10 TH STD TAMIL PUBLIC EXAM 3 MARK QUESTIONS

 


அரசுப்பொதுத்தேர்வு 3 மதிப்பெண் வினாக்கள்

பத்தாம் வகுப்பு தமிழ்

பகுதி-III   (மதிப்பெண்கள்:18)

செப்டம்பர் 2021

                                                                         பிரிவு-1                                                              2×3=6

29. உரைப்பத்தியைப் படித்து விளாக்களுக்கு விடை தருக.

  தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில்வகைப்பட்டவனவாகவுமிருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன

(அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?

(ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக      (இ) தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.

30. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

31. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

                                                                           பிரிவு -2                                                              2x3=6

32. "மகரந்தத் துளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய

       வாசனையுடன் வா," என்ற பாடல் அடிகளில்

(அ) அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

(ஆ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?

(இ) சுமந்துகொண்டு என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை அமைக்க.

33. மருவூர்ப்பாக்கக் கடைத்தெருவையும், உங்கள் ஊரில் உள்ள கடைத்தெருவையும் ஒப்பிட்டு மூன்று தொடர்கள் எழுதுக.

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "தண்டலை மயில்களாட" எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.    (அல்லது)

(ஆ) "அன்னை மொழியே" எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்

                                                                     பிரிவு – 3                                                               2x3=6

35. "கண்ணே கண்ணுறங்கு!

       காலையில் நீயெழும்பு!

       மாமழை பெய்கையிலே

       மாம்பூவே கண்ணுறங்கு!

       பாடினேன் தாலாட்டு!

       ஆடிஆடி ஓய்ந்துறங்கு!        இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

36. கவிஞர், தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக

37. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

      தியற்கை அறிந்து செயல்.                         -இக்குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு தருக.

மே 2022

                                                                     பிரிவு-1                                                              2×3=6

29. "புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது."

     -இது போல் இளம் பயிர் வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருசு.

     அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

(அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை ?

(ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது ?

(இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது ?

31. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

பிரிவு -2                                                              2x3-6

32. கம்பராமாயணம் நூற்குறிப்பு வரைக.

33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "அன்னை மொழியே" எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்.   (அல்லது)

(ஆ) "நவமணி வடக்க யில்போல்" எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்.

பிரிவு – 3                                                             2x3-6

35. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

    இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

36. தீவக அணியை விளக்கி, அதன் வகைகளை எழுதுக.

37. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

     அருவினையும் மாண்ட தமைச்சு.       -அலகிட்டு வாய்பாடு எழுதுக

ஜூலை  2022

பிரிவு – 1                                                             2x3-6

29. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம்சுட்டிப் பொருள் விளக்குக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

     பருப் பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக,

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(இ) பெய்த மழை -இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31. ஜெயகாந்தனின் திரைப்படப் படைப்புகளைக் கூறுக.

 

பிரிவு – 2                                                              2x3=6

32. பெருமாள் திருமொழி நூற் குறிப்பு வரைக.

33. பூவின் நிலைகளை வரிசைப்படுத்தி எழுதுக.

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "வாளால் அறுத்துச்" - எனத் தொடங்கும் குலசேகராழ்வார் பாடல்               (அல்லது)

(ஆ) "தூசும் துகிரும்" - எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.

   பிரிவு – 3                                                                    2x3=6

35. பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

     சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

36. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

37. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

      கல்லார் அறிவிலா தார்.     - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

மார்ச்  2023

பிரிவு – 1                                                                   2x3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதைப் பற்றி எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

      "போலச்செய்தல்" பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்று கொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

(அ) எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது ?

(ஆ) பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

(இ) யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது ?

31. சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வதுபோல் ஓர் உரையாடல் எழுதுக

                                                                  பிரிவு -2                                                                      2x3-6

34 -ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32. "சித்தாளின் மனச்சுமைகள்

       செங்கற்கள் அறியாது"                    -இடஞ்சுட்டிப் பொருள் தருக.

33. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "அருளைப் பெருக்கி" எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்.    (அல்லது)

(ஆ) "மாற்றம்" எனத்தொடங்கி "சாலை" என முடியும் காலக்கணிதப் பாடல்.

           பிரிவு -3                                                                 2x3-6

35 . தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி வரும் வழியில் ஆடு  மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர்  நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

36. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

      கோலொடு நின்றான் இரவு            -  குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

37. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

     நாள்தொறும் நாடு கெடும்.                 -இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

ஜுன்  2023

பிரிவு – 1                                                                   2x3=6

29. 'சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே' என்பதைக் குறித்து எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

    ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

(அ) ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன ?

(ஆ) தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

(இ) மொழிபெயர்ப்பின் பயன் என்ன ?

31. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

பிரிவு -2                                                        2x3=6

32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன் ? விளக்குக.

33. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "அன்னை மொழியே" எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்.      (அல்லது)

(ஆ) "தூசும் துகிரும்" எனத் தொடங்கும் சிலப்பதிகாரச் செய்யுள்.

பிரிவு -3                                                        2x3=6

35. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

     அருவினையும் மாண்ட தமைச்சு.              -   இக்குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு தருக.

36. தற்குறிப்பேற்ற அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

37. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

      இன்மை புகுத்தி விடும். -இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி எழுதுக.

ஏப்ரல்  2024

பிரிவு -1                                                          2x3=6

29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

        பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

(அ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(ஆ) பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.

(இ) பெய்த மழை வினைத்தொகையாக மாற்றுக.

31. நீங்கள் அறிந்த நிகழ்கலைக் கலைஞர் ஒருவரைப் பற்றியும் அவரது கலைத்திறன் பற்றியும் எழுதுக.

பிரிவு -2                                                                 2x3-6

32. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

33. நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக.

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "தென்னன் " எனத் தொடங்கி "முடிதாழ வாழ்த்துவமே" - என முடியும் அன்னை மொழியே பாடல்.

(அல்லது)

(ஆ) "வாளால் அறுத்துச் சுடினும்" - எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்.

பிரிவு – 3                                                              2×3=6

35. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது. பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும்'.       இக்கூற்றில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுக்கு

36. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

     பொருளல்ல தில்லை பொருள்.   -இத்திருக்குறளில் பயின்று வரும் அணியைக் குறிப்பிட்டு விளக்குக.

37. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

     கல்லார் அறிவிலா தார்.   - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

ஜூன்  2024

பிரிவு -1                                                          2x3=6

29. உரையைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

    (ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன்.) இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மைதானே! இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன்.) இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்)

வினாக்கள் :

(அ) இந்தியாவின் முதுகெலும்பு எது ?

(ஆ) வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம் எது ?

(இ) இந்தியாவிற்குத் தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது ?

30. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

31. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'.

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

பிரிவு -2                                                         2x3=6

32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன் ?

33. 'முதல்மழை விழுந்ததும்' என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார் ?

34. (அ) 'அன்னை ' எனத் தொடங்கி, 'பேரரசே' என முடியும் பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக.

(அல்லது)

(ஆ) "நவமணி" எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.

         பிரிவு – 3                                                              2x3=6

35. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

     பண்பும் பயனும் அது.                 -இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.

36. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியிலுள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளை எழுதுக.

37. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

     அருவினையும் மாண்ட தமைச்சு.        - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

DOWNLOAD

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை