10.ஆம் வகுப்பு தமிழ்
சிறப்பு திருப்புதல் வினாத்தாள்-3
சிறப்பு
திருப்புதல் தேர்வு-3 (2025-2026) இயல்-6,7 10.
ஆம்
வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்: 100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் குறிப்புகள் : i) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள் தெளிவாகவும், குறித்த
அளவினதாகவும்,
சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1.
சரியான
அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
உழவு,
மண்.
ஏர். மாடு ஆ)
மண்,
மாடு, ஏர். உழவு
இ)
உழவு,
ஏர், மண், மாடு ஈ)
ஏர். உழவு,
மாடு, மண்
2.
'மாலவன்
குன்றம் போனாலென்ன?
வேலவன்
குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை
முறையே-
அ)
திருப்பதியும் திருத்தணியும் ஆ)
திருத்தணியும் திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ)
திருப்பரங்குன்றமும் பழனியும்
3.
நச்சிலைவேல்
கோக்கோதை நாடு,
நல்யானைக்
கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப் படுகின்ற நாடுகள் முறையே,
அ)
பாண்டிய நாடு,
சேர
நாடு ஆ) சோழ நாடு,
சேர
நாடு
இ)
சேர நாடு,
சோழ
நாடு ஈ)
சோழ நாடு,
பாண்டிய
நாடு
4.
சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
அ)
அகவற்பா ஆ)
வெண்பா இ)
வஞ்சிப்பா ஈ)
கலிப்பா
5. கல்லார் அறிவிலா தார் – என்ற தொடரில் வரும் சீர்களுக்கான
வாய்பாடு
அ) தேமா கருவிளம் மலர்
ஆ) தேமா கருவிளம் நிரை
இ) தேமா கருவிளம் நாள் ஈ) தேமா நாள் கருவிளம்
6. மூவேந்தர்களால்
நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழ் –இடம்பெற்ற தமிழெண்கள்
அ) ரு அ ஆ) ௩ ௪ இ)
௪
௩ ஈ) உ
அ
7. மேன்மை தரும் அறம் என்பது-
அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.
8.
வண்ணதாசனுக்குச்
சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ)
ஒரு சிறு இசை ஆ)
முன்பின் இ)
அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்
9. ”வலிமை குறைந்தவரோடு போர்செய்யக்கூடாது” எனப்பாடியவர்
அ) நல்வேட்டனார் ஆ) நக்கீரனார் இ)
ஆவூர் சங்கரனார் ஈ) ஆவூர் மூலங்கிழார்
10. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக்
கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ)
சோழ நாடு,
பாண்டிய
நாடு
11. ஏகாரத்தில் முடியும் பாவகை
அ) வஞ்சிப்பா ஆ) கலிப்பா இ) வெண்பா ஈ) ஆசிரியப்பா
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
பூக்கையைக்
குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று
அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை
யாவும்"
12. பாடலின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி
ஈ) அசோகமித்திரன்
13. திருந்திய அறம் - இலக்கணக்குறிப்பு
அ) தெரிநிலை வினையெச்சம் ஆ)
குறிப்பு வினையெச்சம்
இ) தெரிநிலைப் பெயரெச்சம் ஈ)
குறிப்புப் பெயரெச்சம்
14. பாடலில் உள்ள எதுகைச்
சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை.
திருந்திய
இ) பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை, பரப்பி
15. சேக்கை என்ற சொல்லின்
பொருள்
அ) உடல் ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)
16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) தானியங்கள் விற்கும் தெரு
கூலக்கடைத்தெரு எனப்பட்டது.
ஆ) ம.பொ.சி சொற்பொழிவுகள் கேட்பதன்மூலம்
இலக்கிய அறிவு பெற்றார்.
17) பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர்
சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
18) வறுமையிலும்
படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
19) தேம்பாவணி- நூற்குறிப்பு வரைக 20)
குறிப்பு
வரைக அவையம்.
21) ”இன்மையின்” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22) புறத்திணைகளில் எதிரெதிர்த்
திணைகளை அட்டவணைப்படுத்துக.
23) குறள்வெண்பாவின் இலக்கணத்தை
எழுதி எடுத்துக்காட்டுத் தருக
24)
அறியேன்
- பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
25)
கலைச்சொல்
தருக: அ. Agreement , ஆ. Charity
26)
பின்வரும்
தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க
அ. கொஞ்சம் அதிகம்
ஆ.
முன்னுக்குப்பின்
27) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக
அ. மூவேந்தர் ஆ. நாற்றிசை
28) தொடரைப் படித்து விடையைக்
கண்டறிக
அ. கல்
சிலை ஆகுமெனில்,நெல் -- ஆகும்.
ஆ. குரலில் இருந்து பேச்சு
எனில்,விரலில் இருந்து--
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) "தலையைக் கொடுத்தேனும்
தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
30)
வாய்மை
பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக
31)
பத்தியைப்
படித்துப் விடை தருக:-
சிற்றூர் மக்களின்
வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய
நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன.
பழந்தமிழ் மக்களின் கலை,
அழகியல், புதுமை ஆகியவற்றின்
எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.
அ. பழந்தமிழ் மக்களின்
எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?
ஆ. நிகழ்கலைகளின் பயன்கள்
இரண்டினை எழுதுக.
இ. நிகழ்கலைகள் எப்பகுதி
மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
32) சேர, சோழ, பாண்டிய நாட்டு
வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
33) எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
34) அ) ”தூசும்” எனத்தொடங்கும் பாடலை எழுதுக. (அல்லது)
ஆ) ”நவமணி” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக
பிரிவு-3 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) தற்குறிப்பேற்ற அணியை சான்றுடன் விளக்குக.
36) ஆசிரியப்பாவின் பொது
இலக்கணத்தை எழுதுக.
37)
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
– அலகிட்டு வாய்பாடு எழுதுக
பகுதி-4 (மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25
38) அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க
வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக. (அல்லது)
ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்
பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
39)
உங்கள்
தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு
ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது)
ஆ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை
செய்வோம்
“ என்ற
உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41) 15, கோயில் தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில்
வசிக்கும் இளங்கோவன் என்பவரின் மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில்
10.
ஆம் வகுப்பு
முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு, தமிழ் வ்ழியில் சேர
விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை
சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
42.அ) கல்வெட்டுகளைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால்
இயன்ற செயல்களைப்பட்டியலிடுக.
(அல்லது)
ஆ) மொழி பெயர்க்க:
Among
the five geographical divisions of the Tamil country in Sangam literature, the
Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a
farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the
fertility of the soil.Among these elements of nature,sunlight was considered
indispensible by the ancient Tamils.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43) அ) நாட்டு விழாக்கள் விடுதலைப்
போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு
பக்க அளவில் 'மாணவப் பருவமும்
நாட்டுப் பற்றும்'
என்ற
தலைப்பில் மேடை உரை எழுதுக. (அல்லது)
ஆ) வீரத்தைப்போலவே
கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது என்பதைப் பாடத்தின்வழி நிறுவுக.
44) அ. கிடைப்பதற்கரிய திருமந்திரம்
கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக. (அல்லது)
ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம்
கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
45) அ) குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை
விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு
தருவோம்- முடிவுரை. (அல்லது)
ஆ) உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர் - போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை தொகுத்து எழுதுக