6 TH STD TAMIL FIRST MID TERM TEST QUESTION PAPER & ANSWER KEY

 


முதல் இடைப்பருவத்தேர்வு 2026, இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்

6.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                                   3×1=3

1. . சமூகம்

2. ஆ. பழமை

3. ஆ. ஏதிலிகளாக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.                                                                                                          5×1=5

1. ஆர்டிக் ஆலா

2. டாக்டர் சலீம் அலி

3. துருவப்பகுதி

4. தோள்

5. தாள்

III. சொற்றொடரில் அமைத்து எழுது                                                                                              2×1 1/2=3

1. நாள்தோறும் நூல்களைப் படிக்க வேண்டும்  

2. தமிழ் தனிச்சிறப்புமிக்க மொழி ஆகும்   ( மாதிரி விடைகள்)

IV. பொருத்துக                                                                                                                                            4×1=4

1. விளைவுக்கு – நீர்

2. இளமைக்கு – பால்

3. பழமையான இலக்கண நூல் – தொல்காப்பியம்

4. மொழி கணினியின் வடிவம் - எண்கள்

V. வினாக்களுக்கு விடையளி (ஐந்தனுக்கு மட்டும்)

1.

1.        சிலப்பதிகாரம்

2.       மணிமேகலை

3.       சீவக சிந்தாமணி

4.       வளையாபதி

5.       குண்டலகேசி

 

2.

ü  தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்

ü  இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும்.

ü  எனவே தமிழ் என் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது

3. உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

4. அமுதம்  , நிலவு, மணம்.

5. தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.

அவை:

1. எழுத்து இலக்கணம்  2. சொல் இலக்கணம்  3. பொருள் இலக்கணம் 4. யாப்பு இலக்கணம்

5. அணி இலக்கணம்

6. வல்லினம், மெல்லினம், இடையினம்

7. அ. ரு   ஆ. க0

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                                                             6

     தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

     தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

     தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

     தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

     தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

     தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

VII. சிறுவினாவிற்கு ஏற்ற விடையைத் தருக                                                                                        1×4=4

1. அஃறிணை:

ü  திணை இரண்டு. அவை, உயர்திணை, அஃறிணை.

ü  உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என்றுதான் அமைய வேண்டும்.

ü  தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயரிட்டனர்.

பாகற்காய்:

ü  பாகற்காய் கசப்புச் சுவையுடையது.

ü  கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு (பாகு), அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) எனக் கூறுகின்றனர். 

2.

1.        குறில் எழுத்துகள் - 1 மாத்திரை

2.       நெடில் எழுத்துகள் 2 மாத்திரை

3.       மெய் எழுத்துகள் ½ மாத்திரை

4.       ஆய்த எழுத்து - ½ மாத்திரை

VIII. அகரவரிசை                                                                                                                                          2

அழகு, ஆற்றல், இனிமை, ஈடு, உரிமை, ஊக்கம், எளிதாய், ஏடுகள், ஐம்பூதம், ஒற்றுமை, ஓலை, ஔடதம்

IX. விடுப்பு விண்ணப்பம்                                                                                                           1×8=8

அனுப்புநர்

வா. நிறைமதி

ஆறாம் வகுப்பு '' பிரிவு,

அரசு மேல்நிலைப்பள்ளி,

திருத்தணி

பெறுநர்

வகுப்பாசிரியர் அவர்கள்,

ஆறாம் வகுப்பு '' பிரிவு,

அரசு மேல்நிலைப்பள்ளி,

திருத்தணி

ஐயா,

வணக்கம், நான் எனது உறவினரின் ஊரில் நடைபெற உள்ள கோயில் திருவிழாவிற்குச் செல்ல இருப்பதால் எனக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு,

தங்கள் கீழ்ப்பணிந்த மாணவி,

வா. நிறைமதி

 

இடம் : திருத்தணி

நாள் : 14.08.2026

 

பெற்றோர் கையொப்பம்

. வாசு

X. இரண்டு சொற்களை இனையத்துப் புதிய சொற்களை உருவாக்குக

தமிழ்மொழி, நீதி நூல், தமிழ் நூல், நீதிமொழி, மணி மொழி, எழுதுகோல், மணிநீதி, நூல் எழுது, மாலை எழுது, மீன்கண், நூல் வெளி, வெளி மொழி, தமிழ்மணி, கண்மணி, மணிமாலை, தமிழ்மாலை, நூல்மாலை, விண்வெளி

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை