அரையாண்டுப்பொதுத் தேர்வு-2025
திருப்பத்தூர்&இராமநாதபுரம் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
இ. வலிமையை நிலைநாட்டல் |
1 |
|
2. |
ஆ. வான்வெளியில்
பேரொலியில் |
1 |
|
3. |
அ. ஒரு சிறி
இசை |
1 |
|
4. |
ஆ. வெள்ளை |
1 |
|
5. |
இ. சொற்பொருள்
பின்வரு நிலையணி |
1 |
|
6. |
ஆ. கிண்கிணி
ஈ. மன்னன் , இறைவன் |
1 |
|
7. |
ஆ. நாகூர் ரூமி |
1 |
|
8. |
ஆ. வங்காள , ஆங்கில |
1 |
|
9. |
இ. அன்மொழித்தொகை |
1 |
|
10. |
இ. பழுப்பு |
1 |
|
11. |
இ. தொடுதல்,
தொடுத்தல் |
1 |
|
12. |
ஆ. சிலப்பதிகாரம் |
1 |
|
13. |
ஆ. நெய்பவர் |
1 |
|
14. |
ஈ. எண்ணும்மை |
1 |
|
15. |
ஆ. இளங்கோவடிகள் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
அ. உலகத்தமிழ்க்
கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்? ஆ. தலைமுறைக்கு
ஒருமுறை மலர்வது எது? |
2 |
|
17 |
அவையம்=மன்றம் அல்லது
சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
|
18 |
ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி
பெயர்ப்பு இன்றியமையாததாகும்.
உலகநாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும்
ஒரு காரணமாகும் ” என்கிறார் மு.கு.ஜகந்நாதர். |
2 |
|
19 |
மறைத்து
வைத்தல் எனும் துன்பத்தைத் தராதவர் |
2 |
|
20 |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
2 |
|
21 |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை
அறிந்து செயல். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. மாலையில்
மலை ஏறினான் ஆ. இயற்கை செயற்கையை விடச் சிறந்தது |
2 |
|
23 |
வெட்சித்திணைமுதல் பாடாண் திணை வரைஉள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும்
அவற்றுள் கூறப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும். |
2 |
|
24 |
வருக
- வா(வரு) + க வா
– பகுதி, வரு
எனத் திரிந்தது விகாரம் , க-
வியங்கோள் வினைமுற்று விகுதி |
2 |
|
25 |
அ. பல்துறை ஊடகம் ஆ. ஈகை |
2 |
|
26 |
அ. படிக்காமல் தேர்ச்சி அடையலாம்
என மனக்கோட்டை கட்டினான் ஆ. கோபத்தை ஆறப்போட வேண்டும் |
2 |
|
27 |
கட்டுரையைப்
படித்த |
2 |
|
28 |
அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ. உள்ளளவும் நினை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
ü வாய்மையைச் சிறந்த
அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ü ”வாய்மை பேசும் நாவே
உண்மையான நா” என்ற கருத்தை
வலியுறுத்துகின்றன.
ü நாக்கு ஒரு அதிசய
திறவுகோல்; இன்பத்தின் கதவை
திறப்பதும்,
துன்பத்தின்
கதவைத் திறப்பதும் அது தான் |
3 |
|
30 |
அ. மருத்துவப்பயன் ஆ. விருந்தினர் இ. வாழை இலை |
3 |
|
31 |
ü தொலைக்காட்சி
வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
பெரிதும் உதவுகிறது. ü வணிக விளம்பரங்களை
பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது. ü புதுவகையான சிந்தனைகள்
மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது. |
3 |
பிரிவு-2 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு
சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள்
ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும்
ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும்
ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை
ஆடுக |
3 |
|
|
33 |
ü தொழில் செய்வதற்குத்
தேவையான கருவி,
அதற்கு
ஏற்ற காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய
ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
ü மார்கழித்திங்கள் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை ü மிதிவண்டி – வினைத்தொகை ü செங்காந்தள் – பண்புத்தொகை ü வீடு சென்றேன் – நான்காம் வேற்றுமைத்தொகை(அ) வேற்றுமைத்தொகை |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது. வஞ்சப் புகழ்ச்சி அணி: ஒரு செய்யுளில்
ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக
வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும். அணிப்பொருத்தம் தேவர்கள்
தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல, கயவர்களும்
தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர். இக்குறளில்
தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக்
கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும். |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||
|
38
அ |
கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. (அல்லது) ஆ) ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன்
இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின்
தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
5 |
||||||||||
|
39 அ. |
மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் அனுப்புநர் ப.இளமுகில், 6,காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து
வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து
இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை
சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி!!
இப்படிக்கு, தங்கள் பணிவுடைய,
ப.இளமுகில். இடம்: அரக்கோணம், நாள்: 15-10-2022. உறைமேல்
முகவரி: (அல்லது) ஆ. நண்பனுக்குக் கடிதம் ஆ காந்தி தெரு. 10.06.2025 அன்புள்ள நண்பன் அமுதனுக்கு, வணக்கம். நான் நலமாக
இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில்
அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற
கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில்
கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய். தமிழ்நாடு அரசு நடத்திய
கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில்
முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்' பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய்.
உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம்.
உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற
உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம். இப்படிக்கு. உன் அன்புள்ள
நண்பன், மா.குறளரசன். உறைமேல்
முகவரி: |
5 |
||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||
|
41 |
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||
|
42 |
அ)
ஆ) மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார்
வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும்
தனிப்பற்றுக் கொள்ளாமல்,
நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு
இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல்
வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு
அறிந்திருத்தல் வேண்டும். |
5 |
||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் முன்னுரை: நாம் தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக
இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல இடங்களில்
மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த
காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். பசுமை பரப்புகளை அதிகரித்தல்: மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை
இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக
மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை
வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே
இதற்கான சிறந்த வழியாகும். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல்: ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனங்களை
பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப் பதிலாக
பேருந்து, ரயில்
போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று
மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்: மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான
வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால்
இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்: ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter) மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ü மின் உலைகள், பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே
காற்று மாசுபாடு குறையும். குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்: குப்பைகளை திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக மண்ணில்
புதைக்கும் அல்லது செய்வது முக்கியம். மேலும்
மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில்
பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும். முடிவுரை: காற்று மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின்
பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான
காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்! ஆ. முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால்
போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள்
எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித்
திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில்
ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை
வளர்த்தது. பேச்சுக்
கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
“நட்பு”
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய
அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன்
மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட
பல நாடகங்களை எழுதினார். திரைக்
கலைஞர் v கலைஞரின் திறமையை
நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான
முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி
முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க்
கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”
என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான
பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர்
நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். |
8 |
|
44 அ |
இராமானுசர் நாடகம் முன்னுரை: 12
ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு
ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு ஒரு
முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். தண்டும் கொடியுமாக: திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக
இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால்
திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக்
கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர்,
"தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே
கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார், ஆசிரியரின் கட்டளை: பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன்
"திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக்
கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று
முறை உரக்கச் சொன்னார்கள். திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்: திருக்கோட்டியூர்
சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத்
தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும்
இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக்
குரலில் மூன்று முறை கூறினார்கள். குருவின் சொல்லை மீறுதல்: குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம்
"கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன்
பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு
பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று
விளக்கமளித்தார். குருவின் ஆசி: இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார்
மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய
நாராயணனை அடைக்கலமாக அளித்தார். முடிவுரை: யாம்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய மந்திரத்தை
வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது
பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார் (அல்லது) ஆ) முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.”இவன்
துறவியோ? பரதேசியோ?” என்ற
ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது
முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான
புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று
பார்த்தார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?”
என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து
நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன்
பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு
வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும்
தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த
இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு
மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த
இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்
எழுந்தவுடன்,” எங்கிருந்து
வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக
நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,”
உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு”
அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள்
பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த
கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து
அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த
உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் முடிவுரை:
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. |
8 |
|
45 |
அ) முன்னுரை: ”கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது” குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன?
என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும்
உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக
வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப்
பட்டிருந்தது. சிறு
அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட
கலைகள்: ”மனதைக் கவரும் மயிலாட்டம் நம்மையும் ஆடத்தூண்டும்
கரகாட்டம் ” எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது. பேச்சரங்கம்: கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற
பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்,
வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து,
மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில்
மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. (அல்லது) ஆ) பேரிடர் மேலாண்மை முன்னுரை: பேரிடர்கள் என்பது மனித வாழ்வையும், பொருளாதாரத்தையும்,
சமூக அமைப்புகளையும் பாதிக்கும் கடுமையான நிகழ்வுகளாகும்.
நிலநடுக்கம், வெள்ளம், புயல்,
வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமன்று, மனிதனால் உருவாக்கப்படும் தொழிற்சாலை விபத்து, தீ
விபத்து, சுற்றுச்சூழல் மாசு போன்ற மானுட பேரிடர்களும்
அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பேரிடர்களை முறையாக நோக்கும்
திறனும் பொறுப்பும் மிக்க தீர்வாக பேரிடர் மேலாண்மை திகழ்கிறது. இயற்கையும்
மானுடமும்: இயற்கை என்பது மனித வாழ்வின்
ஆதாரம்; மானுடம் அதன் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால்
வளர்ச்சியின் பேரில் மனிதன் இயற்கையை கட்டுப்படுத்த முயலும்போது, இயற்கை சமநிலை குலைகிறது. இந்த சமநிலைக் குலைவின் விளைவாக பல்வேறு
பேரிடர்கள் உருவாகின்றன. இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும்போது மனிதகுலமும்
பாதுகாப்பாக இருக்கும். மாசடையும்
இயற்கை: இன்று காற்று, நீர், நிலம்
என அனைத்தும் மாசடைவதால், இயற்கையின் சீரான இயக்கம்
பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு, காடுகள் அழிப்பு,
தொழிற்துறை கழிவு, ஆற்றங்கரைகளின்
ஆக்கிரமிப்பு போன்றவை இயற்கையை மிக மோசமாக பாதிக்கின்றன. இவை அனைத்தும் மழை
சீரழிவுக்கு, வெள்ளம், வறட்சி போன்ற
பேரிடர்களின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. மாசு அதிகமானால், பேரிடர்களின் தாக்கமும் அதிகரிக்கின்றது. இயற்கையைக்
காப்போம்: இயற்கையைப் பாதுகாப்பது பேரிடர்களைத் தடுக்கும் முதன்மையான செயலாகும். ·
பசுமை
வளங்களை அதிகரித்தல் ·
காட்டு
விலங்குகளைப் பாதுகாத்தல் ·
நீர்
வளங்களைச் சேமித்து பராமரித்தல் ·
பிளாஸ்டிக்
பயன்பாட்டை குறைத்தல் ·
மரங்கள்
நடுதல் இவை அனைத்தும் இயற்கையின் சமநிலையை
நிலைநிறுத்த உதவுகின்றன. இயற்கையை நேசிப்பது மனிதனை பாதுகாக்கும் ஒரு பயனுள்ள
முதலீடாகும். பேரிடர்
விழிப்புணர்வு பேரிடர்களைத் தடுக்க முடியாவிட்டாலும், அவற்றின்
விளைவுகளை குறைப்பது மனிதரின் பொறுப்பு. அதற்காக: ·
பள்ளி
மற்றும் கல்லூரிகளில் பேரிடர் பாதுகாப்பு பயிற்சி ·
அரசு
வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுதல் ·
வீட்டிலும்
சமூகத்திலும் அவசரகாலத் தயாரிப்பு ·
பாதுகாப்பு
கருவிகள்,
முதல்
உதவி பெட்டி வைத்திருத்தல் ·
பேரிடர்
நேரத்தில் அமைதியாக செயல்படுதல் இந்த
விழிப்புணர்வுகள் மனித இழப்பும் பொருள் இழப்பும் குறையும் விதத்தில் பெரிய பங்கு
வகிக்கின்றன. முடிவுரை இயற்கை நம்மை பாதுகாக்கும் தாய் போன்றது. அந்தத் தாயை நாம் காத்து பராமரிக்காவிட்டால், இயற்கை பேரிடர்களின் தாக்கம் அதிகரிக்கும். எனவே, பேரிடர் மேலாண்மை குறித்து ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்று செயல்படுவது காலத்தின் கட்டாயம். இயற்கையைப் பாதுகாப்பதும், பேரிடர்கள் வரும் முன் முன்னெச்சரிக்கை எடுப்பதும் நமது பொறுப்பாகும். மனிதன் இயற்கையோடு ஒற்றுமையாக வாழ்ந்தால் மட்டுமே பேரிடர்களைக் குறைத்து, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும். |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி