8 TH STD ANNUAL EXAM TAMIL ANSWER KEY RANIPET DIST

 


(இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர்,நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் என்பதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

முழு ஆண்டுப் பொதுத்தேர்வு- 2026, இராணிப்பேட்டை மாவட்டம்

8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                             15X1=15

வி எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வைப்பு

1

2.     

ஆ. ஆழி

1

3.     

. வட்டெழுத்து

1

4.     

ஈ. வ்

1

5.     

. வெண்மை+குடை

1

6.     

. தாவரங்களை  

1

7.     

ஆ. கல்லாதவர்

1

8.     

இ. மூன்று

1

9.     

. அம்பேத்கர்

1

10.   

. ஊர்+ஆண்மை

1

11.    

ஆ. கைத்தொழிலும்

1

12.   

ஆ. வஞ்சி

1

13.   

. வித்துகள்

1

14.   

. வனைதல்

1

15.   

அ. இளமை

1

) பொருத்துக                                                                                                               5X1=5

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

 

1. இயற்கை அன்பு – பெரிய புராணம்

2. ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்

3. ட் , ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

4. ஆடினாள் -    தன்வினை

5. நட்பு என்பது – சிரித்து மகிழமட்டுமன்று

 

 

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                                    5X2=10

1

உலகம் முழுவதும்

2

2

திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது

2

3

v  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

v  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்

2

4

மன்னிக்கத்தெரிந்த மனிதரின் உள்ளம்

2

5

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது

2

6

விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்

2

7

v  உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்

v  ஆதரவற்றமகளிருக்குத்திருமண உதவித்திட்டம்

v  தாய்சேய்நல இல்லங்கள்

v  நலிவடைந்தபிரிவைச் சேர்ந்தமாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்

v  முதியோருக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம்

2

8

·        அம்பேத்கர் இந்தியாவில் சாதிகளில் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை ஒன்றைப் படைத்தார்

·        அதைச் சிறு புத்தகமாகவும் வெளியிட்டார்

·       அச்சில் வெளிவந்த அவரின் முதல் நூல் இதுவே ஆகும். 

2

9

ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்.

2

 

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க                                                      5X2=10

1

நடுவுநிலைமை

2

2

v  வல்லின மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

v  மெல்லின மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

v  இடையின மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.ண, ,

2

3

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

    சான்று: தாய் மொழி

2

4

பண்பு உடைய சான்றோர்களின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குவதாய்த் திருக்குறள் கூறுகிறது.

2

5

v  , ,

v  , ,

v  ,           ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2

6

பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

2

7

கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.

2

 

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளிக்க                                                                3X3=9

1

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

2

கலிங்க நாட்டார் வழங்கிய பரிசு:  முறுக்குகள் நிறைந்த தண்டை

கண்டிய நாட்டார் வழங்கிய பரிசு:  கால்மோதிரம்,  பீலி

3

3

ü  நோய் மூன்று வகைப்படும்.

ü   மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.

ü   எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.

ü  அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

ü  அகற்றுவதற்கு அரியவைபிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத்தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையேஅம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

3

4

ü  சேரனின் நாட்டில் வருவாய் சிறந்து விளங்குகிறது.

ü  அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.

ü  தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது.

ü  செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.

ü  நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய, சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது.

3

 

5

v  தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

v  நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர்.

v  தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

4

 

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளிக்க                                                                3X3=9

1

3

2

செய்யுளில் முன்னர் வந்த ஒரே சொல் மீண்டும் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவது

3

3

1. பயணிகல் திரும்பும் இடங்கள், கடக்கும் இடங்கள்

2. சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து இயக்குதல்

3. தீயணைப்பு வாகனம், அவசரச் சிகிச்சை ஊர்தி

3

4

உடுக்கை, உறுமி, கணப்பாறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி

3

 

அடிமாறாமல் எழுதுக                                                                                                                           4+2=6

1.அ

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே

3

 

3

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

3

 

4

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

3

 

 

எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும்  விடையளி                                                                 6X2=12

1

அ. இயல், இசை, நாடகம்   ஆ. மா, பலா, வாழை

2

2

 ஏரி – நீர்நிலை  , ஏறி – மேலே ஏறுதல்

2

3

 . போ  . வா

2

4

 அ. தொண்டு  ஆ. வரி

2

5

பெற்றோருக்கு உதவுதல், பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்

2

6

அ. அம்மா அடிக்கும் முன் அழகி முதலைக்கண்ணீர் வடித்தாள்

ஆ. வாழையடி வாழையாக முருகனின் குடும்பம் உழவு செய்து வருகிறது.

2

7

அ. பூ கொய்     ஆ. பால் பருகு

2

8

26 - உ  , 51 –ரு க , 37 –  , 18 – க அ

2

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                                          3X8=24

1

v  எல்லா காலத்திலும் நிலைபெற்ற தமிழே! வாழ்க.

v  எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.

v  ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.

v  உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.

v  எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.

v  தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!

v  பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க.

ஆ)

v  அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர்.

v  தமிழகத்தில் பழங்காலந் தொட்டே இக்கலை வளர்ந்திருக்கிறது. கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது, மண்பாண்டங்கள் ஆகும்.

v  களிமண்ணால் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை முதன்முதலில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகும்.

v  மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால் செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள், பனையோலையால் செய்யப்படும் பொருட்கள் இவையனைத்தும் கைவினைப் பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் நிகழாது.

v  மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால் செய்யப்படும் காகிதப்பொம்மைகள், பொருட்கள் அத்தனையும் கைவினைப் பொருட்கள் ஆகும்,

8

2

)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

ஆ)

v  ஒரு குறிஞ்சிப் புதரில் வாழ்ந்த பச்சை வெட்டுக்கிளி, வாயாடித்தனமாக ஒரு மாலை நேரம் தன்னைக் காண வந்த கூரன் சருகுமானை பேச அழைக்கிறது.

v  ஆனால் கூரன் பித்தக்கண்ணு என்ற உயிர்வாழ்க்கைக்கு ஆபத்தான மிருகத்திடமிருந்து தப்பி ஓடி, மரத்தடியில் ஒளிகிறது.

v  பித்தக்கண்ணு வந்து வெட்டுக்கிளியிடம் கூரனைப் பற்றி கேட்க, வெட்டுக்கிளி பரவசத்தில் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே தவறவசமாக குதிக்கிறது.

v  இதைக் கவனித்த பித்தக்கண்ணு அந்த இடத்துக்கு சென்று, புனுகுப் பூனையின் வாசனையை மட்டுமே உணர்ந்து கிளம்புகிறது.

v  உயிர் தப்பிய கூரன் வெட்டுக்கிளியின்மீது கோபம் கொண்டு எச்சரிக்கையாக 'இனிமேல் இப்படி நடந்தால் மிதித்து நசுக்கி விடுவேன்' எனக் கூறி ஒளியின்றிப் போகிறது.

v  அதன் பிறகு, வெட்டுக்கிளி எப்போதும் பயத்தில் வாழத் தொடங்கியது. அதனால் தான் இன்றும் வெட்டுக்கிளிகள் ஓரிடத்தில் நிலைத்திருக்க முடியாமல் குதிக்கின்றன.  

8

3

 

அ. இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்

     சே.வெண்மதி,

     /பெ  சேரன்,

     562 திருவள்ளுவர் தெரு,

     வளர்புரம் அஞ்சல்,

     அரக்கோணம் வட்டம்,

     இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்                   

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

ஐயா,

     பொருள்: இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.

        வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து  நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                               சே.வெண்மதி.

இடம்: அரக்கோணம்,

நாள்: 12-03-2022.

 

உறைமேல் முகவரி:

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

ஆ) நூலகம்

முன்னுரை:

        “நூலகம் அறிவின் ஊற்று

        ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும் 

         சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

    ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

      மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

     மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

     நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

             “என்னை தலைகுனிந்து படித்தால்,

              உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

     என்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

 

 

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை