இரண்டாம் திருப்புதல் தேர்வு-2025
மதுரை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஆ. மணிப்பெயர்
வகை |
1 |
|
2. |
இ. உழவு,
ஏர், மண், மாடு |
1 |
|
3. |
ஈ. செய்தி 1,3
ஆகியன சரி |
1 |
|
4. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|
5. |
ஆ. கலைஞர் |
1 |
|
6. |
ஈ. எடுத்துக்காட்டு உவமை அணி |
1 |
|
7. |
இ. காட்டைச்சேர் |
1 |
|
8. |
அ. அகவற்பா |
1 |
|
9. |
அ. ஒரு சிறு
இசை |
1 |
|
10. |
ஆ. எழுவாய்த்தொடர் |
1 |
|
11. |
ஆ. கம்பராமாயணம் |
1 |
|
12. |
இ. கண்ணதாசன் |
1 |
|
13. |
ஆ. காலக்கணிதம் |
1 |
|
14. |
அ. வண்டு |
1 |
|
15. |
அ. தருவேன்
- தட்டுவேன் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
உரிய வினாத்தொடர்களைச் சரியாக
நெழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
17 |
ü பூஞ்சோலைகள் ü செண்பகக் காடுகள் ü மலர்ப்பொய்கைகள் ü தடாகங்கள் ü கமுகத் தோட்டங்கள் ü நெல்வயல்கள் |
2 |
|
18 |
முயற்சி , முயற்சி
இன்மை |
2 |
|
19 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
|
20 |
வாருங்கள், நலமா? ,நீர் அருந்துங்கள். |
2 |
|
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
பிரிவு-2 5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
வெட்சி-கரந்தை
, வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை |
2 |
|
23 |
அ. எட்டு –
அ ஆ. நான்கு , இரண்டு – ச , உ |
2 |
|
24 |
அன்புக்குழந்தைகள்
தனித்தனியே எழுதித் தரவேண்டும் |
2 |
|
25 |
கிளர்ந்த
- கிளர் + த் (ந்) + த் + அ கிளர்
- பகுதி த்- சந்தி த்
’ந்’ ஆனது விகாரம் த் - இறந்தகால
இடைநிலை அ- பெயரெச்ச விகுதி |
2 |
|
26 |
|
2 |
|
27 |
அ. பண்பாடு ஆ. கிளர்ச்சி |
2 |
|
28
|
அ. செயற்கையை
விட இயற்கை சிறந்தது ஆ. விதியால் வீதிக்கு
வந்தான் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
ü தமிழர் வறுமையிலும்
ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர். ü விதை நெல்லைக் குற்றியெடுத்து
விருந்தளித்தனர். ü வாளைப் பணையம் வைத்து
விருந்தளித்தனர். ü கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர். |
3 |
|
30 |
அ. குறிஞ்சி ஆ. தலைமுறைக்கு ஒருமுறை மலர்வது இ. சண்பகம், குறிஞ்சி,
மூங்கில் |
3 |
|
31 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,செங்கல்வராயன்
தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார். |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
3 |
|
|
33 |
v குளிர்ந்த சோலையில்
மயில்கள் ஆடுகின்றன.
v தாமரை மலர்கள் விளக்குகள்
போன்று தோன்றுகின்றன.
v குவளை மலர்கள் கண்விழித்துப்
பார்ப்பது போல் காணப்படுகின்றன.
v நீர்நிலைகளின் அலைகள்
திரைச்சீலைகள் போல் விரிகின்றன.
v மகர யாழின் தேனிசை
போல் வண்டுகள் பாடுகின்றன. |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
·
கட்டு
,சொட்டு – முதனிலை தொழிற்பெயர் ·
கேடு
– முதனிலை திரிந்த தொழிற்பெயர் ·
வழிபாடு,
பாடுதல் – விகுதிபெற்ற தொழிற்பெயர் |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம், உவம
உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். சான்று: வேலொடு
நின்றான் இடுவென்றது போலும் கோலொடு
நின்றாண் இரவு அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v உவம உருபு
– போலும்
இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
|
38
அ |
ü தொழில் செய்வதற்குத்
தேவையான கருவி,
அதற்கு
ஏற்ற காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய
ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். (அல்லது) ஆ) சேர
நாடு: சேற்று வயலில் ஆம்பல் மலர்கள் விரிந்தன.
அதனைப் பார்த்த நீர்ப்பறவை நீரில் தீப்பிடித்ததாக அஞ்சி, தனது குஞ்சுகளைச் சிறகுகளால் மறைத்தன. சோழ
நாடு: உழவர்கள் நிற்போர் மீது ஏறி நின்று
மற்றவர்களை ”நாவலோ” என்று அழைப்பர். இது
போரின் போது ஒரு வீரன் மற்ற வீரர்களை அழைப்பது போன்று உள்ளது. நெல் வளமும் யானைப்படையும் சோழ நாட்டில் உள்ளதை இது காட்டுகிறது. பாண்டியநாடு: சங்கின் முட்டைகள், புன்னை மொட்டுகள்
பாக்குமணிகள் ஆகியவை முத்துகள் போல இருந்தன. பாண்டியநாடு
இத்தகைய முத்து வளத்தை உடையது. |
5 |
|
39 அ. |
முறையீட்டுக் கடிதம் அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்
சார்பாக. வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள
அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட
புலவுச் சோறு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும்
இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள
அ. எழில்வேந்தன். இடம்: அரக்கோணம், நாள்: 08-01-2022. உறைமேல்
முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஆ) நூல்
தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே இந்நூலின்
தலைப்புமாகும். நூலின்
மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள்,
கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்"
கனவெல்லாம் கலாம்” வெளிப்படும்
கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு
நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை. நூல்
கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1.
காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள்,
3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித்
தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக்
கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும்.
தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன் |
5 |
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
41 |
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
42 |
பொன்னிற கதிரவன் தன்
ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர,
பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்.
காலை சில்லென உணர்வும்,
மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ. கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. ஆ) காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் முன்னுரை: நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக
இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில்
மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும்,
விலங்குகளும், மரங்களும்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை
தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். பசுமை
பரப்புகளை அதிகரித்தல்: மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை
இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால்,
அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான
வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே
இதற்கான சிறந்த வழியாகும். பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்துதல்: ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை
பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக
பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று
மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துதல் அவசியம். எரிபொருள்
சிக்கனமுடைய வாகனங்கள்: மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள்
சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால்
இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது தொழிற்சாலைகளில்
கட்டுப்பாடுகள்: ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட
வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ü மின் உலைகள், பசுமை
தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு
குறையும். குப்பைகளைச்
சரியாக நிர்வகித்தல்: குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை
முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது
செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை
என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும். முடிவுரை: காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின்
பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே,
சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று
செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்! |
8 |
|
44 அ |
பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார்
இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும்
திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆ) மகளிர்
நாள் விழா அறிக்கை இடம்: பள்ளி கலையரங்கம் v மகளிர் நாள் விழா 08-05-2024
அன்று எங்கள் பள்ளி கலையரங்கத்தில்盛ாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்கள் உற்சாகமாகk கலந்து கொண்டனர். v
விழா தலைமை ஆசிரியரின்
வரவேற்புரையுடன் தொடங்கப்பட்டது. அவர்,
மகளிரின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தி அனைவரையும் வரவேற்றார். v
அதனைத் தொடர்ந்து சிறப்பு
விருந்தினராக வந்த இதழாளர் கலையரசி அவர்கள் விழாவின் சிறப்புரையை
நிகழ்த்தினார். v
பின்னர், ஆசிரியர்கள் மகளிர் தினத்துக்கான
வாழ்த்துரைகள் கூறினர். விழாவின் நிறைவில் மாணவத் தலைவர் நன்றியுரை ஆற்றினார்.
விழா சிறப்பாக நடைபெற்றது. v இவ்வாறு மகளிர் தின விழா அருமையாகவும் சீரான முறையிலும்
நடத்தப்பட்டது. |
8 |
|
45 |
அ) தலைப்பு : சான்றோர்
வளர்த்த தமிழ் முன்னுரை: “தமிழே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல
செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு
வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு
பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த
விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம். பிள்ளைத்தமிழ்: கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப்
பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: நூறு பாடல்கள் கொண்ட
நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக
நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும். பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப்
பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து
பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர்
நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால்
முற்பட்டதாகும். அந்தாதி: அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு
பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி
எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால்
அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும். கோவை: பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது
கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை
நூலாகும். முடிவுரை: "வீறுடை செம்மொழி
தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும்.
மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால்
பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு
செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய
கடமையாகும் (அல்லது) ஆ) முன்னுரை: குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன?
என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும்
உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக
வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப்
பட்டிருந்தது. சிறு
அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட
கலைகள்: எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது. பேச்சரங்கம்: கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்,
வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து,
மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில்
மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி