10 TH STD TAMIL HALF YEARLY QUESTION PAPER PUDUKOTTAI DISTRICT

 

அரையாண்டுப்பொதுத் தேர்வு-2025 புதுக்கோட்டை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மணிப்பெயர் வகை  

1

2.     

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

3.     

இ. திணை வழுவமைதி

1

4.     

. 3 1 4 2

1

5.     

. கூற்று 1 மற்றும் 2 சரி

1

6.     

இ. உழவு,ஏர்,மண்,மாடு

1

7.     

. அகவற்பா

1

8.     

ஈ. பாலை -வருணன் 

1

9.     

ஆ. விருந்தினரை ஏழு அடிவரை நடந்து சென்று வழியனுப்பினர்

1

10.   

இ. அகவல் ஓசை

1

11.    

. க ரு

1

12.   

அ. கீரந்தையார்

1

13.   

ஆ. பரிபாடல்

1

14.   

இ. அடுக்குத்தொடர்

1

15.   

இ. வானம் , யுகம்

1

                                     பகுதி-2                   பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

சிலப்பதிகாரம், மனிமேகைலை

2

17

அ.மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார்?

ஆ. தமிழ்நூல்கள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

2

18

ü    பூஞ்சோலைகள்

ü  செண்பகக் காடுகள்

ü  மலர்ப்பொய்கைகள்

ü  தடாகங்கள்

ü  கமுகத் தோட்டங்கள்

ü  நெல்வயல்கள்

2


19

# பாசவர்- வெற்றிலை விற்பவர்.

# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்

#  பல்நிண வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்

# உமணர்உப்பு விற்பவர்

2


20

அடுத்தவர் மீதான அக்கறை

2

21

குற்றம் இலனாய்க்  குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

சிரித்து சிரித்துப் பேசினார்

2

23

உரைத்தஉரை + த் + த் +

உரை பகுதி  ,  த்- சந்தி , த் -  இறந்த காலஇடைநிலை , - பெயரெச்ச விகுதி

2

24

அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம்  ஆ. உள்ளளவும் நினை

2

25

1. காட்சி , காணுதல்     2. நடித்தல், நடிப்பில்

2

26

. சிறு பூனையும் சீறும்   . விதியால் வீதிக்கு வந்தான்  (மாதிரி விடைகள்)

2

27

அ. பல்துறை ஊடகம்  ஆ. மனித வளம்

2

28

வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

3

30

. போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை

ஆ. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது

. தமிழரின் போர் அறம்

3

31

ü  தொலைக்காட்சி வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

ü  வணிக விளம்பரங்களை பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது.

ü  புதுவகையான சிந்தனைகள் மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக

3

33

v  குளிர்ந்த சோலையில் மயில்கள் ஆடுகின்றன.

v  தாமரை மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன.

v  குவளை மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.

v  நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன.

v  மகர யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன.

3

34

 

.

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்

.

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய

பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்.

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

36

சீர்

அசை

வாய்பாடு

தொழுதகை

நிரை+நிரை

கருவிளம்

யுள்ளும்

நேர்+நேர்

தேமா

படையொடுங்கும்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

ஒன்னார்

நேர்+நேர்

தேமா

அழுதகண்

நிரை+நிரை

கருவிளம்

ணீரும்

நேர்+நேர்

தேமா

உடைத்து

நிரைபு

பிறப்பு

3

37

சொற்பொருள் பின்வருநிலை அணி:

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

சான்று:

      இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

     இன்மையே  இன்னா தது.

அணிப்பொருத்தம்:

    ‘இன்மைஎன்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

ஆகியனவற்றை தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுகிறார்

(அல்லது)

) கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

    குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:   

     இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:     

    துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:          

      கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.

5

39

.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க. இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

 (அல்லது)

)   நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம்

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        திருத்தணி .

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்ப்பொழில் நாளிதழ்,

            திருவள்ளூர்-1

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                                  இப்படிக்கு,

            1. கட்டுரை                                                                                                                                                     தங்கள் உண்மையுள்ள,

இடம் : திருத்தணி                                                                                               அ அ அ அ அ.

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

)

        மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

) வரவேற்பு:

விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம்.     அவர்கள் அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு முதலில் குடிக்க நீர் தந்தோம்.

கலந்துரையாடல்:

நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின், வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது.

விருந்து உபசரிப்பு :

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.

நகர்வலம்:

விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்

இரவு விருந்து :

நகர்வலம் முடிந்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன் கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர்.

பிரியா விடை :

இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.

(அல்லது)

ஆ. முன்னுரை:

   கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.  “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர்  கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர்

     தன் பதினான்காம் வயதில், பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.

பேச்சுக் கலைஞர்:

v  மேடைப்பேச்சினில் பெருவிருப்பம் கொண்ட கலைஞர், “நட்பு” என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது.

v  பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.

நாடகக் கலைஞர்:

v  தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார்.

திரைக் கலைஞர்

v  கலைஞரின் திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ராஜகுமாரி படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார்

v   சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்

இயற்றமிழ்க் கலைஞர்

   தமிழ் மீது திராத பற்றுகொண்ட கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.

முடிவுரை                                                                                          

 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.

8

44

பிரும்மம்

முன்னுரை:

இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

புதிதாகக் கட்டிய வீடு:

இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.

குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்:

v  குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார்.

v  குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும் என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

v  அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது.

அப்பாவின் முடிவு:

அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை  நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார்.

முருங்கை வீட்டின் அங்கமானது:

v  நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

v  முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

மீண்டெழுந்த முருங்கை:

ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.

முடிவுரை:

முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

 (அல்லது)

)  முன்னுரை:

    விடுதலைக்காகவும்சமுதாயக் கொள்கைக்காகவும்மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி:

     இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும்இந்திய மாமணி விருதும் கிடைத்தது.

          தமிழ்தெலுங்குகன்னடம்சமஸ்கிருதம்,மலையாளம்இந்திமராத்திகுஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும்ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

பாலசரசுவதி:

     இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும்காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும்சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.

இராஜம் கிருஷ்ணன்:

    சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும்புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார்தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும்கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும்வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும்  எழுதியுள்ளார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:

     காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம்சட்ட மறுப்பு இயக்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம்வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.

மதுரை சின்னப்பிள்ளை:

    இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.

      வயதானவர்களுக்கும்மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின் "அவ்வைவிருதையும்தூர்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றவர்.

முடிவுரை:

      பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்.

8

45

) தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

 (அல்லது)

) தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                      

      இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

·        சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.

·        அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது.

·        சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

·        சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

·        நடைமேடையைப் பயன்படுத்துதல்

·        நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல்

·        வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல்

·        வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல்

·        உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்          

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

8

 



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை