10.ஆம் வகுப்பு தமிழ் சிறப்பு திருப்புதல் வினாத்தாள்-2

 

 10.ஆம் வகுப்பு தமிழ் 

சிறப்பு திருப்புதல் வினாத்தாள்-2

சிறப்பு திருப்புதல் தேர்வு-2 (2025-2026) இயல்-4,5

10. ஆம் வகுப்பு      தமிழ்         மொத்த மதிப்பெண்கள்: 100    நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள்

குறிப்புகள் : i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

             ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                15X1=15

1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி  ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

2. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இவ்வடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

அ) கருமை    ஆ) பச்சை    இ) பழுப்பு    ஈ) நீலம்

3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? 

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா? 

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

4. சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.

அ) முதுவேனில் ஆ) பின்பனி  இ) முன்பனி  ஈ) இளவேனில்

5. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் -------

அ) வெளுத்தது ஆ) கருத்தது இ) சிவந்தது  ) கறுத்தது

6. தந்த அரசர் – என்பதன் வினையெச்சம்

அ) தரும் அரசர்  ஆ) அரசே தருக   இ) அரசர் தந்து விட்டார்  )  தருகின்ற அரசர்

7. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறன் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

8. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

9. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி  ஆ) பால் வழுவமைதி  இ) திணை வழுவமைதி  ) கால வழுவமைதி

10. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம் ஆ) நீவிர்  ) அவர்  ) நாம்

11. மதிற்போர் பற்றிய திணைகள்

அ) வெட்சி,கரந்தை ஆ) தும்பை,வாகை இ) நொச்சி, உழிஞை ஈ) கைக்கிளை, பெருந்திணை

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

      "ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

     நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

     தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

    ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா."

12. பாடல் இடம் பெற்ற நூல்-

அ) பெரியபுராணம்  ஆ) திருவிளையாடற்புராணம்  இ) கந்தபுராணம்  ஈ) பரிபாடல்

13. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க.

அ) ஓங்கு – பனை  ஆ) நீங்குவம் –அல்லோம்  இ) ஓங்கு -  நீங்குவம்  ஈ) நீத்து - நீயும்

14. நீபவனம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க.

அ) ஆலவனம்   ஆ) இடும்பவனம்  இ) முல்லை வனம்  ஈ) கடம்பவனம்

15. கண்டாய்- இலக்கணக்குறிப்பு

அ. முன்னிலைப் பன்மை வினைமுற்று ஆ. முன்னிலை ஒருமை வினைமுற்று

இ. வியங்கோள் வினைமுற்று  ஈ. குறிப்பு வினைமுற்று

பகுதி-2 (மதிப்பெண்கள்:18)

                                                               பிரிவு-1                                                       4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

        ) தானியங்கள் விற்கும் தெரு கூலக்கடைத்தெரு எனப்பட்டது.

        ) .பொ.சி சொற்பொழிவுகள் கேட்பதன்மூலம் இலக்கிய அறிவு பெற்றார்.

17) சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

18) தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

19) பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.    (பெரிய கத்தி,இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்)

20) மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

21) ”குன்றேறி எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

                                                            பிரிவு-2                                                       5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக

23) பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக

24) அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக

25) கலைச்சொல் தருக: . Human Resource  . Aesthetics

26) கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

27) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

28) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக

. கல் சிலை ஆகுமெனில்,நெல் -- ஆகும்.  . குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து--- 

பகுதி-3 (மதிப்பெண்:18)

                                                                      பிரிவு-1                                                           2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

30) கலைஞர் குழந்தை உள்ளம் கொண்டவர் என்பதைப் பாட்த்தின்வழி விளக்குக.

31) பத்தியைப் படித்துப் விடை தருக:-

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.

அ. பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?

ஆ. நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ. நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?

     பிரிவு-2                                                                  2X3=6                                                 

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

33) பொருல்செயல் வகை குறித்து வள்ளுவரின் கருத்துகளை எழுதுக.

34) ) வெய்யோன்---எனத்தொடங்கும் ம் பாடலை எழுதுக.   

(அல்லது)

      ) ”புண்ணிய” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

பிரிவு-3                                                                    2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35) தொழுதகை  யுள்ளும்  படையொடு  ஒன்னார்

       அழுதகண்  ணீரும்  அனைத்து          - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

36) 'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

37) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்  

       மெய்ப்பொருள் காண்ப தறிவு.         அலகிட்டு வாய்பாடு எழுதுக

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  5X5=25

38) ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக  (அல்லது)

    ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

39) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக. குறிப்பு: நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.                      (அல்லது)

    ) உங்கள் ஊரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் உங்களைக் கவர்ந்த ஒரு புத்தகத்தின் சிறப்பு குறித்து உங்களது நண்பனுக்குக் கடிதம் எழுதுக

40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41) 10, எழில் நகர், காமராசர் தெரு, வளர்புரம், இராணிப்பேட்டை மாவட்டம். என்ற முகவரியில் வசித்து வரும் எழில்முருகனின் மகள் தமிழ்க்கனா அவ்வூரில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில்உறுப்பினராக விரும்புகிறார்.தேர்வர் தன்னை தமிழ்க்கனாவாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக

42.) பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

(அல்லது)

) மொழி பெயர்க்க:

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                     3X8=24

43) ) தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் அறிவியல் கருத்துகள் பிற துறைக் கருத்துகள் தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.                                          

(அல்லது)

 ) போராட்டக் கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

44) . பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக      

(அல்லது)

) கற்கை நன்றே கற்கை நன்றே

      பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

45) ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.                                                                          

(அல்லது)

   ) தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தபின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை