7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பேறு பெற்றவர் என்று கண்ணதாசன் குறிப்பிடுபவர்
அ) அன்பைப் பெற்றவர் ஆ) அருளைப் பெற்றவர்
இ) உறவைப் பெற்றவர் ஈ)
இரக்கம் உடையவர்
2. உலகம்-கலகம் என்பதில் வரும் நயம்
அ) மோனை ஆ) எதுகை இ) இயைபு ஈ) முரண்
3. முரண் நயத்தைத் தேர்ந்தெடு
அ) இரக்கம் - இதுதான் ஆ) உலகம் - கலகம்
இ) அறம் வேண்டும் - பெற வேண்டும் ஈ) உயர்வும் - தாழ்வும்
4. கண்ணதாசனின் இயற்பெயர்
அ) இளவரசு ஆ) சோமசுந்தரம்
இ) சுப்பிரமணியன் ஈ) முத்தையா
5. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது
அறிவுரைகளையும் கூறும் நூல்
அ) தேம்பாவணி ஆ) இரட்சணிய யாத்திரிகம் இ) இயேசு காவியம் ஈ) இயேசு புராணம்
6. "இமைக்கும் போதில்" என்னும் தொடர் குறிப்பிடுவது ------ காலம்
அ) தூங்கும் ஆ)
விழித்திருக்கும் இ) குறுகிய ஈ) நீண்ட
7. வீடு முழுக்க வானம் , மகளுக்கு
சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியவர் யார்?
அ) உமா மகேஸ்வரி ஆ) சே பிருந்தா இ) வி பிருந்தா ஈ) வளர்மதி
8. 'தன்னை அறிதல் ' என்னும்
கவிதையில் குயில் , காகம் இவற்றைக் கொண்டு கவிஞர் பிருந்தா
எதை உணர்த்துகிறார்?
அ) அன்பு ஆ) உறவு இ) பாசம் ஈ) தன்னம்பிக்கை
9. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள
மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்த தலைவர்
அ) தந்தை பெரியார் ஆ) அம்பேத்கர் இ) காயிதே மில்லத் ஈ) முகைதீன்
10. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு
அ) 1962 ஆ) 1963 இ) 1964 ஈ)
1965
11. காயிதே மில்லத்தின் இயற்பெயர்
அ) முகமது இர்ஃபான் ஆ) முகமது யூசுப் இ) முகமது இசுமாயில் ஈ) முகமது அக்பர்
12. காயிதே மில்லத் என்ற சொல்லின் பொருள்
அ) அறிவியல் அறிஞர் ஆ) ஆற்றல் மையம் இ) சமுதாய வழிகாட்டி ஈ) சமுதாய
தூண்
13. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை
அகற்ற ஒளிக்கதிராக காயிதே மில்லத் முகமது இசுமாயில் அவர்கள் திகழ்கிறார் என்று
கூறியவர்
அ) தந்தை பெரியார் ஆ) அறிஞர் அண்ணா இ) அப்துல் கலாம் ஈ) அம்பேத்கர்
14. காயிதே மில்லத் 1946 முதல்
1952 வரை வகித்த பதவி
அ) சென்னை மாகாண ஆளுநர் ஆ) சென்னை மாகாண ஆட்சியர்
இ) சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஈ) சென்னை மாகாண மாநகராட்சி
தலைவர்
15. திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி தொடங்க
காரணமாக இருந்தவர்
அ) காயிதே மில்லத் ஆ) முஸ்தபா இ) முகமது யூசுப் ஈ) வாசிம் அக்ரம்
16. காயிதே மில்லத் கேரளாவில் ----- கல்லூரியைத்
தொடங்க்க் காரணமாக இருந்தார்
அ) திருவனந்தபுரம் ஆ) ஃபரூக் இ)
அகமது ஈ) கோட்டயம்
17. எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுத
கிடைப்பது
அ) எதிர்+ரொலித்தது ஆ) எதி+ரொலித்தது இ) எதிர்+ஒலித்தது ஈ)
எதில்+ஒலித்தது
18. வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள் , கடலோர வீடு உள்ளிட்ட நூல்களை
எழுதியவர் யார்?
அ) பொன்வண்ணன் ஆ) பூ வண்ணன் இ) தேன்வண்ணன் ஈ) பாவண்ணன்
19. பாவண்ணன் எழுதாத நூல் எது?
அ) கடலோர வீடு ஆ) பாய்மரக்கப்பல் இ) மீசைக்கார பூனை ஈ) பயணங்கள்
முடிவதில்லை
20. வினா எத்தனை வகைப்படும்?
அ) ஐந்து ஆ) ஆறு இ) ஏழு ஈ)
எட்டு
21. விடை எத்தனை வகைப்படும்?
அ) ஐந்து ஆ) ஆறு இ) ஏழு ஈ)
எட்டு
22. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு
கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறிவினா
23. பிறருக்கு ஒரு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு
கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறிவினா
24. தான் விடை அறிந்திருந்தும் , அவ்விடை பிறருக்குத் தெரியுமா? என்பதை அறியும் பொருட்டுக்
கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறிவினா
25. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறிவினா
26. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக கேட்பது
அ) கொளல் வினா ஆ) அறியா வினா இ) ஏவல் வினா ஈ) அறிவினா
27. ஐயம் நீங்கி தெளிவு பெறுவதற்காக கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) ஐய வினா
28. மாணவரிடம் "சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
யார் ?" என்று ஆசிரியர் கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறிவினா
29. மாணவர் ஆசிரியரிடம் 'சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் யார் ?' என்று கேட்பது
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறியா வினா
30. மணிமேகலையை இயற்றியது சாத்தனாரா? இளங்கோவடிகளா ? என்று கேட்பது
அ) கொளல் வினா ஆ) ஐய வினா
இ) ஏவல் வினா ஈ) அறிவினா
31. வெளிப்படை விடைகள் மொத்தம் எத்தனை?
அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து ஈ) ஆறு
32. குறிப்பு விடைகள் மொத்தம் எத்தனை?
அ) மூன்று ஆ) நான்கு இ) ஐந்து ஈ) ஆறு
33. உடன்பட்டு கூறும் விடை
அ) சுட்டுவிடை ஆ) மறைவிடை
இ) நேர் விடை ஈ) ஏவல் விடை
34. நீ நன்றாக ஆடுவாயா? என்ற வினாவிற்கு, நான் நன்றாக பாடுவேன் என்று விடை
அளிப்பது
அ) ஏவல் விடை ஆ) மறை விடை
இ) சுட்டு விடை ஈ) இனமொழி விடை
35. ஏன் மாம்பழம் சாப்பிடவில்லை ? என்ற வினாவிற்கு, எனக்கு வயிறு வலித்தது என்று
விடையளிப்பது
அ) இனமொழி விடை ஆ) உற்றது உரைத்தல் விடை இ) உறுவது கூறல் விடை
ஈ) ஏவல் விடை
36. நீ ஏன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளவில்லை ?
என்ற வினாவிற்கு, கால் வலிக்கும் என்று விடை
அளிப்பது
அ) இனமொழி விடை ஆ) உற்றது உரைத்தல் விடை இ) உறுவது கூறல் விடை
ஈ) ஏவல் விடை
37. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவை கேட்பது
அ) இனமொழி விடை ஆ) உற்றது
உரைத்தல் விடை
இ) வினா எதிர் வினாதல் விடை ஈ) ஏவல் விடை
38. மதுரைக்கு செல்லும் வழி யாது? என்ற வினாவிற்கு இதோ இதுதான்
எனக்கூறுவது
அ) சுட்டுவிடை ஆ) மறைவிடை
இ) நேர்விடை ஈ) ஏவல் விடை
39. இதை உண்கிறாயா ? என்ற
வினாவிற்கு , ' உண்ண மாட்டேன் ' என்று
கூறுவது
அ) மறை விடை ஆ) உற்றது
உரைத்தல் விடை இ) உறுவது கூறல் விடை ஈ) ஏவல் விடை
40. குயிலுக்கு கூடு கட்ட தெரியாது. ------
காக்கையின் கூட்டில் முட்டையிடும்
அ) எனவே ஆ) ஏனெனில் இ) அதனால் ஈ) அதுபோல
41. அதிக அளவில் மரங்களின் வளர்ப்போம். ------
மரங்கள் தான் மழைக்கு அடிப்படை
அ) எனவே ஆ) ஏனெனில் இ) அதனால் ஈ) அதுபோல
42. ----- சொற்களைப் பேச வேண்டும்?
அ) என்ன ஆ) எங்கு இ) எப்படி ஈ) எத்தகைய
43. Dignity என்பதன் தமிழாக்கம்
அ) கொள்கை ஆ) கண்ணியம் இ)
ஈகை ஈ) எளிமை
44. Doctrine என்பதன் தமிழாக்கம்
அ) கொள்கை ஆ) கண்ணியம் இ)
ஈகை ஈ) எளிமை
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி