10.ஆம் வகுப்பு - தமிழ்
கற்பவை கற்றபின் வினா விடைகள்
இயல்-1
1. சொல்லுதல்
என்பதற்குப் பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல் இயம்பல், மொழிதல் எனப் பல
சொற்கள் உள்ளன. இதைப் போன்று மழை, கடல், யானை போன்றவற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைத் தொகுத்து வகுப்பறையில் வழங்குக.
(பக்க எண்: 7)
மழைக்கு வழங்கப்படும் பெயர்கள்:
v
சாரல்
v
பொழிவு
v
பெயல்
v
சோனை
v
அடைமழை
v
தூறல்
v
தாரை
கடலுக்கான மாற்றுப்
பெயர்கள்:
v
சமுத்திரம்
v
சாகரம்
v
பெருங்கடல்
v
உவர்நீர்
பரப்பு
v
ஆழி
v
பரவை
v
தரங்கம்
v
திரைமுகம்
யானைக்கு
வழங்கப்படும் பெயர்கள்:
v
ஆனை
v
களிறு
(ஆண் யானை)
v
பிடி
(பெண் யானை)
v
கரி
v
குஞ்சரம்
v
மாதங்கம்
v
வாரணம்
v
கணேயம்
v
ஐராவதம்
2. நாம்
பேசும் மொழியில் அதிகமான சொற்களை ஆள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து வகுப்பறையில்
கலந்துரையாடுக. (பக்க எண்: 7)
முன்னுரை:
மொழி என்பது மனிதர்களின்
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான கருவியாகும். நாம்
பேசும் மொழியில் அதிகமான சொற்களை அறிந்து ஆள்வது, நம்
வாழ்வில் பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது.
சொற்களஞ்சியப்பெருக்கம்:
முதலாவது, சொற்களஞ்சியம்
(Vocabulary) அதிகரித்தால் நம் கருத்துகளை தெளிவாகவும்
துல்லியமாகவும் வெளிப்படுத்த முடியும். ஒரே கருத்தை பல்வேறு கோணங்களில் அழகாகச்
சொல்லும் திறன் வளர்கிறது. இதனால் உரையாடலிலும், பேச்சுத்திறனிலும்
நம்பிக்கை அதிகரிக்கிறது.
கல்வி வளர்ச்சி
கல்வி வளர்ச்சிக்கு
இது பெரிதும் உதவுகிறது. கட்டுரை எழுதுதல்,
உரைநடை, கவிதை, பேச்சுப்போட்டி
போன்றவற்றில் சிறந்து விளங்க முடியும். தேர்வுகளில் கருத்தை விரிவாக எழுதும் திறன்
உருவாகிறது.
வாசிப்பு பழக்கம்
v வாசிப்பு பழக்கம் மேம்படும்.
புதிய சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிப்பதால் இலக்கியங்கள், நூல்கள்,
செய்தித்தாள்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கம் உருவாகிறது. இதனால்
அறிவு பரந்து விரிகிறது.சமூக உறவுகள் வலுப்படும்.
v சரியான சொற்களைத்
தேர்ந்து மரியாதையுடன் பேசும் திறன் உருவாகும். இது மனித உறவுகளை
இனிமையாக்குகிறது.
v சிந்தனைத்திறன்
வளர்கிறது. அதிகமான சொற்களை அறிந்திருப்பது நம் மனதில் எண்ணங்களை ஒழுங்குபடுத்த
உதவுகிறது. படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் மேம்படுகின்றன.
முடிவுரை:
முடிவாக, நாம்
பேசும் மொழியில் அதிகமான சொற்களை ஆள்வது நம் தனிமனித வளர்ச்சிக்கும், கல்வி முன்னேற்றத்துக்கும், சமூக வாழ்வுக்கும்
பெரும் ஆதாரமாக அமைகிறது. ஆகையால், புதிய சொற்களை அறிந்து
பயின்று, மொழித்திறனை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவரின்
கடமையாகும்.
(பக்க எண்: 14)
1. தேன்,
நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர் மொழிகளாக்குக.
1.
தேன்
- தேன் எடுத்தான்
2.
நூல்
- நூல் பல கல்.
3.
பை
– பை வாங்கினான்
4.
மலர் - மலர்
பறித்தேன்.
5.
வா
- விரைந்து வா.
2.
வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
(காண், சிரி,
படி, தடு)
எ.கா: காண் - காட்சி, காணுதல்,
காணல், காணாமை
ü
சிரி- சிரிப்பு,
சிரித்தல், சிரிக்காமை
ü
படி - படிப்பு,
படித்தல், படிக்காமை
ü
தடு
- தடுப்பு, தடுத்தல், தடுக்காமை
3.
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு
உரையாடலைத் தொடர்க.
அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)
தம்பி : கடைக்கு (தனிமொழி)
அண்ணன் : இப்பொழுது என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி)
தம்பி :
பருப்பு
வாங்குகிறேன். (தொடர்மொழி)
அண்ணன் : எதற்கு? (தனிமொழி)
தம்பி :
பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் (தொடர்மொழி)
அண்ணன்: இன்று பருப்பு
சோறு வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர்மொழி)
தம்பி : சரி இன்று அம்மாவைப் பிரியாணி
செய்து தரச்சொல்வோம். (தொடர்மொழி)
4. மலை என்னை
அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்;
மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும்
பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக
மாற்றுக.
ü அழைக்கும் - அழைத்தல்
ü ஏறுவேன் – ஏறுதல்
ü அமர்வேன் – அமர்தல்
ü பார்ப்பேன் - பார்த்தல்
ü எய்தும் - எய்தல்
5.
கட்டு, சொட்டு, வழிபாடு,
கேடு, கோறல் - இத்தொழிற்பெயர்களை
வகைப்படுத்துக.
1. கட்டு - முதனிலைத்
தொழிற்பெயர்
2. சொட்டு - முதனிலைத் தொழிற்பெயர்
3. வழிபாடு- விகுதி
பெற்ற தொழிற்பெயர்
4. கேடு - முதனிலை
திரிந்த தொழிற்பெயர்
5. கோறல் - விகுதி
பெற்ற தொழிற்பெயர்
இயல்-2
1.
காற்று பேசியதைப்போல , நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு
பேசுக
நிலம் பேசுகிறது
முன்னுரை :
”அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை”
என்று வள்ளுவன்
என்னை பெருமைப்படுத்தி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பல்வேறு வகைகளில்
மனிதர்கள் என்னை மாசுபடுத்துவது என்னை வருத்தம் அடையச் செய்கிறது.
வேறு பெயர்கள்:
நிலமாகிய எனக்கு
அசும்பு, காசினி, வட்டகை, கழனி, களர் கொல்லை, சுரம், தகர் ,நத்தம் என்று பலவகைப் பெயர்கள் உண்டு. எனது மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப
நான் பெயரிட்டு அழைக்கப்படுகின்றேன்.
ஐவகை நிலங்கள்:
நில மகளாகிய எனக்கு
பழந்தமிழர் குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல், பாலை
என்று பெயரிட்டு, எனது தன்மைக்கு ஏற்ப என்னை ஐவகை நிலங்களாக
வகைப்படுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு நான் இரண்டற கலந்து இருப்பது
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இலக்கியங்களில் நான்:
v
"
நீலத் திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும்
குமரி எல்லை"
என்று மகாகவி கவிதையால் கொஞ்சியது என்னைத்தான்.
v " சிறு
பல் தொல்குடி பெறுநீர் சேர்ப்பன்" என்று அகநானூறு எனது வேறு
வடிவமாகிய கடல் பகுதியை குறித்தது. இவை போன்று இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் என்னைப்பற்றி இருப்பது
எனக்கு பெருமிதம் அளிக்கிறது.
எனது வருத்தம்:
v
நான்
மனிதர்களாகிய உங்களுக்கு மரம்,
செடி ,கொடி வளரவும் பயிர்கள் விளையவும்
வேளாண்மைக்கு உற்ற நண்பனாகவும் விளங்குகின்றேன்.
v
வற்றாத
ஆறுகளையும் குளங்களையும் ஏரிகளையும் தந்து மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு
செய்கிறேன்.
v
மேலும்
எண்ணிலடங்கா வளங்களை என்னுள் கொண்டிருக்கிறேன். அதை மனிதர்களாகிய நீங்களும்
மிகுதியாகப் பயன்படுத்துகிறீர்கள்.
v
ஆனால்
மனிதர்களாகிய நீங்களோ ரசாயன உரங்களை பயன்படுத்துதல், நெகிழிப்பைகளை மிகுதியாகப்
பயன்படுத்துதல், மேலும் ஆலைக் கழிவுகளை என்னுள் பாய்ச்சுதல்
என்று பல வகைகளில் என்னை மாசுபடுத்துவது என்னை ஆழ்ந்த துன்பத்திற்கு
உள்ளாக்குகிறது.
எனது வேண்டுகோள்:
v மனிதர்களின்
சுயநலத்திற்காக என்னை மாசுபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.
v நெகிழி பயன்பாட்டை
முற்றிலும் குறைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த துவங்குங்கள்
v மரங்களை வெட்டாமல் இன்னும்
அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முற்படுங்கள்.
v என்னிலிருந்து அதிக
கனிம வளங்களைத் தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள்.
முடிவுரை:
மனிதர்களே என்னுள்
இருக்கும் வளங்களை எடுத்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக எண்ணிக் கொண்டால், எதிர்காலச்
சந்ததியினருக்கு என்னால் கிடைக்கும் எந்த நன்மையையும் என்னால் தர இயலாமல்
போய்விடும். எனவே என்னை மாசுபடுத்தாமல் என்னை முறையாகப்
பயன்படுத்துங்கள் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழி செய்யுங்கள்!!
2. 17 ஆம்
நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டு என்றும் உலக வெந்தயக திகழும்
தாஜ்மஹால் இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறி காட்சி
அளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் பற்றி கலந்துரையாடுக
தலைப்பு:
தாஜ்மகாலின் நிறமாற்றம் –
காரணங்களும் தீர்வுகளும்
முன்னுரை:
தாஜ்மகால், வெள்ளைப்
பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற நினைவுச்சின்னமாகும். “உலக அதிசயங்களில் ஒன்று” எனப் போற்றப்படும்
இக்கட்டிடம், காலப்போக்கில் மஞ்சள்-பழுப்பு நிறம் பெற்று
காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும். இதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும்
ஆராய்வது அவசியமாகிறது.
நிறமாற்றத்திற்கான
காரணங்கள்:
1. காற்று
மாசு
தாஜ்மகாலைச்
சுற்றியுள்ள ஆக்ரா நகரில் தொழிற்சாலைகள்,
வாகனங்கள், மின் நிலையங்கள் போன்றவற்றில்
இருந்து வெளியேறும் புகை மற்றும் நச்சு வாயுக்கள் பளிங்குக் கற்களின் மேற்பரப்பில்
படிந்து நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
2. தூசி
மற்றும் துகள்மாசு
வாகனப்
போக்குவரத்து,
கட்டுமானப் பணிகள், உலர் மண் துகள்கள் ஆகியவை
காற்றில் கலந்து தாஜ்மகாலின் மேல் படிந்து வெண்மையை மங்கச் செய்கின்றன.
3. யமுனை
நதியின் மாசு
தாஜ்மகாலுக்கு
அருகே ஓடும் யமுனை நதி மாசடைந்ததால் கொசு,
பூச்சி இனங்கள் அதிகரித்துள்ளன. அவை சுவர்களில் கழிவுகளை விட்டுச்
செல்லும் காரணமாக கற்களில் பழுப்பு-பச்சை தழும்புகள் உருவாகின்றன.
4. காலநிலை
மாற்றம்
வெப்பம், ஈரப்பதம்,
மழை போன்ற இயற்கை காரணிகளும் பளிங்கின் இயல்பை மாற்றுகின்றன.
தீர்வுகள்:
1. மாசு
கட்டுப்பாட்டு மண்டலம் (TTZ)
தாஜ்மகாலைச் சுற்றி
“Taj
Trapezium Zone” என்ற மாசுக் கட்டுப்பாட்டு பகுதி
உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாசு உமிழும் தொழிற்சாலைகள் கட்டுப்படுத்தப்பட
வேண்டும்.
2. வாகனக்
கட்டுப்பாடு
தாஜ்மகாலுக்கு
அருகில் டீசல்/பெட்ரோல் வாகனங்களைத் தடை செய்து மின்சார வாகனங்கள் மட்டுமே
அனுமதிக்க வேண்டும்.
3. யமுனை நதி
சுத்திகரிப்பு
நதிநீரை
சுத்தப்படுத்தி,
கழிவுநீர் கலப்பைத் தடுக்க வேண்டும். இதனால் பூச்சி தொல்லையும்
4. சுற்றுலா
மேலாண்மை
பயணிகள்
எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல்,
தொடுதல் தடை, பாதுகாப்பு விதிமுறைகள்
கடைப்பிடித்தல் அவசியம்.
முடிவுரை
தாஜ்மகால் ஒரு
கட்டிடம் மட்டுமல்ல;
அது இந்தியாவின் வரலாறு, கட்டிடக்கலை நயம்
ஆகியவற்றின் சின்னமாகும். அதன் வெண்மையான அழகு மங்குவது மனித அக்கறையின்மையின்
விளைவாகும். மாசைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலைக்
காக்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால்தான் தாஜ்மகாலின் இயல்பான ஒளிவீச்சை
வருங்கால தலைமுறைகளுக்காக பாதுகாக்க முடியும்.
(பக்க எண் : 36)
2.
வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.
·
பழகப்
பழகப் பாலும் புளிக்கும்
- அடுக்குத்தொடர்
·
வடித்த
கஞ்சியில் சேலையை அலசினேன்
- பெயரெச்சத் தொடர்
·
மேடையில்
நன்றாகப் பேசினான்
- வினையெச்சத் தொடர்
·
வந்தார்
அண்ணன் - வினைமுற்றுத் தொடர்
·
அரிய
கவிதைகளின் தொகுப்பு இது
- ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
2.
கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து
இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப்
பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட
குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
விடை:
1. இறங்கினார் முகமது - வினைமுற்றுத்
தொடர்
2. அவர் பாடகர் - எழுவாய்த்
தொடர்
3. பாடுவது கேட்பது - கூட்டு வினையெச்சத் தொடர்
4. கேட்ட பாடல்கள் - பெயரெச்சத்
தொடர்
5. கேட்காத பாடல்கள் - எதிர்மறைப்
பெயரெச்சத் தொடர்
6. அடுக்கு அடுக்காக - அடுக்குத்
தொடர்
இயல்-3
1. வீட்டில் திண்ணை
அமைத்த காரணம், விருந்தினரைப் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் இவை
போன்ற செயல்கள் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கலந்துரையாடுக. (பக்க எண்:
49)
விருந்தோம்பலும்
தமிழர் பண்பாடும்
முன்னுரை:
தமிழர் பண்பாடு
உலகப் புகழ் பெற்றது. அன்பும்,
ஈகையும், விருந்தோம்பலும் அதன் அடிப்படைச்
சிறப்புகளாகும். பழங்காலத் தமிழர் வீடுகளில் “திண்ணை”
அமைப்பது ஒரு கட்டிட வடிவமைப்பு மட்டுமல்ல; அது
உயர்ந்த மனிதநேயத்தின் வெளிப்பாடாகும்.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம்
வீட்டின் முன்பகுதியில்
அமைக்கப்பட்ட திண்ணை,
பயணிகள் ஓய்வெடுக்கவும், விருந்தினர்கள்
அமரவும் உருவாக்கப்பட்டது. அந்நாளில் விடுதிகள் இல்லாத காலத்தில், திண்ணை வழிப்போக்கருக்கு பாதுகாப்பான ஓய்வு இடமாக
இருந்தது. இதன் மூலம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழர் சிந்தனை நடைமுறையில் பின்பற்றப்பட்டது.
விருந்தினரைப் பேணுதல்
விருந்தினரை பேணுதல் தமிழர் மரபில் மிக உயர்ந்த கடமையாகக் கருதப்பட்டது. “விருந்தோம்பல்” சங்க இலக்கியங்களில் போற்றிப்
பேசப்படுகிறது. வீட்டிற்கு வருபவர் யார் என்ற கேள்வியின்றி, அவரை
மரியாதையுடன் வரவேற்று, உணவளித்து அனுப்புவது ஒவ்வொரு
குடும்பத்தினரின் பொறுப்பாக இருந்தது.
தமிழர் பண்பாட்டில் ஈகை
ஈகை உணர்வும்
தமிழர் வாழ்வியலில் முக்கியமானது. தமக்குள்ளதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வது
அறமாகக் கருதப்பட்டது. குறிப்பாக பசித்தவருக்கு உணவிடல் மிகப் பெரிய தர்மமாகப்
போற்றப்பட்டது. “அன்னம் பரிசு” என்ற எண்ணம் பரவலாக இருந்தது. பசி
தீர்ப்பது உயிர் காப்பதற்கு ஒப்பாக மதிக்கப்பட்டது.
முடிவுரை:
முடிவாக, திண்ணை,
விருந்தோம்பல், ஈகை, பசித்தோர்க்கு
உணவளித்தல் போன்றவை தமிழர் பண்பாட்டின் உயிர்மூச்சாக விளங்குகின்றன. இத்தகைய
உயர்ந்த பண்புகளை நாம் காக்கவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்
செல்லவும் வேண்டும்.
2. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த
உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை
எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக்
காட்டுக. (பக்க எண்: 51)
வரவேற்பு:
விருந்தோம்பல்
என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக
என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள் அமர்வதற்கு
இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க
நீர் தந்தோம்.
கலந்துரையாடல்:
நாங்கள் அனைவரும்
காலை உணவு உண்டபின்,
வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம்
விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே
உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு
தயாரானது.
விருந்து உபசரிப்பு :
தமிழர் பண்பாட்டில்
வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான
உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து
அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.
நகர்வலம்:
விருந்தினருக்கு
சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை
வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை
பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்
இரவு விருந்து :
நகர்வலம் முடிந்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு
சுவைத்துச் சாப்பிட்டனர்.
பிரியா விடை :
இரவு விருந்து
முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய
மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.
3. பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும்
விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு எழுதுக (பக்க
எண்: 58)
முன்னுரை
தமிழர்
மரபில் “அன்னதானம் பெரியதானம்” என்று
கூறுவர். உணவு என்பது உயிரின் ஆதாரம். பசி தீர்த்தல் மனித நேயத்தின் அடையாளமாகவும்,
விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்கிறது.
பசித்தவருக்கு
உணவிடுதல் –
அறச் செயல்
v பசியால்
வாடும் ஒருவருக்கு உணவளிப்பது உயர்ந்த கருணை உணர்வின் வெளிப்பாடாகும்.
v இது
தன்னலமற்ற உதவியாகும்;
பலன் எதிர்பாராத செயல்.
v வறியோர், ஆதரவற்றோர், பாதசாரிகள் போன்றோரின் உயிரைக் காக்கும்
செயல்.
v சமத்துவ
உணர்வை வளர்க்கிறது;
மனிதன் மனிதனை நேசிக்கச் செய்கிறது.
v சமூக
நலனையும்,
ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது.
விருந்தினருக்கு
உணவிடுதல் –
பண்பாட்டுச் செயல்
v “விருந்தோம்பல்” தமிழர் இல்லறச் சிறப்பாகக்
கருதப்படுகிறது.
v வீடு
தேடி வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று உணவளிப்பது மரபு.
v இது
குடும்பத்தின் ஒழுக்கம்,
பண்பு, செழுமை ஆகியவற்றைக் காட்டுகிறது.
v விருந்தினரை
இறைவனாகக் கருதி போற்றும் எண்ணம் இதில் அடங்கியுள்ளது.
v உறவு
வளர்ச்சிக்கும்,
சமூக தொடர்புக்கும் வழிவகுக்கிறது.
v இல்லற
வாழ்க்கையின் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வேறுபாடுகள்
|
|
பசித்தவருக்கு உணவிடுதல் |
விருந்தினருக்கு உணவிடுதல் |
|
நோக்கம் |
பசி தீர்த்து உயிர் காப்பது |
மரபும் மரியாதையும் காத்தல் |
|
உணர்வு |
கருணை, தானம் |
அன்பு, பண்பு |
|
பெறுபவர் |
ஏழை, ஆதரவற்றோர் |
அழைக்கப்பட்ட / வந்த விருந்தினர் |
|
சமூகப் பங்கு |
மனிதநேயம் உயர்த்தும் |
பண்பாட்டை உயர்த்தும் |
முடிவுரை
பசித்தவருக்கு
உணவிடுதல் மனிதநேயத்தின் உச்சம்; விருந்தினருக்கு உணவிடுதல்
தமிழர் பண்பாட்டின் உச்சம். ஒன்று உயிரைக் காக்கும் தர்மச் செயல்; மற்றொன்று மரபைக் காக்கும் இல்லறச் செயல். இவ்விரண்டும் இணைந்து மனித
சமுதாயத்தை உயர்த்துகின்றன. ஆகையால், பசியை நீக்குவதையும்
விருந்தோம்பலை பேணுவதையும் நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக. (பக்க எண்: 60)
1. அன்புச்செல்வன்,
திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.
அன்புச்செல்வன் -
இருபெயரொட்டுப் பண்புத்தொகை; தொடுதிரை - வினைத்தொகை
2. அனைவருக்கும்
மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
மோர்ப்பானை -இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்க தொகை;
மோர் கொடுக்கவும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை.
3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
வெண்டைக்காய், மோர்க்குழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்.
4. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடு கின்றன.
தங்கமீன்கள் -உவமைத்தொகை.
தண்ணீர்த்தொட்டி - இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.
இயல்-4
1. கல்விக்கண்
திறந்தவர்களுக்கு இடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த முதல் பெண் மருத்துவர்
முத்துலட்சுமி பற்றி கட்டுரை வரைக. (பக்க எண்:
83)
மருத்துவர் முத்துலட்சுமி
முன்னுரை:
இந்திய மகளிர்
விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் டாக்டர் முத்துலட்சுமி..
மருத்துவப் பயிலும் முதல் இந்தியப் பெண் எனும் பெருமையை பெற்றார். சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
பிறப்பு மற்றும் கல்வி
முத்துலட்சுமி
ரெட்டி 1886 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். அப்போது பெண்கள் கல்வி பெறுவதும்
மருத்துவம் போன்ற கஷ்டமான துறையில் நுழைவதும் கடினமாக இருந்தாலும், தனது ஊக்கத்தால் மருத்துவக் கல்வியை முடித்தார்.
சமூக பணிகள்
முத்துலட்சுமி
ரெட்டி, கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், தொழிலிழந்த பெண்கள் போன்றோருக்காக பல திட்டங்களை உருவாக்கினார். அவைகள்
என்ற அமைப்பை நிறுவி, பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை
அளிக்க முயன்றார். சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், குழந்தைகள் திருமணத்துக்கு எதிரான சட்டங்களை முன்வைத்து, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் உருவாக்கப் பெரிதும் துணை புரிந்தார்.
முக்கிய சாதனைகள்:
·
இந்தியாவின்
முதல் பெண் மருத்துவ அதிகாரி.
·
தமிழகத்தின்
முதல் மகளிர் சட்டமன்ற உறுப்பினர்.
·
சென்னை
அரசுச் சுகாதாரத் துறையில் பணியாற்றிய முதல் பெண்.
·
பெண்கள்
கல்விக்காகவும்,
மருத்துவ வசதிக்காகவும் போராடிய சமூக சீர்திருத்தவாதி.
மறைவும் நினைவுகளும்
1968-ஆம்
ஆண்டு முத்துலட்சுமி இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் செய்த
சாதனைகள் இன்று வரை தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. அவரின் தொண்டுகள்
இன்று பெண்கள் முன்னேற்றத்தின் அடித்தளமாக விளங்குகின்றன.
முடிவுரை
இந்தியாவின் சமூக
மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் முத்துலட்சுமி, கல்விக்கண்
திறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா தரப்பிலும் உள்ள
பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக என்றும் நினைவில் இருக்கிறார்.
(பக்க எண்: 86)
1. கீழ்க்காணும்
தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ) அமைச்சர், நாளை
விழாவிற்கு வருகிறார் - கால வழுவமைதி
ஆ) “இந்தக்
கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால், அதை அனைவரும் ஏற்பர்"
என்று கூறினான்.
- இட வழுவமைதி
இ) சிறிய வயதில் இந்த
மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்
- கால வழுவமைதி
ஈ) செல்வன் இளவேலன், இந்தச்
சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனைபுரிந்திருக்கிறார்.
- பால் வழுவமைதி
2. அடைப்புக்
குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை, 'மகனே!
நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?" என்று
சொன்னார். (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
விடை : தாய், "மகளே!
நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
ஆ) அக்கா நேற்று
வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது, அம்மா வழியனுப்பியது.
(வழுவை
வழாநிலையாக மாற்றுக)
விடை : அக்காள் நேற்று
வீட்டுக்கு வந்தார். அக்காள் புறப்படும்போது,
அம்மா வழியனுப்பினார்.
இ) 'இதோ
முடித்துவிடுவேன்" என்று, செயலை முடிக்கும்முன்பே
கூறினார்.
(வழாநிலையை
வழுவமைதியாக மாற்றுக)
விடை : "இதோ, முடித்துவிட்டேன்" என்று, செயலை முடிக்கும்முன்பே கூறினார்.
ஈ) அவன் உன்னிடமும்
என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.
(படர்க்கையை
முன்னிலையாக,
முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக
மாற்றுக)
விடை : நீ என்னிடமும்
அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.
இயல்-5
1.
பன்முக கலைஞரின் கலைப்
பண்புகளில் உங்களுக்குப் பிடித்த கலைப்பண்பு குறித்து வகுப்பறையில்
கலந்துரையாடுக
கட்டுமான ஆர்வலர்
கலைஞர்
v பன்முக கலைஞரின் கலைப் பண்புகளில் எனக்குக்குப்
பிடித்த கலைப்பண்பு அவரது கட்டுமான ஆர்வம் ஆகும்.
v ஐயன்
திருவள்ளுவர்மீது அவருக்கிருந்த தீராத பற்றின் காரணமாக, தமிழ்நாட்டின்
தலைநகராம் சென்னையில் வள்ளுவர் கோட்டமும் தெற்கெல்லையான குமரியில் வள்ளுவர்
சிலையும் அமைத்தார்.
v வள்ளுவர்
கோட்டத்தில் திருவாரூர்க் கோவில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத்தேர்
பலரையும் கவர்வதாகும். இத்தேரினுள் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
v அதன் கருவறை
வாயிலில் தூண்கள் அழகுறஅமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அரங்கம், குறள்
மணிமாடம் எனப் பெயரிடப்பட்டு, அதில் 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.
v அத்துடன் நில்லாது, அழிந்துபோன
பூம்புகாரை அதே பொலிவுடன் காண, கண்ணகி வாழ்ந்த ஊரில்
உருவாக்கப்பட்டதே 'பூம்புகார்க் கலைக்கூடம்'. இங்கே சிலப்பதிகாரக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
v நூல்கள் படிப்பதில்
தீராத ஆர்வம் கொண்ட அண்ணாவின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2010ஆம் ஆண்டு
செப்டம்பர் 15ஆம் நாளில் அன்றைய முதல்வர் கலைஞரால்
திறந்துவைக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம்.
2. உங்கள் தெருக்களில் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞர்களைப் பற்றிய
கருத்துகளை பகிர்க
முன்னுரை:
எங்கள்
தெருக்களில் திருவிழா நாட்களில் பகல் வேடக் கலைஞர்களைக் காண்பது மகிழ்ச்சியூட்டும்
அனுபவமாக இருக்கும். அவர்கள் அணியும் வண்ணமயமான உடைகள், முகமூடிகள், முகஅலங்காரங்கள் ஆகியவை சிறுவர் முதல்
பெரியோர் வரை அனைவரையும் ஈர்க்கும். சிலர் புராண கதாபாத்திரங்களாகவும், சிலர் நாட்டுப்புற வீரர்களாகவும், சிலர் நகைச்சுவை
வேடங்களில் மக்களைச் சிரிக்கச் செய்வதிலும் ஈடுபடுவர்.
கலாச்சாரத்தூதுவர்கள்:
பகல்
வேடக் கலைஞர்கள் வெறும் பொழுதுபோக்கு அளிப்பவர்கள் மட்டுமல்ல; அவர்கள் நம் பாரம்பரிய கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும்
தூதுவர்களாகவும் திகழ்கிறார்கள். அவர்களின் நடிப்பு, பாடல்,
நடனம் ஆகியவற்றின் மூலம் நல்லொழுக்கக் கருத்துகள், சமூக விழிப்புணர்வு செய்திகள் போன்றவையும் பரப்பப்படுகின்றன. கிராமிய
கலைகளை உயிர்ப்பித்து வைத்திருப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானது.
வாய்ப்பு
அளிப்பது அவசியம்
ஆனால், இக்கலைஞர்கள் பலர் பொருளாதார சிரமங்களுடன் வாழ்கிறார்கள் என்பது
வருத்தத்திற்குரியது. அவர்களின் கலைக்கு உரிய மரியாதையும் ஆதரவையும் நாம் அளிக்க
வேண்டும். திருவிழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகள், பொதுக் கலாச்சார விழாக்கள் போன்றவற்றில் இவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது
அவசியம்.
முடிவுரை:
முடிவாக, பகல் வேடக் கலைஞர்கள் நம் நாட்டுப்புறக் கலையின் அழகை வெளிப்படுத்தும்
அரிய கலைஞர்கள். அவர்களைப் பாராட்டி, ஊக்குவித்து, அவர்களின் கலை மரபை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
3.
பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழரின்
வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு கட்டுரை வடிவில்
எழுதுக (பக்க எண்: 108)
முன்னுரை :
பழந்தமிழர் குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என ஐந்திணைகளாகப் பகுத்து, நிலத்திற்கேற்ப
வாழ்வியலை அமைத்தனர். இன்றைய தமிழர் வாழ்க்கை முறை தொழில்நுட்ப முன்னேற்றம்,
நகர்ப்புற வளர்ச்சி, உலகமயமாக்கல் ஆகியவற்றால்
பல மாற்றங்களை கண்டுள்ளது. இவ்விரு காலங்களின் வாழ்க்கை முறைகளை ஒப்பிட்டு
ஆராய்வோம்.
1. இயற்கைச் சூழலோடு உறவு :
பண்டைத் தமிழர் இயற்கையைத்
தெய்வமாகக் கருதி வாழ்ந்தனர். மலை, காடு, வயல், கடல் போன்ற சூழல்களோடு நேரடி தொடர்பு
கொண்டிருந்தனர்.
இன்றைய தமிழர் வாழ்க்கையில்
இயற்கைத் தொடர்பு குறைந்து,
நகர வாழ்க்கை, கட்டிடங்கள், தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன.
2. தொழில் மற்றும் வாழ்வாதாரம் :
v
திணை அடிப்படையில் தொழில்கள் அமைந்தன.
v
இன்றோ, அரசு, தனியார் வேலைகள், தகவல்
தொழில்நுட்பம், வணிகம், வெளிநாட்டு
வேலை வாய்ப்புகள் என பல்வேறு துறைகள் உருவாகியுள்ளன.
3. உணவுமுறை :
v
பண்டையோர் இயற்கை உணவுகளை உட்கொண்டனர்
–
கேழ்வரகு,Thinai, varagu, காய், பழம், பால், மீன் போன்றவை.
v
இன்றையோர் வேக உணவு, பதப்படுத்திய உணவு, வெளிநாட்டு உணவு பழக்கங்கள்
ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால் உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன.
4. குடியிருப்பு முறை :
v
பண்டையோர் தங்கள் நிலத்திற்கேற்ப குடில்கள், மண் வீடுகள், புல் கூரைகள் அமைத்தனர்.
v
இன்றோ கான்கிரீட் கட்டிடங்கள், அடுக்குமாடி வீடுகள், நகர குடியிருப்புகள்
அதிகமாகியுள்ளன.
5. சமூக அமைப்பு :
v
பண்டைத் தமிழர் சமூகத்தில் ஒற்றுமை, வீரியம், விருந்தோம்பல், அன்பு
ஆகியவை முக்கியப் பண்புகளாக இருந்தன.
v
இன்றைய சமுதாயத்தில் தனிமனித
வாழ்க்கை,
போட்டி மனப்பான்மை, வேகமான வாழ்க்கை முறை
அதிகரித்துள்ளது.
முடிவுரை :
பண்டைத் தமிழரின் திணைநிலை
வாழ்க்கை இயற்கை ஒற்றுமை,
ஒழுக்கம், எளிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
இன்றைய தமிழர் வாழ்க்கை முன்னேற்றமும் வசதியும் பெற்றதாய் இருந்தாலும், இயற்கைத் தொடர்பும் பாரம்பரியப் பண்புகளும் குறைந்து வருகின்றன. ஆகையால்,
நவீன முன்னேற்றத்துடன் பண்டையோரின் இயற்கை மரபையும் பண்பாட்டையும்
பேணிக் காப்பதே சிறந்த வாழ்க்கை முறையாகும்.
இயல்-6
1. உங்களைக் கவர்ந்த
எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே
சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக. ( பக்க எண்:
125)
அப்துல் கலாம்
முன்னுரை:
நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமேசுவரத்தில் ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு
மகனாகப் பிறந்தேன்.என் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து
கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இளமைக்காலம்:
என்னுடைய பள்ளிப் படிப்பை இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ்
வழிக் கல்வி மூலம் தொடங்கினேன்.அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே
ஆர்வம் கொண்டிருந்தேன். பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி
செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப்
பருவத்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை
ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான்
விமானத்தைவடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்தது.
கல்லூரிப்படிப்பு:
1954 ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.1955 ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை
முடித்தேன்.
விமான வடிவமைப்பு:
எம்.ஐ.டியில் படித்து முடித்த பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின்
உதவியுடன் உள்நாட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை
வடிவமைத்து அதை இயக்கியும் காட்டினேன்.
பணி:
1983 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்
தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன்.
சாதனைகள்:
ü
இந்தியாவில் முதல்முறையாக 1974ஆம் ஆண்டு
"சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை
நிகழ்ந்தது.அத்திட்டத்தில் பங்கேற்ற 60 விண்வெளி
பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது.
ü
1980ஆம்
ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்எல்வி-3 என்ற
ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன்.
ü
2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன்.
முடிவுரை:
நான் அறிவியல்மீது பற்று கொண்டிருந்த அளவுக்கு, தாய்மொழி மீதும் பற்று
கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தநூல் திருக்குறள் ஆகும்.மாணவர்களே நாட்டின்
எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு.இளைஞர்களுக்கு நான் கூற
விரும்புவது, "கனவு காண்பதை சிந்தனை வடிவம் ஆக்குங்கள்,பின் செயலாற்ற முனையுங்கள்".
2.
சிலப்பதிகாரம் காட்டும் மருவூர் பக்கம் பற்றிய விவரிப்பை இன்றைய
கடைத்தெருடன் ஒப்பிட்டு பேசுக
|
|
மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் |
இக்கால வணிக வளாகங்கள் |
|
1 |
நறுமணப்
பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம்
செய்யப்பட்டன. |
நறுமணப்
பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன. |
|
2 |
பட்டு, பருத்தி நூல்
ஆகியவற்றைக் கொண்டு துணிகள் தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான காருகர் நிறைந்திருந்தனர். |
இன்றைக்கு
கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர். |
|
3 |
முத்துமணியும்
பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன. |
குளிரூட்டப்பட்ட
அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. |
|
4 |
எட்டு
வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன. |
எல்லாவித
பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன. |
|
5 |
மருவூர்
பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.
|
இன்றைய
வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும்
உள்ளனர்.
|
3.
உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்-
சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான
செய்திகளை தொகுத்து எழுதுக.
குறிப்பு : பூவிற்பவர் , சாலையோர உணவகம் நடத்துபவர் (
பக்க எண்: 134)
சாதனைப்பெண்கள்
முன்னுரை:
எங்கள் ஊரில் பல்வேறு
வகையான தொழில்களில் கடின உழைப்புடன் ஈடுபட்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்கிற
பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும்
முன்னேற்றுகிறார்கள். இங்கு அவர்களில் சிலரைப் பற்றி பார்க்கலாம்.
பூ விற்கும் சின்னம்மாள்:
சின்னம்மாள் அம்மா, இருபது வருடங்களாக
விடியலிலிருந்து வீதிகளில் பூவிற்று வருகின்றார். சாயங்காலம் வரை பூக்கூடை தலையில்
வைத்துக்கொண்டு வீதியெல்லாம் நடந்து, வீடு வீடாகச்
சென்று பூவிற்று வருகிறார். இவரது கடின உழைப்பு, நேர்த்தியான
பணியாற்றும் தன்மை, நம்மை விழிக்க வைக்கும் ஒரு சிறப்பு
உதாரணமாகத் திகழ்கிறது. இரண்டு மகள்களை கல்வியாளர்களாக
மாற்றியிருக்கிறார் என்ற பெருமை அவருக்கிருக்கிறது.
சாலையோர உணவகம் நடத்தும்
காளியம்மாள்:
காளியம்மாள் தனது கணவரை
இழந்த பின்னும் தளராமல், தனது
மூன்று பிள்ளைகளை வளர்க்கச் சாலையோரத்தில் சிறிய உணவகம் நடத்தத் தொடங்கினார்.
இப்போது அவர் உணவகம் பகல் முழுவதும் வியாபாரம் செய்யும் அளவுக்கு பரவலாகப் பெயர்
பெற்றுள்ளது. சைவ உணவுகளின் சுவையும் சுத்தமும் மக்களிடையே நல்ல மதிப்பை
பெற்றுள்ளது. அவரின் உழைப்பும் மன உறுதியும், தன்னம்பிக்கையும், ஊக்கமளிக்கக் கூடியவை.
முடிவுரை:
சின்னம்மாள் மற்றும் காளியம்மாள் போன்ற பெண்கள் தான் சமூகத்தின்
அடித்தளத்தை நிலை நிறுத்தும் தூண்கள். இவர்கள் போன்றவர்களை நாம் மட்டும் அல்ல, ஒவ்வொருவரும் போற்ற
வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்ற
பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
இயல்-7
1. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - கொன்றைவேந்தன் கிழமை பட வாழ்- ஔயார்
ஆத்திச்சூடி மேற்கண்ட பாடல் அடிகளின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதுக
முன்னுரை:
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” மற்றும் “கொன்றைவேந்தன் கிழிமைபட வாழ்” என்ற ஔவையார்
ஆத்திச்சூடி அடிகள் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறிகளை எடுத்துரைக்கும்
உயர்ந்த கருத்துகளை கொண்டவை. இவ்விரண்டின் கருத்துகளை ஒப்பிட்டு விளக்கலாம்.
1. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ü
மற்றவர்களின்
குற்றங்களையே தொடர்ந்து நோக்கிக் கொண்டிருந்தால், அவர்களுடன் நட்பு மற்றும் உறவு
நிலைக்காது.
ü
மனிதன்
பொறுமையுடனும் பொறுத்துணர்வுடனும் நடக்க வேண்டும்.
ü
பிறர்
குறைகளை விட நல்லவற்றைப் பார்ப்பதே நல்லிணக்கத்தை வளர்க்கும்.
ü
குற்றம்
தேடும் மனப்பான்மை தனிமையை உண்டாக்கும்.
2. கிழமைபட வாழ்
ü
“கொன்றைவேந்தன்” என்பது கொன்றைமாலை சூடிய
சிவபெருமானைக் குறிக்கும்.
ü
அவரைப்
போற்றும் வகையில் உயர்ந்த பண்புகளுடன் வாழ வேண்டும் என்பதே இவ்வடியின் பொருள்.
ü
பணிவு, ஒழுக்கம்,
பக்தி, நேர்மை ஆகிய நற்குணங்களுடன் வாழ
வேண்டும்.
ü
உயர்ந்தோர்
பாராட்டும் வாழ்க்கை நெறியை கடைப்பிடிக்க வேண்டும்.
ü
மனித
வாழ்க்கை தெய்வீகத்தன்மை பெறும் வகையில் இருக்க வேண்டும்.
முடிவுரை:
முதல் அடியில் பிறருடன் ஒற்றுமையாக வாழ வேண்டிய
சமூக நெறி வலியுறுத்தப்படுகிறது;
இரண்டாவது அடியில் தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த பண்புகள்
எடுத்துரைக்கப் படுகின்றன. இரண்டும் இணைந்து மனிதனை நல்லொழுக்கமும் நல்லிணக்கமும்
உடைய சிறந்த சமூக மனிதனாக உருவாக்குகின்றன.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி