7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
இயல்-3 |
மலைப்பொழிவு
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1.
'இமைக்கும் போதில்' என்னும் தொடர் குறிப்பிடுவது
காலம்.
அ)
தூங்கும் ஆ) விழித்திருக்கும் இ) குறுகிய ஈ) நீண்ட
2.
'மலையளவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
மலை + யளவு ஆ) மலை + அளவு இ) மலையின் + அளவு ஈ) மலையில் + அளவு
3.
'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
தன் + னாடு ஆ) தன்மை + னாடு இ) தன் + நாடு ஈ) தன்மை + நாடு
4.
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
இவையில்லாது ஆ) இவைஇல்லாது இ) இவயில்லாது ஈ) இவஇல்லாது
பொருத்துக
1.
பேதங்கள் - (அ) உயர்வு
2.
உன்னதம் - (ஆ) அறம்
3.
தர்மம் - (இ) கருணை
4.
இரக்கம் - (ஈ) வேறுபாடுகள்
விடை:
1 – ஈ ,
2 – அ , 3 – ஆ , 4 - இ
நயம் அறிக
1.
மலைப்பொழிவு பாடல்களில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை,
இயைபு, முரண் ஆகிய தொடைச் சொற்களை எடுத்து
எழுதுக.
மோனை: இரக்கம் -இயேசுபிரான் –இரக்கம்- இதுதான்
எதுகை: உலகம்
கலகம் , அறம்வேண்டும் பெறவேண்டும் ,
இயைபு: உயர்வும் தாழ்வும்
,
பாலைவனம் சோலைவனம்
குறுவினா
1.
உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?
விடை: பல்வேறுபட்ட
சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் இவ்வுலகம் நிலைதடுமாறுகிறது.
2.
வாழ்க்கை மலர்ச்சோலைகளாக மாற என்ன செய்ய வேண்டும் ?
விடை: நல்ல
உள்ளத்தோடு வாழவேண்டும்.
சிறுவினா
1.
இரக்கம் உடையோர் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
v
இரக்கம்
உடையவரே பேறுபெற்றவர்கள் ஆவர்.
v
அவர்கள்
பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவார்கள்.
சிந்தனை வினா
எல்லா
மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும் ?
v மாணவர்கள்
பள்ளிகளில் தன் நண்பர்களுடன் ஒற்றுமையாகவும் இனக்கமாகவும் இருக்க வேண்டும்.
v நண்பர்களின் இன்ப
துன்பங்களில் பங்கேற்க வேண்டும்.
v வீட்டில் சகோதர
சகோதரகளிடம் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும்.
v பொது இடங்களில்
சாதிமத பேதங்களைப் பார்க்கக் கூடாது.
v பிற மதத்
தெய்வங்களை வணங்கவில்லை என்றாலும்,
அந்தத் தெய்வங்களையோ, மதத்தினர்
v பற்றியோ அவதூறு
பேச் கூடாது.
தன்னை
அறிதல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
1.
கூடு கட்டத் தெரியாத பறவை
அ)
காக்கை ஆ) குயில் இ) சிட்டுக்குருவி ஈ)
தூக்கணாங்குருவி
2
'தானொரு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
தா + ஒரு ஆ) தான் + னொரு இ)
தான் + ஒரு ஈ) தானே + ஒரு
குறுவினா
1.
காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?
விடை: இரண்டும்
சேர்ந்து ஒரே இடத்தில் கூடிவாழ இயலாது என்பதால் காக்கை, குயில்
குஞ்சைப் போகச் சொன்னது
2.
குயில் குஞ்சு தன்னை எப்போது 'குயில்' என உணர்ந்தது?
விடை:
குயில்
குஞ்சு ஒரு விடியற்காலையில் "கூ " என்று கூவியது. தன் குரல் இனிமையானது
என்று அறிந்தது. அப்போதுதான் அது,
தான் ஒரு குயில் என்பதை உணர்ந்தது.
சிறுவினா
1.
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
v குயில் ஒன்று
காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது.
v முட்டையிலிருந்து
வெளிவந்த குயில் குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப்போலவே கரைய
முற்பட்டது.
v தனியே சென்று வாழ
அஞ்சுகிறது. ஒரு விடியற்காலையில் "கூ " என்று கூவியது.
v தான் குயில்
என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன்
வாழத் தொடங்கியது.
சிந்தனை
வினா
உங்களிடம்
உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை ?
v
பிறருக்கு
உதவி செய்தல்
v
கவிதை
எழுதுவேன்
v
இனிமையாகப்
பேசுவேன்
v
ஓவியம்
வரைவேன்
v
அனைவரிடமும்
அன்பாகப் பழகுவேன்.
v
பெரியோர்களை
மதிப்பேன்.
கண்ணியமிகு தலைவர்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை ஆ)
எளிமை இ) ஆடம்பரம்
ஈ) பெருமை
2. 'காயிதேமில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்குச் _______ என்பது பொருள்.
அ) சுற்றுலாவழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி இ) சிந்தனையாளர் ஈ) சட்டவல்லுநர்
3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத்
_______ இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அ) வெள்ளையனேவெளியேறு
ஆ) உப்புக் காய்ச்சும் இ) சுதேசி ஈ) ஒத்துழையாமை
4. காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சி
மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்_______.
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம் இ) ஊராட்சி மன்றம் ஈ) நகர்மன்றம்
5. ’எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) எதிர்+
ரொலித்தது ஆ) எதில் + ஒலித்தது இ) எதிர்+ ஒலித்தது ஈ)
எதி + ரொலித்தது
6. முதுமை+மொழி
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.
அ) முதுமொழி ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி ஈ) முதல்மொழி
குறுவினா
1. விடுதலைப் போராட்டத்தில் காயிதேமில்லத்
அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
ü
நாடுமுழுவதும் விடுதலைப்போராட்டத்தில்
மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒத்துழையாமை
இயக்கத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ü
காந்தியடிகளின் இத்தகைய
வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
ü
கல்வியைவிட நாட்டு
விடுதலை மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
2.
காயிதேமில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார்
என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வைஎழுதுக.
v காயிதேமில்லத் அவர்கள் தன் மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு
செய்தார்.
v பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என
அனைவரும் நினைத்தனர்.
v பெண்வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன்
திருமணத்தை நடத்தினார்.
சிறுவினா
ஆட்சி மொழி பற்றிய காயிதேமில்லத்தின்
கருத்தைவிளக்குக.
v "பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி தான்
v மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான்.
அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி
v அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்
சிந்தனைவினா
நீங்கள் ஒரு தலைவராகஇருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச்
செய்வீர்கள்?
§
தமிழை உலகமொழி ஆக்குவேன்.
§
ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக்
கொண்டு வருவேன்.
§
சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன்.
§
இந்திய நதிகளை இணைப்பேன்.
பயணம்
'பயணம்' கதையைச் சுருக்கி எழுதுக.
ü
அஞ்சலகத்தில்
வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மிதிவண்டியின் மீது ஆசை வைத்துத் தனது மூன்றாவது
மாதச் சம்பளத்தில் மிதி வண்டி ஒன்றை வாங்குகின்றார்.
ü
தெரிந்த இடம் தெரியாத இடம் என எல்லாவற்றுக்கும்
மிதிவண்டியில்தான்
செல்கிறார்.
ü
ஹாசன்
வழியாக மங்களூர் செல்ல வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை.
ü
இரண்டு
நாட்கள் மிதிவண்டி பயணத்தில் ஹாசனை அடைந்தார்.
ü
பெரிய
இறக்கத்தில் இறங்கும் போது மிதிவண்டியில் காற்று இறங்கிவிட்டது.
ü
.நீண்ட
தூரம் நடந்தும் யாரையும் காணவில்லை.
ü
காலைப்பொழுதுவிடிந்ததும்
பக்கத்து ஊரில் உள்ளசந்திரேகௌடா என்பவர் மிதிவண்டியைச் சரி செய்து தருகின்றார்.
சிறுவனுக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார்.
ü
அவரிடம்
இருந்து மிதிவண்டியை வாங்கி சிறிது தூரம் ஓட்டினான். மாமா வீடு நெருங்கும் சிறிது
தூரத்திற்கு முன்னதில் இருந்து மிதிவண்டியை மீண்டும் சிறுவன் ஓட்டக் கேட்டான்.
ü
சிறுவனின்
மிதிவண்டி ஆர்வத்தைக் கண்டு ஓட்டக் கொடுத்தார். மிதிவண்டி சிறுவன் ஒட்டிக்கொண்டு
இருக்கும் போது,
அவனிடம் சொல்லாமல் பேருந்தில் ஏறி செல்கின்றார்
வினா
, விடை வகைகள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1.
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
அ)
அறிவினா ஆ) அறியா வினா
இ)
ஐயா வினா ஈ) கொளல் வினா
2.
மட்டைப்பந்து விளையாடத் தெரியுமா? என்னும்
விளாவிற்குக் கால்பந்து விளையாடத் தெரியும் என்று கூறுவது
அ)
மறைவிடை ஆ) உறுவது கூறல் விடை இ) உற்றது
உரைத்தல் விடை ஈ) இனமொழி விடை
3.
விடை---- வகைப்படும்.
அ)
ஏழு ஆ) எட்டு இ) ஒன்பது ஈ) பத்து
'விளையாடுவாயா?'
என்ற வினாவுக்கான விடையை விடைவகையுடன் பொருத்துக.
1.
விளையாடுவேன் - அ) மறைவிடை
2.
விளையாடமாட்டேன் - ஆ) உறுவது கூறல் விடை
3.
படிக்க வேண்டும் - இ) நேர் விடை
4.
கை வலிக்கும் - ஈ) இனமொழி விடை
விடை:
1) இ, 2) அ, 3) ஈ, 4) ஆ
குறுவினா
1.
வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
வினா
ஆறு வகைப்படும். அவை,
1.
அறிவினா
2.
அறியாவினா
3.
ஐய
வினா
4.
கொளல்
வினா
5.
கொடை
வினா
6.
ஏவல்
வினா
2.
நேர்விடை என்பது யாது?
ü
உடன்பட்டுக்
கூறும் விடை.
ü
"கடைக்குப் போவாயா?" என்ற கேள்விக்குப்
போவேன்" என்று உடன்பட்டுக் கூறல்.
3.
குறிப்பு விடைக்கும் வெளிப்படை விடைக்கும் உள்ள வேறுபாடு யாது?
குறிப்பு
விடை:
ü
குறிப்பாகப்
பொருள் புரிந்து கொள்ளும்படி இருக்கும்.
ü
ஏவல்
விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை,
உறுவது கூறல் விடை, இனமொழி விடை ஆகியவை
குறிப்பு விடைகளாகும்.
வெளிப்படை
விடை:
ü
நேரடி
விடைகளாக இருக்கும்.
ü
சுட்டு
விடை, மறைவிடை, நேர்விடை ஆகியவை நேரடி விடைகளாகும்.
4.
கொளல் வினாவையும் கொடை வினாவையும் வேறுபடுத்துக.
கொளல்
வினா:
ü
தான்
ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக் கேட்பது.
ü
எ.கா.
ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?
என நூலகரிடம் கேட்பது.
கொடை
வினா:
ü
பிறருக்கு
ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டுக் கேட்பது.
ü
எ.கா.
என்னிடம் திருக்குறள் புத்தகம் இரண்டு உள்ளது. உன்னிடம் திருக்குறள் புத்தகம்
இருக்கிறதா? என்று கொடுப்பதற்காகக் கேட்பது.
அது என்னும் இடைச்சொல்லைச்
சேர்த்துத் தொடர்களை மீண்டும் எழுதுக.
1.
அண்ணன் கைக்கடிகாரம் அழகாக உள்ளது.
விடை: அண்ணனது
கைக்கடிகாரம் அழகாக உள்ளது.
2.
வீரன் கையில் வேல் இருந்தது.
விடை:
வீரனது
கையில் வேல் இருந்தது.
3.
என் வீட்டில் சிறிய நூலகம் உள்ளது.
விடை: எனது வீட்டில்
சிறிய நூலகம் உள்ளது.
4.
அவன் கவிதையை நான் பாராட்டினேன்.
விடை: அவனது கவிதையை
நான் பாராட்டினேன்.
5.
உன் பாட நூலை எடுத்து வா.
விடை: உனது பாட நூலை
எடுத்து வா.
கீழ்க்காணும் தலைப்புகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுத்து கவிதை எழுதுக
(அ) அன்பு:
உண்மையான அன்பில்தான்
அதிக கோபங்களும்
கட்டுப்பாடுகளும் இருக்கும்
இதைப் புரிந்து கொண்டவர்களைவிட
பிரிந்து சென்றவர்களே
அதிகம்...!!!
(ஆ) தன்னம்பிக்கை:
தடைகள் பல ஆயிரம்
உன் கண்முன்னே
தோன்றினாலும்
வழிகள் என்ற ஒன்றை
கண்டறிந்து - அதை
உன் ஏணிப்படியாக்கிக்கொள்
சரியான இணைப்புச் சொல்லால்
நிரப்புக
(எனவே, ஏனெனில், அதனால்,
ஆகையால், அதுபோல, இல்லையென்றால்,
மேலும்)
1.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். இல்லையென்றால்
துன்பப்பட நேரிடும்.
2.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆகையால்,
காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
3.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ஏனெனில்
மரங்கள்தான் மழைக்கு அடிப்படை. 4. பிறருக்குக் கொடுத்தலே
செல்வத்தின்பயன். எனவே பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
5.
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மேலும்
இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.
சரியான வினாச்சொல்லை இட்டு
நிரப்புக
1.
நெல்லையப்பர் கோவில் எங்கு உள்ளது?
2.
முதல் ஆழ்வார்கள் எத்தனை பேர்?
3.
எத்தகைய சொற்களைப் பேச
வேண்டும்?
4.
இயேசு காவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?
5.
தர்மம் என்பதன் பொருள் என்ன?
பின்வரும் தொடரைப் படித்து
வினாக்கள் எழுதுக.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப்
பள்ளிக்குச் சென்றாள்.
(எ.கா) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
1.
பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
2.
பூங்கொடி தன் தோழியுடன் எப்பொழுது பள்ளிக்குச் சென்றாள்?
3.
பூங்கொடி தன் தோழியுடன் எங்குச் சென்றாள்?
தலைப்புச் செய்திகளை முழு
சொற்றொடர்களாக எழுதுக
1.
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - மாவட்ட
ஆட்சியர் பாராட்டு
விடை:
சாலையில்
கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
2.
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் - மக்கள்
ஆர்வத்துடன் வருகை
விடை: தமுக்கம்
மைதானத்தில் தொடங்கிய புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை
புரிந்தனர்.
3.
தேசிய அளவிலான கைப்பந்து போட்டி - தமிழக அணி வெற்றி
விடை
:
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.
4.
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்
விடை
:
மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்
பெற்றாள்.
5.
மாநில அளவிலான பேச்சுப்போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்.
விடை
:
சென்னையில் இன்று மாநில அளவிலான பேச்சுப்போட்டி தொடங்குகிறது
கடிதம்
எழுதுக
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக்
காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக
உறவினருக்குக்
கடிதம்
12, தென்றல் நகர்,
திருத்தணி-1
26-12-2023
அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் அன்பு அண்ணன் மகள் எழுதும் கடிதம், நானும்
என் அப்பா, அம்மா ஆகியோரும் நலமாக இருக்கின்றோம். அதபோல
தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய) ஆவலாக இருக்கின்றேன். அடுத்த மாதம்
முதல் வாரம் முதல் எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கின்றது.ஒரு
வாரம் இத்திருவிழா நடைபெறும், ஊரே அலங்காரமாக இருக்கும்.
பூச்சாட்டல், காப்புக்கட்டல், பூமிதித்தல்,
அலகு குத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய
நிகழ்வுகள் நடைபெறும். அத்தனை நிகழ்வுகளில் தாங்களும் மாமாவும் அவசியம்
கலந்துகொள்ள எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும். அப்பாவும் அம்மாவும் நேரில் வந்தும்
அழைப்பார்கள் அன்புடன் முடிக்கின்றேன்.உடன் பதில் எழுதுங்கள்.
இப்படிக்கு,
அன்பு அண்ணன் மகள்
வா.நிறைமதி
உறைமேல் முகவரி:
ச.தமிழாசி.
12,திரு.வி.க நகர்,
மதுரை-2.
கீழ்க்காணும் அறிவிப்பைப்
படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.
1.
தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கை
யாவை ?
ü
வீடுகளிலும்
பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
ü
பணிபுரியும்
பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட நிறுவனங்களில் வேண்டும்.
ü
சமையல்
செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
ü
பட்டாசுகளைப்
பாதுகாப்பான இடங்களில் பெரியவர்களின் மேற்பார்வையில்தான் வெடிக்க வேண்டும்.
2.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
ü
உடனடியாகத்
தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ü
தீ
விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.
ü
தீ
விபத்து ஏற்பட்ட உடனே அங்குள்ள தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை
அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
3.
பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையை எழுதுக.
ü
தீ
விபத்து ஏற்பட்டவுடனே வெளியேற வேண்டும்.
ü
தீயிலிருந்து
தப்பிக்கும் போது மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு வெளியேற வேண்டும்.
ü
அவசரகால
வழியில் விரைந்து வெளியேற வேண்டும்.
4.
தீ விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடாதவை யாவை?
ü மின்தூக்கியைப்
பயன்படுத்தக்கூடாது.
ü
எண்ணெய்
உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
ü
தீக்காயம்
பட்ட இடத்தில் எண்ணொய்,
பேனா மை போன்றவற்றைத் தடவக் கூடாது.
5.
உடலில் தீப்பற்றினால் செய்யவேண்டிய முதலுதவி யாது ?
ü
உடுத்தியிருக்கும்
ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருள வேண்டும்.
ü
நீக்காயம்
பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
படிப்போம்: பயன்படுத்துவோம்!
1.
சமயம்
- Religion
2.
தத்துவம்
- Philosophy
3.
எளிமை
- Simplicity
4.
நேர்மை
- Honesty
5.
ஈகை
- Charity
6.
கண்ணியம்
- Dignity
7.
கொள்கை
- Doctrine
8.
வாய்மை
- Sincerity
9.
உபதேசம்
- Preaching
10.
வானியல்
- Astronomy
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி