இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 2025
10.ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள்
இராணிப்பேட்டை ,வேலூர்,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டம்
இரண்டாம்
இடைப்பருவத்தேர்வு 2025,
இராணிப்பேட்டை,காஞ்சி,வேலூர்,திருவள்ளூர்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
|
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஈ)
சிலப்பதிகாரம் அ)
திருப்பதியும், திருத்தணியும் |
1 |
|
2. |
இ) பழுப்பு
|
1 |
|
3. |
அ)
திருப்பதியும், திருத்தணியும் |
1 |
|
4. |
இ)
வலிமையை நிலைநாட்டல் |
1 |
|
5. |
ஈ) இளவேனில் |
1 |
|
எவையேனும்
நான்கிக்கு விடையளி 4X2=8 |
||||||||||||||||||||
|
6 |
ü
பூஞ்சோலைகள் ü
செண்பகக் காடுகள் ü
மலர்ப்பொய்கைகள் ü
தடாகங்கள் ü
கமுகத் தோட்டங்கள் ü
நெல்வயல்கள் |
2 |
||||||||||||||||||
|
7 |
1. முல்லைநில மக்கள் யாரை வழிபட்டனர்? 2. திருவள்ளுவர் எத்த்னை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்? |
2 |
||||||||||||||||||
|
8 |
பொருளை மறைத்து வைத்தல் எனும் துன்பத்தைத் தராதவர்
|
2 |
||||||||||||||||||
|
9 |
வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி
, நொச்சி-உழிஞை |
2 |
||||||||||||||||||
|
10 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை |
2 |
||||||||||||||||||
|
ஏதேனும் இரண்டினுக்கு விடையளி 2X3=6 |
||||||||||||||||||||
|
12 |
ü தமிழுக்காகத்
தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம்
சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார் ü 2010
ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
||||||||||||||||||
|
13 |
சேர
நாடு: சேற்று வயலில் ஆம்பல்
மலர்கள் விரிந்தன. அதனைப் பார்த்த நீர்ப்பறவை நீரில் தீப்பிடித்ததாக அஞ்சி, தனது குஞ்சுகளைச் சிறகுகளால்
மறைத்தன. சோழ
நாடு: உழவர்கள் நிற்போர் மீது
ஏறி நின்று மற்றவர்களை ”நாவலோ” என்று அழைப்பர். இது
போரின் போது ஒரு வீரன் மற்ற வீரர்களை அழைப்பது போன்று உள்ளது. நெல் வளமும் யானைப்படையும் சோழ நாட்டில் உள்ளதை இது காட்டுகிறது. பாண்டியநாடு: சங்கின் முட்டைகள், புன்னை மொட்டுகள் பாக்குமணிகள் ஆகியவை முத்துகள் போல இருந்தன. பாண்டியநாடு இத்தகைய முத்து வளத்தை உடையது. |
2 |
||||||||||||||||||
|
14 |
அ.
வெய்யோனொளி தன்மேனியின்
விரிசோதியின் மறைய பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும்
போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன் வடிவென்பதோ ழியாவழ குடையான். ஆ.
அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு. |
2 |
||||||||||||||||||
|
|
ஏதேனும்
மூன்றினுக்கு விடையளி
3X5=15 |
|
||||||||||||||||||
|
15 |
முன்னுரை: ”கலைத்திருவிழா என்
மனதைக் கவர்ந்திழுத்தது” குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன?
என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும்
உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக
வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப்
பட்டிருந்தது. சிறு
அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட
கலைகள்: ”மனதைக் கவரும் மயிலாட்டம் நம்மையும் ஆடத்தூண்டும்
கரகாட்டம் ” எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது. பேச்சரங்கம்: கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்,
வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து,
மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில்
மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. |
5 |
||||||||||||||||||
|
ஆ |
நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், திருத்தணி . பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1 ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இப்படிக்கு,
தங்கள்
உண்மையுள்ள, இடம் : திருத்தணி அ அ அ அ அ. நாள் :
04-03-2024 |
5 |
||||||||||||||||||
|
16 |
|
5 |
||||||||||||||||||
|
17 |
வள்ளுவன்
வாக்கில் ஒன்றைச் சொன்னது! காலம்
யாவும் கடந்து நின்றது! சிந்தனைச்
சிறகை விரித்துப்பார் என்றது! அறிவு
சிறக்க அறிந்துகொள் என்றது! என்னையும்
கவிஞனாக்க துணிந்து நின்றது! இது
வெறும் காட்சி மட்டுமன்று! என்
மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்! |
5 |
||||||||||||||||||
|
18 |
1.
கல்வெட்டுகளின் வழி அறியலாகும்
செய்திகளை அனைவருக்கும் கூறுதல். 2.
கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி
எதுவும் கூற, அனுமதிக்காமை. 3.
கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி,
அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல். 4.
கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய
உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5.
கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி
நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை
உணர்த்துதல். |
5 |
||||||||||||||||||
|
|
இரண்டினுக்கு
விடையளி 2X8=16 |
|
||||||||||||||||||
|
19 |
முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். "முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்" என்றெல்லாம்
மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும்
பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித்
திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள்
இருந்த கலைத்தன்மையை வளர்த்தது. பேச்சுக் கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர், "நட்பு"
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க
"சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ்
மாணவர் மன்றம்" ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே
உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான
பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம்,
வெள்ளிக்கிழமை,
காகிதப்பூ
உட்பட பல நாடகங்களை எழுதினார். திரைக் கலைஞர் v கலைஞரின்
திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக
நடித்த ”ராஜகுமாரி”
படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா,
ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க் கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர்
தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். |
8 |
||||||||||||||||||
|
ஆ |
என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில்
நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க
நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை
அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள்
விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர். இது பல
இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர். இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும்
இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை
பெற்றது. நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும். முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின்
வாக்கிற்கிணங்க, நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு
மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து
செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா உருவாகும். |
8 |
||||||||||||||||||
|
20 |
அ. முன்னுரை: விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு
எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை
தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில்
பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம் எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில்
நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார். பாலசரசுவதி: இவர்
பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில்
சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன
நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும்
நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில்
நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன
கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார். இராஜம் கிருஷ்ணன்: சிக்கல்களைப் பற்றி
கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல்
பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப்
புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி
உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக
வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின்
சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில்
மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும்
புதினங்களாகவும் எழுதியுள்ளார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: காந்தி நடத்திய
ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர்.
"உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர
ஏற்பாடு செய்தார். மதுரை சின்னப்பிள்ளை: இவர் மகளிரின் வாழ்வு
மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை
எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண்
அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின்
"அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின்
பொதிகை விருதையும் பெற்றவர். முடிவுரை: பெண்கள்
நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு
நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து
நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய
சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு
சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத்
திகழ்கின்றனர். |
8 |
||||||||||||||||||
|
ஆ |
முன்னுரை “ ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது
அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு
காண்போம். அனுமார்: நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன.
சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள்
மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில்
இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான். அனுமாரின்
நெருப்பாட்டம்: திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத்
தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து
பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது. அழகுவின்
உதவி: சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது அழகுவின் ஆட்டம்: அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்
போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு
என்றார்”. அவனும் நன்றாக ஆடினான். அனுமார்
அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார்.. முடிவுரை: “என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன்
ஆட்டத்தில் மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக
ஆட்டிக்கொண்டிருந்தான். |
|
||||||||||||||||||
.png)