7 TH STD TAMIL QUESTION ANSWER TERM-2 UNIT-2

7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம

வினா விடைகள்

இயல்-2

பூத்தொடுத்தல்

சொல்லும் பொருளும்

1. சாந்தம்- அமைதி

2. நுண்மை-நுட்பம்

3. பிரபஞ்சம்-அண்டம்

4. உற்றால்-அடைந்தால்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. போர் இல்லாத உலகில் ------ நிலவும்.

அ) பதற்றம்  ஆ) சாந்தம்  இ) சோர்வு  ஈ) வெறுப்பு

2. முடிச்சிட்டால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) முடிச்சி + இடல் ஆ) முடிச்சி + சிட்டால்  இ) முடிச்சு + இட்டால்  ஈ) முடிச்சு + இடல்

3. நிற்பது +அறிந்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) நிற்பதறிந்தும்  ஆ) நிற்பதுஅறிந்தும்  இ) நிற்பறிந்தும்  ஈ) நிற்பதறிந்தோம்

குறுவினா

1. மலர்கள் எப்போது தரையில் நழுவும்?

நெகிழ்வாகக் கட்டினால், மலர்கள் தரையில் நழுவி கீழே விழும்.

2. பூவின் சிரிப்பைப் பற்றிக் கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?

தன் முன்னால் மரணம் தயாராக இருப்பதை அறிந்தும் சிறிதளவு கூட வருத்தப்படாமல் பூக்கள் சிரிக்கும் என்று கலிஞர் உமா மகேஸ்வரி கூறுகிறார்.

சிந்தனை வினா

1. பூக்களைக் கொய்யும்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதுக.

·        அதுவும் உயிர் உள்ள ஒரு பொருள் என உணர்வேன்.

·        மலர்கள் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் பயனுடையதாக உள்ளது.

·        அதுபோல் நானும் பிறருக்கு பயன் உள்ளவனாய் வாழ்வேன்.

பேசும் ஓவியங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. குகை ஓவியங்களில் வண்ணம் திட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று

அ) மண்துகள்  ஆ) நீர்வண்ணம்  இ) எண்ணெய் வண்ணம்  ஈ) கரிக்கோல்

2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஒவியம்

அ) குகை ஓவியம்  ஆ) சுவர் ஓவியம்  இ) கண்ணாடி ஓவியம்  ஈ) கேலிச்சித்திரம்

3. கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கோடு + ஒவியம்  ஆ) கோட்டு + ஓவியம்  இ) கோட் + டோவியம்  ஈ) கோடி + ஓவியம்

4. 'செப்பேடு' என்னும் சொல்லைப்  பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செப்பு + ஏடு ஆ) செப்பு + ஓடு இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடு

5. எழுத்து +ஆணி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) எழுத்துஆணி ஆ) எழுத்தாணி  இ) எழுத்துதாணி ஈ) எழுதாணி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கருத்துப் பாடங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்.

2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது துணி ஓவியம்

3. மன்னர்களின் ஆணைகளையும் பாதுகாத்தனர். அரசு ஆவணங்களையும் செப்பேடுகள் மீது பொறித்துப் பாதுகாத்தனர்

குறு வினா

1. ஓவியங்களின் வகைகள் யாவை?


·        குகைஓவியம்

·        செப்பேட்டு ஒவியம்

·        சுவர் ஓவியம்

·        தந்த ஒவியம்

·        கருத்துப்பட ஒவியம்

·        துணி ஒவியம்

·        கண்ணாடி ஓவியம்

·        நவீன ஒலியம்

·        ஓலைச்சுவடி ஓவியம்

·        தாள் ஓவியம்


2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?

செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காகவும், பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் அறியவும் குகைளில் ஓவியம் வரைந்தனர்.

3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?

தாள் ஓவியங்களை கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் கொண்டு வரைவர்.

4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.

சுவர் ஓவியங்கள், அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும், சுவர்களிலும் காணப்படும்.

5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?

செடிகொடிகள், நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள்

சிறு வினாக்கள்

1. கேலிச் சித்திரம் என்றால் என்ன?

·        கருத்துப்பட ஓவியத்தின் மற்றொரு வடிவம் கேலிச்சித்திரம் ஆகும்.

·        மனித உருவங்களை வித்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்று கூறுவர்.

2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.

·        ஓலைச் சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சு ஓவியமாகவும் வரைவார்கள்.

·        பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகள் இடம் பெறும்.

·        தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடி ஓவியங்கள் காணப்படுகின்றன.

சிந்தனை வினா

தந்த ஒவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

·        கேரளா ஒரு மலைப்பிரதேசம். ஆகையால், இங்கு யானைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

·        வயது முதிர்ந்து, இறந்த யானைகளின் தந்தங்களின் மீது பலவகை நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைவர்.

தமிழ் ஒளிர் இடங்கள்

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கி கூறுவீர்கள்?

வள்ளுவர் கோட்டம்  

·        சென்னை நுங்கம்பாக்கத்தில் 1976-ல் கட்டப்பட்டது.

·        திருவாரூர் தேர் வடிவில் கருங்கல்லால் ஆனது.

·        தேரின் மையத்தில் திருவள்ளுவர் சிலை உள்ளது.

·        1330 குறள்கள் பளிங்குக் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன.

·        நிகழ்ச்சிகளுக்கான அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை

·        கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறைக்கு அருகில் 2000-ல் திறக்கப்பட்டது.

·        பாறையிலிருந்து 133 அடி உயரம் கொண்டது.

·        38 அடி பீடமும், 95 அடி சிலையும் உடையது

·        3581 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன;

·        மொத்த எடை சுமார் 7000 டன்.

·        பீட மண்டபத்தில் 133 குறள்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

தொழிற்பெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர்

அ) எழுது  ஆ) பாடு   இ) படித்தல்   ஈ) நடி

2. பின்வருவனவற்றுள் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்

அ) ஊறு  ஆ) நடு  இ) விழு  ஈ) எழுதல்

பொருத்துக

1. ஓட்டம் - (அ) முதல்நிலைத் தொழிற்பெயர்     விடை: விகுதி பெற்ற தொழிற்பெயர்

2. பிடி - (ஆ) முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்   விடை: முதனிலைத் தொழிற்பெயர்

3. சூடு  - (இ) விகுதி பெற்ற தொழிற்பெயர்     விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்

சிறுவினா

1. வளர்தல் என்பது எவ்வகைப் பெயர்? விளக்கம் தருக.

·        வளர்தல் விகுதிபெற்ற தொழிற்பெயராகும்.

·        வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி(தல்) சேர்ந்து வருவதால் விகுதிபெற்ற தொழிற்பெயராகும்.

2.  முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

·        பகுதியின் முதல் எழுத்து நீண்டு தொழிற்பெயராக மாறிவரும். இவ்வாறு முதனிலை நீண்டு (திரிந்து) உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

சான்று : பெறு - பேறு

மொழியை ஆள்வோம்

கவிதையை நிறைவு செய்க.

வானும் நிலவும் அழகு

வயலும் வரப்பும் அழகு

காற்றும் அலையும் அழகு

கடலும் அலையும் அழகு

மலரும் மணமும் அழகு

படம் உணர்த்தும் கருத்தை ஐந்து வரிகளில் எழுதுக

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

ஓடிவிளையாடு பாப்பா. நீ ஓய்ந்து இருத்தல் ஆகாது பாப்பா.

இயற்கையைப் போற்றி இனிதுடன் வாழ்வோம்.

ஆண், பெண் இருவரும் சமம்.

ஓடி விளையாடு! உடலையும் உள்ளத்தையும் பேணலாம்.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக

(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)

(எ.கா)   ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

             நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.

1. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. மனதிற்கு இன்பம் தருவது இசை.

2. கட்டடக்கலையில் சிறந்தது தாஜ்மஹால்.   எனக்கு பிடித்த கலை கட்டிடக்கலையாகும்.

3. வண்ணங்கள் ஏழு உடையது வானவில்.  தமிழுக்கு நூறு வண்ணங்களாகும்.

இடைச்சொல் 'கு' சேர்த்துத் தொடரை எழுதுக

(எ.கா) வீடு சென்றான் - வீடு +கு- வீட்டுக்குச் சென்றான்

1. மாடு புல் கொடுத்தார்    -     மாடு + கு -  மாட்டுக்குப் புல் கொடுத்தார்.

2..  பாட்டு பொருள் எழுது - பாட்டு +கு - பாட்டுக்குப் பொருள் எழுது

3. செடி பாய்ந்த நீர் - செடி + கு -  செடிக்குப் பாய்ந்த நீர்.

4. முல்லை தேர் தந்தான் பாரி -  முல்லை +கு  - முல்லைக்குத் தேர் தந்தான் பாரி.

5. சுவர் சாந்து பூசினாள்   சுவர் + கு சுவருக்குச் சாந்து பூசினான்.

கீழ்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக தலைப்பு:

எங்கள் ஊர் (திருத்தணி)

முன்னுரை

எமது நாட்டில் பல ஊர்கள் இயற்கை வளம், கலாச்சாரம், பாரம்பரியம், தொழில்கள் என தனித்தன்மையுடன் விளங்குகின்றன. அவற்றுள் திருவண்ணாமலையின் அருகே அமைந்துள்ள திருத்தணி புனிதத்திலும் புகழிலும் சிறப்பாகத் திகழ்கிறது.

அமைவிடம்

திருத்தணி, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னைதிருப்பதி சாலையில் அமைந்துள்ளது. ரயில், பேருந்து வசதிகளால் எளிதில் சென்றடையக்கூடிய இடமாகும்.

பெயர்க்காரணம்

திருத்தணிஎனும் பெயர், அங்கு உள்ள புனிதமான முருகன் திருக்கோயிலால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தணிஎன்றால் அமைதி; இறைவனை வணங்குவோருக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் இடம் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

தொழில்கள்

திருத்தணி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு வணிகம், கல்வி, சேவைத் துறை, சிறு தொழில்கள் என பல்வேறு வழிகளில் வாழ்வாதாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்புமிகு இடங்கள்

திருத்தணியின் புகழ் பெற்ற இடம் முருகன் திருக்கோயில் ஆகும். இது ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். கோயிலைச் சுற்றியுள்ள குன்று, அற்புதமான காட்சியையும் ஆன்மீகச் சாந்தியையும் அளிக்கிறது. கூடுதலாக சுற்றுப்புறங்களில் பழமையான கோயில்கள், கல்வி நிறுவனங்கள், இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

இங்கு நடைபெறும் ஸ்கந்த சஷ்டி, கந்த சஷ்டி கவச பாராயணம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விழா போன்றவை உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்களை ஈர்க்கின்றன. விழா காலங்களில் ஊரெங்கும் ஆனந்தமும் பக்தியும் பொங்கிக் கொண்டிருக்கும்.

மக்கள் ஒற்றுமை

திருத்தணியில் வாழும் மக்கள் சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு வாழ்கின்றனர். ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், சமூகச் செயல்களிலும் அனைவரும் ஒருமித்துப் பங்கேற்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

முடிவுரை

முருகனின் அருளால் புனிதமடைந்த திருத்தணி ஆன்மிகத்திலும், பண்பாட்டிலும், மக்களின் ஒற்றுமையிலும் சிறந்து விளங்குகிறது. இயற்கையும், கலாச்சாரமும் இணைந்து வாழ்வோருக்கு அமைதியையும் முன்னேற்றத்தையும் வழங்கும் திருத்தணி நம் தமிழ்நாட்டின் பெருமைமிகு தலமாகத் திகழ்கிறது

மொழியோடு விளையாடு

பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க

சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலைவிதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

சாலைகள் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலதுபக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் எக்காரணம் கொண்டும் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.

ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

வினாக்கள்:

1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?

சாலையின் இடதுபுறமாகவே வாகனங்களைச் செலுத்த வேண்டும்.

2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்?

இருவழிச்சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?

எக்காரணம் கொண்டும் இரட்டை மஞ்சள் கோட்டைத்தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை.

4. ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?

ஒருவழிப்பாதை எனப்படுவது குறிப்பிடப்பட்டுள்ள சாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்பதாகும்.

5. வாகனங்களைப் பின்தொடர்வதற்கான முறையைக் கூறு.

வாகனங்களைப் பின் தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது.

கட்டங்களை நிரப்புக

வேர்ச்சொல்

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நட

நடந்தான்

நடக்கின்றான்

நடப்பான்

எழுது

எழுதினான்

எழுதுகின்றான்

எழுதுவான்

ஓடு

ஓடினான்

ஓடுகின்றான்

ஓடுவான்

சிரி

சிரித்தான்

சிரிக்கின்றான்

சிரிப்பான்

பிடி

பிடித்தான்

பிடிக்கின்றான்

பிடிப்பான்

இறங்கு

இறங்கினான்

இறங்குகின்றான்

இறங்குவான்

குறிப்புகளைக் கொண்டு 'மா' என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக

1. முக்கனிகளுள் ஒன்று  - மா

2. கதிரவன் மறையும் நேரம்  - மாலை

3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு  - மாநாடு

4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவு - மாத்திரை

5. அளவில் பெரிய நகரம்மாநகரம்

படிப்போம்; பயன்படுத்துவோம்!

1.     அழகியல்  - Aesthetics

2.    தூரிகை - Brush

3.    கருத்துப்படம் -Cartoon

4.    குகை ஓவியங்கள் - Cave paintings

5.    நவீன ஓவியம் - Modern Art

திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ------தீமை உண்டாகும்.

அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்

ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்

2. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ------ இருக்கக்கூடாது.

அ) சோம்பல்  ஆ) சுறுசுறுப்பு   இ) ஏழ்மை   ஈ) செல்வம்

3. 'எழுத்தென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எழுத்து + தென்ப  ஆ) எழுத்து – என்ப  இ) எழுத்து இன்ப  ஈ) எழுத் + தென்ப

4. 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கரைந்து +இன்னும்  ஆ) கரை துண்ணும்  இ) கரைந்து உண்ணும்  ஈ) கரை + உண்ணும்

5. கற்றனைத்து ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கற்றனைத்தூறும்  ஆ) கற்றனைத்தூறும்  இ) கற்றனைத்திறும்  ஈ) கற்றனைத்தோறும்

பொருத்துக

1. கற்கும் முறை  -  (அ) செயல்                                 விடை: பிழையில்லாமல் கற்றல்

2. உயிர்க்குக் கண்கள்  -  (ஆ) காகம்                        விடை: எண்ணும் எழுத்தும்

3. விழுச்செல்வம்   -   (இ) பிழையில்லாமல் கற்றல்  விடை: கல்வி

4. எண்ணித் துணிக  - ( ஈ)  எண்ணும் எழுத்தும்         விடை: செயல்

5. கரவா கரைந்துண்ணும்  - ( உ) கல்வி                     விடை:  காகம்

குறுவினா

1. நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்' எப்போது?

நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். அவ்வாறு அவன் பண்பை அறியாமல், நன்மை செய்தாலும் தீமையே வந்து சேரும்.

2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.

·        செய்யத்தகாத செயல்களைச் செய்தல்.

·        செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் இருத்தல்

3. துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?

துன்பம் ஏற்பட்டபோது வருந்திக் கலங்காதவர்

4. எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன?

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும் 

 


 

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை