|
முழு ஆண்டுப்பொதுத்தேர்வு மாதிரி
வினாத்தாள்-1 (2025-2026) 9.
ஆம் வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி
– I (மதிப்பெண்கள்:15)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15×1=15
1. தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச்
சேர்ந்தது.
அ)
தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்
2
. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) ஆறு இ)இஞ்சி ஈ)புலரி
3. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ)
தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
ஆ)
தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான,
இ)
தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
ஈ) தமிழர்களின்
தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
4.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -
இக்குறளில் இடம்பெற்ற அடி எதுகைகள்
அ) மறந்தும்- பிறன்கேடு ஆ) மறந்தும் – அறஞ்சூழும் இ) சூழற்க – சூழின்
ஈ) சூழ்ந்தவன் - கேடு
5. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது
எதைக் குறிக்கிறது?
அ)
நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்
6. பதினெண் கீழ்க்கணக்கு
நூலைத் தேர்ந்தெடுக்க
அ) குறுந்தொகை ஆ) பெரியபுராணம் இ) திருக்குறள் ஈ) புறநானூறு
7.
'பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்' நிலப்
பகுதி
அ)
குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
8.
ஐந்து சால்புகளில் இரண்டு
அ)
வானமும் நாணமும் ஆ) நாணமும் இணக்கமும்
இ)
இணக்கமும் சுணக்கமும் ஈ) இணக்கமும் பிணக்கமும்
9. சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ)
முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
10.
ஆடுகளம் இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
அ)
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது ஆ) வினாப்பெயரின் பின் வல்லினம் மிகாது
இ)
வினைத்தொகையில் வல்லினம் மிகாது ஈ) இரட்டைக்கிளவியில் வல்லினம்
மிகாது.
11. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது -
இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு எது?
அ)
நாள் ஆ) மலர் இ) காசு ஈ)
பிறப்பு
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15)
விடை தருக.
பசிபட ஒருவன் வாடப்
பார்த்துஇனி இருக்கும்
கீழ்மை
முசிபட ஒழுகும் தூய
முறையினை அறிவார் போல
வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்
கசிபட ஒளிமுத் தோடு
கரையினில் குவிப்பார் அம்மா
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ) உயிர்வகை ஆ) குடும்பவிளக்கு இ) இராவண காவியம் ஈ) மணிமேகலை
13. முதுநீர் - இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) குறிப்புப் பெயரெச்சம்
ஈ) குறிப்பு வினையெச்சம்
14. பாடலில் இடம்பெற்ற சீர்
மோனைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ) பசிபட
- பார்த்து ஆ) பசிபட – முசிபட இ) முசிபட –முறையினை ஈ) முதுநீர் - புக்கு
15. இப்பாடலின் ஆசிரியர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) புலவர் குழந்தை ஈ) நாமக்கல் கவிஞர்
பகுதி – II (மதிப்பெண்கள்:15)
பிரிவு -1
4×2-8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு
கட்டாயமாக விடையளிக்கவும்.
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.
அ)
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தருபவை நிகழ்த்துக்
கலைகள்,
ஆ)
தெருக்கூத்து,
தோற்பாவைக் கூத்து இரண்டும் கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள்.
17. "பகுத்தறிவு' என்றால் என்ன?
18.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -
குறிப்புத் தருக.
19.
கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
20. நடுகல் என்றால் என்ன?
21. 'அன்புநாண்'
எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2-10
22. கலைச்சொல் தருக. அ) Excavation ஆ) Saline Soil
23.
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:
அ. இளமையில் கல்வி -----
ஆ.சித்திரமும் கைப்பழக்கம்------
24. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
25. காலவாகுபெயர் - குறிப்பு தருக.
26. பொருள் எழுதித் தொடரமைக்க. அ) கரை,கறை ஆ) குளவி, குழவி
27. 'மகனே
கொடு'-இத்தொடரில் வல்லினம் மிகுமா? விளக்கம்
தருக?
28. விளைதல் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பகுதி – III (மதிப்பெண்கள்:18)
பிரிவு -1
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29.
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு
தொடர்புபடுத்தி எழுதுக
30.
உரைப்பத்தியைப் படித்து விளாக்களுக்கு விடை தருக.
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர் சிறார், முதியோர் ஆகியோரை
எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,
புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய
வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது
கூடாது என்பதை ஆவூர் மூலாங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
1.
அவூர் மூலாங்கிழாரின் போர் அறம் யாது
2.
போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?
3.
பாருக்கெல்லாம் திங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்?
31. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
பிரிவு -2
எவையேலும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
(வினா எண் 34-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) 2×3=6
32.
நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார்
கூறும் வழிகள் யாவை?
33. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
34. அடிபிறழாமல் எழுதுக.
அ. “ஒன்றறி
(அல்லது) ஆ) 'சொல்அரும்' எனத் தொடங்கும் பாடல்
பிரிவு -2
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.. - குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.
36.
எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம்
மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக
37.
ஏகதேச உருவக அணியை விளக்குக.
பகுதி - IV (மதிப்பெண்கள்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி.
5×5=25
38.அ) ஏமாங்கதநாட்டு வளம் குறித்தவருணனைகளைநும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக. (அல்லது)
ஆ)
”கேள்வி” அதிகாரத்தில்
வள்ளுவர் கூறிய கருத்துகளைத் தொகுத்து எழுதுக
39.
உங்கள்
பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்கஅகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல்
பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ)
உங்கள் ஊர் நெடுஞ்சாலையிலிருந்து தொலையில் இருப்பதால் நெடுஞ்சாலைப் பகுதிக்குச்
செல்வதற்குச் சிற்றுந்து வசதி செய்து தருமாறு போக்குவரத்து ஆணையருக்கு விண்ணப்பக்
கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41.
திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர், கம்பர் தெரு, 28 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும்
குமரனின் மகள் கயல்விழி அப்பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் தனது கணக்கிலிருந்து
பணம் எடுக்க விரும்புகிறார், தேர்வர், தன்னைக்
கயல்விழியாகக் கருதி உரிய படிவத்தை நிரப்புக
42. அ) உங்களையே மகிழச்செய்த உங்கள் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
(அல்லது)
ஆ)
தமிழில் மொழிபெயர்க்க.
Once
Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy
because somebody just finished washing their clothes. Buddha asked his
disciples to take a little rest there by the tree. After half an hour the
disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let
the water and the mud be settled down on its own. Your mind is also like that.
When it is disturbed, just let it be. Give a little time. It will settle down
on its own. We can judge and take best decisions of our life when we stay
calm.”
பகுதி - V (மதிப்பெண்கள்: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான
விடையளிக்கவும். 3×8=24
43. அ) இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக்
கட்டுரை வழி நிறுவுக (அல்லது)
ஆ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை
விவரிக்க.
44.அ) ‘தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
(அல்லது)
ஆ)
இசைக்கு நாடு,
மொழி, இனம் தேவையில்லை என்பதைச் 'செய்தி' கதையின் மூலமாக விளக்குக
45.
அ) ”எனது பயணம் எனும் தலைப்பில் உங்களது பயண அனுபவங்களை
வருணித்து எழுதுக.
குறிப்புகள்: முன்னுரை –
பயண தொடக்கம்- கண்டு மகிழ்ந்த இடங்கள் – மகிழ்ச்சி தந்த
நிகழ்வுகள் – பயணம் முடிவு - முடிவுரை.
(அல்லது)
ஆ)
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.
குறிப்புகள்
: முன்னுரை - தமிழரின் உணவுமுறைகள் - தோய்தடுக்கும் தமிழர் உணவுகள் - மருந்தாகும்
உணவுகள்
பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி