9 TH STD TAMIL QUESTION BANK

 9.ஆம் வகுப்பு தமிழ் வினாவங்கி

9.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

இயல்-1

திறன் அறிவோம்

பலவுள் தெரிக

1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?

அ) தமிழ்  ஆ) தெலுங்கு   இ) மலையாளம்   ஈ) கன்னடம்

2. தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்  ஆ) புதுக்கவிதை  இ) சிற்றிலக்கியம்  ஈ) தனிப்பாடல்

3. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

அ) குக்கூஉ எனக் குயில் கூவியது  ஆ) கொக்கரக்கோ எனச் சேவல் கூவியது.

இ) அண்ணா.அ என அழைத்தான்   (ஈ) ஓடி வா ஓடி வா

4. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்

     காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!'இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் -

அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை  ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

இ) மோனை, எதுகை, இயைபு     ஈ) மோனை, முரண், அந்தாதி

5. சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு.

அ) வேற்றுமைத்தொகை  ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) பண்புத்தொகை  ஈ) வினைத்தொகை

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் அவை

    அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் - இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன  யாவை?

5. தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

6. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

சிறுவினா

1. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிடமொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

4. "புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்" - உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

நெடுவினா

1. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக

2. புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்புத் தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.


1. Linguistics - 2. Literature 3. Philologist -4. Polyglot  5. Phonologist 6. Phonetics


அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ---- (திகழ்)

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ---- (கலந்துகொள்)

3. உலகில் மூவாயிரம் மொழிகள் ---- (பேசு)

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலாச் ----- (செல்)

5. தவறுகளைத் ------. (திருத்து)

தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:

  1. இளமையில் கல்வி -----
  2. சித்திரமும் கைப்பழக்கம் ----

  3. கல்லாடம் படித்தவரோடு ------

  4. கற்றோர்க்குச் சென்ற ------

கடிதம் எழுதுக.
1.உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

2.உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள்  

(பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றிளை வடிவமைக்க, 

3.நயம் பாராட்டுக:

    விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

    விண்ணோங்கு பெருமலையில், பள்ளத்தாக்கில்

    பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

    புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில்

    தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

    தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,

    அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்

    அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

                                                                                         -  ம.இலெ. தங்கப்பா

மொழியோடு விளையாடு

அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

     அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக.

(எ.கா) அத்தி, திகைப்பு, புகழ்ச்சி, சிரிப்பு, புன்னகை, கைப்பேசி, சிறப்பு, புதுமை, மைனா

கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க:

காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

அகராதியில் காண்க

1.     நயவாமை

2.    கிளத்தல்

3.    கேழ்பு

4.    செம்மல்

5.    புரிசை

படிப்போம்: பயன்படுத்துவோம்

1.     COMPARATIVE GRAMMAR

2.    VOWELS

3.    LEXICON

4.    CONSONANTS 

இயல்-2

திறன் அறிவோம்

பலவுள் தெரிக

I."மாடு" - என்பதன் பொருள் என்ன?

அ) கீழே  ஆ) மேலே  இ) பக்கம்  ஈ) தொலைவு

2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி  ஆ) ஆறு   இ)இஞ்சி  ஈ)புலரி

3. சரியான தொடரைத் தெரிவு செய்க.

அ. நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்

ஆ. நீரின்று அமையாது யாக்கை ஒளவையார்

இ. மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

)    )   ) க உ  ஈ) க உ 

4. பகுதி ,விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?

அ) வென்றார்  ஆ) நடந்த  இ) வளர்க   ஈ) பொருந்திய

5.மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை   ஆ) பூவரசு மரம்   இ) வளம்   ஈ) பெரிய

குறுவினா

1."கூவல்" என்று அழைக்கப்படுவது எது?

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

3. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

5. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

    காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

சிறுவினா

1.அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவைஅதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

2. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

3. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

4. வானவில்லை ஒப்பிட்டுப் பெரியபுராணம் கூறும் செய்தியை விளக்கி எழுதுக.

நெடுவினா:

1. வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக

2.பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

3. .‘தண்ணீர்கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

மொழியை ஆள்வோம்

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக

1 .Every tower is a sout blossoming in nature-Gerant De Nerval

2. Sunset is still my favourite colour, and rainbow is second- Mattle Stepanek

3 An early moming walk is blessing for the whole day- Henry David Thoreau

4. Just living is not enough. One must have sunshine, freedom, and a little flower Hans Christian Anderson                                                                                                                                      

பிழை நீக்கி எழுதுக;

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

4. நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை

வைத்திருக்கிறோம்,

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க,

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல,

2. தண்ணீர் வெந்தீர் ஆனாலும் தெருப்பை அணைக்கும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

வடிவ மாற்றம் செய்க:

  நீர் சுழற்சி குறித்த விளக்கப்படத்தின் உட்பொருளைப்புரிந்துணர்ந்து பத்தியை மாற்றி அமைக்க.

வரவேற்பு மடல் எழுதுக:

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும்  மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

நயம் பாராட்டுக.

   கல்லும் மலையும் குதித்துவந்தேன்பெருங்
               காடும் செடியும் கடந்துவந்தேன்;
   எல்லை விரிந்த சமவெளிஎங்கும்நான்
              இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
   ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்பல
              ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
   ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்மணல்
               ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.               – கவிமணி
 

மொழியோடு விளையாடு:

சொல்லுக்குள் சொல் தேடுக.

எ.கா ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை ஓரம்

அ) கடையெழுவள்ளல்கள்   ஆ) எடுப்பார் கைப்பிள்ளை      இ) தமிழ்விடு தூது  

). பாய்மரக்கப்பல்     உ) எட்டுக்கால்பூச்சி

அகராதியில் காண்க:


1.     கந்தி

2.    நெடில்

3.    பாலி

4.    மகி

5.    கம்புள்

6.    கைச்சாத்து

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக

1. மழை பெய்தது.

2. வானவில்லைப் பார்த்தேன்

3. குழத்தை சிரித்தது.

4. எறும்புகள் போகின்றன.

5. படம் வரைந்தான்.

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

     (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)       

அ) எண்ணெய் ஊற்றி ---- விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ----

ஆ) எனக்கு ---- பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் ---- ஐ வை.

இ) கைப்பொருளைக் கடல் ---யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி ---ந்தால் கிடைக்குமா?

) வீட்டு ---ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும், வெளியில் அதனைக் கழுத்து    

--- உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்,

உ எழுத்தாணிகொண்டு ----ய தமிழை, ஏவுகணையில் ----- எல்லாக் கோனிலும் ஏற்றுங்கள்.

ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.

1. விரிந்தன  - விரித்தது.

2. குவிந்தனர் - குவித்து

3. சேர்ந்து - சேர்த்து

4. பணிந்து   -  பணித்தார்.

5. பொருத்தினான் - பொருந்தியது.

பகுபத உறுப்பிலக்கணம் தருக.

செய்தனர், வருகின்றாள், போற்றுதும், கொடுத்தாய், பேசுதல், விரைந்து, வாழிய

7 இயல்களுக்கான வினாவங்கியை PDF வடிவில் பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை