6.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
இயல்-2 |
பராபரக்கண்ணி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தம் + உயிர் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) தம்முயிர் ஆ) தமதுயிர் இ)
தம்உயிர் ஈ) தம்முஉயிர்
2. இன்புற்று + இருக்க என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) இன்புற்றிருக்க ஆ)இன்புறுறிருக்க
இ) இன்புற்றுஇருக்க ஈ) இன்புறு இருக்க
3. தானென்று என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) தான + என்று ஆ) தான் + என்று இ)தா + னென்று ஈ) தான் + னன்று
4. சோம்பல் என்னும்
சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ----------
அ) அழிவு ஆ) துன்ம்
இ) சுறுசுறுப்பு ஈ) சோகம்
நயம்
அறிக
பராபரக்கண்ணி
பாடலில்
இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச்சொற்களை
எடுத்து எழுதுக.
எதுகை: தம்
உயிர் ,செம்மையர்
அன்பர் , இன்பநிலை
எல்லாரும் ,அல்லாமல்
மோனை : தானென்று , தண்டருள்
குறுவினா
1. யாருக்குத் தொண்டு செய்ய
வேண்டும்?
விடை: அனைத்து
உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணைமிகுந்த சான்றோர்க்குத் தொணடு செய்ய
வேண்டும்.
2. இன்பநிலை எப்போது வந்து
சேரும்?
விடை: அன்பர்களுக்குத்
தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால் இன்பநிலை வந்து சேரும்.
சிறுவினா
பராபரக்கண்ணியில்
தாயுமானவர் கூறுவன யாவை?
விடை:
ü
அனைத்து
உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணைமிகுந்த சான்றோர்க்குத் தொணடு செய்ய
வேண்டும்.
ü
அன்பர்களுக்குத்
தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால் இன்பநிலை வந்து சேரும்.
ü
எல்லாரும்
இன்பமாக வாழவேண்டும்.அதைத்தவிர வேறெதையும் நினைக்க மாட்டேன்.
சிந்தனை
வினா
குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள்
எவ்விதம் உதவுவீர்கள்?
விடை:
ü
குளிரைத்
தாங்கும் ஆடை தருவேன்
ü
உடலைக்
கதகதப்பாக்க ஏதாவது சூடாகப் பருகச் செய்வேன்.
நிலம் பொது
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. செவ்விந்தியர்கள் நிலத்தைத்_____
மதிக்கின்றனர்.
அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக
2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ)
இனிமை+ ஓசை ஈ) இன் + னோசை
3. பால் + ஊறும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) பால்ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும்
தொடரில்
அமைத்து எழுதுக.
1. வேடிக்கை- நன்மை தரும் காட்டை மனிதன் அழிப்பது வேடிக்கையாக உள்ளது
2.
உடன்பிறந்தார் – நாட்டு மக்கள் அனைவரும்
உடன்பிறந்தார் போன்றவராவர்.
குறுவினா
1. விலைகொடுத்து வாங்கஇயலாதவை எனச்
சியாட்டல் கூறுவன யாவை?
விடை: விலைகொடுத்து
வாங்கஇயலாதவை எனச் சியாட்டல் கூறுவன வானம்
, காற்றின் தூய்மை , நீரின் உயர்வு ஆகியவை ஆகும்.
2. நிலத்திற்கும்
செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
விடை : இந்தப்
பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்குத்
தாயாகும். அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள் அந்த மண்ணும் அவர்களுக்குரியதாகும்.
3.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
விடை:
·
செவ்விந்தியர்கள்
வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுதல்
·
எங்குப்
பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல்,
·
தொன்மையான
மலைகளை மறைத்துத் தொலைபேசி கம்பிகள் பெருகுதல்
சிறுவினா.
1.
நிர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுது
விடை:
·
ஏரிகள், எம்மக்களின்
வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்கின்றன
·
இந்த
நீரின் முனுமுனுப்புகள் எம்பாட்டன்மார்களின் குரல்கள்
·
இந்த
ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள்,
இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
2. எவையெல்லாம் ஒரேகுடும்பத்தைச்
சேர்ந்தவைஎன்று சியாட்டல் கூறுகிறார்?
விடை:
ü இங்குள்ள மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
ü விலங்குகள் அனைத்தும் எமது சகோதரர்கள்.
ü மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.
நெடுவினா
தாய்மண்மீதான
செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
விடை:
v இந்தப் பூமியின்
ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். எமது மக்கள். இந்தப் பூமியை
எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும்.
v நாங்கள் இந்த மணிணுக்கு
உரியமகள் இந்த மல்னும் எமக்குரியதாகும். நாங்கள் பூமியைத் தாயாகயும், வானத்தைத்
தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.
v எங்கள் கால்களைத்
தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால்
ஆனதாகும்.
v இப்பூமியின் மீது எது
வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீறு வந்து விழுவனலை யாகும்.
v நாங்கள் எப்படிக் காப்பாற்றி
வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்.
v முழுமையான
விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்.
நிலத்தை தேசியுங்கள். இயற்கை நம் எல்லோரையும் தேசிப்பது போல என்று சியாட்டல்
கூறுகின்றார்.
சிந்தனைவினா
நிலவளத்தினைக்
காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?.
விடை:
ü சில மட்கும் தன்மை உடையவை மட்காத தன்மை உடையவை. எனப்
பொருட்களைப் பிரித்துப் பயன்படுத்த வேண்டும்.
ü வேதியியல் அழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும்
பிக்கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.
ü அதனால் அவைகளை நிலத்தில் கலக்கதவன்னம்
பார்த்துக் கொள்ள வேண்டும்
ü செயற்கை உரங்களைப் பயனபடுத்தவேண்டும்.
பாதம்
”பாதம்” கதையைச் சுருக்கி எழுதுக
முன்னுரை
மாரி என்பவர் திரையரங்கு வாசலில் காலணி தைக்கும் ஏழை மனிதர்.
தினமும் கிடைக்கும் சிறிய வருமானத்தால் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள் நடந்த
ஒரு விசித்திரமான சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்தக் கதையை இப்போது
காண்போம்.
மாரி
மாரி திரையரங்கு வாசலில் அமர்ந்து காலணி தைத்து
கொண்டிருந்தார். அன்றைய நாள் பலத்த மழை பெய்தது. தேநீர் குடிக்க கூட அவரிடம் பணம்
இல்லை. மிகவும் கவலையுடன் இருந்த அந்த நாளில்தான் ஒரு அதிசயம் நடந்தது.
சிறுமியின் காலணி
திரையரங்கின் பக்கச் சந்திலிருந்து ஒரு சிறுமி மாரியின்
அருகே வந்தாள். அவள் ஒரு காலணியை கொடுத்து, தைத்து வைக்கச்
சொல்லிவிட்டு சென்றாள். ஆனால் மாலை ஆனபோதும் அந்தச் சிறுமி திரும்பி வரவில்லை.
மாரியின் கவலை
அடுத்த நாளும் மாரி அந்தக் காலணியை எடுத்துக்கொண்டு
திரையரங்கு வாசலுக்கு வந்தார். அன்று கூட சிறுமி வரவில்லை. பல நாட்கள் கடந்ததால்
மாரி மிகவும் கவலைப்பட்டார்.
மாரியின் மனைவி
ஒருநாள் மாரியின் மனைவி அந்தக் காலணியை அணிந்து பார்த்தார்.
அது அளவில் சிறியதாக இருந்தாலும், அவளது கால்களுக்கு
நன்றாகப் பொருந்தியது. இதைக் கண்டு மாரி மிகவும் ஆச்சரியமடைந்தார்.
விசித்திரமான காலணி
அந்தக் காலணியை அணிந்தபோது மனம் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த
செய்தி ஊரெங்கும் பரவியது. பலர் அந்தக் காலணியை அணிந்து பார்க்க வந்தனர். சிலர்
பணமும் கொடுத்தனர். இவ்வாறு மாரியின் வாழ்க்கை மெதுவாக நல்ல நிலையில் மாறியது.
சிறுமி மீண்டும் வந்தாள்
ஒருநாள் அந்தச் சிறுமி சற்று வளர்ந்த நிலையில் மாரியிடம்
வந்தாள். அவள் தன் காலணியை கேட்டாள். மாரி மகிழ்ச்சியுடன் அதைத் திருப்பிக்
கொடுத்தார். ஆனால் அந்த காலணி அவளது மற்றொரு பாதத்திற்குப் பொருந்தவில்லை.
முடிவுரை
நாம் நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையும் நல்லதாக
இருக்கும். கவலைப்படாமல், மகிழ்ச்சியுடன் இருந்தால்
வெற்றியும் செல்வமும் நம்மைத் தேடி வரும்.
நால்வகைச்சொற்கள்
சொல்வகையை அறிந்து பொருந்தாச்
சொல்லை வட்டமிடுக
1.
அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
2.
அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை
(ஈ) ஓடினான்
3.
அ) சென்றாள் ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்து
4.
அ) மா ஆ) ஐ இ) உம்
ஈ) மற்று
பின்வரும் தொடர்களில் உள்ள
நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.
1.
வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.
1. வளவன் , தங்கை,
நகரம், பேருந்து - பெயர்ச்சொல்
2. உம் - இடைச்சொல்
3. ஏறினார் – வினைச்சொல்
2.
நாள்தோறும் திருக்குறளைப் படி.
1. நாள் , திருக்குறள் - பெயர்ச்சொல்
2. உம் , ஐ - இடைச்சொல்
3. படி - இடைச்சொல்
3.
"ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது" என்றார் ஆசிரியர்.
1. ஆசிரியர் - பெயர்ச்சொல்
2. உதவுதல் , சிறந்தது - வினச்சொல்
3. கு - இடைச்சொல்
4. சால - உதவுதல்
குறு வினாக்கள்
1.
சொல் என்றால் என்ன?
ஒன்றுக்கு
மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமாயின் அது சொல் எனப்படும்.
2.
சொற்களின் வகைகளை எழுதுக.
சொற்களின்
வகைகள்:
1. வினைச்சொல்
2. இடைச்சொல்
3. உரிச்சொல்
4. பெயர்ச்சொல்
3.
பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லைச் சார்ந்துவரும் சொல் இடைச்சொல் ஆகும்.
மொழியை ஆள்வோம்
குறிப்புகளைக்
கொண்டு கதை எழுதுக.
நாய்க்குட்டி-குழிக்குள்–கத்தும் சத்தம் –முகிலன் –முதலுதவி –பால்
–தூங்கியது – வாலாட்டியது.
தலைப்பு: அன்பு
அன்று ஒரு நாள் மாலைப் பொழுதில் முகிலன்
தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். அங்கு ஒரு நாய்க்குட்டி கத்தும் சத்தம் கேட்டது. அவன் சுற்று முற்றும் பார்த்தான் ஆனால், அவன்
கண்ணில் நாய்க்குட்டி படவே இல்லை. ஆனாலும், சத்தம் கேட்டது. அவன் அருகில் உள்ள குழிக்குள்
எட்டிப் பார்த்தான். கத்தும் சத்தம் அங்கிருந்துதான் வந்தது. அதில் ஒரு நாய்க்குட்டி விழுந்து கிடந்தது. அதன்
மேல் சிறிது அடிபட்டிருந்தது. அதனைக் கண்ட முகிலன் அந்தக்
குட்டியை வெளியே எடுத்து அதற்கு முதலுதவி செய்தான் அந்தக் குட்டிக்கு உரிமையாளர்
யாரும் அருகில் இல்லாமையால் அந்தக் குட்டியைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று
பால் ஊற்றினான். அந்த நாய்க்குட்டியும் வயிறாரக் குடித்த
பின் அங்கேயே தூங்கியது. சிறு நேரத்திற்குப் பின் எழுந்து
தன்னைப் பாதுகாத்த முகிலனைப் பார்த்து வாலாட்டியது.
அகராதியைப்
பயன்படுத்தி பொருள் எழுதுக.
1. கருணை-இரக்கம்
2. அச்சம் -பயம்
3. ஆசை – விருப்பம்
4. எச்சம் – மீதம்
5. ஒப்பு - ஏற்றுக்கொள்ளுதல்
கீழ்க்காணும்
பெயர்ச்சொற்களை அகர வரிசையில் எழுதுக.
பூனை , தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர்,
பழம்
விடை: ஆசிரியர்,ஓணான்,கிளி,தேனி,தையல்,பழம்,பூனை,மனிதன், மாணவன் ,மான்,வௌவால்

விடைகள்:
பெயர்ச்சொல்:
குமரன்,கரம்,மாடு,பேருந்து,சிவன்,தாய்,வண்டி,செறு,பண்,பசி,நகரம்
வினைச்சொல்:
நடக்கிறாள்,செய்தான்.
இடைச்சொல்:வ்
கு,ஐ,உம்,மற்று,தான்
உரிச்சொல்: உறு,மாநகரம்.
கீழ்க்காணும் தலைப்பில்
கட்டுரை எழுதுக.
அறம்
செய விரும்பு
முன்னுரை:
அறம், பொருள்,
இன்பம், வீடு என்று வாழ்ந்தவர்கள் நம்
முன்னோர். வாரிக்கொடுத்த வள்ளல்கள் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அன்பும் அறனும்
தான் வாழ்க்கையின் பண்பும் பயனும் என்றார் வள்ளுவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
அல்லவா?
கடையேழு
வள்ளல்கள்:
வேள்பாரி, ஆய்
அண்டிரன், எழினி, கோப்பெருநள்ளி,
மலையமான் திருமுடிக்காரி, பேகன், வல்வில் ஓரி என்ற வள்ளல்கள் கடையேழு வள்ளல்கள் ஆவர். இவர்களில் முல்லைக்
கொடிக்குத் தேர் தந்த பாரியும், மயிலுக்குப் போர்வை தந்த
பேகனும் மிகச்சிறந்தவர்கள்.
இல்லார்க்கு
ஒன்று ஈவது அறம்:
கேட்டுக் கொடுப்பது யாசகம், கேட்காமல்
கொடுப்பது உதவி, உதவி பெறுபவருக்கே கொடுப்பவர் யாரென்ற
விளம்பரம் இன்றிக் கொடுப்பதே அறம். அறம் செய விரும்பு என்றார் ஔவைப்பாட்டி. ஆம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
முடிவுரை:
”அறத்தான்
வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல” - என்கிறார்
வள்ளுவர்.
அறச்செயல்களைச் செய்வதால்
கிடைப்பதுதான் இன்பம். மற்றவற்றால் கிடைப்பது இன்பமும் இல்லை புகழும் இல்லை. அறம் செய்வோம்! வாழ்க்கையை
அழகாக்குவோம்!
மொழியோடு விளையாடு
ஒலி
வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1.
அரம் - அறம்:
·
நான்
அரம் கொண்டு கத்தியினை கூர்மையாக்கினான்.
·
நாம்
அறம் செய்ய விரும்ப வேண்டும்.
2.
மனம் - மணம்
·
நான்
மனம் நிறைந்த வாழ்வை அடைந்தேன்.
·
நான்
மணம் மிக்க மாலையைத் கொடுத்தேன்.
இரு பொருள் தருக
1.
திங்கள்
-
நிலவு, மாதம்
2.
ஓடு - கல்நார் ஓடு, ஓடுதல்
3.
நகை
- அணிகலன், நகைத்தல்
கட்டத்தில் உள்ள சொற்களைக்
கொண்டு தொடர்கள் உருவாக்குக
|
மாலையில் பிறருக்கு
உதவி பெரியோரை நூல்
பல உடற்பயிற்சி அதிகாலையில் |
கற்போம் எழுவோம் விளையாடுவோம் செய்வோம் புரிவோம் வணங்குவோம் |
·
பிறருக்கு
உதவி புரிவோம்.
·
பெரியோரை
வணங்குவோம்.
·
நூல்
பல கற்போம்.
·
உடற்பயிற்சி
செய்வோம்.
·
அதிகாலையில்
எழுவோம்.
படிப்போம்;
பயன்படுத்துவோம்!
1.
தொண்டு - Charity
2.
பழங்குடியினர் - Tribes
3.
பாலைவனம் - Desert
4.
குடியரசுத் தலைவர் – President
திருக்குறள்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏழைகளுக்கு உதவி
செய்வதே ………………… ஆகும்.
அ) பகை ஆ) ஈகை இ)
வறுமை ஈ) கொடுமை
2. பிற உயிர்களின்
.........................க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை ஆ)
செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை
3. உள்ளத்தில்
..................... இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி ஆ) மன்னிப்பு இ) துணிவு ஈ) குற்றம்
இடம்
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
வறியார்க்கு
ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெ
திர்ப்பை உடைத்து நீரது.
விடை:
வறியார்க்குஒன்று
ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை
நீரது உடைத்து.
எனைத்தானும்
யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மாணாசெய்
தலை யாமை.
விடை:
எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய்
யாமை தலை .
குறுவினா
1. அறிவின் பயன் யாது?
விடை: பிற உயிரின்
துன்பத்தை தமது துன்பம்போல் எண்ணுதல்
2. பிற உயிர்களை எவ்வாறு
காப்பாற்ற வேண்டும்?
விடை: தம்மிடம்
இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண் டும்.
3. ஈகை பற்றிய வள்ளுவரின்
கருத்து யாது?
விடை: இல்லாதவர்க்குத்
தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.
பின்வரும்
நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க
நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்கைாவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக்
காட்சிகளைக்
கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து தான் கொண்டு
வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து
உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து
வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.
1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
2. எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.
3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
விடை:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி