அரையாண்டுப்பொதுத்
தேர்வு-2025
அரியலூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஆ. மணிப்பெயர்
வகை |
1 |
|
2. |
ஆ. எழுவாய்த்தொடர் |
1 |
|
3. |
ஆ. கிண்கிணி |
1 |
|
4. |
இ
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
|
5. |
ஈ. மன்னன்
, இறைவன் |
1 |
|
6. |
இ. திணை வழுவமைதி |
1 |
|
7. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|
8. |
இ. குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள் |
1 |
|
9. |
அ. திருப்பதியும்,
திருத்தணியும் |
1 |
|
10. |
அ. ஒரு சிறு
இசை |
1 |
|
11. |
அ. அகவற்பா |
1 |
|
12. |
இ. எம் + தமிழ்
+ நா |
1 |
|
13. |
அ. பண்புத்தொகை |
1 |
|
14. |
ஆ. தமிழ்மொழியை |
1 |
|
15. |
இ. வேற்றுமொழியினர் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
ü பல கை என்று வந்தபோது
கையைக் குறித்தது. ü பலகை என்று வந்தபோது
மரப்பலகையைக் குறித்தது. ü தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு
பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது. |
2 |
|
17 |
அ. புதிய படைப்புகள் உருவாக
எது உதவுகிறது? ஆ. உலகமே வறுமையுற்றாலும்
கொடுப்பவன் யார்? |
2 |
|
18 |
சிலம்பு , கிண்கிணி,
அரைஞாண், அரைவடம், சுட்டி,
குண்டலம். |
2 |
|
19 |
முயற்சி செய்தல்,
முயற்சி இன்மை |
2 |
|
20 |
அவையம்=மன்றம் அல்லது
சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
|
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
·
குறள் வெண்பா ·
சிந்தியல் வெண்பா ·
நேரிசைவெண்பா ·
இன்னிசைவெண்பா ·
பஃறொடைவெண்பா |
2 |
|
23 |
அ.
ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். ஆ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித்
தேர்வில் வென்றார். |
2 |
|
24 |
தணிந்தது
- தணி + த்(ந்) + த் + அ+து தணி
- பகுதி, த் - சந்தி த்(ந்)
-ந் ஆனது விகாரம் த்
- இறந்தகால இடைநிலை அ
- சாரியை, து
–படர்க்கை வினைமுற்று விகுதி |
2 |
|
25 |
அ. முடியாட்சி ஆ. வாய்மை (அ) உண்மை |
2 |
|
26 |
அ. படிக்காமல்
தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான் ஆ. பணத்தை அள்ளி
இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான் |
2 |
|
27 |
அ. தோட்டினைத் தொட்டான். ஆ. மாலையில்
மலை ஏறினான் (மாதிரி விடைகள்) |
2 |
|
28 |
அ. உள்ளளவும் நினை ஆ. மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
|
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
ü தமிழர் வறுமையிலும்
ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர். ü விதை நெல்லைக் குற்றியெடுத்து
விருந்தளித்தனர். ü வாளைப் பணையம் வைத்து
விருந்தளித்தனர். ü கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர். |
3 |
|
30 |
அ. வாழை இலை ஆ. விருந்தினர்
இ. மனநிலை |
3 |
|
31 |
ü தொலைக்காட்சி
வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
பெரிதும் உதவுகிறது. ü வணிக விளம்பரங்களை
பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது. ü புதுவகையான சிந்தனைகள்
மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது. |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
v குளிர்ந்த சோலையில்
மயில்கள் ஆடுகின்றன.
v தாமரை மலர்கள் விளக்குகள்
போன்று தோன்றுகின்றன.
v குவளை மலர்கள் கண்விழித்துப்
பார்ப்பது போல் காணப்படுகின்றன.
v நீர்நிலைகளின் அலைகள்
திரைச்சீலைகள் போல் விரிகின்றன.
v மகர யாழின் தேனிசை
போல் வண்டுகள் பாடுகின்றன. |
3 |
|
|
33 |
ü உயிர்பிழைக்கும் வழி
அறியேன் ü உறுப்புகள் அறிவிற்குப்
பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத் தேடும் வழி
அறியேன் ü காட்டில் செல்லும்
வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
35 |
ü அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து
வரும். ü ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும்
வரும். ü மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
|
36 |
ü
இக்குறளில் சொல் பின்வரு நிலை அணி பயின்று வந்துள்ளது சொல் பின்வரு நிலை அணி: ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்
வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொல் பின்வருநிலை அணி ஆகும். அணிப்பொருத்தம்: ‘பொருள்‘
என்னும் சொல் வேறு பொருளில் பின்னரும் பலமுறை வந்ததால் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று. |
3 |
|
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
|
38
அ |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின்
பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம்
முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன்
இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின்
தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த
மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் (அல்லது) ஆ) v ஒழுக்கம் சிறப்பு
தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும். v ஒழுக்கம் உள்ளவர்
உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர். v உலகத்தோடு
இணைந்து வாழாதவர்,
கற்றவராயினும்
அறிவு இல்லாதவரே |
5 |
||||||||||||
|
39 அ. |
அ.
காந்தி
தெரு. 10.06.2025 அன்புள்ள நண்பன் அமுதனுக்கு, வணக்கம். நான் நலமாக
இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில்
அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற
கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில்
கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய். தமிழ்நாடு அரசு நடத்திய
கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில்
முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்' பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய்.
உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம்.
உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற
உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம். இப்படிக்கு. உன் அன்புள்ள
நண்பன், மா.குறளரசன். உறைமேல் முகவரி:
ஆ. பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம் பூம்பாறை. 10.07.2025 அனுப்புநர் செ.தமிழரசன், 50,
அன்னை இல்லம், காந்தி
தெரு, பூம்பாறை, திண்டுக்கல்
மாவட்டம் - 625
001. பெறுநர் பொது
நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்நாடு
பொது நூலக இயக்குநரகம், சென்னை
600 002. ஐயா, பொருள்:
நூலக வசதி வேண்டுதல் சார்பு. வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும்
தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000
குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும்,
எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித்
தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப்
படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம். எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால்
எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும்
மிகுந்த பயனைத்தரும். எனவே,
எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப்
பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள, செ.தமிழரசன். உறைமேல்
முகவரி: |
5 |
||||||||||||
|
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
|
41 |
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||
|
42 |
அ)
ஆ) மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார்
வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும்
தனிப்பற்றுக் கொள்ளாமல்,
நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு
இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல்
வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை
நன்கு அறிந்திருத்தல் வேண்டும். |
5 |
||||||||||||
பகுதி-5 3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ) முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால்
போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள்
எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித்
திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில்
ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை
வளர்த்தது. பேச்சுக்
கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
“நட்பு”
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய
அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன்
மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட
பல நாடகங்களை எழுதினார். திரைக்
கலைஞர் v கலைஞரின் திறமையை
நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான
முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி
முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க்
கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”
என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான
பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர்
நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். ஆ. நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி
பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன
வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு
இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது,
தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ் மொழியின் பழமையும்
செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச்
சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை
மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான
சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே
வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ
இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில்
கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப்
பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை பொருட்களின்
மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்
முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ü செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என
எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின்
வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை: சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் |
8 |
|
44 அ |
பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக
குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும்
வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. (அல்லது) ஆ) இராமானுசர் நாடகம் முன்னுரை: 12
ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு
ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு
ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். தண்டும் கொடியுமாக: திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக
இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால்
திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக்
கண்ட பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர்,
"தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே
கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார், ஆசிரியரின் கட்டளை: பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன்
"திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக்
கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று
முறை உரக்கச் சொன்னார்கள். திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்: திருக்கோட்டியூர்
சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத்
தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும்
இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக்
குரலில் மூன்று முறை கூறினார்கள். குருவின் சொல்லை மீறுதல்: குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம்
"கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன்
பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு
பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று
விளக்கமளித்தார். குருவின் ஆசி: இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார்
மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய
நாராயணனை அடைக்கலமாக அளித்தார். முடிவுரை: யாம்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய மந்திரத்தை
வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது பிறருக்காக
நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார் |
8 |
|
45 |
அ) தலைப்பு : சான்றோர்
வளர்த்த தமிழ் முன்னுரை: “தமிழே!
நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல
செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு
வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு
பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த
விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம். பிள்ளைத்தமிழ்: குழவி மருங்கினும் கிழவதாகும் - தொல்காப்பியர் கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப்
பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: நூறு பாடல்கள் கொண்ட
நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக
நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும். பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப்
பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து
பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர்
நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால்
முற்பட்டதாகும். அந்தாதி: அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு
பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி
எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால்
அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும். கோவை: பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது
கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை
நூலாகும். முடிவுரை: "வீறுடை செம்மொழி
தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும்.
மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால்
பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு
செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய
கடமையாகும் (அல்லது) ஆ) தலைப்பு : சாலை பாதுகாப்பு முன்னுரை: இக்காலகட்டத்தில்
மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல்
நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி
இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: ·
சாலையில்
விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து
காவல்துறையினர் பணி செய்கின்றனர். ·
அதற்காக
மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. ·
சாலை
விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது. ·
சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: ·
நடைமேடையைப்
பயன்படுத்துதல் ·
நகரப்பகுதிகளில்
சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல் ·
வெள்ளைக்
கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல் ·
வாகன
ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் ·
உள்ளிட்ட
அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி