7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. சாந்தமானதொரு பிரபஞ்சம் என்று
கவிஞர் உமாமகேஸ்வரி குறிப்பிடுவது
அ) மலர்கள்
ஆ) காம்புகள் இ) உலகம் ஈ) பூமி
2. இறுக்கி முடிச்சிட்டால்
விட்டால் என்ன நிகழும் என்று உமா மகேஸ்வரி குறிப்பிடுகிறார்?
அ) மலர்கள் தரையில் நழுவும் ஆ)
காம்புகளின் கழுத்து முறியும்
இ) மலர்கள் மணம் வீசும் ஈ) மலர்கள் வாடி விடும்
3. மலர்களை தளர பிணைத்தால் என்ன
நிகழும்?
அ) மலர்கள் தரையில் நழுவும்
ஆ) காம்புகளின் கழுத்து முறியும்
இ) மலர்கள் மணம் வீசும் ஈ) மலர்கள் வாடி விடும்
4. பிரபஞ்சம் என்று சொல்லின்
பொருள்
அ) பூமி
ஆ) அண்டம் இ) நீர் ஈ) காற்று
5. கவிஞர் உமா மகேஸ்வரி எந்த
மாவட்டத்தில் பிறந்தவர்?
அ) தேனி ஆ) திண்டுக்கல் இ) இராமநாதபுரம் ஈ) மதுரை
6. நட்சத்திரங்களின் நடுவே ,வெறும் பொழுது ,கற்பாவை உள்ளிட்ட கவிதை தொகுதிகளை
படைத்தவர் யார்?
அ) ராஜம் கிருஷ்ணன் ஆ) உமா
மகேஸ்வரி இ) ஜான்சி ராணி ஈ) ஆதிரை
7. போர் இல்லாத உலகில்
-----நிலவும்
அ) பதற்றம் ஆ) சாந்தம்
இ) சோர்வு ஈ) வெறுப்பு
8. நிற்பது+ அறிந்தும்=?
அ) நிற்பதறிந்தும்
ஆ) நிற்பதுஅறிந்தும் இ) நிற்பறிந்தும் ஈ) நிற்பது அறிந்தோம்
9. ஆயகலைகள் மொ த்தம்-----
அ) 63
ஆ) 64 இ) 65 ஈ) 66
10. அரண்மனைகள் மண்டபங்கள்
கோவில்கள் போன்றவற்றில் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள்
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம் ஈ) சுவர்
ஓவியம்
11. தஞ்சை பெரிய கோவில்
சுற்றுச்சூழலில் காணப்படும் ஓவியங்கள்
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம் ஈ) சுவர்
ஓவியம்
12. எழினி, திரைச்சீலை, கிழி , படாம்
என்பவை குறிப்பது
அ) பழங்கால பொருட்கள் ஆ)
ஓவியம் வரைய பயன்படும் துணி
இ) செப்பேடுகள் ஈ) ஓலைச்சுவடிகள்
13.குணமாலை என்னும் பெண்
யானையைக் கண்டு அஞ்சிய காட்சி இடம்பெறும் காப்பியம்
அ) சிலப்பதிகாரம் ஆ) சீவக
சிந்தாமணி இ) மணிமேகலை ஈ) குண்டலகேசி
14. துணி ஓவியங்கள் தற்காலத்தில்
எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அ) கலந்தர் ஓவியம் ஆ) நிர்மல
ஓவியம் இ) கலம்காரி ஓவியம் ஈ) அகுபல் ஓவியம்
15. எழுத்தாணிகளைக் கொண்டு
கோட்டோவியமாகவும் வண்ண பூச்சு ஓவியமாகவும் வரையப்படுவது
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம் இ) ஓலைச்சுவடி ஓவியம் ஈ) சுவர் ஓவியம்
16. பெரும்பாலும் இதிகாசம்
மற்றும் புராண காட்சிகளாகவே இருக்கும் ஓவியங்கள்
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம் இ) ஓலைச்சுவடி ஓவியம் ஈ) சுவர் ஓவியம்
17. ஓலைச்சுவடி ஓவியங்கள்
காணப்படும் இடம்
அ) கன்னிமாரா நூலகம் ஆ) அண்ணா
நூற்றாண்டு நூலகம்
இ) சரஸ்வதி மஹால் நூலகம்
ஈ) மத்திய நூலகம்
18. மன்னர்களின் ஆணைகளையும் அரசு
ஆவணங்களையும் வரைகோடுகளாக வரைந்து பயன்படுத்தப்பட்ட ஓவியம்
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம் ஈ)
செப்பேட்டு ஓவியம்
19. நீர்நிலைகள் செடி கொடிகள்
பறவைகள் விலங்குகள் குறியீடுகள் போன்றவையாக அமையும் ஓவியம்
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம்
இ) ஓலைச்சுவடி ஓவியம் ஈ)
செப்பேட்டு ஓவியம்
20. கேரள மாநிலத்தில் அதிகமாக காணப்படும் ஓவியம்
அ) குகை ஓவியம் ஆ) துணி ஓவியம் இ)
தந்த ஓவியம் ஈ)
செப்பேட்டு ஓவியம்
21. புனையா ஓவியம் பற்றி
குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) சிலப்பதிகாரம் ஈ) நெடுநல்வாடை
22. " புனையா ஓவியம் புறம்
போந்தன்ன" என்று குறிப்பிடும் நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ)
மணிமேகலை இ) சீவக சிந்தாமணி ஈ) வளையாபதி
23. கண்ணாடி ஓவியம் வரைபவர்கள்
மிகுதியாக உள்ள இடம்
அ) காஞ்சிபுரம் ஆ) திருச்சி இ)
தஞ்சாவூர் ஈ) நாகப்பட்டினம்
24. அரசியல் கருத்துகளை எளிமையாக
விளக்குவதற்கு பயன்படும் ஓவியம்
அ) தாள் ஓவியம் ஆ) கண்ணாடி ஓவியம் இ)
கருத்துப்பட ஓவியம் ஈ) பனை ஓவியம்
25. கருத்துப்பட ஓவியத்தைத்
தமிழில் அறிமுகப்படுத்தியவர்----
அ) பாரதியார்
ஆ) கவிமணி இ) வாணிதாசன் ஈ) சோமசுந்தரம்
26. கருத்துப்பட ஓவியத்தின்
மற்றொரு வடிவம்
அ) கோட்டுப்படம் ஆ) வண்ணச்
சித்திரம் இ) கேலிச்சித்திரம் ஈ) அழகு சித்திரம்
27. மனித உருவங்களை விந்தையான
தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரையப்படுபவை
அ) கோட்டுப்படம் ஆ) வண்ணச்
சித்திரம் இ) கேலிச்சித்திரம் ஈ) அழகு சித்திரம்
28. யாருடைய ஓவிய முறைகள்
பிற்காலத்தில் நாட்காட்டி களில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?
அ) ராஜா ரவி வர்மா
ஆ) கொண்டைய ராஜு இ) ராஜேஸ்வர ரெட்டி ஈ) முகுந்த வர்மா
29. நாட்காட்டி ஓவிய முறையின்
முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்----
அ) ராஜா ரவி வர்மா ஆ)
கொண்டைய ராஜு இ) ராஜேஸ்வர ரெட்டி ஈ) முகுந்த வர்மா
30. "பசார்
பெயிண்டிங்" இன்று அழைக்கப்படுபவை
அ) கோட்டோவியங்கள் ஆ) குகை
ஓவியங்கள்
இ) செப்பேட்டு ஓவியங்கள் ஈ)
நாட்காட்டி ஓவியங்கள்
31. வட்டிகைச் செய்தி என்பது எதைக் குறிக்கிறது?
அ) ஓவியர் ஆ) ஓவியம்
இ) வண்ணம் தீட்டும் பலகை ஈ) வண்ணங்கள்
32. கண்ணுள் வினைஞர், கிளவி வல்லோன், வித்தகர் என்று அழைக்கப்படுபவர்
அ) மருத்துவர் ஆ) போர் வீரர் இ)
ஓவியர் ஈ) பொற்கொல்லர்
33. எழுதெழில் அம்பலம், எழுத்து நிலை மண்டபம் என்று அழைக்கப்படுவது
அ) திருமண மண்டபம் ஆ)
ஓவியக் கூடம் இ) சமுதாயக்கூடம் ஈ) இளைப்பாறும் கூடம்
34. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்
எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?
அ) 1122
ஆ) 1123 இ) 1124 ஈ)
1125
35. தமிழ் பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம்
அ) மதுரை ஆ) கும்பகோணம் இ) தஞ்சாவூர் ஈ) திருச்சி
36. தஞ்சாவூர் தமிழ்
பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
அ) 1984 ஆ) 1983 இ) 1982 ஈ) 1981
37. வானத்திலிருந்து பார்க்கும்
பொழுது எதனுடைய கட்டிட அமைப்பு தமிழ்நாடு எனத் தெரிகிறது?
அ) சென்னை பல்கலைக்கழகம் ஆ) சென்னை
மருத்துவக் கல்லூரி
இ) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
ஈ) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
38. இந்திய ஆட்சிப் பணி
பணியாளர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகம்
அ) சென்னை பல்கலைக்கழகம் ஆ) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
இ) மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம் ஈ) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
39. சென்னையில் உள்ள உவேசா
நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
அ) 1943
ஆ) 1944 இ) 1945 ஈ)
1946
40. உவேசா நூலகத்தில்---- ஓலைச்சுவடிகளும்
, ------- தமிழ் நூல்களும் உள்ளன
அ) 2128
, 2941 ஆ) 2941,
2128 இ) 1000, 10000 ஈ) 10000, 1000
41. சென்னை கிழ்த்திசை நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
அ) 1869
ஆ) 1870 இ) 1871 ஈ)
1872
42. சென்னை கிழ்த்திசை நூலகம் தற்போது எந்த நூலகத்தில் இயங்கி வருகிறது?
அ) கன்னிமாரா நூலகம் ஆ) சென்னை மைய நூலகம்
இ) சரஸ்வதி மஹால் நூலகம் ஈ)
அண்ணா நூற்றாண்டு நூலகம்
43. கன்னிமாரா நூலகம் எங்கு
அமைந்துள்ளது?
அ) மதுரை ஆ) தஞ்சாவூர் இ) திருச்சி
ஈ) சென்னை
44. சென்னையில் வள்ளுவர் கோட்டம்
எங்கு அமைந்துள்ளது ?
அ) கோடம்பாக்கம் ஆ)
நுங்கம்பாக்கம் இ) கிண்டி ஈ) தாம்பரம்
45. சென்னையில் வள்ளுவர் கோட்டம்
அமைக்கப்பட்ட ஆண்டு?
அ) 1977 ஆ) 1976
இ) 1978 ஈ) 1979
46. 133 அடி திருவள்ளுவர் சிலை
தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?
அ) சென்னை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ)
கன்னியாகுமரி
47. உலகத் தமிழ்ச் சங்கம்
அமைந்துள்ள இடம்
அ) சென்னை ஆ) மதுரை
இ) தஞ்சாவூர் ஈ) கன்னியாகுமரி
48. உலகத் தமிழ்ச் சங்கம்
மதுரையில் திறந்து வைக்கப்பட்ட ஆண்டு
அ) 2016
ஆ) 2017 இ) 2018 ஈ)
2019
49. சிலப்பதிகாரத்திலும் ,
பட்டினப்பாலையிலும் எந்த நகரத்தை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன?
அ) மதுரை ஆ) பூம்புகார்
இ) மயிலாடுதுறை ஈ) காரைக்கால்
50. சிலப்பதிகார சிற்பக்
கலைக்கூடம் அமைந்துள்ள இடம்
அ) மதுரை ஆ) பூம்புகார்
இ) மயிலாடுதுறை ஈ) காரைக்கால்
51. ஒரு செயலின் அல்லது வினையின்
பெயராக அமைவது
அ) வினையாலணையும் பெயர் ஆ)
தொழிற்பெயர் இ) காலப்பெயர்
ஈ) சினைப்பெயர்
52. படர்க்கை இடத்தில் மட்டும் வருவது
அ) வினையாலணையும் பெயர் ஆ)
தொழிற்பெயர் இ) காலப்பெயர்
ஈ) சினைப்பெயர்
53. நடத்தல், வாழ்வு, ஒழுக்கம், விளையாட்டு
என்பன எவ்வகை தொழிற்பெயர்?
அ) முதனிலை தொழிற்பெயர் ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) எதிர்மறை தொழிற்பெயர் ஈ) விகுதி பெற்ற
தொழிற்பெயர்
54. வினைப் பகுதியுடன்
தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது
அ) முதனிலை தொழிற்பெயர் ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) எதிர்மறை தொழிற்பெயர் ஈ) விகுதி பெற்ற
தொழிற்பெயர்
55. அடி , இடி,
கொதி என்பன எவ்வகை தொழிற்பெயர்கள்?
அ) முதனிலை தொழிற்பெயர்
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) எதிர்மறை தொழிற்பெயர் ஈ) விகுதி பெற்ற
தொழிற்பெயர்
56. பகுதியாகிய முதல் நிலை
இவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது எவ்வகை தொழிற்பெயர்?
அ) முதனிலை தொழிற்பெயர்
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) எதிர்மறை தொழிற்பெயர் ஈ) விகுதி பெற்ற
தொழிற்பெயர்
57. முதல் நிலை திரிந்த
தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ) பேறு
ஆ) வீடு இ) சோறு ஈ) காடு
58. ”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”என்ற திருக்குறளில்
பிழையில்லாமல் படித்தல் என்று பொருள் தரும் சொல்
அ) கற்க ஆ) கசடற
இ) கற்பவை ஈ) கற்றபின்
59. ”தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு” என்ற திருக்குறளில்
இடம்பெற்றுள்ள அணி
அ) உவமையணி ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ)
சொற்பொருள் பின்வருநிலையணி
60. செய்யத் தகாத செயல்களை
செய்வதாலும் செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதாலும் உண்டாவதாக திருவள்ளுவர்
குறிப்பிடுவது
அ) தோல்வி ஆ) பழி இ) தீமை ஈ) கோபம்
61. ”இடும்பைக்கு இடும்பை
படுத்தம்பைக்கு
இடும்பை படாஅ தவர்” திருக்குறளில் பயின்று வந்துள்ள
அணி
அ) உவமையணி ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி
62. தன் குடியைச் சிறந்த குடியாக
செய்ய விரும்புபவர் இடம் -----இருக்கக் கூடாது
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்
63. பொருத்துக
1. கற்கும் முறை - அ) எண்ணும் எழுத்தும்
2. உயிர்க்கு கண்கள் - ஆ) பிழை இல்லாமல் கற்றல்
3. விழுச்செல்வம் - இ) செயல்
4. எண்ணித் துணிக - ஈ) கல்வி
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி