7.ஆம் வகுப்பு - தமிழ்
மூன்றாம் பருவம் - கட்டுரை & கடிதங்கள்
இயல்-1
பின்வரும்
தலைப்பில் கட்டுரை எழுதுக : என்னைக் கவர்ந்த
நூல்
என்னைக்
கவர்ந்த நூல் சிலப்பதிகாரம்
முன்னுரை:
அன்னைத்
தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரமே
ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் காண்போம்.
சிலப்பதிகாரம்
அமைப்பு:
சிலப்பதிகாரம் புகார்க்
காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்
காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது காதைகளாகிய
சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.
சிலப்பதிகாரக்
கதை!
புகார் நகரத்தில்
கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து வாழ்கின்றனர்.
கண்ணகியைப் பிரிந்து கோவலன் அதவியுடன் வாழ்கின்றார். அவளைப்பிரிந்து மீனர்டும்
கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான்.கண்ணகி
நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து, வானுலகம் செல்கின்றாள்.
சிறப்புகள்:
ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்று சிலப்பதிகாரம். முத்தமிழ்க்
காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம்
சிறப்பிக்கப்படும் நூல், ன் குடிமக்களைக் கதை மாந்தராகக்
கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது.
சுவர்ந்த
காரணம்:
மூவேந்தர்களைப் பற்றியும்,
முத்தமிழ் பற்றியும், முச்சுவை பற்றியும்,
முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில் விளக்குவதால் சிலப்பதிகாரம்
என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக்
கவர்ந்தது இந்நூல்,
முடிவுரை:
சிலப்பதிகாரம்
மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன், என்னைக்
கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்!
இயல்-2
கட்டுரை
எழுதுக : ஒற்றுமையே உயர்வு
முன்னுரை
தனிமரம் தோப்பாகாது. அதுபோல
தனித்திருந்தால் வெற்றி கிடைக்காது. ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உயர்வு
கிடைக்கும்.
சான்றோர்
பொன்மொழி
ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
என்றார் திருமூலர் 'பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்' என்றார் திருவள்ளுவர். 'ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு' என்றார் பாரதியார். இப்படிப்பட்ட சான்றோரின்
பொன்மொழிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஒற்றுமையின்
உயர்வு
வீட்டில் உள்ள அனைவரும்
ஒற்றுமையாக இருந்த இந்தக் குடும்பம் உயர்வடையும். அந்தக்குடும்பம் உயர்ந்தால்,
அந்த ஊர் உயரும், அந்தனர் உயர்ந்தால்
அந்தநகரமே உயரும். ஒற்றுமையால் அந்த நகரம் உயர்ந்தால் தம் நாடே உயரும். நம் மக்கள்
காந்தியடிகளுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டதால் தான் நமக்கு விடுதலையும் கிடைத்தது.
ஒற்றுமையின்
விளைவு
புயல், சுனாமி,
வெள்ளப் பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கைச்
சீற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் பல சமூக சேவை அமைப்புகள் ஒன்று கூடி
ஒற்றுமையுடன் ஓடோடி மக்களைக் காப்பற்றினர். அதுமட்டும் அல்லாது பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, பாதிக்கப்பட்டவர்களின்
வாழ்விடங்களை மீண்டும் கட்டமைத்துக் கொடுத்தனர்.
ஒருமையுணர்வு
அல்லா, இயேசு,
சிவன் ஆகிய மும்மதக் கடவுள்களும் மூன்றெழுத்தில் ஒன்றுபட்டு
நிற்பதைப் பார்க்கும் போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதநல்லிணக்கத்தோடு
வாழவேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
முடிவுரை
மதம், சாதி,
இனம் ஆகிய வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
அப்பொழுது தான் நாட்டில் ஒற்றுமை நிலவும் என்பதை அறிந்து செயல்படுவோம்.
இயல்-3
கடிதம்
எழுதுக
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக்
காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக
உறவினருக்குக்
கடிதம்
12, தென்றல் நகர்,
திருத்தணி-1
26-12-2023
அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் அன்பு
அண்ணன் மகள் எழுதும் கடிதம், நானும் என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதபோல தங்கள் நலத்தையும், மாமாவின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம் முதல் வாரம்
முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது.ஒரு வாரம்
இத்திருவிழா நடைபெறும், ஊரே அலங்காரமாக இருக்கும்.
பூச்சாட்டல், காப்புக்கட்டல், பூமிதித்தல்,
அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய
நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம்
கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும்
அழைப்பார்கள். அன்புடன் முடிக்கின்றேன்.உடன் பதில்
எழுதுங்கள்.
இப்படிக்கு,
அன்பு அண்ணன் மகள்
வா.நிறைமதி
உறைமேல் முகவரி:
ச.தமிழாசி.
12,திரு.வி.க நகர்,
மதுரை-2.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி