9.ஆம் வகுப்பு – தமிழ் அலகுத்தேர்வு இயல்-6
பலவுள் தெரிக. 9×1=9
1.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை – இருக்கை ஆ) புள் தாவரம் இ) அள்ளல் - சேறு' ஈ) மடிவு - தொடக்கம்
2.
தேமாங்கனி என்பது
------ ஆகும்.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) வேற்றுமைத் தொகை ஈ) உவமைத்தொகை
3.
தவிர்தலின்றிக் காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது
அ) கோக்கிள்ளி நாடு ஆ) ஏமாங்கத நாடு இ) திருநாடு ஈ) கோசலைநாடு
4.
கூற்று : இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான். "இந்திய தேசிய
இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்'' என்றார்.
காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு
வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
அ) கூற்று சரி; காரணம் சரி ஆ) கூற்று சரி;
காரணம் தவறு
இ) கூற்று தவறு: காரணம் சரி ஈ) கூற்று
தவறுகாரணம் தவறு
5.
ஆடுகளம் இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
அ) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது ஆ)
வினாப்பெயரின் பின் வல்லினம் மிகாது
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி
வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசைபோயது உண்டே!
6. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ)
உயிர்வகை ஆ) குடும்பவிளக்கு இ) சீவகசிந்தாமணி ஈ) மணிமேகலை
7. தேமாங்கணி - இச்சொல்லிற்கான
இலக்கண குறிப்பு
அ)
வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) குறிப்பு வினையெச்சம்
8. பாடலில் இடம்பெற்ற அடி எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ)காய்மாண்ட-தெங்கின் ஆ)காய்மாண்ட-பூமாண்ட
இ)பூமாண்ட - தேமாங்கனி ஈ)ஏமாங்கதம்-என்று
9. இப்பாடலின் ஆசிரியர்
அ) இளங்கோவடிகள் ஆ) சீத்தலைச்சாத்தனார் இ) புலவர் குழந்தை ஈ) திருத்தக்க
தேவர்
குறுவினா 7×2=14
10.
இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
11.
தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத்
தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
12.
கருக்கொண்டபச்சைப்பாம்பு, எதற்கு
உவமையாக்கப்பட்டுள்ளது?
13.
ஓம்புவார் - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
14.
இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் அவர்கள்
தமிழர்கள் பற்றிக் கூறியது யாது?
15. பொருத்தமான
இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
சிறுவினா (வினா எண்:
20 கட்டாய வினா) 3×3=9
17.
குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்
18.
பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும்
இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு
துணுக்குச் செய்தி எழுதுக.
19.
ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத்
திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
20.
”சொல்லரும்----” எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக.
விரிவான விடையளி 2×5=10
21.
ஏமாங்கதநாட்டு வளம் குறித்தவருணனைகளைநும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
22.
அ. சமூகத்திற்கு நீங்கள் ஆற்ற விரும்பும்
பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக. (அல்லது)
ஆ மொழி பெயர்க்க:
A deer, a turtle, a
crow and a rat were friends. One day the deer was caught in a hunter's trap.
Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless
as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle
crossed the hunter's path to distract him. The hunter left the deer, assuming
it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to
free the deer. The crow picked up the turtle and quickly took it away from the
hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve
great results.
23. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக
நெடுவினா 1×8=8
23.
அ. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள்
தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக (அல்லது)
ஆ. இந்திய விண்வெளித்துறை
பற்றிய செய்திகளை விவரிக்க
பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி