7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பொருத்துக
1. வைப்புழி - அ) கல்வி
2. விச்சை - ஆ) சேமிப்பிடம்
3. வவ்வார் - இ) செல்வம்
4. . எச்சம் - ஈ) கவர முடியாமை
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
2. நாலடியாரை இயற்றியவர்கள்
அ) நாயன்மார்கள் ஆ) ஆழ்வார்கள் இ)
சமண முனிவர்கள் ஈ) புத்த துறவிகள்
3. அழியாச் செல்வம் என்று
நாலடியார் குறிப்பிடுவது
அ) அன்பு ஆ) வீரம் இ)
கல்வி ஈ) கொடை
4. நாலடியார்----- நூல்களுள்
ஒன்று
அ) பதினெண்மேற்கணக்கு ஆ) பதினெண் கீழ்க்கணக்கு
இ) சங்க இலக்கியம் ஈ) காப்பியம்
5. நாலடியார் எத்தனை
வெண்பாக்களால் ஆனது?
அ) 100 ஆ) 400 இ) 200 ஈ) 1330
6. வேளாண் வேதம் என்று
அழைக்கப்படும் நூல்
அ) திருக்குறள் ஆ) திருமுறைகள் இ) திவ்ய பிரபந்தம் ஈ)
நாலடியார்
7. நாலும்
இரண்டும் சொல்லுக்குறுதி என்ற தொடரில் வரும் நூல்கள் குறிப்பன முறையே
அ) திருக்குறள்,
நாலடியார் ஆ) நாலடியார், திருக்குறள்
இ) கம்பராமாயணம் ,
நாலடியார் ஈ) நாலடியார், சிலப்பதிகாரம்
8. ஒருவர் தம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ) வீடு ஆ) கல்வி
இ) பொருள் ஈ) அணிகலன்
9. கதை பாடல் வடிவில்
வெளிப்படுத்தப்படும் இலக்கியம்
அ) சங்க இலக்கியம் ஆ) தொடர்நிலைச்
செய்யுள்
இ) மேன்மக்கள் இலக்கியம் ஈ) முச்சந்தி
இலக்கியம்
10. தேயிலைத் தோட்டப்பாட்டு
------- என்றும் அழைக்கப்படுகிறது.
அ) உழைப்பாளர் பாடல்கள் ஆ)
அகதிகளின் பாடல்கள்
இ) பாரத மக்களின் பரிதாப
சிந்து ஈ) தென்னக மக்களின் பரிதாப
சிந்து
11. தேயிலை தோட்டப் பாடலின்
ஆசிரியர்
அ) பீர்முகமது ஆ) முகமது
ராவுத்தர் இ) முகமது இப்ராஹிம் ஈ) முஹம்மது ஜாஃபர்
12. மக்களுக்கு வருமானம்
கொடுத்து அவர்களை காப்பாற்றியது
அ) பற்று வரவு ஆ) சிக்கனம் இ)
கைத்தொழில் ஈ) கப்பல்
13. முற்காலத்தில் இந்திய மக்கள்
துன்பப்பட்டதற்கு காரணம்---- இல்லாமை
அ) விளையாட்டு ஆ) கல்வி
இ) கலைகள் ஈ) முயற்சி
14. குறை+எனவே=?
அ) குறைஎனவே ஆ) குறையனவே இ)
குறைவனவே இ) குறையெனவே
15. உலகில் உள்ள உயிரினங்களில்
தனித்தன்மை உடையது
அ) பறவைகள் ஆ) விலங்குகள் இ) மனிதன் ஈ)
தாவரங்கள்
15. காலத்தில் வறுமையை உணர்த்த
திருவள்ளுவர் எழுதிய அதிகாரங்கள்
அ) ஆக்கமுடைமை ,வஊக்கமுடைமை ஆ) காலம் அறிதல், கல்வி
இ) அன்புடைமை, அறிவுடைமை
ஈ) நாணுடைமை, ஒப்புரவு ஒழுகுதல்
16. கேடில் விழுச் செல்வம் என்று
கல்வியை புகழ்ந்தவர்
அ) அவ்வையார் ஆ) பாரதியார் இ)
திருவள்ளுவர் ஈ) இளங்கோவடிகள்
17. விளக்கு இல்லாத வீடு என்று
குறிப்பிடப்படுவது
அ) செல்வம் இல்லாத நாடு ஆ)
கல்வியில்லாத நாடு
இ) ஒற்றுமை இல்லாத நாடு ஈ) அன்பு
இல்லாத நாடு
18. கல்வி கற்காதவர்களை
திருவள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
அ) மண் ஆ) மரம் இ) விலங்கு
ஈ) காற்று
19. கற்றாரோடு ஏனை யவர் -
என்பதில் வள்ளுவர் குறிப்பிடும் ஏனையவர் யார்?
அ) அன்பு இல்லாதவர்
ஆ):அன்பில்லாதவர் இ) கொடை அளிக்காதவர் ஈ) கல்லாதவர்
20. நன்றின்பால் உய்ப்பது அறிவு
- என்பதில் திருக்குறள் வலியுறுத்துவது
அ) தினமும் பாலை அருந்த வேண்டும் ஆ)
நல்ல வழியில் செல்ல வேண்டும்
இ) நல்ல வழியில் செல்லக் கூடாது ஈ)
நல்ல செயல்களை தானாகவே செய்ய வேண்டும்
21. " பள்ளித்தலமனைத்தும்
கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்
கொட்டுவோம் " என்று பாடியவர்
அ) வைரமுத்து ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) பாரதியார்
22. கற்க கசடற என்ற
திருக்குறளில் வள்ளுவர் வலியுறுத்துவது
அ) ஆர்வமுடன் படித்தல் ஆ)
ஆழ்ந்து படித்தல் இ) வேகமாக படித்தல் ஈ):மெதுவாக படித்தல்
23. வள்ளுவர் உள்ளம், திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர்
அ) சாலமன் பாப்பையா ஆ) கோவிந்தசாமி
இ) முனிசாமி ஈ) மு.வ
24. திருக்குறள் உரை விளக்கம்
என்ற நூலை இயற்றியவர்
அ) சாலமன் பாப்பையா ஆ) கோவிந்தசாமி
இ) முனிசாமி ஈ) மு.வ
25. சிந்தனைக் களஞ்சியம் என்ற
நூலை இயற்றியவர்
அ) சாலமன் பாப்பையா ஆ) கோவிந்தசாமி
இ) முனிசாமி ஈ) மு.வ
26. கல்வி இல்லாத நாடு -----வீடு
அ) விளக்கு இல்லாத
ஆ) பொருள் இல்லாத இ) கதவு இல்லாத ஈ) வாசல் இல்லாத
27. கனவு எனும் இலக்கிய இதழை
நடத்தி வருபவர்
அ) சுப்ர பாரதி மணியன்
ஆ) சுப்பிரமணிய பாரதி இ) தாராபாரதி ஈ) சுத்தானந்த பாரதி
28. பின்னல் ,வேட்டை ,தண்ணீர் யுத்தம் ,புத்துமண்
உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?
அ) சுப்ர பாரதி மணியன்
ஆ) சுப்பிரமணிய பாரதி இ) தாராபாரதி ஈ) சுத்தானந்த பாரதி
29. பொருந்தாததை தேர்ந்தெடுக்க
அ) எழுத்து
ஆ) மொழி இ) பதம் ஈ) கிளவி
30. இலக்கண முறைப்படி சொற்கள்
எத்தனை வகைப்படும்?
அ) 4
ஆ) 6 இ) 8 ஈ) 12
31. பெயர் வினை இடை உரி என்பன
-----வகைச் சொற்கள்
அ) இலக்கிய ஆ) இலக்கண
இ) மரபு ஈ) செய்யுள்
32. இயற்சொல், திரிசொல், திசை சொல் ,வடசொல்
என்பன வகை சொற்கள்
அ) இலக்கிய
ஆ) இலக்கண இ) மரபு ஈ) செய்யுள்
33. எளிதில் பொருள் விளங்கும்
வகையில் அமைந்த சொற்கள்
அ) இயற்சொல்
ஆ) திரிசொல் இ) திசை சொல் ஈ) வடசொல்
34. இயற்சொல் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
35. மண்,பொன்
என்பன----- இயற்சொற்கள்
அ) பெயர்
ஆ) வினை இ) இடை ஈ) உரி
36. நடந்தான் வந்தான் என்பன ----
இயற்சொற்கள்
அ) பெயர் ஆ) வினை
இ) இடை ஈ) உரி
37. அவனை ,அவனால்
என்பன----- இயற்சொற்கள்
அ) பெயர் ஆ) வினை இ) இடை
ஈ) உரி
38. மாநகர், கடிநகர் என்பன----- இயற்சொற்கள்
அ) பெயர் ஆ) வினை இ) இடை ஈ)
உரி
39. கற்றோர்க்கு மட்டுமே
விளங்குபவையாகவும், இலக்கியங்களில் மட்டுமே
பயின்றுவவருபவையாகவும் அமையும் சொற்கள்
அ) இயற்சொல் ஆ) திரிசொல்
இ):திசை சொல் ஈ) வடசொல்
40. திரிசொல் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
41. பெயர் திரிசொற்களைத் தேர்ந்தெடு
அ) அழுவம் ,வங்கம் ஆ) இயம்பினான்,
பயின்றான் இ) அன்ன, மான ஈ) கூர், கழி
42. வினைத் திரி சொற்களைத்
தேர்ந்தெடு
அ) அழுவம் ,வங்கம் ஆ) இயம்பினான், பயின்றான் இ) அன்ன, மான ஈ) கூர், கழி
43. இடைத்திரி சொற்களைத்
தேர்ந்தெடு
அ) அழுவம் ,வங்கம் ஆ) இயம்பினான், பயின்றான் இ) அன்ன,
மான ஈ) கூர், கழி
44. உரித் திரி சொற்களைத்
தேர்ந்தெடு
அ) அழுவம் ,வங்கம் ஆ) இயம்பினான், பயின்றான் இ) அன்ன, மான ஈ) கூர், கழி
45. வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் எனும் ஒரே பொருளை
தருவதால் அவை --ஆகும்
அ) ஒரு பொருள் குறித்த பல
திரிசொற்கள் ஆ) பல பொருள் குறித்த ஒரு
திரிசொல்
இ) ஒரு பொருள் குறித்த பல இடைச்
சொற்கள் ஈ) பல பொருள் குறித்த ஒரு இடைச்சொல்
46. இதழ் எனும் சொல் பூவின் இதழ்,
உதடு , கண் இமை ,பனை ஏடு,
நாளிதழ் ஆகிய பல பொருள்களை தருவதால் -----ஆகும்
அ) ஒரு பொருள் குறித்த பல
திரிசொற்கள் ஆ) பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
இ) ஒரு பொருள் குறித்த பல இடைச்
சொற்கள் ஈ) பல பொருள் குறித்த ஒரு இடைச்சொல்
47. வடமொழி தவிர பிற மொழிகளில்
இருந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்-----ஆகும்
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ)
திசைச் சொல் ஈ) வடசொல்
48. கேணி என்பது எதற்கான திசை சொல்?
அ) கிணறு ஆ) பசு இ) தாவரம் ஈ) விலங்கு
49. பெற்றம் என்பது எதற்கான திசை சொல்?
அ) கிணறு ஆ) பசு இ) தாவரம் ஈ) விலங்கு
50. வட சொற்கள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
51. வடமொடியில் இருப்பது போன்றே
தமிழில் எழுதுவதை -----என்பர்
அ) தற்சமம்
ஆ) தற்பவம் இ) பிறசமம் ஈ) கற்சமம்
52. வடமொழியில் உள்ள சொற்களை
தமிழ் எழுத்துக்களால் மாற்றி எழுதுவதை ----என்பர்
அ) தற்சமம் ஆ) தற்பவம்
இ) பிறசமம் ஈ) கற்சமம்
53. தற்சமம் அமைந்த சொல்லை
தேர்ந்தெடு
அ) கமலம்
ஆ) லட்சுமி இ) விடம் ஈ) பட்சி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி