TNTET 6 TH STD TAMIL QUESTION BANK UNIT-2 TERM-1

  6. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள் 


இயல்-2

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. மறுகியது என்று சொல்லின் பொருள்

அ) குறைந்தது ஆ) அதிகரித்தது இ)  வருந்தியது ஈ) விளைந்தது

2. அழகிய பெரியவனின் இயற்பெயர்

அ) முகுந்தன் ஆ) முருகன் இ) அரவிந்தன் ஈ)  குமாரசாமி

3. அழகிய பெரியவனின் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற புதினம்

அ) தகப்பன் சாமி ஆ) தகப்பன் கொடி இ)  எல்லைச்சாமி ஈ)  எல்லைக்கொடி

4. அழகிய பெரியவனின் தகப்பன் கொடி என்னும் புதினத்துக்காக எந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டது?

அ) 2003 ஆ) 2004 இ) 2005 ஈ)  2006

5. நெரிக்கட்டு, அரூப நஞ்சு ,பெருகும் வேட்கை உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?

அ) அழகிய மணவாளன் ஆ)  அழகிய பெரியவன் இ) அழகிய மதுரவன் ஈ) அழகிய மன்னவன்

6. கூடு கட்டுவதற்கு மரம் கிடைக்காத பறவைகள்----- வேறு இடம் செல்கின்றன.

அ) பதிலிகளாக ஆ)  ஏதிலிகளாக இ)  விருந்தாளிகளாக ஈ) பயணிகளாக

7. சுழித்தோடும் என்ற சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

அ) சுழித்து + ஓடும் ஆ) சுழி + தோடும் இ) சுழி + ஓடும் ஈ) சுழித் + தோடும்

8. வழி + எல்லாம்=?

அ) வழிஎல்லாம் ஆ) வழியிலெல்லாம் இ) வழில்லாம் ஈ) வழியெல்லாம்

9. பறவைகள் இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படும்?

அ) இடப்பெயர்ச்சி ஆ) இடம் நகர்தல் இ) வலசை போதல் ஈ) வலது பக்கம் போதல்

10. பயணம் செய்யும்போது சிலவகை பறவைகள் இரை, ------- போன்ற தேவைகளுக்காக தரையிறங்கும்

அ) உணவு ஆ) சோர்வு இ) ஓய்வு ஈ) நீர்

11. கூற்று 1 : வலசையின் போது பறவையின் உடலில் மாற்றங்கள் ஏற்படும்

     கூற்று 2 : 2 ஒருவகைப் பறவை வேறு வகை பறவையாக உருமாறி தோன்றும் அளவிற்கு கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்

அ) கூற்று 1 சரி, 2 தவறு ஆ) கூற்று 1 தவறு, 2 சரி

இ) கூற்று 1 மற்றும் 2 சரி ஈ)  கூற்று 1 மற்றும் 2 தவறு

12. சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை

அ) பீனிக்ஸ் ஆ) கடல் புறா இ) கப்பல் பறவை ஈ) பெங்குயின்

13. கப்பல் பறவை தரையிறாங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?

அ) 200 ஆ) 300 இ) 400  ஈ) 500

14. கூழைக்கடா, கடற்கொள்ளை பறவை என்றெல்லாம் அழைக்கப்படும் பறவை எது?

அ) பீனிக்ஸ் ஆ) கடல் புறா இ) கப்பல் பறவை ஈ) பெங்குயின்

15. தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியத்தில் குறிப்பிட்ட புலவர்

அ) சொக்கநாதப் புலவர்  ஆ) உமறுப் புலவர் இ) சத்தி முத்தப் புலவர் ஈ) கம்பர்

16. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனமாக கருதப்படுவது

அ) காக்கை ஆ) மயில் இ) தூக்கணாங்குருவி ஈ) சிட்டுக்குருவி

17. ஆண் குருவியின் தொண்டைப் பகுதி எந்த நிறத்தில் இருக்கும்?

அ) வெள்ளை ஆ) மஞ்சள் இ) பழுப்பு  ஈ) கறுப்பு

18. ஆண்குருவியின் உடல் பகுதி முழுவதும் இந்த நிறத்தில் இருக்கும்?

அ) வெள்ளை ஆ) வெளிர் பழுப்பு  இ) மங்கிய  பழுப்பு  ஈ) கறுப்பு

19. பெண் குருவியின் உடல் முழுவதும் எந்த நிறத்தில் இருக்கும்?

அ) வெள்ளை ஆ) வெளிர் பழுப்பு  இ) மங்கிய  பழுப்பு  ஈ) கறுப்பு

20. சிட்டுக்குருவி ---- பறவை இனத்தைச் சார்ந்தது.

அ) கூட்டமாக வாழும் ஆ) கூடு கட்டி வாழும் இ) தொடர்ந்து பறக்கும் ஈ) கடல் மேல் வாழும்

21. கூடு கட்டும் காலங்களில் சத்தமிட்டு கொண்டே இருக்கும் பறவை எது?

அ) காகம் ஆ) கிளி இ) அன்னம் ஈ) சிட்டுக்குருவி

22. சிட்டுக்குருவிகள் முட்டையிட்ட பிறகு எத்தனை நாட்கள் அடைகாக்கும்?

அ) 13 ஆ) 14 இ) 15 ஈ) 16

23. துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் வாழும் பறவை இனம் எது?

அ) காகம் ஆ) கிளி இ) அன்னம் ஈ) சிட்டுக்குருவி

24. சிட்டுக்குருவியின் வாழ்நாள்

அ) 10 முதல் 12 ஆண்டுகள் ஆ) 10 முதல் 11 ஆண்டுகள்

இ) 10 முதல் 13 ஆண்டுகள் ஈ) 10 முதல் 17 ஆண்டுகள்

25. காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியவர் யார்?

அ) கவிமணி ஆ)  ராமலிங்கம் பிள்ளை இ)  பாரதிதாசன் ஈ) பாரதியார்

26. இந்தியாவின் பறவை மனிதர் யார்?

அ) டாக்டர் அப்துல் கலாம் ஆ) டாக்டர் சலீம் அலி

இ) டாக்டர் அப்துல் ரஹீம் ஈ) டாக்டர் அப்துல் காதர்

27. சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற வரலாற்று நூலை எழுதியவர்

அ) டாக்டர் அப்துல் கலாம் ஆ) டாக்டர் சலீம் அலி

இ) டாக்டர் அப்துல் ரஹீம் ஈ) டாக்டர் அப்துல் காதர்

28. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்,  பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது என்று கூறியவர் யார்?

அ) டாக்டர் அப்துல் கலாம் ஆ) டாக்டர் சலீம் அலி

இ) டாக்டர் அப்துல் ரஹீம் ஈ) டாக்டர் அப்துல் காதர்

29. பறவைகள் பற்றிய படிப்பு

அ) அஸ்ட்ராலஜி ஆ) ஆர்ணித்தாலஜி இ) ஜியாலஜி ஈ) ஆர்டிகாலஜி

30. உலகச் சிட்டுக்குருவிகள் தினம் எப்போது?

அ) மார்ச் 20 ஆ) ஏப்ரல் 20 இ) மே 20 ஈ) ஜூன் 20

31. உலகிலேயே நீண்ட தூரம் பறக்கும் பறவையினம்

அ) கப்பல் பறவை ஆ) ஆர்க்டிக் ஆலா இ) ஆர்க்டிக் கோலா ஈ) ஆர்டிக் சேலா

32. ஆர்க்டிக் ஆலா இன்னும் பறவை தொடர்ந்து எவ்வளவு தூரம் பயணம் செய்யக் கூடியது?

அ) 20000 கிலோமீட்டர் ஆ) 21,000 கிலோமீட்டர்

இ) 22,000 கிலோமீட்டர் ஈ) 23000 கிலோமீட்டர்

33. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

அ) தட்பம் + வெப்பம் ஆ) தட்ப + வெப்பம் இ) தட்டு + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம்

34. கிழவனும் கடலும் என்ற புதினத்தை எழுதியவர் யார்?

அ) ஆலன் டொனால்ட்  ஆ) மேத்யூ ஹைடன் இ) எர்னெஸ்டு எமிங்வே ஈ) ஸ்டீபன் பிளமிங்

35. கிழவனும் கடலும் இந்த புதினத்துக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது?

அ) 1981 ஆ) 1953 இ) 1952 ஈ) 1954

36. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து

37. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய் எழுத்துக்கள் பதினெட்டும் ---- எழுத்துகள் ஆகும்

அ) சார்பு ஆ) முதல் இ) தனிநிலை ஈ) கூட்டுநிலை

38. பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் ,இயங்குவதற்கும் முதல் காரணமான எழுத்துகள்

அ) உயிர் எழுத்துக்கள் ஆ) மெய்யெழுத்துக்கள்  இ) முதல் எழுத்துக்கள் ஈ)  சார்பெழுத்துகள்

39. முதல் எழுத்தை சார்ந்து வரும் எழுத்துக்கள்

அ) உயிர் எழுத்துக்கள் ஆ) மெய்யெழுத்துக்கள்  இ) முதல் எழுத்துக்கள் ஈ) சார்பெழுத்துகள்

40. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?    அ) 12 ஆ) 18 இ) 30 ஈ) 10

41. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க

அ) ஆய்தம் ஆ)  உயிரளபெடை இ) உயிர் ஈ) உயிர்மெய்

42. உயிர் மெய் எழுத்தின் வரி வடிவம் எதை ஒத்திருக்கும்?

அ) மெய் ஆ)  உயிரளபெடை இ) உயிர் ஈ) உயிர்மெய்

43. உயிர் மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு எதை ஒத்திருக்கும்?

அ) மெய் ஆ)  உயிரளபெடை இ) உயிர் ஈ) உயிர்மெய்

44. முப்புள்ளி,  முப்பாற் புள்ளி ,தனி நிலை, அஃகேனம் என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும் எழுத்து

அ) உயிர் ஆ) ஆய்தம் இ)  உயிர் மெய் ஈ) உயிரளபெடை

45. ஆய்தம் தனக்கு முன் ஒரு---- எழுத்தையும், தனக்குப் பின் ஒரு---- எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

அ) வல்லின உயிர்மெய், குறில் ஆ) குறில், வல்லின உயிர்மெய்

இ)  குறில், மெல்லின உயிர்மெய் ஈ) மெல்லின உயிர்மெய், குறில்

46. பின்வருவனவற்றுள் சார்பெழுத்து அல்லாததை தேர்ந்தெடுக்க

அ) உயிர்மெய் ஆ) ஆய்தம் இ) உயிர் ஈ) குற்றியலுகரம்

47.சத்தி முத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை அ) மயில் ஆ) கோழி இ) நாரை ஈ) சிட்டுக்குருவி

48. அகதி என்று பொருள் தரும் சொல்   அ) செறுவர் ஆ) கோதிலி இ) ஏதிலி ஈ) அந்நியர்

49. வலசை என்று பொருள் தரும் ஆங்கிலச் சொல்

அ) Migration ஆ) Continent இ) Sanctuary ஈ) Climate

50. புகலிடம் இன்று பொருள் தரும் ஆங்கிலச் சொல்

அ) Migration ஆ) Continent இ) Sanctuary ஈ) Climate

51. மழை உரிய காலத்தில் செய்யாது போனால் உலகத்து உயிர்களை துன்புறுத்துவது எது?

அ) உறவினர் ஆ) பகைவர் இ) வறட்சி ஈ) பசி

52. தாய் தன் பிள்ளையை குறித்து எப்போது பெருமகிழ்ச்சி அடைவாள்?

அ) பெற்றெடுத்த போது ஆ)  பிள்ளையின் புகழைக் கேட்டபோது

இ)   பணம் சம்பாதிக்கும் போது ஈ)  நன்றாக உண்ணும் போது

53. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

அ) இரண்டு ஆ) மூன்று இ)  நான்கு ஈ) ஐந்து

54. தெய்வப் புலவர் , பொய்யில் புலவர் முதலிய சிறப்பு பெயர்களை பெற்றவர்

அ) அவ்வையார் ஆ) கம்பர் இ) திருவள்ளுவர் ஈ)  இளங்கோவடிகள்

55. உலகப் பொதுமறை , வாயுறை வாழ்த்து முதலில் சிறப்புப் பெயர்களைப் பெற்ற நூல் எது?

அ) ஆத்திச்சூடி ஆ)  கொன்றைவேந்தன் இ) திருக்குறள் ஈ) நாலடியார்

 👉 PDF வடிவில் பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை