.
அடுக்கு
அடுக்காக
- அடுக்குத்
தொடர் |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது. வஞ்சப் புகழ்ச்சி அணி: ஒரு செய்யுளில்
ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக
வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும். அணிப்பொருத்தம் தேவர்கள்
தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல, கயவர்களும்
தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர். இக்குறளில்
தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக்
கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும். |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||
|
38
அ |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன்
இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின்
தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்
(அல்லது) ஆ) ü “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்
கம்பர். ü சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார். ü பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும் அவர்
பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது. ü இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில் செய்யுளில்
வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம் |
5 |
||
|
39 அ. |
15,எழில் வீதி,
காஞ்சி-1,
24-09-2020. அன்புள்ள தங்கைக்கு, உன் அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நான் இங்கு நலமாக உள்ளேன். உன் நலத்தையும், அம்மா,அப்பா, தாத்தா, பாட்டி அனைவருடைய நலத்தையும்
அறிய அவா.நீ எவ்வாறு படிக்கிறாய்? உன்னுடைய கூடைப்பந்து பயிற்சி
எல்லாம் எப்படி இருக்கிறது?அன்றாடம்
பயிற்சிக்குச் செல்கிறாயா?
படிப்பையும் விளையாட்டையும் இருகண்களென நினைத்து, இரண்டிலும்
கவனம் செலுத்துக.திறன்பேசி
அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார். திறன்பேசியினால்
நன்மையும் உண்டு;தீமையும்
உண்டு. படிப்பிற்காக
இணையத்தைப் பயன்படுத்தும்போது,இலவசஇணைப்பு
போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும் உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம்செலுத்தி,கல்வியில் உயர்நிலையை அடைய
முயலவும். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு
நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த
மாதம் விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம்.
இப்படிக்கு
உன் அன்பு
அண்ணன்
த.தமிழ்நிலவன். உறைமேல் முகவரி:
ஆ) நாளிதழ்
ஆசிரியருக்கு கடிதம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி
தெரு, சக்தி நகர், திருத்தணி
. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1 ஐயா, பொருள்:
கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : திருத்தணி
அ அ அ அ அ. நாள் : 04-03-2024 உறை மேல் முகவரி:
|
5 |
||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||
|
41 |
படிவத்தை உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
||
|
42 |
அ. 1.
நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2.
என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3.
தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4.
பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5.
பிறருக்கு நன்மை செய்வேன் ஆ. 1.
ஒரு
பள்ளியில் கற்றதை மறந்து விட்டால்,
பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட்
ஐன்ஸ்டின் 2.
பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி 3.
இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்
- அரிஸ்டாட்டில் 4.
வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம்
இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது
– வின்ஸ்டன் சர்ச்சில். |
5 |
||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
|||
|
43 |
அ. முன்னுரை “இன்று ஏடு கற்போரே நாளை நாடு காப்போர் ஆதல், இளமை அறிவோடு இயைபின் நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்” என்ற பாவேந்தரின்
வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள்
இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன.
அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி
ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள்
விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர். இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர். இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும்
இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை
பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும். முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின்
வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு
மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து
செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும். ஆ) காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் முன்னுரை: நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக
இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில்
மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும்,
விலங்குகளும், மரங்களும்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை
தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். பசுமை
பரப்புகளை அதிகரித்தல்: மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை
இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால்,
அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான
வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே
இதற்கான சிறந்த வழியாகும். பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்துதல்: ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை
பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக
பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று
மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துதல் அவசியம். எரிபொருள்
சிக்கனமுடைய வாகனங்கள்: மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள்
சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால்
இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது தொழிற்சாலைகளில்
கட்டுப்பாடுகள்: ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட
வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ü மின் உலைகள், பசுமை
தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு
குறையும். குப்பைகளைச்
சரியாக நிர்வகித்தல்: குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை
முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை,
மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று
மாசுபாட்டைக் குறைக்கும். முடிவுரை: காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின்
பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே,
சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று
செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்! |
8 |
|
|
44 அ |
அ) முன்னுரை: விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர்.
அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு
அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே
மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம்.
புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு
காண்போம் எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற
திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார். பாலசரசுவதி: இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில்
தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும்
நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில்
நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன
கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார். இராஜம் கிருஷ்ணன்: சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும்
எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய
பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு
மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை
"குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும்
புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச்
சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு
நீர்"எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட
மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற
அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும்
உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார். மதுரை சின்னப்பிள்ளை: இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும்
இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண்
அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின்
"அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின்
பொதிகை விருதையும் பெற்றவர். முடிவுரை: பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும்
உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு
அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய
சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு
சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத்
திகழ்கின்றனர். ஆ) பாய்ச்சல் முன்னுரை:
“ ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது
அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு
காண்போம். அனுமார்: நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன.
சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள்
மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில்
இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான். அனுமாரின் நெருப்பாட்டம்: திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத்
தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து
பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது. அழகுவின் உதவி: சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது அழகுவின் ஆட்டம் அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்
போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு
என்றார்”. அவனும் நன்றாக ஆடினான். அனுமார் அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார்.. முடிவுரை: “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன்
ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக
ஆட்டிக்கொண்டிருந்தான். |
8 |
|
|
45 |
அ) தலைப்பு
: சாலை பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற
வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை
முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர்
இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக்
கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். (அல்லது) ஆ) நூல்
தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே
இந்நூலின் தலைப்புமாகும். நூலின்
மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள்,
கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய
நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும்
கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு
நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை. நூல்
கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1.
காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள்,
3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித்
தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக்
கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய
செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர்.
இரா.மோகன் |
8 |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி