9.ஆம் வகுப்பு – தமிழ் அலகுத்தேர்வு இயல்-7
பலவுள் தெரிக. 9×1=9
1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று:
பெரியார் உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும் 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்
வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ)
கூற்று தவறு, காரணம் சரி
2.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது -
இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு எது?
அ) நாள் ஆ) மலர் இ) காசு ஈ)
பிறப்பு
3.
விடுபட்ட இடத்திற்கான விடை எது?
"இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க
------
புதியவைதாம்"
அ) சாதியும் மதமும் ஆ) இனமும் மொழியும் இ) இனமும் மதமும் ஈ) மதமும் மொழியும்
4.
பெரியார் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது.
அ) ஈரோட்டுச் சிங்கம் ஆ) பகுத்தறிவுக் கொள்கை இ) எழுத்துச் சீர்திருத்தம் ஈ) அ.
ஆ.இ அனைத்தும்
5.
போக்குக என்ற சொல்லின் பகுதி -
அ) போகு ஆ) போக்கி இ) போக்கு ஈ) போகி
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
ஆக்குவது
ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது
ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது
ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது
ஏதெனில் விரதம் காக்கவே
6. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ)
யசோதர காவியம் ஆ) குடும்பவிளக்கு இ)
சீவகசிந்தாமணி ஈ) மணிமேகலை
7. ஆக்குக - இச்சொல்லிற்கான
இலக்கண குறிப்பு
அ)
வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) வியங்கோள் வினைமுற்று
ஈ) குறிப்பு வினையெச்சம்
8. பாடலில் இடம்பெற்ற அடி எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ) அறத்தை - ஆக்குக ஆ) ஆக்குக- போக்குக இ) வெகுளி- போக்குக ஈ) விரதம் - காக்கவே
9. வெகுளி என்ற சொல்லின் பொருள்
அ) அறியாமை ஆ) சினம் இ) அறிவு ஈ) மயக்கம்
குறுவினா 7×2=14
10.
"பகுத்தறிவு' என்றால் என்ன?
11.
மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் இரண்டினைக் குறிப்பிடுக
12.
யாருக்குப் பூமி பாரமில்லை என்று கவிஞர் குறிப்பிடுகின்றார்?
13.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?14. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
15. பிறமொழிச்
சொற்களைத் தமிழாக்குக
சிறுவினா (வினா எண்:
20 கட்டாய வினா) 3×3=9
17.
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு
தொடர்புபடுத்தி எழுதுக
18.
நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம்
குறிப்பிடுவன யாவை?
19.
'என் சமகாலத் தோழர்களே' கவிதையில் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள் யாது?
20.
”பாய்ந்து----” எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக.
விரிவான விடையளி 2×5=10
21.
நயம் பாராட்டுக.
22.
அ. ஒரு நல்ல தோழியாக / தோழராக நண்பர்களுக்குச் செய்ய வேண்டியவைவற்றைப்பட்டியலிடுக.
(அல்லது)
ஆ மொழி பெயர்க்க:
Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm
23. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக
நெடுவினா 1×8=8
23.
அ. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார்
மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக (அல்லது)
ஆ. மொழியின்
விரல்பிடித்து நடக்கப்பழகிக் கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார்
எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக
வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி