10 TH STD TAMIL HALF YEARLY QUESTION PAPER NAMAKKAL DISTRICT

  



அரையாண்டுப்பொதுத் தேர்வு-2025 நாமக்கல் மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. சேர நாடுசோழ நாடு

1

2.     

ஆ. கம்பராமாயணம்

1

3.     

பாடல் , கேட்டவர்

1

4.     

இ. ஒன்பது

1

5.     

. செய்தி 1.3 ஆகியன சரி

1

6.     

இ. ஆறு பெரும்பொழுதுகள்- நண்பகல்

1

7.     

. வஞ்சிப்பா

1

8.     

. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

9.     

. கலைஞர்

1

10.   

. பண்புத்தொகை 

1

11.    

ஆ. இன்மையிலும் விருந்து

1

12.   

அ. முத்தொள்ளாயிரம்

1

13.   

, தெரியவில்லை

1

14.   

ஆ. நந்தின் , பந்தர்

1

15.   

ஈ. சங்கு

1

                                     பகுதி-2                            பிரிவு-1                                                        4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அடி, கவை,கொம்பு,கொப்பு,சிறுகிளை, சினை,போத்து,குச்சி, இணுக்கு

2

17

அ. தமிழின் முதல் அகராதி சதுரகராதியை இயற்றியவர் யார்?

ஆ. வாகைத்திணை என்பது யாது?

2

18

கலைஞரைப் பேராசிரியர் அன்பழகனார்பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக்  கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பாராட்டியுள்ளார்.

2


19

இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.

2


20

குலேசபாண்டியன்இடைக்காடனார்

2

21

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

2

                                                                    பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. படிக்காமல் தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான்

ஆ. பணத்தை அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான்

2

23

அழகனுக்கு கோப்ம் கொஞ்சம் அதிகம்  . அந்த துயர நிகழவை மறக்க நினைக்கிறேன்

2

24

ஒலித்து - ஒலி +த்+த்+உ

ஒலி - பகுதி;

த் -சந்தி;

த்- இறந்தகால இடைநிலை;

உ - வினையெச்ச விகுதி

2

25

அ. விருந்தோம்பல்  ஆ. கிளர்ச்சி

2

26

 அ. எட்டு  - அ             ஆ. நான்கு,இரண்டு  ’ , 

2

27

அ. விண்மீன்  ஆ. நறுமணம்

2

28

எதிர்காலம்உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                          பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

இடம்இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:  எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்ஆந்திர மாநிலம் பிரியும்போதுசமயத்தில்செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்.

3

30

அ. பரிபாடல்  ஆ. 24  இ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

3

31

1.     உயிராய் நான் ;  மழையாய் நான்

2.     நானின்றி பூமியே சுழலாது  

3.    பூமித்தாயின் குருதி நான்.

3

                                                                       பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவிஅதற்கு ஏற்ற காலம்செயலின் தன்மைசெய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமைகுடிகளைக்காத்தல்ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல்விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார்.

3

33

v  குளிர்ந்த சோலையில் மயில்கள் ஆடுகின்றன.

v  தாமரை மலர்கள் விளக்குகள் போன்று தோன்றுகின்றன.

v  குவளை மலர்கள் கண்விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.

v  நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலைகள் போல் விரிகின்றன.

v  மகர யாழின் தேனிசை போல் வண்டுகள் பாடுகின்றன.

3

34

 

.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

     எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுறஇருத்தல்

     போமெனில் பின் செல்வதாதல்              

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

       ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

.

அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

3

                                                                பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3

36

உவமை அணி:

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு  பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்இதில் உவமைஉவமேயம்உவம உருபு ஆகியன இடம்பெறும்உவம உருபு  வெளிப்படையாக வரும்.

சான்று:

      வேலொடு  நின்றான் இடுஎன்றது போலும்

     கோலொடு நின்றான்  இரவு 

அணிப்பொருத்தம்:

v  உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்.

v  உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபு – போலும்

இவ்வாறு உவமைஉவமேயம்உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று.         

3

37

சீர்

அசை

வாய்பாடு

இடிப்பாரை

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

இல்லாத

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

ஏமரா

நேர்+நிரை

கூவிளம்

மன்னன்

நேர்+நேர்

தேமா

கெடுப்பார்

நிரை+ நேர்

புளிமா

இலானும்

நிரை+ நேர்

புளிமா

கெடும்

நிரை

மலர்

3

                                                                பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 

                       கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி

கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்:

    குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான்பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான்.

கருணையன் தாயை இழந்து வாடுதல்:   

     இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னேமழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.

கருணையனின் தவிப்பு:     

    துணையைப்  பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.

பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:          

      கருணையன்  இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்அதைக் கேட்டுபல்வேறு இசைகளை இயக்கியது போன்றுமணம் வீசும் மலர்களும்பறவைகளும்வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.

 (அல்லது)

)

v  ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும்.

v  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர்.

v  உலகத்தோடு இணைந்து வாழாதவர்கற்றவராயினும் அறிவு இல்லாதவரே

5

39

.

(மாதிரிக் கடிதம்)

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     .இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்          

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001          

ஐயா,

    பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.

      வணக்கம்எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                                                                                                    இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                                  .இளமுகில்.

இடம்: அரக்கோணம்,

நாள்: 15-10-2022.

 

 (அல்லது)

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

42

)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

)

    மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறதுமொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளதுநம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளதுநாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்எல்லோருக்கும் நன்றி.

5

                                                               பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)  முன்னுரை:

        என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும்வல்லவர்களாகவும்  உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும்இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றனஅதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும்விடுதலை நாள் விழாவும்குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தனஅக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர்இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         இவர்களது கடுமையான போராட்டத்தாலும்தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

      இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும்துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமைகல்வியின்மை அறியாமைசாதி மத வேறுபாடுகள்தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும்நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும்அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல்சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுசாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

முடிவுரை:                

   என்ற  மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்கநாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதுமாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால்நாடும் முன்னேறும் வீடு முன்னேறும்புதிய இந்தியா உருவாகும்.

 (அல்லது)

முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்புஎன்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயணமகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதைசீவகசிந்தாமணிகம்பராமாயணம்வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

      மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களைமொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

     மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்றுமனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்திவேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

    'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

8

44

இராமானுசர் நாடகம்

 முன்னுரை

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சிதலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில்நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர்அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தண்டும் கொடியுமாக:

    திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும்கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்திபூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர்கூரேசர்முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட பூரணர் கோபம் கொண்டார்அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,

ஆசிரியரின் கட்டளை:

      பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் "திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக் கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.

திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:

     திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டுஉரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை கூறினார்கள்.

குருவின் சொல்லை மீறுதல்:

      குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிடநான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.

குருவின் ஆசி:

       இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர்அவரை மன்னித்து அருளினார் மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.

முடிவுரை

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர்தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்

(அல்லது)

)  முன்னுரை:

              கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும்இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார்.இவன்  துறவியோபரதேசியோ?” என்ற ஐயத்தை மனதில் கொண்டு ,அருகில் சென்று பார்த்தார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய்  அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். 

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:                

ஒரு வேப்பமரத்தின் அடியில்  மண் கலயங்கள் கஞ்சியால்  நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு  சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்” என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள் சொருகின.மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது.  அவனுள்ஜீவ ஊற்று பொங்கிநிறைந்து வழிந்தது

அன்னமய்யாவின் மனநிறைவு:                            

 புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப்  பார்ப்பதுபோலஅந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:              

இளைஞன் எழுந்தவுடன்,” எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று அன்னமய்யா கேட்டார்.அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள் பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.

சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்:

        சுப்பையாவும்,அவருடன்இருந்தவர்களும் அன்னமய்யாவையும்,இளைஞனையும்   மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். சுப்பையா  தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை  அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசிஅந்த உணவை உண்ண செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான் 

முடிவுரை:                                             

               தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்பஅன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

8

45

) தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை:

                 தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"

    என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்துதமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும்புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

பிள்ளைத்தமிழ்:

குழவி மருங்கினும் கிழவதாகும்   - தொல்காப்பியர்

     கடவுளையோஅரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணிபத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.

சதகம்:

    நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள்நீதி நெறி முறைகள்இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.

பரணி:

                     "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"

       என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.

அந்தாதி:

     அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்துஅசைசீர்அடி ஆகியவற்றில் ஒன்றுஅடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.

கோவை:

       பாடலுக்கும்அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.

முடிவுரை:

        "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறுபல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்

 (அல்லது)

முன்னுரை:

கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காதுஅப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டுநுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டுஉள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றனஎன ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

      கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டுஅனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

     கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள்தின்பண்டங்கள்குழந்தைகளுக்கான பொம்மைகள்உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்ததுஅது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

மனதைக் கவரும் மயிலாட்டம்

                நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம் ”

      எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம்ஒயிலாட்டம்கரகாட்டம்கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.

பேச்சரங்கம்:

    கலையரங்கத்தில்முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டுவெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்துமகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை