அரையாண்டுப்பொதுத் தேர்வு-2025 செஙகல்பட்டு மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
வி.எண் | விடைக்குறிப்புகள் | மதிப்பெண் |
1. | இ. சேர நாடு, சோழ நாடு | 1 |
2. | ஈ. கூற்று 1 மற்றும் 2 சரி | 1 |
3. | இ. காட்டைச்சேர் | 1 |
4. | அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது | 1 |
5. | இ. வேலையைத் தள்ளிப்போடுதல் | 1 |
6. | ஆ. கிண்கிணி ஈ. மன்னன் , இறைவன் | 1 |
7. | ஈ. பாடல் , கேட்டவர் | 1 |
8. | ஆ. 3.1.4.2 | 1 |
9. | ஈ. வினைத்தொகை | 1 |
10. | இ. வலிமையை நிலைநாட்டல் | 1 |
11. | ஆ. கல் | 1 |
12. | ஆ. சிலப்பதிகாரம் | 1 |
13. | ஈ. இளங்கோவடிகள் | 1 |
14. | இ. வண்ணமும், சுண்ணமும் | 1 |
15. | அ. நெய்பவர் | 1 |
பகுதி-2 பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
16 | · செந்நெல் · வெண்ணெல் · கார்நெல் · சம்பா மற்றும் உள்வகைகள் · மட்டை | 2 |
17 | அவையம்=மன்றம் அல்லது சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். | 2 |
18 | ü பொய்யான வாழ்வு முடியப்போகிறது. ü காலனின் தூதர் கையில் உறங்குவாய் என்கிறார்கள் | 2 |
19 | v மொழிபெயர்ப்பால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும். v பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம். | 2 |
20 | அ. தமிழ் எத்தகைய மொழியாகத் திகழ்கிறது? ஆ. காற்று மாசுபடுவதால் என்ன நிகழ்கிறது? (மாதிரிகள்) | 2 |
21 | பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் | 2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
22 | கட்டுரையைப் படித்த | 2 |
23 | ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென்று நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது | 2 |
24 | அ. துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும். ஆ. மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்துப் போல நிலையானது. | 2 |
25 | 1. தஞ் / சம் - நேர் நேர் - தேமா 2. எளி / யன் - நிரை நேர் - புளிமா 3. பகைக் / கு - நிரைபு - பிறப்பு. | 2 |
26 | அ. விருந்து ஆ. பெருங்காற்று | 2 |
27 | ஒலித்து - ஒலி +த்+த்+உ ஒலி - பகுதி; த் -சந்தி; த்- இறந்தகால இடைநிலை; உ - வினையெச்ச விகுதி | 2 |
28 | வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி , நொச்சி-உழிஞை | 2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||
29 | ü வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ü ”வாய்மை பேசும் நாவே உண்மையான நா” என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ü நாக்கு ஒரு அதிசய திறவுகோல்; இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவைத் திறப்பதும் அது தான் | 3 |
30 | அ. ஊதைக்காற்று ஆ. வடக்கு இ. பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் | 3 |
31 | அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. | 3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | |||
32 | ü தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். | 3 | |
33 | ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக | 3 | |
34 |
| 3 | |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க | ||||||||||||||||||||||||||
35 | ü இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v உவம உருபு – போலும் இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று. | 3 | ||||||||||||||||||||||||
36 | 1. திணை வழுவமைதி "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது. 2. பால் வழுவமைதி "வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது. 3. இட வழுவமைதி மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும். 4. கால வழுவமைதி குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம். 5. மரபு வழுவமைதி "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்"- பாரதியார். குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. | 3 | ||||||||||||||||||||||||
37 |
| 3 | ||||||||||||||||||||||||
பகுதி-4 5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி | ||||||||||||
38 அ | ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் (அல்லது) ஆ) v ஒழுக்கம் சிறப்பு தரும். அதனை உயிரை விடக் காக்க வேண்டும். v ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர். அது இல்லாதவர் பழிகளை அடைவர். v உலகத்தோடு இணைந்து வாழாதவர், கற்றவராயினும் அறிவு இல்லாதவரே | 5 | ||||||||||
39 அ. | அனுப்புநர், பெறுநர், அய்யா, பொருள், கடித்த்தின் உடல், இப்படிக்கு, இடம், நாள், உறைமேல்முகவரி என்பவற்றைக்கொண்டு எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக (அல்லது) ஆ வாழ்த்து மடல்
நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. | 5 | ||||||||||
40 | காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. | 5 | ||||||||||
41 | சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக | 5 | ||||||||||
42 | அ)
ஆ) மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். | 5 | ||||||||||
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: | ||
43 | அ) முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும் சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக் கலைஞர் தன் பதினான்காம் வயதில், பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது. பேச்சுக் கலைஞர்: v மேடைப்பேச்சினில் பெருவிருப்பம் கொண்ட கலைஞர், “நட்பு” என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக் கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார். திரைக் கலைஞர் v கலைஞரின் திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க் கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். அ. நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ் மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில் இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில் கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின் அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ü செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை: சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம் | 8 |
44 அ | முன்னுரை: விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம் எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும் கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார். பாலசரசுவதி: இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார். இராஜம் கிருஷ்ணன்: சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார். மதுரை சின்னப்பிள்ளை: இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின் "அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றவர். முடிவுரை: பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர். (அல்லது) ஆ) பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. புதிதாகக் கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின் அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். v அக்குடும்பத்தில் இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின் முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார். முருங்கை வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக் காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வர தொடங்கினர். மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. | 8 |
45 | அ) தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ் முன்னுரை: “தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம். பிள்ளைத்தமிழ்: குழவி மருங்கினும் கிழவதாகும் - தொல்காப்பியர் கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும் கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும். பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும். அந்தாதி: அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும். கோவை: பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும். முடிவுரை: "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும் (அல்லது) ஆ) முன்னுரை: ”கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது” குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட கலைகள்: ”மனதைக் கவரும் மயிலாட்டம் நம்மையும் ஆடத்தூண்டும் கரகாட்டம் ” எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது. பேச்சரங்கம்: கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. | 8 |