10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-1

        10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 30-06-2025 முதல் 04-07-2025         

மாதம்         ஜூலை

வாரம்     :  முதல் வாரம்                                 

 வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                   

  பாடத்தலைப்பு     :   1. மேகம் 2. பிரும்மம்

1.கற்றல் நோக்கங்கள்   :

புதுக்கவிதை காட்சிப்படுத்தும் இயற்கை சார்ந்த செய்திகளை சுவைத்து தம் கருத்தை பதிவு செய்தல்

      Ø இயல்பாய், இலகுவாய் கதைக் கருத்து காட்சிப்படுத்துவதைப் படித்தறிந்து அதுபோலப் படைத்தல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு பதிவிறக்கம் செய்யலாம்)

மேகம்

பிரும்மம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø மழைக்குமுன் தோன்றும் மேகங்களைப் பார்த்துள்ளீர்களா? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  : 

  • மேகங்கள் மென்மையானவை
  • மேகங்கள் துணிச்சலானவை
  • மேகங்கள் கருணையுள்ளவை
  • குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த முருங்கை மரம் ஒன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பிணைந்து பிணைந்து விட்டது? என்பதே இக்கதையின் கருத்தாகும்.          

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

     Ø  புதுக்கவிதையையையும், மரபுக்கவிதையையும் ஒப்பீடு செய்தல்

     Ø தமிழின் பல்வேறு இலக்கிய வடிவங்களைப்பற்றி மாணவர்களுக்கு விளக்குதல்

      Ø   பாடலின் பொருளினை விளக்குதல்

      Ø  விரிவானக் கருத்தை நயம்பட விளக்குதல்.

       Ø  பகுபத உறுப்பிலக்கணத்தை மாணவர்க்குப் புரிய வைத்தல்

6.கருத்துரு வரைபடம்:


7.மாணவர் செயல்பாடு:

    Ø  புதுக்கவிதையைப் பொருளுணருமாறு படித்தல்
@ கவிதையின் வடிவங்களை அறிதல்
@ இல்லறத்தின் நுண்ணுணர்வுகளைத் தெரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    Ø மேகம் கவிதையை  இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
  Ø  பிரும்மம் - பொருள் விளக்கம் - தருக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  @ பிரும்மம் கதையைச் சுருக்கிக் கூறுக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       1007கவிதைகளிலும் கதைகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளைச் சுவையுணர்ந்து படித்தல், அவற்றின் மொழிக் கூறுகளை உணர்ந்து பேசுதல், எழுதுதல் மற்றும் அவை போன்ற படைப்புகளை உருவாக்குதல்.

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை