7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பொருத்துக
1. சீவன் - அ) உண்மை
2. சத்தியம் - ஆ) உயிர்
3. தரிசனம்- இ) உலகம்
4. வையம்- ஈ) காட்சி
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
2. மீராவின் இயற்பெயர்
அ) மீ. இராஜகோபாலன் ஆ) மீ.
இராசேந்திரன் இ) மீ. இராஜசேகர் ஈ) மீ. இராஜவர்மன்
3. மீ. இராசேந்திரன் நடத்திய
இதழ்
அ) நவசக்தி ஆ) ஊசிகள் இ) அன்னம்
விடு தூது ஈ) நாரை விடு தூது
4. ஊசிகள் ,குக்கூ, வா இந்த பக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்
அ) மீ. இராஜகோபாலன் ஆ) மீ. இராசேந்திரன்
இ) மீ. இராஜசேகர் ஈ) மீ. இராஜவர்மன்
5. கோடையும் வசந்தமும் என்ற நூலை
எழுதியவர்
அ) மீ. இராஜகோபாலன் ஆ) மீ.
இராசேந்திரன் இ) மீ. இராஜசேகர் ஈ) மீ. இராஜவர்மன்
6. கவிஞர் மீரா உறக்கம் என்று
குறிப்பிடுவது---
அ) வறுமை ஆ) அறியாமை இ) பொறாமை ஈ)
சினம்
7. தூக்கிலிடப்படும் கடைசி
நேரத்திலும் விடுதலை குறித்து கனவு கண்டவர்
அ) திருப்பூர் குமரன் ஆ) பகத்சிங்
இ) கோபாலகிருஷ்ண கோகலே ஈ) பால கங்காதர
திலகர்
8. காட்டை+எரித்து=?
அ) காட்டைஎரித்து ஆ)
காட்டையெரித்து இ) காடுஎரித்து ஈ) காடுயெரித்து
9. தேசியம் காத்த செம்மல் என்று
போற்றப்படுபவர்
அ) காமராசர் ஆ) வ.உ.சி இ)
முத்துராமலிங்க தேவர் ஈ) தந்தை பெரியார்
10. முத்துராமலிங்கத் தேவர்
பிறந்த ஊர்
அ) சிவகங்கை ஆ) நெற்கட்டான் செவ்வல் இ) பசும்பொன் ஈ) கீழடி
11. "சுத்த தியாகி"
என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர்
அ) காமராசர் ஆ) அம்பேத்கர் இ) அயோத்திதாச பண்டிதர் ஈ) தந்தை பெரியார்
12. முத்துராமலிங்கத் தேவர்
பிறந்த ஆண்டு
அ) 1906 ஆ) 1907 இ) 1908 ஈ) 1909
13. முத்துராமலிங்கத் தேவர்
பிறந்த மாவட்டம்
அ) மதுரை ஆ) திருநெல்வேலி இ) சிவகங்கை ஈ) இராமநாதபுரம்
14. முத்துராமலிங்கத் தேவரின்
தந்தை பெயர்
அ) உக்கிரபாண்டி தேவர் ஆ) குத்தால
தேவர் இ) மாயாண்டி தேவர் ஈ) சிவசங்கர தேவர்
15. முத்துராமலிங்கத் தேவரின்
தாயார் பெயர்
அ) சிவகாமி அம்மையார் ஆ) முத்தரசி
அம்மையார்
இ) இலட்சுமி அம்மையார் ஈ)
இந்திராணி அம்மையார்
16. முத்துராமலிங்கத் தேவர் தன்
தொடக்க கல்வியை பயின்ற இடம்
அ) மதுரை ஆ) கமுதி இ) இராமநாதபுரம் ஈ) சிவகாசி
17. இராமநாதபுரத்தில்----நோய்
பரவியதால் முத்துராமலிங்க தேவரின் படிப்பு பாதியில் நின்றது
அ) மலேரியா ஆ) பிளேக் இ) டெங்கு ஈ)
மஞ்சள் காமாலை
18. முத்துராமலிங்கத் தேவர்
-----, -----ஆகிய இரு மொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன்
பெற்றிருந்தார்
அ) தமிழ்,
தெலுங்கு ஆ) தமிழ், ஆங்கிலம் இ) தமிழ், மலையாளம்
ஈ) தமிழ் உருது
19. கூற்று 1: முத்துராமலிங்கத் தேவரின் வேற உரையை கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு
எதிராக வீறு கொண்டு எழுந்தனர்
கூற்று 2:
ஆங்கிலேய அரசாங்கம் அவரைச சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு சட்டம்
போட்டது
அ) கூற்று 1 சரி, 2 தவறு ஆ ) கூற்று 1
தவறு , 2 சரி
இ) கூற்று 1 மற்றும் 2 தவறு ஈ) கூற்று 1
மற்றும் 2 சரி
20. வட இந்தியாவில் வாய்ப்பூட்டு
சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் யார்?
அ) அம்பேத்கர் ஆ) கோபாலகிருஷ்ண கோகலே இ) பால கங்காதர திலகர் ஈ)
காந்தியடிகள்
21. " தேசியம் காத்த
செம்மல் "என்று முத்துராமலிங்கத் தேவரை பாராட்டியவர் யார்?
அ) பெரியார் ஆ) அம்பேத்கர் இ) திரு வி. க ஈ) அயோத்தி தாசர்
22. வங்கச் சிங்கம் என்று
போற்றப்பட்டவர்
அ) நேதாஜி ஆ) காந்தியடிகள் இ)
திலகர் ஈ) கோகலே
23. முத்துராமலிங்க தேவர் யாரை
தமது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்?
அ) நேதாஜி ஆ) காந்தியடிகள் இ)
திலகர் ஈ) கோகலே
24. நேதாஜியை தனது அரசியல்
குருவாக ஏற்றுக் கொண்ட தமிழகத் தலைவர்
அ) பெரியார் ஆ) வ உ சி இ) முத்துராமலிங்கத் தேவர் ஈ) அயோத்திதாசர்
25. நேதாஜி மதுரைக்கு வருகை தந்த
ஆண்டு
அ) 1936 ஆ) 1937 இ) 1938 ஈ) 1939
26. இந்திய தேசிய இராணுவத்தைத்
தொடங்கியவர்
அ) நேதாஜி ஆ) காந்தியடிகள் இ)
திலகர் ஈ) கோகலே
27. முத்துராமலிங்கத் தேவர்
விடுதலைக்குப் பிறகு நடத்திய வார இதழின் பெயர்
அ) நவசக்தி ஆ) இந்தியா இ) நேதாஜி ஈ) நாட்டுப்பற்று
28. முத்துராமலிங்கத் தேவர்
முதன் முதலில் உரையாற்றிய ஊர்
அ) கமுதி ஆ) இராமநாதபுரம் இ)
சாயல்குடி ஈ) மணல்மேடு
29. இந்திய அரசு முத்துராமலிங்க
தேவருக்கு தபால் தலை வெளியிட்ட ஆண்டு
அ) 1995 ஆ) 1996 இ) 1997 ஈ) 1998
30. முத்துராமலிங்கத் தேவரின்
வீரர்களுக்கு பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்று மகிழ்ந்த தலைவர்
அ) காமராசர் ஆ) காந்தியடிகள் இ) வ உ சி ஈ) சத்தியமூர்த்தி
31. முத்துராமலிங்கத் தேவர்
பேசத் தொடங்கியதும் அது சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று புகழ்ந்துரைத்த
தலைவர்
அ) அறிஞர் அண்ணா ஆ) பெரியார் இ)
நேதாஜி ஈ) அம்பேத்கர்
32. முத்துராமலிங்க தேவரின்
பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது ; உதடுகளில் இருந்து
அல்ல உள்ளத்தால் இதிலும் பற்றற்று உண்மையான பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி
விடுவது அவர் வழக்கம் என்று பாராட்டிய தலைவர்
அ) அறிஞர் அண்ணா ஆ) பெரியார் இ)
இராஜாஜி ஈ) அம்பேத்கர்
33. 1937 ல் நடைபெற்ற சட்டமன்றத்
தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் யாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்?
அ) பாஸ்கர சேதுபதி ஆ) சண்முக
ராஜேஸ்வர சேதுபதி
இ) ராஜேஸ்வர சேதுபதி ஈ) ஜவகர் சேதுபதி
34. முத்துராமலிங்க தேவர் எந்த
ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்?
அ) 1942 ஆ) 1944 இ) 1946 ஈ) 1948
35. -----ல் நடைபெற்ற
நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நிலை குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் முத்துராமலிங்கத் தேவர்
தேர்தலில் வெற்றி பெற்றார்
அ) 1962 ஆ) 1963 இ) 1964 ஈ) 1965
36. முத்துராமலிங்கத் தேவர் 1934 ஆம் ஆண்டு மே 12 ,13 ஆகிய தேதிகளில் கமுதியில் எந்த
சட்டத்தை எதிர்த்து மாநாட்டை நடத்தினார்?
அ) வாய்ப்பூட்டுச் சட்டம் ஆ)
குற்றப் பரம்பரை சட்டம்
இ) சிறை நிரப்பும் சட்டம் ஈ)
ஆங்கிலேய எதிர்ப்புச் சட்டம்
37. குற்றப்பரம்பரை சட்டம்
நீக்கப்பட்ட ஆண்டு
அ) 1948 ஆ) 1949 இ) 1951 ஈ) 1952
38. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலய நுழைவுப்
போராட்டம் நடைபெற்ற இருந்த ஆண்டு
அ) 1939 ஆ) 1940 இ) 1941 ஈ) 1942
39. 1939 ஆம் ஆண்டு ஜூலை திங்கள்
எட்டாம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த
முயன்றவர்
அ) முத்துராமலிங்கத் தேவர் ஆ)
மதுரை வைத்தியநாத ஐயர்
இ) மதுரை சோமசுந்தர ஐயர் ஈ) மதுரை
சுவாமிநாத ஐயர்
40. விவசாயிகளின் துயர் துடைக்க ”ஜமீன் விவசாயிகள் சங்கம்” என்ற
அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
அ) முத்துராமலிங்கத் தேவர் ஆ)
பெரியார் இ) அம்பேத்கர் ஈ) வ உ சிதம்பரனார்
41. முத்துராமலிங்க தேவர்
விவசாயிகளின் நன்மைக்காக ஏற்படுத்திய அமைப்பு
அ) தமிழக கூட்டுறவு பண்டகசாலை ஆ)
இந்திய கூட்டுறவு பண்டகசாலை
இ) பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலை ஈ) தேசிய
கூட்டுறவு பண்டகசாலை
42. முத்துராமலிங்கத் தேவர் 1938 ஆம் ஆண்டு யாருடன் இணைந்து தொழிலாளர் உரிமைக்காக போராடினார்?
அ) ப.ஜீவானந்தம் ஆ) சத்தியமூர்த்தி
இ) சோமலை ஈ) நேசமணி
43. முத்துராமலிங்கத் தேவர்
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?
அ) திகார் ஆ) டெல்லி இ) நேபாளம் ஈ) தாமோ இராணுவச்சிறை
44. முத்துராமலிங்கத் தேவர்
இவ்வுலகை விட்டு நீங்கிய ஆண்டு
அ) 1963 ஆ) 1964 இ) 1965 ஈ) 1966
45. வ உ சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக தொடங்கிய கப்பல் நிறுவனம்
அ) சுதேசி ஆ) புளூவேவ் இ) சீகுருஸ்
ஈ) இந்தியா
46. சுதந்திரம் எனது பிறப்புரிமை
அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கியவர்
அ) பால கங்காதர திலகர் ஆ) முத்துராமலிங்கத் தேவர் இ) நேதாஜி ஈ) கோகலே
47. எந்த நூலை படித்து என்
தொல்லையெல்லாம் மறந்தேன் என்று வ உ சி கூறினார்?
அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள்
இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
48. சொல்லின் செல்வர் என்று
போற்றப்படுபவர்
அ) வ உ சி ஆ) ரா பி சேதுப்பிள்ளை
இ) உ வே சாமிநாத ஐயர் ஈ) திருவிக
49. சாகித்திய அகாதமி விருது
பெற்ற ராபி சேது பிள்ளையின் முதல் நூல்
அ) தமிழ் சுவை ஆ) தமிழ் சுவை இ)
தமிழ் இன்பம் ஈ) தமிழ் பண்பாடு
50. நன்னூலை இயற்றியவர்
அ) உமாபதி சிவம் ஆ) வச்சணந்தி
அடிகள் இ) பவணந்தி அடிகள் ஈ) நற்கவிராச நம்பி
51. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு
மொழிகளின் எண்ணிக்கை
அ) 42 ஆ) 43 இ) 44 ஈ) 45
52. பொருத்துக
1. ஆ - அ) இறைச்சி
2. ஊ - ஆ) பசு
3. ஏ - இ) மதகுநீர்
4. ஓ - ஈ) அம்பு
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
53. பகுபதமாக அமையும்
பெயர்ச்சொல்
அ) வினைப் பகுபதம் ஆ) பெயர்
பகுபதம் இ) வினையெச்சம் ஈ) பெயரெச்சம்
54. பெயர்ச்சொல் எத்தனை
வகைப்படும்?
அ) 4
ஆ) 6 இ) 8 ஈ) 10
55. உழவன் என்பது
அ) பெயர் பகுபதம் ஆ):வினைப்
பகுபதம் இ) இடைப்பகுபதம் ஈ) உரிப்பகுபதம்
56. வினைப் பகுபதத்தை தேர்ந்தெடு
அ) பண்ணன்
ஆ) இனியன் இ) உழவன் ஈ) உண்டான்
57. பகுபத உறுப்புகள் எத்தனை
வகைப்படும்?
அ) 5 ஆ) 6 இ) 7 ஈ) 8
58. பகுபதத்தின் முதலில் அமைந்து
முதன்மையான பொருளைத் தருவது
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ)
சந்தி
59. பகுபதத்தில் இறுதியில்
அமைவது
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
60. பகுபதத்தில் திணை, பால், எண் இடம் ஆகிவற்றையோ முற்று ,எச்சம் ஆகிவிட்டதோ காட்டும் உறுப்பு
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ)
சந்தி
61. பகுதிக்கும் விகுதிக்கும்
இடையில் அமைந்து காலமல்லது எதிர்மறைப் பொருளை உணர்த்துவது
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ)
சந்தி
62. பகுதிக்கும் இடைநிலைக்கும்
இடையே இடம்பெறும் மெய்யெழுத்து
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ)
சந்தி
63. இடைநிலைக்கும் விகுதிக்கும்
இடையே இடம்பெறும் அசைச்சொல்
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ)
சாரியை
64. பகுதி சந்தி இடைநிலை
முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்
அ) இயல்பெ ஆ) விகுதி இ) இடைநிலை ஈ)
விகாரம்
65. காலத்தைக் காட்டும் பகுபத
உறுப்பு
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
66. BALLAD என்பதன் தமிழாக்கம்
அ) கதைப்பாடல் ஆ) சோகப்பாடல் இ) பேச்சாற்றல் ஈ) ஒப்பாரி பாடல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி