7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
இயல்-2 |
புதுமை விளக்கு
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. “இடர் ஆழி நீங்குகவே ” – இத்தொடரில்
அடிக்கோ டிட்ட சொ ல்லின் பொருள்_____.
அ)
துன்பம் ஆ) மகிழ்ச்சி இ) ஆர்வம் ஈ)
இன்பம்
2. ‘ஞானச்சுடர் ’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக்
கிடைப்ப து __________.
அ) ஞான + சுடர் ஆ) ஞானச் + சுடர் இ) ஞானம் + சுடர் ஈ) ஞானி + சுடர்
3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
அ) இன்பு உருகு ஆ) இன்பும் உருகு இ) இன்புருகு ஈ) இன்பருகு
பொருத்துக.
1. அன்பு - நெய்
2. ஆர்வம் – தகளி
3. சிந்தை - விளக்கு
4. ஞானம் - இடுதிரி
விடை: 1- இ , 2 – அ , 3 – ஈ , 4 - ஆ
குறுவினா
1.
பொய்கை யாழ்வாரும் பூதத்தாழ்வா ரும் அகல் விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
விடை: பொய்கையாழ்வார்
அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும்
உருவகப் படுத்துகின்றனர்
2.
பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
விடை: பொய்கை
ஆழ்வார் பெருந்துன்பம் நீங்குவதற்காகப் பாமாலை சூட்டுகிறார்
3. அந்தாதி என்பது யாது?
விடை:
ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக
அமைவதை அந்தாதி என்கிறோம்.
சிறுவினா
1.
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
விடை: பூதத்தாழ்வார் அன்பையே
அகல்விளக்காகவும், ஆர்வத்தையே
நெய்யாகவும், மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.
2. உருவக அணி எவ்வாறு அமையும்?
·
உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல்
இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்
·
இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும்
உவமை பின்னுமாக அமையும்
சிந்தனை வினா
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார் .நீங்கள்
எவற்றை எல்லாம் விளக்காக உருவகப் படுத்துவீர்கள்?
விடை: நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி,
கடின உழைப்பு, ஊக்கம், கல்வி,
உயிர், உண்மை ஆகியற்றையெல்லாம் விளக்காக
உருவகப்படுத்துவேன்.
அறம் என்னும் கதிர்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் எப்போதும் -----------ப் பேசினார்
அ) வன்சொற்களை ஆ) அரசியலை இ) கதைகளை ஈ) வாய்மையை
2. ‘இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது __________.
அ) இனிய + சொ ல்
ஆ) இன்மை + சொல் இ) இனிமை + சொல் ஈ) இன் + சொல்
3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொ ல் __________.
அ) அற கதிர் ஆ)
அறுகதிர் இ) அறக்கதிர் ஈ) அறம்கதிர்
4. ’ இளமை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _________.
அ)
முதுமை ஆ)
புதுமை இ) தனிமை ஈ) இனிமை
நயம் அறிக
'அறம் என்னும் கதிர்' செய்யுளில்
அமைந்துள்ள எதுகை, மோனை, முரண் சொற்களை
எடுத்து எழுதுக.
எதுகை : இன்சொல் - வன்சொல் -
அன்பு நீர்
மோனை
: அன்பே - ஆர்வமே; இன்புருகு -இடுதிரியா
முரண்:
இன்சொல் – வன்சொல்
குறுவினா
1.
அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
விடை: அறக்கதிர்
விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என
முனைப்பாடியார் கூறுகிறார்
2.
நீக்கவேண்டிய களை என்று
அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
விடை: நீக்கவேண்டிய
களை என்று அறநெறிச்சாரம் வன்சொல்லைக்
குறிப்பிடுகிறது.
சிறுவினா
இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப் பாடியார் கூறுவன
யாவை?
விடை:
Ø இன்சொல்லை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்.
Ø அதில் ஈகை என்னும் பண்பை விதையாகக் கொண்டு
விதைக்க வேண்டும்.
Ø வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.
Ø உண்மைபேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.
Ø அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.
Ø அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற
முடியும்.
Ø இளம்வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று
முனைப்பாடியார் கூறுகின்றார்.
சிந்தனை வினா
இளம் வயதிலேயே நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை
எனக் கருதுகிறீர்கள்?
விடை: அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை
பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி,
கோபம் கொள்ளாமை, நேர்மை.
ஒப்புரவு
நெறி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாகும்
ஒருவருக்காக என்பது நெறி
அ) தனியுடமை ஆ) பொதுவுடமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
2. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை-------- என்றும் கூறுவர்.
அ) மருந்து ஆ)
மருத்துவர் இ)
மருத்துவமனை ஈ)
மாத்திரை
3. உலகம் உண்ண உண்; உடுத்த
உடுப்பாய் என்று கூறியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) முடியரசன் ஈ) கண்ணதாசன்
தொடர்களில்
அமைத்து எழுதுக.
1. குறிக்கோள் - வாழ்க்கை குறிக்கோள் உடையது.
2. கடமைகள் - ஒரு குடிமகளாக நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம்.
3. வாழ்நாள்
- விடை வாழ்நாள் முழுவதும் தொண்டு
செய்தவர் குன்றக்குடி அடிகளார்
4.சிந்தித்து - ஒரு செயல் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.
குறு
வினா
1. பொருளீட்டுவதை
விடவும் பெரிய செயல் எது?
விடை: பொருளீட்டுவதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக
அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
2. பொருளீட்டுவதன்
நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
விடை: மற்றவர்களுக்கு
வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து
வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.
சிறு
வினா
1. ஒப்புரவுக்கு
அடிகளார் தரும் விளக்கம் யாது?
விடை:
v ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு. உணர்வு
ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.
தரத்தைக் காட்டுகிறது.
v ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும்
போதாது, உதவி
செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட
உதவி செய்யலாமே! சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்.
v அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில்
எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்தவதற்குப்
பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
2. ஊருணியையும் மரத்தையும்
எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?
விடை:
ü ஊருணி, தேவைப்படுவோர்
அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது, அதைத்
தடுப்பார் யாருமில்லை.
ü ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது.
பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.
ü பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக்
கவனத்தில் கொண்டல்ல.
ü மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த
நிலையிலான பயன்பாட்டு நிலை, நோயுடையார்
எல்லாரும் பயன்படுத்தலாம்.
ü ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த
உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.
சிந்தனை
வினா
ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்கும்
வேறுபாடு யாது?
விடை:
Ø உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து,
உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை
வழங்குதல் ஒப்புரவு.
Ø இல்லை என்று கேட்போருக்கு நாமே அவருக்குத் தேவையானதைக்
கொடுப்பது உதவி செய்தல்.
உண்மை ஒளி
உண்மை ஒளி படக்கதையைக்
கதையாகச் கருக்கி எழுதுக
·
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள்
அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள் அக்கதைகளும் ஒன்று உண்மை ஒளி.
·
ஜென் குருவிடம் சிலர் பாடகற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை
ஒளியது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார் சீடர்களிடம் "இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது" என்று
எப்படி அறிவீர்கள்? என்றார்.
·
சீடர்கள் வ்வ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர்
·
இவை எல்லாம் தவறு என்றார் குரு ஒரு மனிதரைக் காணும் போது என் உடன்
பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள்
ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு.
·
ஒரு நாள் மயங்கிகிடந்த ஒருவனுக்கு உதவி செய்தார் குரு.
·
அவன் குருவின் குதிரையைத் திருடிச்சென்றுவிட்டான்
·
அவன் திருடன் என்பதையும் தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.
·
குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத்
திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தான்.
·
குரு திருடனிடம் “யாரிடமும் எதையும் சொல்லாதே!” என்றார்
·
” நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில்
மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள்
என்றார்.குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.
இலக்கணம்
– பொது
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. செல்கின்றன
என்பதற்கு உரிய பால்
அ) ஒன்றன்பால் ஆ) பலவின்பால் இ) பலர்பால் ஈ) ஆண்பால்
2. மழை
சடசடவெனப் பெய்தது - இத்தொடரில் அமைந்துள்ளது.
அ) இரட்டைக்கிளவி ஆ) அடுக்குத்தொடர் இ) தொழிலாகுபெயர் ஈ) பண்பாகுபெயர்
3. அடுக்குத்தொடரில்
ஒரே சொல் ------முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
எதிர்
பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. மகளிர் ×
ஆடவர்
2. அரசன் ×
அரசி
3. ஆண்×
பெண்
4. மாணவன் ×
மாணவி
5. சிறுவன் × சிறுமி
6. தோழி ×
தோழன்
கீழ்க்காணும்
சொற்களை உயர்திணை, அஃறிணை என
வகைப்படுத்துக.
(வயல்,
முகிலன், குதிரை, கயல்விழி,
தலைவி, கடல், ஆசிரியர்,
புத்தகம், சுரதா, மரம்)
உயர்திணை:
முகிலன் , கயல்விழி ,தலைவி ,ஆசிரியர் ,சுரதா
அஃறிணை:
வயல் குதிரை , கடல் , புத்தகம் , மரம்
பின்வரும்
தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.
1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.
3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.
4. எனக்கு,
அது வந்ததா என்று
தெரியவில்லை. நீயே கூறு.
5. உங்களோடு நானும்
உணவு உண்ணலாமா?
தன்மை: எங்கள்
, எனக்கு , நானும்
முன்னிலை : நீர் , நீயே, உங்கள், உங்களோடு
படர்க்கை: அது,
இவர்
குறுவினா
1. உயர்திணைக்குரிய
பால்கள் எத்தனை? அவை யாவை?
விடை: உயர்திணைக்குரிய
பால்கள் மூன்று.
அவை:
1.
ஆண்பால்
2.
பெண்பால்
3.
பலர்பால்
2. நான்
வந்தேன் என்னும் தன்மை ஒருமை அமைந்த தொடரை, தன்மைப் பன்மை
அமைந்த தொடராகவும் முன்னிலை ஒருமை அமைந்த தொடராகவும் மாற்றுக.
·
நான்
வந்தேன் - தன்மை ஒருமை
·
நாங்கள்
வந்தோம் - தன்மைப் பன்மை
·
நீ
வந்தாய் - முன்னிலை ஒருமை
3. இரட்டைக்கிளவி
என்பது யாது? சான்று தருக.
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்கிறோம். வினைக்கு
அடைமொழியாக வரும். எ.கா. மள மள , கல கல
4. இரட்டைக்கிளவி,
அடுக்குத்தொடர் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளுள் இரண்டனை
எழுதுக.
|
இரட்டைக்கிளவி |
அடுக்குத்தொடர் |
|
சொற்களைப்
பிரித்தால் பொருள் தராது |
சொற்களைப்
பிரித்தாலும் பொருள் தரும். |
|
ஒருசொல் இரண்டு
முறை மட்டும் வரும் |
ஒருசொல் இரண்டு
முதல் நான்கு முறை வரும் |
|
சொற்கள் இணைந்து
நிற்கும். |
சொற்கள்
தனித்தனியே நிற்கும் |
|
வினைச்
சொல்லுக்கு அடைமொழியாக குறிப்புப் பொருளில் வரும். |
விரைவு, வெகுளி,
உவகை, அச்சம், அவலம்
ஆகிய பொருள்களில் வரும் |
கற்பவை
கற்றபின்
1. அன்றாடப்
பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத்
தொகுக்க.
அடுக்குத்தொடர்:
வாங்க வாங்க , பிடி பிடி, போ போ போ, எங்கே
எங்கே, இல்லை இல்லை, படி படி , சிரி சிரி
இரட்டைக் கிளவி:
பர பர, கல கல , தட தட, சர சர, கர கர, மள மள, கட கட, விறு விறு, தர தர
2. உரிய
வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.
|
|
ஓடு |
காண் |
நெருங்கு |
|
ஆண்பால் |
ஓடினான் |
கண்டான் |
நெருங்கினான் |
|
பெண்பால் |
ஒடினாள் |
கண்டாள் |
நெருங்கினாள் |
|
பலர்பால் |
ஓடினர் |
கண்டனர் |
நெருங்கினர் |
|
ஒன்றன்பால் |
ஓடியது |
கண்டது |
நெருங்கியது |
|
பலவின்பால் |
ஓடின |
கண்டன |
நெருங்கின |
|
தன்மை |
ஓடினேன் |
கண்டேன் |
நெருங்கினேன் |
|
முன்னிலை |
ஓடினாய் |
கண்டாய் |
நெருங்கினாய் |
|
படர்க்கை |
ஓடினார்கள் |
கண்டார்கள் |
நெருங்கினார்கள் |
|
இறந்தகாலம் |
ஓடினான் |
கண்டான் |
நெருங்கினான் |
|
நிகழ்காலம் |
ஓடுகிறான் |
காண்கிறான் |
நெருங்குகிறான் |
|
எதிர்காலம் |
ஓடுவான் |
காண்பார் |
நெருங்குவான் |
கட்டுரை
எழுதுக
: ஒற்றுமையே உயர்வு
முன்னுரை
தனிமரம் தோப்பாகாது. அதுபோல
தனித்திருந்தால் வெற்றி கிடைக்காது. ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உயர்வு
கிடைக்கும்.
சான்றோர் பொன்மொழி
ஒன்றே குலம் ஒருவனே தேவன்'
என்றார் திருமூலர் 'பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்' என்றார் திருவள்ளுவர். 'ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு' என்றார் பாரதியார். இப்படிப்பட்ட சான்றோரின்
பொன்மொழிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஒற்றுமையின்
உயர்வு
வீட்டில் உள்ள அனைவரும்
ஒற்றுமையாக இருந்த இந்தக் குடும்பம் உயர்வடையும். அந்தக்குடும்பம் உயர்ந்தால்,
அந்த ஊர் உயரும், அந்தனர் உயர்ந்தால்
அந்தநகரமே உயரும். ஒற்றுமையால் அந்த நகரம் உயர்ந்தால் தம் நாடே உயரும். நம் மக்கள்
காந்தியடிகளுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டதால் தான் நமக்கு விடுதலையும் கிடைத்தது.
ஒற்றுமையின்
விளைவு
புயல், சுனாமி,
வெள்ளப் பெருக்கு, பூகம்பம் போன்ற இயற்கைச்
சீற்றங்கள் ஏற்படும் போது எல்லாம் பல சமூக சேவை அமைப்புகள் ஒன்று கூடி
ஒற்றுமையுடன் ஓடோடி மக்களைக் காப்பற்றினர். அதுமட்டும் அல்லாது பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி, பாதிக்கப்பட்டவர்களின்
வாழ்விடங்களை மீண்டும் கட்டமைத்துக் கொடுத்தனர்.
ஒருமையுணர்வு
அல்லா, இயேசு,
சிவன் ஆகிய மும்மதக் கடவுள்களும் மூன்றெழுத்தில் ஒன்றுபட்டு
நிற்பதைப் பார்க்கும் போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதநல்லிணக்கத்தோடு
வாழவேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
முடிவுரை
மதம், சாதி,
இனம் ஆகிய வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
அப்பொழுது தான் நாட்டில் ஒற்றுமை நிலவும் என்பதை அறிந்து செயல்படுவோம்.
கீழ்க்காணும்
படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.
விடை:
கரும்பலகை,வகுப்பறை , ஆசிரியர்,மாணவர்,புத்தகம்,குறிப்பேடு,எழுதுகோல், விளையாட்டுத்திடல்
விடை: மரம்,
நடைபாதை , விளையாட்டு, உடற்பயிற்சி,
பூங்கா , சிறுவர்கள், இளைஞர்கள்
கீழ்க்காணும்
சொற்களைப் பெயர்ச்சொ ல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள்
உருவாக்குக.
(விதை, கட்டு,
படி, நிலவு, நாடு,
ஆடு)
விடை:
|
|
பெயர்ச்சொல் |
வினைச்சொல் |
|
கட்டு |
புல் கட்டைத் தலையில்
சுமந்தான் |
வீடு கட்டினான் |
|
படி |
படியில் ஏறினாள் |
நூலைப் படித்தாள் |
|
நிலவு |
இரவில் நிலவைப் பார்த்தனர் |
கடும் வெப்பம் நிலவியது |
|
நாடு |
இந்தியா எனது தாய்நாடு |
உணவகத்தை நாடினான் |
|
ஆடு |
ஆடு புல் மேய்ந்தது |
சுமதி நடனம் ஆடினாள் |
படிப்போம்;
பயன்படுத்துவோம்!
1.
குறிக்கோள்- Objective
2.
பொதுவுடைமை
- Communism
3.
வறுமை
- Poverty
4.
செல்வம்
- Wealth
5.
பொறுப்பு
- Responsibility
6.
லட்சியம்
- Ambition
7.
ஓப்புரவு
நெறி - Reciprocity
8.
அயலவர்
- Neighbour
9.
நற்பண்பு
- Courtesy
திருக்குறள் (பக்க எண்:
43 மதிப்பீடு)
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. __________ ஒரு நாட்டின்
அரணன்று.
அ) காடு ஆ) வயல் இ) மலை ஈ) தெளிந்த நீர்
2. மக்கள் அனைவரும் __________
ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால் ஆ) நிறத்தால் இ) குணத்தால் ஈ) பணத்தால்
3. ‘ நாடென்ப’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்ப
து_________.
அ) நான் + என்ப ஆ) நா + டென்ப இ) நாடு + என்ப ஈ) நாடு + டென்ப
4. கண் + இல்லது என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொ ல் _________.
அ) கணிஇல்லது ஆ) கணில்லது இ) கண்ணில்லாது ஈ) கண்ணில்லது
பின்வரும்
குறட் பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
2. வினையால் வினையாக்கிக் கோடல்
தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற
செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
விடை:
2. வினையால் வினையாக்கிக் கோடல்
தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
குறுவினா
1. ஒரு செயலைச் செய்ய
எவற்றையெல்லாம் ஆராய வேண் டும்?
விடை: வேண்டிய பொருள், ஏற்ற கருவி,
தகுந்த காலம்,மேற்கொள்ளும் செயலின் தன்மை,உரிய இடம்
2. ஒரு நாட்டுக்கு எவை யெல்லாம்
அரண்களாக அமையும்?
விடை: : தெளிந்த நீரும், நிலமும்,
மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நா
ன்கும் உள்ளதே அரண் ஆகும்.
3. சிறந்த நாட்டின் இயல்புகளாக
வள்ளுவர் கூறுவன யாவை?
விடை: : பெரிய அளவில்
முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை
உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.
படங்களுக்குப் பொருத்தமான
திருக்குறளை எழுதுக.
விடை:
உறுபசியும் ஓவாப் பிணியும்
செறுபகையும்
சேராது இயல்வது நாடு.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி