அரையாண்டுப்பொதுத் தேர்வு-2025
மதுரை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
அ. இகழ்ந்தால்
என்மனம் இறந்துவிடாது |
1 |
|
2. |
ஆ. வான்வெளியில்
பேரொலியில் |
1 |
|
3. |
இ. காசி நகரத்திம் பெருமையைப்
பாடும் நூல் |
1 |
|
4. |
ஆ. வங்காள,
ஆங்கில |
1 |
|
5. |
ஈ. இளவேனில் |
1 |
|
6. |
இ. வலிமையை நிலைநாட்டல் |
1 |
|
7. |
அ. ஒரு சிறு
இசை |
1 |
|
8. |
அ. கைமமாறு
கருதாமல் அறம் செய்வது |
1 |
|
9. |
அ. பண்புத்தொகை |
1 |
|
10. |
அ. இந்தி |
1 |
|
11. |
இ. ந.முத்துசாமி |
1 |
|
12. |
ஆ. பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
1 |
|
13. |
ஆ. கனிச்சாறு |
1 |
|
14. |
அ. தூண்டி |
1 |
|
15. |
ஆ. பண்புத்தொகை |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
ü கிழக்கிலிருந்து வீசும்
காற்று –
கொண்டல் ü மேற்கிலிருந்து வீசும்
காற்று
– கோடை ü வடக்கிலிருந்து வீசும்
காற்று
– வாடை ü தெற்கிலிருந்து வீசும்
காற்று
- தென்றல் |
2 |
|
17 |
அ. கோவில்பட்டியைச் சுற்றியுள்ள
வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் யாது? ஆ. நால்வகைப் பாக்கள் யாவை? |
2 |
|
18 |
இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக்
காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான். |
2 |
|
19 |
முயற்சி செய்தல்,
முயற்சி இன்மை |
2 |
|
20 |
இல்லை, விருந்தினரை
நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை. |
2 |
|
21 |
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. கோபத்தை ஆறப்போட வேண்டும்
ஆ. கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள். |
2 |
|
23 |
ஒலித்து
- ஒலி +த்+த்+உ ஒலி - பகுதி; த் -சந்தி; த்-
இறந்தகால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி |
2 |
|
24 |
அ. புற்கட்டு ஆ. ஆட்டு மந்தை |
2 |
|
25 |
அ. புதுமனை புகுவிழா ஆ. நாடக ஆசிரியர் |
2 |
|
26 |
அ. அடுக்குத்தொடர் ஆ. எழுவாய்த்தொடர் |
2 |
|
27 |
பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட
வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன், - ம.பொ.சி. |
2 |
|
28 |
அ. ஊட்டமிகு
உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.
|
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
ü பகிர்ந்துண்ணும் வழக்கமே
குறைந்து விட்டது. ü நெருங்கிய உறவினர்களை
மட்டுமே விருந்தினர்களாகக் கருதுகின்றனர். ü வாயிலை அடைக்கும்
முன் உணவு வேண்டி யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்த தமிழர் இன்று
வாயிலை அடைத்த பிறகே உண்னுகின்றனர். |
3 |
|
30 |
அ. வேளாண்மை ஆ. அக்டோபர் முதல் டிசம்பர் இ. எழுபது விழுக்காடு |
3 |
|
31 |
உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக (நெல், கரும்பு,கம்பு,சோளம்,துவரை………) |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü வானமும், உருவமில்லாக்
காற்றும்,
பூமியும், நெருப்பும், நீரும் ஆகிய
ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர முதன்மையானவை ஆகும். ü பூமி உருவாகி, ஊழிக்காலம்
தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில்
மூழ்கியது. ü மீண்டும்
மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி
வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி,
அவை
நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது |
3 |
|
|
33 |
ü உயிர்பிழைக்கும் வழி
அறியேன் ü உறுப்புகள் அறிவிற்குப்
பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத் தேடும் வழி
அறியேன் ü காட்டில் செல்லும்
வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
35 |
1.
பாடிக்
காட்டினார்
- வினையெச்சத்தொடர் 2.
கேட்டுப்
பாடினர்
- வினையெச்சத்தொடர் 3.
கேட்ட
பாடலில்
- பெயரெச்சத்தொடர் 4.
சிறுவினாக்களைக்
கேட்டார் -
வேற்றுமைத்தொடர் 5.
எழுதுபவருக்குப்
பரிசு
- வேற்றுமைத்தொடர் |
3 |
|
36 |
ü
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம், உவம
உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v
உவம உருபு – போலும் இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு
வந்தமையால் உவமையணி ஆயிற்று. |
3 |
|
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
|
38
அ |
·
கவிஞன்
நானே காலத்தைக் கணிப்பவன். ·
உள்ளத்தில்
உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால்
இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். ·
பொன்னைவிட
விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள். ·
சரியானவற்றை
எடுத்துச் சொல்வதும்,
தவறானவற்றை
எதிர்ப்பதும் என் பணி. ·
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்
மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை. (அல்லது) ஆ) v கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப்
போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும். v குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத்
துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான். v தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக்
காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும். |
5 |
|
39 அ. |
பொது நூலகத்துறை இயக்குநருக்குக்
கடிதம் பூம்பாறை. 10.07.2025 அனுப்புநர் செ.தமிழரசன், 50,
அன்னை இல்லம், காந்தி
தெரு, பூம்பாறை, திண்டுக்கல்
மாவட்டம் - 625
001. பெறுநர் பொது
நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்நாடு
பொது நூலக இயக்குநரகம், சென்னை
600 002. ஐயா, பொருள்:
நூலக வசதி வேண்டுதல் சார்பு. வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும்
தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000
குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும்,
எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித்
தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப்
படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம். எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால்
எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும்
மிகுந்த பயனைத்தரும். எனவே,
எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப்
பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள, செ.தமிழரசன். உறைமேல்
முகவரி: ஆ. வாழ்த்து மடல்
நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும்
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப்
பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது
அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
41 |
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
42 |
அ) 1. நான் செல்லும்
வழி இன்சொல் வழி. 2. என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3. தீய செயலில்
ஈடுபட விடமாட்டேன் 4. பிறர் மனம்
மகிழும்படி நடப்பேன் 5. பிறருக்கு நன்மை
செய்வேன் ஆ) பொன்னிற கதிரவன் தன்
ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர,
பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்.
காலை சில்லென உணர்வும்,
மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5 3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ) தமிழர்களின்
விருந்தோம்பல் முன்னுரை: விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர்
சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று
தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால
தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம். தனித்து உண்ணாமை: தனித்து உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது
என்று தமிழர்கள் எண்ணினர். விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை: விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக்
கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும்
நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை, ”அல்லில் ஆயினும் விருந்து வரில் உவக்கும்” என்று நற்றிணை குறிப்பிடுகிறது. வறுமையிலும் விருந்தோம்பல்: ü தமிழர் வறுமையிலும்
ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர். ü விதை நெல்லைக் குற்றியெடுத்து
விருந்தளித்தனர். ü வாளைப் பணையம் வைத்து
விருந்தளித்தனர். ü கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர். நிலத்திற்கேற்ற
விருந்து: நெய்தல்
நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது
சிறுபாணாற்றுப்படை. விருந்தை
எதிர்கொள்ளும் தன்மை: வீட்டில்
பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு
உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, “பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?” என்ற குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது. முடிவுரை: பண்டைத்
தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது
காலம் தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி
பெருமிதம் கொள்வோம். அ. முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால்
போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள்
எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித்
திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில்
ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை
வளர்த்தது. பேச்சுக்
கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
“நட்பு”
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய
அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன்
மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட
பல நாடகங்களை எழுதினார். திரைக்
கலைஞர் v கலைஞரின் திறமையை
நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான
முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி
முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க்
கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”
என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான
பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர்
நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். |
8 |
|
44 அ |
பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை
என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல
உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல்
நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. (அல்லது) ஆ) முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.”இவன்
துறவியோ? பரதேசியோ?” என்ற
ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது
முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான
புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று
பார்த்தார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?”
என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து
நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன்
பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு
வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும்
தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த
இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு
மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும்
போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்
எழுந்தவுடன்,” எங்கிருந்து
வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக
நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,”
உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு”
அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள்
பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த
கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து
அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த
உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் முடிவுரை:
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. |
8 |
|
45 |
அ) முன்னுரை: ”கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது” குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன்
எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.
அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன?
என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே
ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள்
ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு
அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட
கலைகள்: ”மனதைக் கவரும் மயிலாட்டம் நம்மையும் ஆடத்தூண்டும்
கரகாட்டம் ” எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது. பேச்சரங்கம்: கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற
பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். முடிவுரை: இறுதியாக
எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்,
வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து,
மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில்
மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. (அல்லது) ஆ) நூல்
தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே
இந்நூலின் தலைப்புமாகும். நூலின்
மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள்,
கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய
நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும்
கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு
நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை. நூல்
கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1.
காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள்,
3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித்
தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக்
கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய
செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன்
|
8 |

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி