10.ஆம் வகுப்பு – தமிழ் கட்டுரை
குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.
குறிப்புகள் : முன்னுரை- தமிழரின்
உணவுமுறைகள் தோய்தடுக்கும் தமிழர் உணவுகள் – மருந்தாகும் உணவுகள் - தமிழரின் உணவுமுறை – ஆரோக்கியமும் பாரம்பரியமும்
- முடிவுரை
முன்னுரை:
தமிழர் பண்பாட்டில்
உணவுக்கு முக்கியமான இடம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழர்கள்
வாழ்வில் உணவு கலாச்சாரத்துடனும் மருத்துவத்துடனும் நெருக்கமாக தொடர்புடையதாக
இருந்துள்ளது. பருவநிலை, நிலத்தோற்றம், வாழ்க்கை முறைகள் ஆகியவை தமிழர் உணவுமுறையை தீர்மானிக்கக் காரணமாகின்றன.
தமிழரின் உணவுமுறைகள்:
தமிழர் உணவுமுறை
நல்வாழ்க்கைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உணவில் சீரான சத்துக்கள்
கொண்ட உணவுப்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அதிகளவில் அரிசி, பருப்பு,
காய்கறிகள், பழங்கள், மஞ்சள்,
மிளகு, கொத்தமல்லி ஆகியவை பயன்பட்டன. காலை
உணவாக சிறுதானிய உணவுகள் உட்கொள்ளப்பட்டன, ஐவகை நிலங்களுக்கேற்ப உணவுமுறைகள்
இருந்தது குறிப்பிடத்தக்கது.
தோய்தடுக்கும் தமிழர்
உணவுகள்:
தமிழர் உணவில் நோய்தடுக்கும் பல்வேறு உணவுப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் விதமாக பல உணவுகள்
தயாரிக்கப்பட்டன.
ü நீரிழிவு மற்றும் கொழுப்புக்
குறைக்கும் உணவுகள் –
கீரைகள், அவல், கோதுமை,
தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள்.
ü தொற்றுநோய்களைத் தடுக்கும்
உணவுகள் – சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள், வெந்தயம்,
முருங்கை போன்றவை.
ü சிறந்த செரிமான
சக்தியை அளிக்கும் உணவுகள் – இஞ்சி, புளி,
பானகம், தயிர், பெருங்காயம்.
மருந்தாகும் உணவுகள்:
தமிழர் உணவு மருத்துவப் பண்புகளும் கொண்டிருந்தது. உடல் ஆரோக்கியத்தைக்
காக்கும், நோய்களைத் தடுக்கும் உணவுகளும் தமிழர்கள் உணவில்
இடம்பெற்றிருந்தன.
v நுரையீரல் ஆரோக்கியத்திற்கு
– புதினா, துளசி, வில்வ இலைச்
சாறு.
v நீரிழிவிற்கு – சிறுதானியங்கள்,
பாகற்காய், வெந்தயம்.
v உடல் சூட்டை தணிக்க
– நீர்மோர், நல்லெண்ணெய், வேப்பம்பூ
ரசம்.
v எலும்புகளுக்கு – முருங்கை
உணவுகள்.
முடிவுரை:
தமிழர் உணவுமுறை முற்றிலும்
ஆரோக்கியமானதாகவும், பாரம்பரிய மருத்துவத் தன்மை
கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது. இயற்கைக்கு ஏற்ப தமிழர்கள் பின்பற்றிய உணவுகள்,
அவர்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இருந்தன.
இதனைத் தொடர்ந்து பேணிப் போற்றுவதன் மூலம் நம் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி