6 TH STD TAMIL QUESTION ANSWER TERM-3 UNIT-3

 

இயல்-3

வினா விடைகள்

ஆசிய ஜோதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______________

அ) ஜீவ ஜோதி ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதி

2. நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______________

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்   ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்

இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்      ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

3. ஒருவர் செய்யக் கூடாதது ______________

அ) நல்வினை ஆ) தீவினை இ) பிறவினை ஈ) தன்வினை

4. 'எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

அ) எளிது + தாகும் ஆ) எளி + தாகும் இ) எளிது + ஆகும்  ஈ) எளிதா + ஆகும்

5. ’பாலையெல்லாம்’ என்னும் சொலைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

அ) பாலை +யெல்லாம் ஆ) பாலை +எல்லாம்  இ) பாலை +எலாம் ஈ) பா+எல்லாம்

6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

அ) இன்உயிர் ஆ) இனியஉயிர் இ) இன்னுயிர்  ஈ) இனிமை உயிர்

7. மலை +எலாம் என்பதனை ச் சேர் த்து எழுதக் கிடை க்கும் சொல் ______________

அ) மலை எலாம் ஆ) மலையெலாம்  இ) மலையெல்லாம் ஈ) மலை எல்லாம்

குறுவினா

1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?

விடை : இறந்த உடலுக்கு உயிர்கொடுத்து எழுப்புதல்

2. எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?

விடை : எறும்பு தன் உயிரைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறது.

3. ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?

விடை : ஒருநாளும் விட்டுச் செல்லாதது ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஆகும்.

4. உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?

விடை : நேர்மையான இரக்க குணம் கொண்டவரால் இவ்வுலகை ஆள முடியும்.

சிறுவினா

எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர் பிரான் கூறும் அறிவுரைகள் யாவை ?

விடை :

ü  தீய செயல்களைச் செய்யக்கூடாது.

ü  பிற உயிர்களைக் கொல்லக் கூடாது.

ü  இப்பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றும் எண்ணங்களை விடுதல் வேண்டும்.

சிந்தனை வினா

பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய

வேண்டும்?

விடை :

ü  பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களான காடுகளையும், மரங்களையும் அழித்தல் கூடாது.

ü  பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ü  பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்களை மிகுதியாக ஏற்படுத்த வேண்டும்.

இளைய தோழனுக்கு

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உன்னுடன் நீயே_____கொள்.

) சேர்ந்து  ) பகை  ) கைகுலுக்கிக்  ) நட்பு

2. கவலைகள்_____அல்ல.

) சுமைகள்  ) சுவைகள்   ) துன்பங்கள்  ) கைக்குழந்தைகள்

3. ‘விழித்தெழும்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) விழி + எழும்   ) விழித்து + எழும்    ) விழி + தெழும்   ) விழித்+ தெழும்

4. ‘போவதில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) போவது + இல்லை  ) போ+ இல்லை   ) போவது + தில்லை   ) போவது + தில்லை

5. ‘படுக்கையாகிறதுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

) படுக்கை+ யாகிறது  ) படுக்கையா+ ஆகிறது  ) படுக்கையா+ கிறது  ) படுக்கை+ ஆகிறது

6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

) தூக்கிகொண்டு ஆ) தூக்குக்கொண்டு  ) தூக்கிக்கொண்டு  ) தூக்குகொண்டு

7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

) விழியெழும்  ) விழித்தெழும்   ) விழித்தழும்  ) விழித்துஎழும்

குறுவினா

1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

விடை: கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தையாக உருவகப்படுத்துகிறார்

2. தோல்வி எப்போது தூண்டு கோலாகும்?

விடை: நெய்யாகவும் , திரியாகவும் நாம் மாறும்போது தோல்வி தூண்டுகோலாகும்

சிறுவினா

பூமி எப்போது பாதையாகும்?

விடை:  நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.

சிந்தனைவினா

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவைஎன்று நீங்கள் கருதுகிறீர்கள்?

விடை: விடாமுயற்சி, சோர்வின்மை , ஊக்கம், பரந்த அறிவு மற்றும் மனப்ப்பான்மை முதலியன

பெயர்ச்சொல்

1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

அ) பறவை   ஆ) மண்   இ) முக்காலி   ஈ) மரங்கொத்தி

2. காரணப்பெயரை வட்டமிடுக.

அ) மரம்   ஆ) வளையல்   இ) சுவர்   ஈ) யானை

3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

அ) வயல்  ஆ) வாழை  இ) மீன்கொத்தி   ஈ) பறவை

குறுவினா

1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும். அவை யாவை?

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

1. பொருட்பெயர்

2. இடப்பெயர்

3. காலப்பெயர்

4. சினைப்பெயர்

5. பண்புப் பெயர்

6. தொழிற்பெயர்

2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன ?

     நம் முன்னோர் சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் சில பெயர்களை இட்டு வழங்கினார். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் ஆகும்.

மொழியை ஆள்வோம்

பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.

கைகள் - சினைப்பெயர்

2. அறம், பொருள், இன்பம், வீடு, அடைதல் நூலின் பயனாகும்.

அடைதல் - தொழிற்பெயர்

3. குழந்தை தெருவில் விளையாடியது.

தெரு - இடப்பெயர்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

நீதிநூல், பாரதியார் -  பொருட்பெயர்

5. மாலை முழுதும் விளையாட்டு.

மாலை - காலப்பெயர்:

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.

அன்பு - பண்புப்பெயர்

அகரவரிசைப்படுத்துக

ஒழுக்கம், உயிர் ,ஆடு, எளிமை, அன்பு ,இரக்கம், ஓசை ,ஐந்து ,ஈதல் ,ஊக்கம் ,ஏது ,ஒளவை

விடை:

அன்பு, ஆடு, இரக்கம், ஈகை, உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஔவை

கடிதம் எழுதுக.

நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

அனுப்புநர்

   வா. வெண்மதி,

   மாணவர் செயலர்,

   அரசினர் உயர்நிலைப் பள்ளி,

   தணிகைப்போளூர்,

   இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

   தமிழ்நிலா பதிப்பகம்,

   4, வள்ளுவர் தெரு,

   மதுரை-2.

ஐயா,

   பொருள் : தமிழ்-தமிழ் அகராதிகள் அனுப்பக்கோருதல் சார்பாக.

               வணக்கம். எங்கள் பள்ளி நூலகத்திற்காக தமிழ்-தமிழ் அகராதிகள் பத்துப் படிகள் தேவைப்படுகின்றன. எனவே மேற்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அகராதிகளை அனுப்புமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி ஐயா!!

இணைப்பு:

விடை:

  . நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது.

  . இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது.

  . நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்.

அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக

1. பார் - பார்த்தல், பார்ப்பு, பார்க்க, பார்த்தார், பார்வை

2. செய் - செய்க, செய்தல், செய்து, செய்யா, செய்தன, செய்த

3. தெளி - தெளிக, தெளிதல், தெளிந்து, தெளித்த, தெளிக்கும்

4. படி - படிக்க, படித்தல், படித்து, படித்த, படிப்பான்

விடை:

  கம்மல் . சூளாமணி , மோதிரம் , சிலம்பு , வளையல் , கடுக்கன்

படிப்போம்; பயன்படுத்துவோம்!

1.     மனிதநேயம் - Humanity

2.    கருணை - Mercy

3.    உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation

4.    நோபல் பரிசு - Noble price

5.    சரக்குந்து - Lorry


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை