9 TH STD TAMIL THIRD MID TERM ANSWER KEY AND QUESTION PAPER

 


மூன்றாம் இடைப்பருவத்தேர்வு -2025

(இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள்)

வினாத்தாளைப் பதிவிறக்க

9.ஆம் வகுப்பு- தமிழ்   விடைக்குறிப்புகள்

                                                             பகுதி-I                                                     8×1=8

1. இ) துணிவு

2. ஈ) அறிவு

3. ஈ) பிறப்பு

4. ஈ) ஒன்றே உலகம்

5. அ) ஒரு சிறு இசை

6. இ) ந.பிச்சமூர்த்தி

7. இ) கதிரவன்

8. ஆ) சூழலின்- நிழலின்

                                                     பகுதி-II             பிரிவு-1                                               3×2=6

9. அ. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

     ஆ. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

10. கதிரவனின் ஒளி

11.எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.

12. உரோம நாட்டவர் : உரோமையரின் சான்றோர் எழுதும்போது நாம் நம்மவர் என்ற செருக்குடன் உரோமரை கருதியே எழுதுகின்றனர்.

தமிழ்ச் சான்றோர் : எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய கொள்கையை தம் நூல்களில் யாத்துள்ளனர் என்பதே இரு சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

13. வெற்றிடம் (அ) உள்ளீடு இல்லாமை

                                                          பிரிவு-2                                                                        3×2=6

14. இரண்டு வகை-நேரசை, நிரையசை

15. அ."நான் நாளை வீட்டுக்கு வருவேன்" என்று முரளி கூறினார்.

       ஆ.தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.

16.வேண்டு+இ

வேண்டு-பகுதி, இ-வினையெச்ச விகுதி

17.அ) அடுக்குத்தொடர் ஆ) எண்ணும்மை

18.அ)மெய்யியல் ஆ) அசை

                                   பகுதி-III                       பிரிவு-1.                                      2×3=6

19.

·        பெரியார் அவர்கள், பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.

·        ஆனால் இன்றைய நடைமுறையில் பொருளாதாரத்தில் நிறைவு பெறவில்லை என்றாலும் சிறுகடன் பெற்றாவது அநேகர் ஆடம்பரமாகவே வாழ விரும்புகின்றனர்.

·        விழாக்களும் சடங்குகளும் மூடப்பழக்கம் வளர்ப்பதோடு வீண் செலவும் ஏற்படுத்துகிறது. சடங்குகள், விழாக்களைத் தவிர்த்து சிக்கனமாய் வாழச் சொன்னார்.

20. இடம்: 

       இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள அக்கறைஎன்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:

     மிதிவண்டி ஒட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில் இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.

21. அ)

சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை"

ஆ)

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே

                                                                   பிரிவு-2                                                       2×3=6

22. 

23. குறளடி,சிந்தடி,அளவடி, நெடிலடி,கழிநெடிலடி

24. 1. கருவிளம் 2. புளிமா 3. தேமாங்கனி

                                                                 பகுதி-IV.                                                                2×5=10

25. அ)

·        நாம் செய்கின்ற செயல்கள் பிறருக்குப் பயன்தரத்தக்கச் செயலாக இருத்தல் வேண்டும்.

·        "ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக”.

·        நம்மிடம் உள்ள தீய நெறிகளை, பண்புகளை நீக்க விரும்பினால் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

·        "போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக".

·        மெய்யறிவு நூல்களை ஆராய்ந்து ஞானம் பெற வேண்டும்.

·        "நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக".

·        நாம் மேற்கொண்ட நற்செயல்களாகிய விரதத்தைக் காக்க வேண்டும்.

என்று நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை யசோதர காவியம் கூறுகிறது.

 

ஆ.

·        போட்டி இன்றி வாழ்க்கை இல்லை. வலிகளின்றி வெற்றி இல்லை.

·        ஒன்றையொன்று அடுத்தும், படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று வாழ்க்கைக்கும் தான் என்பதை ந. பிச்சமூர்த்தி அவர்கள் கமுகுமரம் வாயிலாக உணர்த்துகிறார்.

26. அ. ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர். அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

ஆ. (மாதிரி விடை)

உலகையே புரட்டிப் போடும்

உன்னத வலிமை எழுதுகோலுக்கு உண்டு

செங்கோலின் வலிமையால் உயர்ந்ததை விட

எழுதுகோலின் வலிமையால்

உயர்ந்த நாடுகள் பல உண்டு

எழுத்தையும் போற்றுவோம்...

எழுதுகோலையும் போற்றுவோம்...

                                                                            பகுதி-V                                                            1×8=8

27. அ)

v  அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும். மதம் கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே அதிகளவில் வேண்டும்.

v   திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார்.

v  இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

மொழியில் சீர்திருத்தம்:

v  ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும், அவை எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார் பெரியார்.

v  மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில் '' என்பதை 'அய்' எனவும் '' என்பதை 'அவ்' எனவும் சீரமைத்தார்.

v  மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.

ஆ)

v  முன்னுரை

v  குழந்தைப் பருவமும் உலக வாழ்வும்

v  அனுபவமே கல்வி:

v  அன்பாக இரு

v  உனக்கான காற்றை நீயே உருவாக்கு

v  புத்தகங்களை நேசி

v  முடிவுரை

 பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை